Sunday 27 January 2013

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறேன் !!!










நேற்றுக்   காலை  பெங்களுரிலிருந்து  என் மருமகள்  போன்.
ஒன்றரை  வயது  பேரனிற்கு  ஜுரம்.  3  நாட்களாகி  விட்டதே  ஜுரம்  இன்னும் விட வில்லையே.
என்று வருந்தினாள்.  ஒரு தாயின்   பதைபதைப்பு   அவள்  குரலில்   தொனித்தது.

"கவலைப்படாதே.  எல்லாம் சரியாகிவிடும்"  என்று கூறி விட்டு"  நான் வேண்டுமானால்   துணைக்கு   வரட்டுமா?"  என்று கேட்டேன்.
"நானே பார்த்துக்  கொள்கிறேன்  .உதவி தேவை  என்றால்  உங்களிடமோ   அம்மாவிடமோ   சொல்கிறேன்  .யாராவது  ஒருவர் வாங்க  ". என்றாள்.

போனை வைத்து   விட்டேன். ஆனால் மனம்  ஒரு நிலையில் இல்லை.
இரண்டு பேரும் சிறியவர்கள்  ஆயிற்றே. . பயந்து போய்  விடுமே  இரண்டும்.
என்று துடித்த மனதிற்கு  கடிவாளம்  போட்டபடி   எழுந்தேன்.

பூனைக்  குட்டியாய்   படுத்திருந்த போன்  மீண்டும்  சினுங்கத்  தொடங்கியது.

இது   மகளிடமிருந்து.

"அம்மா,என்ன  அபினவிற்கு    உடம்பு சரியில்லை  போல  தெரிகிறதே  .
நீ  பெங்களுர்   போகவில்லையா? "  என்று கேட்டாள்.

" இல்லை  அவர்களே  பார்த்துக்   கொள்வார்கள்"   என்று  கூறினேன்.

"ஏன்  சென்னையில்  என்ன வெட்டி  முறிக்கிறாய்?  போக வேண்டியது தானே " ".இது மகள்.

அவள் கவலை  அவளுக்கு.
தன தம்பி,அவன்   மனைவி, மருமகன்  கஷ்டப்படப்  போகிறார்களே   என்று.

"மஞ்சு     naturopathy ல்   டாக்டர்   தானே . அவளுக்கு எல்லாம் தெரியும்  .
அதவும் இல்லாமல் இளம்   தம்பதிகள்  தனியாக,   இந்த மாதிரி   சவால்களை   சந்திக்கும்  போது , நிறைய விஷயங்களைக்  கற்றுக்  கொள்வார்கள் ."

"அவர்களிடையே    நெருக்கம், புரிதல்  எல்லாம் கிடைக்கும்.
சவால்களை   தனியாக  சமாளிக்கும்  திறன்   வரும்."

"அதுவும் இல்லாமல்  ஆங்கிலத்தில்   ஒரு பழமொழி உண்டு.

"ஒருவன் பசியோடிருக்கும்   போது  அவனுக்கு   மீன்   கொடுத்து  பசி  தீர்ப்பது   அந்த நேரத்துப்   பசியை  கண்டிப்பாக  தீர்க்கும். அது     உபகாரமே.

அதை   விட   அவனுக்கு   மீன்  பிடிக்கக்   கற்றுக்   கொடுப்பது   தான்   பேருபகாரம்.

அதைத்  தான் செய்கிறேன் ."  என்றேன்.

"நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று சொல்கிறாய்  " என்று அலுத்துக் கொண்டு  போனை  வைத்து விட்டாள்.ஆனால் அவளுக்கு  நான் சொல்ல வந்தது  புரித்து  போல்   தெரிந்தது.

இந்த   மீன் பிடிக்க     கற்றுக்கொடுக்கும்  விஷயத்தை   என்  மகளும்  மருமகளும்   அவர்கள்  மகளுக்கும், மருமகளுக்கும்   கொண்டு போய்  சேர்க்க  வேண்டும்   என்று  ஆசைப் படுகிறேன்.

இருவரும்  செய்வார்கள்  என்றும்   நம்புகிறேன்.

image courtesy--google.

