Tuesday 10 December 2013

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

e c



" ராஜி எழுந்திரு  எழுந்திரு " என்னவர் என்னை எழுப்பினார்.

கண்ணை கசக்கிக் கொண்டு மணியைப் பார்த்தேன்.

சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் காலை மணி 7.30 ஆகிவிட்டது  என்பதை  சொல்லியபடி  தொங்கிக்  கொண்டிருந்தது.

அவசரமாக எழுந்து  வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

சூடான பாலில் ,மணக்க மணக்க  டிகாக்ஷன்  விடவும் ,அவர்  டேபிளிற்கு காலை நியுஸ்  பேப்பருடன் வரவும் சரியாக இருந்தது.

" இன்றைக்கு என்ன ஸ்பெஷல் நியுஸ் ? "  கேட்டபடி  இரண்டு டம்ளர் காபியுடன்  அமர்ந்தேன்.

காபியை டபராவில் ஆற்றிக் கொண்டே   "இதைக் கேளேன். உன்னைப் போன்ற  இரவில்  லேசில் தூக்கம் வராத  ஆட்கள்  தான் இதைப் படிக்க வேண்டும் .  " அவர் கூறினார்.

பேப்பரை எட்டிப் பார்த்தேன்.

ஜெர்மனியில்  நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதியிருந்தது.

ஜெர்மனியில் ஒரு வங்கியில் கிளார்க் ஒருவர்  பணப் பரிமாற்றம்  செய்யும் பணியில் இருந்திருக்கிறார்.

ஒருவர் கணக்கில் இருந்து , இன்னொருவர் கணக்கிற்கு , பணத்தை  மாற்றும்  போது ,அவருக்கு என்ன அலுப்போ தெரியவில்லை.கை 2 என்ற கீயில் இருக்கும் பொது  கொஞ்சம் கண்ணசந்து விட்டார்.

விளைவு  2222222222222222222222222 மில்லியன் யூரோ க்கள்  ஒய்வூதியதாரர் ஒருவருக்கு மாற்றப்பட்டு விட்டது.

அவருடைய உயரதிகாரி கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு  இந்தப்  பணம் ஒய்வூதியதாரர் கணக்கில் போய் உட்கார்ந்து கொண்டது.

எப்படி ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள் அந்த ஒய்வூதியகாரருக்கு..

ஆனால் அவருடைய அதிர்ஷ்டம்  ரொம்பநேரம்  இல்லை.


வங்கியிலேயே வேறொருவர் இந்தத் தவறைக் கண்டுபிடித்து சரி செய்து  விட்டார்கள்.

ஆனால் அவருடைய மேலதிகாரிக்கு  என்ன துரதிர்ஷ்டமோ?  அந்தத் தவறை கண்டுபிடிக்கத் தவறியதால் அவரை வேலையிலிருந்து தூக்கி விட்டது  .

உயரதிகாரி கோர்ட்டிற்கு சென்று விட்டார். அந்த கேசைப் பற்றிய விவரங்களை  சொல்லியது செய்தி.
 கொஞ்சம் கண்ணசந்ததற்கே , மில்லியன் கணக்கில் , வங்கி தொலைக்க இருந்தது.

ஆனால் ஏன் இப்படி வேலை நேரத்தில் தூங்கினார்?பாவம் இரவுத் தூக்கம்  சரியில்லையோ என்னவோ?


நான் இரவு  தூங்காமல் ,லேட்டாய் எழுந்ததன் விளைவு ,எல்லா வேலையும் லேட்டாகி ,  அன்று மாலை வரை  ,நேரம் இல்லாமல் திண்டாடினேன். அன்றைக்கென்று, ஒரு கெஸ்ட்  வேறு .எல்லா வேலையும்  முடித்து விட்டு படுக்க செல்லும் போது மணி பத்தரையைத் தாண்டி விட்டது.

படுத்ததும்  தூக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டிருந்தேன்.  
அடிக்கடி நினைத்துக் கொள்வேன் ,ஏதாவது  பரீட்சைக்கு  பணம் கட்டிவிட்டு , கையில் பரீட்சைக்கான  புஸ்தகமும் இருந்தால் , ஆனந்தமாய்  தூக்கம் வரும் என்று.

மனம் போன வாரத்திற்கு  ஓடிப் போனது.

சென்ற வாரம் ,பஸ்சில்  மாயவரம் செல்லும் போது ,என்னருகில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார்.  
அமர்ந்தவுடன்  என்னைப் பார்த்து சிநேகமாய் ஒரு புன்னகை. 
பஸ்ஸும்  கிளம்பியது.  
தன மொபைலை  காதருகில்  கொண்டு போய் ," நீ சாப்பிட்டாச்சா?"

