Monday 10 June 2013

பிரிந்தோம் .......சந்தித்தோம்.

என்  ஆருயிர்  தோழியை பிரிய நேர்ந்ததில்  மிகவும் வருந்தினேன்.எப்போதடா திரும்பவும் பார்க்கப் போகிறேன் என்றிருந்தது. ஒரு பத்து பதினைந்து  நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் ஒன்று சேர்ந்தோம்.

நீ பிரிந்தால் எனக்கென்ன ?  சேர்ந்தால் எனக்கென்ன?  என்று முணுமுணுப்பது கேட்கிறது.

நாங்கள் சேர்ந்தால் தானே , பதிவுலகம் வாயிலாக நான்  உங்களை எல்லாம் இம்சிக்க முடியும் !

இப்பொழுது  புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

நீங்கள் ஊகித்தது  சரியே.பிரிந்தது  என்  கரிய நிற  தோழி  மடிக்கணினி   தான்.

" இவ்வளவு  சாமான்களையும்  எடுத்த செல்ல வேண்டுமென்றால் உனக்கென தனி விமானம் விட வேண்டியது தான் "

" உக்கும் ......"
 சரி , என்னை சொல்வது  இருக்கட்டும். உங்கள் மருந்துகளை எதில் வச்சிருக்கீங்க ? "

" ஸ்ரீ கிருஷ்ணா மைசூர்   பாகு   நாளை வாங்கி  இந்த  ஹேன்ட்  லக்கேஜில் வைத்துக் கொள்ளலாம் ம்".  

" சரி சரி  இப்போது  எனக்கு ஒரு காபி கிடைக்குமா ? "
காபி குடித்து விட்டு  பேக் செய்ய வேண்டுமே தவிர  லேப்டாப்  பக்கம் போனாயானால் தெரியும் சேதி என்று " மிரட்டிய கணவரை  ஒரு முறை முறைத்துக்  கொண்டே  பாலை எடுக்க பிரிட்ஜைத் திறந்தேன்."

மேலே  இருப்பது  எனக்கும் என்னவருக்கும்  ஒரு வாரம் முன்பு நடந்த உரையாடல்.

நியு ஜெர்சியில் இருக்கும் பெண் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.

சரி, பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்தாயிற்று.  பேரன் பேத்தியெல்லாம் கொஞ்சி மகிழ்ந்து கொண்டே பதிவு எழுதலாம் என்றால் நேரம் காலம் புரியாத தூக்கம் .


கும்பகர்ணனின்  ஆதிக்கத்திலிருந்து இப்பொழுது தான் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன். மெதுவாக  பதிவுலகம்  பக்கம் வந்தால். படித்து பின்னூட்டமிட  வேண்டியவை ஏராளமாய்  மலை போல் குவிந்திருக்கின்றன.

அதனால்  என் பதிவுலக நட்புகளிடம்  நான் கேட்பதெல்லாம்  ,

" ப்ளீஸ்  கொஞ்சம் அவகாசம் கொடுங்களேன்!  முடிந்தவரை  படித் து  பின்னூட்டமிட்டு  , நண்பர்களுடன்  அரட்டை அடிக்க வந்து விடுகிறேன்."

நன்றி  என்னை  புரிந்து கொள்ளும்  உங்களுக்கு.

25 comments:

  1. நியு ஜெர்சியில் இருக்கும் பெண் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.

    ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் கருத்துக்கும் என்னைப் புரிந்து கொண்டதற்கும்.

      Delete
  2. முதலில் தூங்கி ஓய்வு எடுங்கள். பிறகு பதிவுகளைப் படிக்கலாம். பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக காலத்தை செலவிடுங்கள். பதிவுலகம் எங்கே போகிறது?

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி,
      உங்கள் அக்கறை என்னை நெகிழ வைத்தது என்பதே உண்மை.
      ஆனாலும் பதிவுகளைப் படிக்காமல் எழுதாமல் இருப்பது முடியாதோ ? என்றே தோன்றுகிறது.
      நன்றி ரஞ்சனி.

      Delete
  3. ஆஹா நீங்களும் நியூ ஜெர்சிலேயா இருக்கிறீர்கள்...

    நான் இங்கே நியூ ஜெர்சிலே சௌத் ப்ரன்ச்விக்லே தான் இப்போதைக்கு இருக்கேன். பக்கத்திலே மன்மௌத் ஜங்க்ஷன் . ஒரு அஞ்சு நாள் முன்னாடி தான் வந்தேன்.

    அதிலே என் மூத்த பெண் வீடு.

    அப்பப்ப சாப்பாடு அப்பப்ப கோவில் நேத்திக்கு நியூ யார்க் சைட் சீஇங்க்.

    நான் எழுதினது எல்லாமே இங்கே இருக்கு.
    நீங்கள் வரும் வழிதான்.

    உங்கள் தொலை பேசி எண் கொடுத்தால் பேசுகிறேன்.

    சுப்பு தாத்தா
    732 438 0990

    ReplyDelete
    Replies
    1. நானும் என் மகள் வீட்டில் தான் இருக்கிறேன்.
      ஆனாலும் ஒவ்வொரு முறை வரும் போதும் இந்த ஊர் என்னை " தங்கக் கூண்டில் கைதி "யான உணர்வைக் கொடுத்து விடும்.

