Friday 23 November 2012

என் ரயில் பயணம்

ஒரு முறை எனக்கு ரயிலில் எற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அப்பொழுது நான் ஹைதராபாதிலிருந்த எனபெண்ணின் வீட்டிலிருந்து சென்னை திரும்பிகொண்டிருந்தேன்.ஹைதராபாத் ஸ்டேஷன் வந்து சார்மினார் எக்ஸ்ப்ர்ஸில் ஏறி ,வழியனுப்ப வந்திருந்த என் பெண்,மாப்பிள்ளை,பேரன் எல்லோரிடமும் பிரியா விடை பெற்றுக் கொள்ளவும்,சார்மினார் ஒரு பெரிய பெருமூச்சை விட்டபடி கிளம்பவும் சரியாக இருந்தது.என் பேரனை பிரியும் வருத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள கையில் வைத்திருந்த குமுதத்தில் ஆழ்ந்தேன்.அரை  மணியில் செக்ந்திராபாத் ஸ்டேஷன் வந்தது.நிறைய பேர் இந்த ஸ்டேஷனில் தான் ஏறினார்கள்.எல்லோரும் அவரவர் பர்த்தைத் தேடிப் பிடித்து அமர என் எதிரில் ஒரு கர்ப்பிணிப் பெண் தன் குடும்பத்துடன் அமர்ந்தாள்.
நான் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மரங்களும், வீடுகளும்,மனிதர்களும்வேகமாக பின்னோக்கி நகர்வதை ரசித்து விட்டுத் திரும்பிய போது என்னருகில் 18வ்யது மதிக்கத்தக்க பெண்னும் அவள் தாயும்(என் வயதிருக்கும்)அமர்ந்திருந்தனர்.ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் உண்ண ஆரம்பித்திருந்தனர்.கம்பார்ட்மெண்ட்டே'கம்' என்று பல வகையான உணவின் மணம் வீசி, பசியைத் தூன்டியது.நானும் என்னுடைய தயிர் சாதத்தை உண்டுவிட்டு உறங்கத் தயரானேன்.கோச் அட்டெண்ட்டர் வைத்துவிட்டுப் போன கம்பளியைக் கையில்எடுத்துக் கொண்டே அருகில் அமர்ந்த பெண்கள் சாப்பிட்டு விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டு 'படுக்கலாமா? பர்த்தைப் போடலாமா? என்றுக் கேட்டேன்.அந்தப் பெண் அதற்கு சில நொடிகள் தயங்கினாள்பிறகு என்னைப் பார்த்து,'ஒரு சின்ன உதவி' என்றாள்.என்ன என்பது போல் அவளை நான் பார்க்க,அவள்,'என் அம்மாவிற்கு லோயர் பர்த் இருந்தால் நன்றாக இருக்கும் .உங்களால்  உதவ முடியுமா?என்று மிகவும் தயங்கிக்கொண்டே கேட்டாள்.நான் கர்வத்தோடு (திமிராக என்றும் கூறலாம்)'என்னால் மேலேயெல்லாம் படுக்க முடியாது. என்று பட்டென்று கூறினேன்.(ட்ரெயின் டிக்கெட் வாங்கிவிட்டால் ஏதோ ட்ரெயினையே விலைக்குவாங்கி விட்டதாக எனக்கு நினைப்பு.).உடனே பர்த்தைப் போட்டேன்.படுத்துக் கொண்டேன்.படுத்துக் கொண்டதும் தூங்கினாற்போல் கண்களை மூடிக்கொண்டேன்.நடிப்பு தான்.எங்கேயாவது திரும்பவும் என் பர்த்தைக் கேட்டுவிடப் போகிறாளே என்ற பயம் தான் என் நடிப்புக்கு காரணம்.ஆனால காதுகளை மட்டும்திறந்து வைத்துக்கொண்டேன்,என்னைச் சுற்றி நடப்பதைக் கேட்பதற்காகஅந்தப் பெண் தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்,"யாரிடம் கேட்பது தெரியவில்லை? இங்கே வயதானவர்,அங்கே கர்ப்பினிஒன்று செய்யலாம்.உன்னால் மிடில் பர்த்தில் ஏற முடியாது அல்லவா?நீ தரையில் படுத்துக் கொள்கிறாயா?என்று கேட்க அந்தத் தாயோ,'சரி வேறென்ன செய்வது? என்று சம்மதித்தாள்.
அப்பொழுது தான் எனக்கு லேசாக  சந்தேகம் தட்டியது.நம் வயது தானே இருக்கும்.ஏன் இத்த்னை ஸீன் போடுகிறாள்? என்று நினைத்துக் கொண்டே க்ண்ணைத் திறந்துப் பார்த்தேன்..மகள் போர்வயை கீழே விரிக்கஅவள் தாய் ஒரு கையால் ஸீட்டைப் பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் மகள் தோளில் கைவைத்துஸீட்டிலிருந்து மெதுவாக ஒரு குதி குதித்து இற்ங்கினாள். அப்பொழுது தான் பார்த்தேன் அவள் ஒரு மாற்றுத்திறனாளி.அதிர்ந்து போனேன்.என்ன ஒரு மனிதாபிமானமற்ற செயல் செய்ய இருந்தேன்?என்ன ஒரு நெஞ்சழுத்தம் எனக்கு? எப்படி வந்தது இந்த நெஞ்சழுத்தம்? என் மிடில் ஏஜினாலா? என் வசதியா? எதுவோ ஒன்று.ஆனால் அதற்காக வெட்கப்பட்டேன்(வெட்கப்படுகிறேன்) என் செய்கைக்கு வருந்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்களை லோயர் பர்த்தை எடுத்துக் கொள்ள்ச் சொல்லிவிட்டு மேலே ஏறி படுத்தேன்.
ஆனால் என் செய்கை என்னைத் தூங்கவிடாமல் தடுத்தது.சென்னை வரை புரண்டு புரண்டு படுத்தேன்.தூக்கம் மட்டும் வரவேயில்லை.அப்பொழுது நான் ஒரு பள்ளி ஆசிரியை வேறு.என் சக ஆசிரியர்களிடம் இதைப் பற்றிபுலம்பித் தீர்த்தேன்.
இன்றும் என் ரயில் பயனங்களின் போது இந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்து என் நெஞ்சில் நெருடும். ஆனால்,இப்பொழுது மாறிவிட்டேன். அந்த மாதிரியெல்லாம் நான் கண் மூடித்தனமாக நடந்து கொள்வதில்லை.

