Monday, 9 November 2020

கம்பனும், insecurityம்

தோழி கீதா அலுத்துக் கொண்டாள், " எனக்கு ரொம்ப சலிப்பா இருக்குடி. ஏன் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன்னு  தெரியல ."

"ஏண்டி ?"


"பின்ன என்ன சொல்லு? எப்பப் பாரு, மாமியாரும், நாத்தனாரும்  சேர்ந்து கொண்டு என்னைப் பற்றி இல்லாததும்  பொல்லாததும்  அவர் கிட்ட சொல்லி...  என வீட்டுக் காரர்  எப்பவும் என்னிடம்  முறைப்பாகவே  இருக்கிறார். எப்பவும் அவங்க  மூணு பேரும் ஒரு கட்சி. நான் மட்டும் எப்பவுமே குற்றவாளி. எப்பவும் தனி தான். என வீட்டுக் காரர் எப்ப தான் என்னைப் புரிஞ்சுக்குவாரோ ? இல்லை எப்பவுமே நான்  தனிமையிலேயே  இருந்து விடுவேனோன்னு பயமா இருக்குடி?"

"கவலைப் படாதே கீதா ! இதுவும் கடந்து போகும்." ஆறுதல்  மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

இது கீதாவின் பிரசசினை  மட்டுமல்ல நாம் நாட்டில் பல மனைவிகள் இப்படித் தான் மன நெருக்கடியில் இருப்பதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம். 

இந்த மன நெருக்கடி அந்தக் கால சீதையிலிருந்து  ஆரம்பிக்கிறது.

ஸீதைக்கும்  மாமியார், நாத்தனார் கொடுமையோ?

இல்லையா பின்னே ? கைகேயியோனால் தானே  இப்போ  அசோக வனத்தில் இருக்கிறாள்?

தன்னை சுற்றிப் பார்க்கிறாள்....  அரக்கியர் கூட்டம்  பயமுறுத்துகிறது.  இங்கிருந்து தப்பிக்கலாம் என்றால் ...எப்படி  தப்பிப்பது ? வழி தெரியலையே ...

ராமன் வருவாரோ ? இல்லை மாட்டாரோ?  அவர் பாட்டுக்கு அயோத்தி திரும்பியிருப்பயரோ? 

அப்படியெல்லாம் இருக்காது. என்னவர் என்னை அப்படி கைவிட்டுவிட மாட்டார் . மனசாட்சி சொல்லியது. சிறிது  நேரத்திற்கெல்லாம்  அதே மனசாட்சி, "ஒரு வேளை .. என்னைக்  காப்பாற்ற வரலைன்னா ? " நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.

இங்கேயிருந்து  எப்படித் தப்பிப்பது? எல்லோரும் என்னை சுற்றிப் பயமுறுத்துகிறார்களே ! என்ன தான் செய்வது. 

மகனைப் போல்  நடந்து கொண்ட  லக்ஷ்மணனை , தவறாகப் பேசியதன் விளைவை இப்ப அனுபவிக்கிறேன் . 

மாலை மாலையாக வந்த கண்ணீரை  அடக்க முடியவில்லை சீதையால். 

மனதிற்குள் தோன்றிய  insecurity அவள் முகத்திலும் தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியத் தானே செய்யும்.

அவளைப் பார்த்த அனுமாருக்கு  "தாய் எவ்வளவு insecured ஆக உணர்கிறார் ? என்று தோன்றியது. அவரிடம் போய், "பரம்பொருள்  உங்களுக்காகவே  காத்துக் கிடக்கிறார். நீங்கள் பயப்பட வேண்டாம். மனம் தளறாதீர்கள்  "  சொல்லத் துடிக்கிறார். ஆனால் இது உகந்த  நேரம் அல்ல. இந்த ராட்சசிகள் அம்மாவை சுற்றி சுற்றி  வருகிறார்களே . அவைகள் சற்று கண் அசரட்டும்.  மரத்தின் மேலிருந்து கீழே குதிப்போம் என்று  தகுந்த நேரம் பார்த்து அமர்ந்திருக்கிறார்.

கம்பர் அசோகவனத்து சீதையை எப்படி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்று பார்ப்போமா?

பிராட்டி துயர்நிலைக் கிளவி 5336

 துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.

பல நாட்கள் துன்புற்ற பிராட்டி, உறங்காத அரக்கிமார்கள்  உறங்குவதைப் பார்த்து, உள்ளத்தால் துன்பத்தை  பொறுக்க முடியாமல், தப்பி  செல்லும் வழி சிறிதும் அறியாமல், மனம் நெகிழ்ந்து, பயமடைந்து,துன்பம் அடைந்தாள் .குறையாத அன்புடன் மனத்துடன் பேசுகிறாள்.


சீதை துயரம் அடைந்தது உண்மை தான். அதெல்லாம் சும்மா ஒரு சில மணித் துளிகளாகத் தான் இருக்கும். இன்றும் பெண்கள் உறுதியுடன் இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக காட்டப் படுவது  சீதை தான். அவளுடைய மன  உறுதிக்கு நிகர் அவளே.


வேறொரு  அருமையான கம்பன் பாடலுடன் மீண்டும் வருகிறேன்.



உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்