21 comments:

  1. இந்த மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கும் விஷயத்தை என் மகளும் மருமகளும் அவர்கள் மகளுக்கும், மருமகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.//

    பிள்ளைகளை கற்றுக்கொள்ளவைப்பது புத்திசாலித்தனம்தான் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. முந்தி வந்து பாராட்டு தெரிவித்ததற்கு மிக்க நன்றி

      ராஜி

      Delete
  2. மிகச் சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள். பிரச்சினை வரும்போது தாங்களாகவே சமாளிக்கும் தைரியம் வர வேண்டும். 'முணுக்'கென்றால் நாம் போய் நின்றால் அவர்கள் எப்போது கற்றுக் கொள்ளுவது.

    மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி என்னை புரிந்து கொண்டு பாராட்டியதற்கு.

      ராஜி

      Delete
  3. நல்ல காரியம் தான் செய்துள்ளீர்கள். இரு்ந்தாலும், நல்லபடியாகும் வரை நம் மனசு கேட்காது அல்லவா! மிகவும் அக்ஞானப்படுவோம் அல்லவா!

    // இந்த .............. விஷயத்தை என் மகளும் மருமகளும் அவர்கள் மகளுக்கும், மருமகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.//

    பிள்ளைகளை கற்றுக்கொள்ளவைப்பது புத்திசாலித்தனம்தான் ..பாராட்டுக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      நீங்கள் சொல்வது போல் மனம் கேட்கத் தான் இல்லை.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      வணக்கத்துடன்,
      ராஜி



      Delete
  4. இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ஆகாது ஆமா!, :-) நல்லா கத்து கொடுக்கிரிங்க, ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆகாஷ்,
      நான் என்ன அரை மணி நேர விமானப் பயண தூரத்தில் தானே இருக்கிறேன் . அவசியமானால் உடனே பறந்து விட வேண்டியது தான்.
      அந்த தைரியம்.

      சகோதரி,
      ராஜி

      Delete
  5. கற்றுக்கொண்டால் தான் நல்லது....

    மனது சொல்வதைக் கேட்காமலும் இருக்க முடியாதே.....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நட்புடன்,
      ராஜி

      Delete
  6. நீங்கள் சொல்வதும் செய்வதும் சரிதான்.ஆனாலும் பாசம் அதிக அக்கறையுடன் செய்யவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.

      உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

      ராஜி.

      Delete
  7. இந்த மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கும் விஷயத்தை என் மகளும் மருமகளும் அவர்கள் மகளுக்கும், மருமகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.//

    உண்மை, நீங்கள் சொல்வது. தனியாக எந்த விஷயத்தையும் எதிர் கொள்ளும் தன்னம்பிக்கையை ஊட்டுவது தான் பெற்றோர்களின் கடமை.
    அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கோமதி. ஒரு வாரமாக உங்களை வலை பக்கம் காணோமே?
      இல்லை நான் தான் மிஸ் பண்ணி இருக்கிறேனா உங்கள் பதிவை.

      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி .//தன்னம்பிக்கையை ஊட்டுவது தான் பெற்றோர்களின் கடமை. // சரியாய் சொன்னீர்கள்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிண்டும் நன்றி.

      ராஜி

      Delete
  8. அவர்களால் பார்த்து கொள்ள முடியும் அது ஒரு பெரிய காரியம் அல்ல ஆனால் அவர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்து நீங்களும் அதே ஊரில் இருந்தால் போய் சென்று உதவுவதே நன்றாக இருக்கும் என்பது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      அவர்கள் இருவரும் சமாளித்துக் கொள்கிறார்கள். போனில் விசாரித்துக் கொண்டே தானிருக்கிறேன். ஜுரம் விட்டு விட்டது. ஆனால் இன்னும் பழைய உற்சாகம், சுறுசுறுப்பு இன்னும் வரவில்லை. அவ்வளவு தான்.

      உங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி.

      ராஜி

      Delete
  9. நீங்க நல்லாவே மீன் புடிக்கீ....................ரீங்க பதமாதான் வேக வைக்கனும்மில்ல

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்!

      உங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

      ராஜி

      Delete
  10. சிறிய நிகழ்வின் மூலம்
    மிகப் பெரிய கருத்தைச் சொல்லிப் போனவிதம் அருமை
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. madam you not conveyed this message to ur daughter in law and daughter .gr8 information u shared to ur friends .thanks for ur information.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்