      உங்களை பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

      Delete
  4. எங்க ஊருக்கு வந்த இராஜராஜேஸ்வரி & சுப்பு தாத்தா இருவரையும் வாங்க வாங்க என இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். நீங்க இருவரும் வந்த வேளையில் மழை பெய்கிறது. நல்லவர்கள் வந்தால் பெய்யும் என்று சொல்லுவார்கள். எனது வீடு North Brunswick ல் இருக்கிறது நேரமும் காலமும் கூடிவந்தால் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. திருமதி இராஜராஜேஸ்வரிக்கு எழுதின கருத்துரை என் பதிவிற்கு வந்து விட்டதோ?

      Delete
  5. முதலில் தூங்கி ஓய்வு எடுங்கள். பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக காலத்தை செலவிடுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார் உங்கள் பதிவுகள் எக்கச்சக்கமாய் என் டேஷ் போர்டில் குவிந்துள்ளன. பொறுமையாக படிக்க வேண்டிய பதிவுகள். தெய்வீகமனம்
      கமழும் பதிவுகளை நிதானமாகப் படித்து கருத்திடுகிறேன் வைகோ சார்.

      Delete
  6. பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது...? அவசரமில்லை... மெதுவாகவே தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தனபாலன் சார், பேரன், பேத்தி,உறவு பேரின்பம் தரும் உறவல்லவா?
      சரியாய் சொன்னீர்கள்.
      அவர்களிடம் தான் பெரும்பாலான நேரம் போகிறது. ஆனாலும் பதிவும் தொடர முயற்சிக்கிறேன். நன்றி தனபாலன் சார்.

      Delete
  7. நன்றாக மகிழ்வுடன் பேரன் பேத்திகளுடன்
    பொழுதை பயனுள்ளதாக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    பயண அனுபவப் படங்களை பதிவுடன் எதிர்பார்த்து
    தங்கள் ரசிகர்கள் காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.
      கண்டிபாக என் பயண அனுபவங்களை எழுதுகிறேன்.

      Delete

  8. எத்தனை நாள் ப்ரோக்கிராம்? நன்றாக ஓய்வெடுத்து ( அதைவிட வேறு வேலை இருக்குமா என்ன.?) ஊரெல்லாம் சுற்றிப் பார்த்து அனுபவங்களை எல்லாம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சில மாதங்கள் இங்கு செலவிட எண்ணியுள்ளோம், இறைவன் அருளோடு தான்.என் அனுபவங்கள் கண்டிப்பாக பதிவுகளாகும்.
      நன்றி gmb சார்.

      Delete
  9. வெரிகுட்...! மகள், பேத்தியுடன் இனிமையாகப் பொழுது கழியட்டும்! நேரமிருக்கும் போது இங்கே வந்தால் போதும்... நாங்களனைவரும் நிச்சயம் ‌காத்திருப்போம் உங்களுக்காய்! (அங்க பாக்கற நல்ல விஷயங்களை ‘சுட்டு’ எங்களுக்கு பரிமாற கேமராவுடன் போயிருக்கீங்க தானே...!)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பால்கனேஷ் சார். கேமெராவில் சுட்டுத் தள்ளி பதிவாக்கி விடுகிறேன்.

      Delete
  10. என் கரிய நிற தோழி மடிக்கணினி தான்.எல்லோருக்குமே பிரிவைத்தாங்க முடியாது அவ்வளவு நேசம்.உங்கள் நண்பராக பேத்தியையும் சேர்த்துகொள்ளுங்களேன் இன்னும் நல்லா பொழுதுபோகும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு.

      Delete
  11. ரொம்ப நாளாச்சே பார்த்து என வந்தால் நீங்க இங்கு இருப்பதைத் தெரிந்து கொண்டேன்,சந்தோஷம். பேரப் பிள்ளைகள் 'என்னதிது,பாட்டி நமக்குமேல (கணினியுடன்) இருக்காங்களே'ன்னு சொல்லிடப் போறாங்க. அவர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடி பொழுதைப் போக்குங்கள். இனி அனுபவப் பதிவுகள் நிறைய வரும் என எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது தான் நடக்கிறது. என் பெண் அதைத் தான் கேட்கிறாள் . பொழுது விடிந்தால் கணினியா? என்று கேள்வி வேறு?
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.

      Delete
  12. அடமாற்றம் சேரவித்தியாசம் தூக்கம் தொடரும் தான். பேரருடன் மகிழ்வது இனிய ஆனந்தம் . என்ன ஆச்சரியமா!
    இதற்கு முன்னரும் 2-3 தடவை தங்களிற்குக் கருத்திட்டுள்ளேன். இது பதிதல்ல.
    மறுபடியும் இப்போது. இனிய வாழ்த்து இனிய பதிவிற்கு.
    அறிமுகத்திற்கு பெயரைக் கிளிக்குங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருமதி வேதா உங்கள் கருத்துக்கு.
      உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன்.அருமையான கவிதைகள் இருந்தன படித்தென். ஏன் கருத்திடவில்லை என்கிறீர்களா? ஒரு பயம் தான். அத்தனை அழகான கவிதைகளுக்கு நானா?..... கருத்திடவா? என்று தான் ஆனால் கொஞ்சம் தைர்யத்தை திரட்டிக் கொண்டு இதோ வருகிறேன். கருத்திடத்தான்.
      நன்றி.

      Delete
  13. மகள், பேரன் பேத்திகளுடன் பொழுதுகள் சந்தோஷமாகப் போய்க் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்