4 comments:

  1. //ஆனால் என் செய்கை என்னைத் தூங்கவிடாமல் தடுத்தது.சென்னை வரை புரண்டு புரண்டு படுத்தேன்.தூக்கம் மட்டும் வரவேயில்லை.

    அப்பொழுது நான் ஒரு பள்ளி ஆசிரியை வேறு.என் சக ஆசிரியர்களிடம் இதைப் பற்றிபுலம்பித் தீர்த்தேன்.

    இன்றும் என் ரயில் பயனங்களின் போது இந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்து என் நெஞ்சில் நெருடும்.

    ஆனால்,இப்பொழுது மாறிவிட்டேன். அந்த மாதிரியெல்லாம் நான் கண் மூடித்தனமாக நடந்து கொள்வதில்லை.//

    மாறியது ....... நெஞ்சம் .........
    மாற்றியது ...... யாரோ?

    மாற்றியது ...... மாற்றுத்திறனாளி !

    நம் தவறை நாம் உணர்ந்ததுமே, மன்னிக்கப்படுகிறோம்.

    எனவே குற்ற உணர்ச்சி வேண்டாம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  2. உங்கள் பின்னூட்டம் மிக்க ஆறுதலாய் இருந்தது.எனினும் அந்நிகழ்ச்சி என்நெஞ்சை விட்டு அகலாது என்றே எண்ணுகிறேன்.
    நன்றி.

    ராஜி

    ReplyDelete
  3. ரயில் பயணம் தந்த பாடம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரயில் பயணம் கற்பித்த அருமையான பாடம்.
      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்