"நான் இப்ப தான் கிளம்பி இருக்கிறேன்,"  "அலமாரியின் மேல் தட்டில்  வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொள்." என்று விதம்விதமாய்,  பலரிடம் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டே வந்தார்.  ஒரு சமயத்தில் எனக்குத் தலைவலியே வந்து விடும்  போலிருந்தது.

தீடீரென்று அமைதியானது . என்னவென்று பார்த்தால் 
கொர் .......கொர்  என்ற சன்னமான சத்தம் வந்தது .தூங்க ஆரம்பித்து விட்டார்.. 
அப்பாடி........ஏகாந்தத்தை அனுபவிப்போம் என்று  சாய்ந்து உட்கார்ந்தேன்.
(பிரயாணத்தில் ஏகாந்தம் எனக்கு  பிடித்தமானது)
சரசரவென்று  பின்னோக்கி ஓடி  மறையும்  மரங்களை  ரசித்துக் கொண்டிருக்கும் போது , 
தோளில் ஒரு  பெரிய இடி. 
பக்கத்து சீட் பெண்மணி தான்.
என் தோளை , ஒரு "ஸ்டாண்ட் " ஆக்கி  என் மேல் சாய ஆரம்பித்தார். 
மெதுவாக நகர்ந்தேன்.
 நகர்ந்தால்................... ,அவரும் கூடவே  சாய்ந்தார்.  

இது என்னடா தொல்லை.
மெதுவாக "மாமி "என்று 

எழுப்பி நகரும்படி  சொல்லி விட்டேன். 

" உங்கள் மேல் விழுந்து விட்டேனா ? சாரி "என்றார்.

ஆனாலும்  ஒரு பிரயோசனமும் இல்லை. 

மீண்டும்  ஈசி  சேரானது என் தோள் .ஒன்றும் செய்வதற்கில்லை  என்று விதியை நொந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து ,அவருக்கே என்ன தோன்றியதோ தெரியவில்லை தன்  இரு கைகளை அணை கொடுத்துத்  தூங்க ஆரம்பித்தார். நான்   மீண்டும்  ஏகாந்தத்தை  அனுபவிக்க ஆரம்பித்தேன்.

 " மடார் "  என்றொரு சத்தம். 

நான் மட்டுமில்லை ,முன் சீட்டில் இருந்தவரும் ,திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க என்னருகே இருந்த பெண்மணி தான் தூங்கி முன் சீட்டில் போய் மடார் ,என்று மோதியதோடு இல்லாமல் , தலை  கீழாக வேறு விழ இருந்தார். 

என்னால் சிரிப்பைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சிரிப்பதைப் பார்த்து, என்னை கோபமாய் அந்தப் பெண்மணி முறைக்க , நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். 
இது நினைவில்  வந்து மோதி  என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

தூங்கக் கூடாத நேரத்திலும், இடத்திலும் தூங்கினாலே  வம்பு தான்.நினைத்துக் கொண்டேன்.

எதற்கு இந்த தூக்க ஆராய்ச்சி என்கிறீர்களா?

எனக்குத் தூக்கம்  வருவது , என்பது குதிரைக்கொம்பு ஆனது கொஞ்ச நாளாய்.

பக்கத்து வீட்டு மாமி சொன்னாற்  போல் , ஏலக்காய் போட்டுப் பால்,  தேன் விட்டுப் பால்,   எல்லாம் முயற்சி செய்கிறேன்.

1,2,3, என்று எண்ணுவது,  படுக்கும் முன் குளியல்...... என்று பல வகையில் முயன்றும் , நித்திராதேவி என்னை ஆட்கொள்ள மறுக்கிறாள்.

கந்த சஷ்டிக் கவசம் சொல்லிப் பார்த்தேன்.  அது முடிந்து ,கந்த குரு கவசமும் முடிந்து விடும். தூக்கம் மட்டும்  என் கண்களைத் தழுவுவதில்லை.

என்ன  செய்வது ....................யோசிக்க ஆரம்பிக்க்க......

ஆ.........வ் .........  கொட்டவியாய்   வந்தது.

நான் தூங்கிடறேங்க........இல்லையென்றால்  விடிந்து தூங்க நேரிடும்.
ஓ !நீங்களும் தூங்கப்  போகிறீர்களா. ? அதற்கு முன்பாக ஒரேயொரு பின்னூட்டம் ...ப்ளீஸ்.......
                                        Good Night!
image courtesy----google.

54 comments:

  1. Good Night! ..! ஸ்வீட் ட்ரீம்ஸ்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் உடனடி வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  2. நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். நானும் இப்போதெல்லாம் இரவில் நெடுநேரம் தூங்குவதே இல்லை. தூக்கம் வருவதும் இல்லை. தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் விடியற்காலம் ஆகிவிடுகிறது. இதனால் எழுந்திருக்கவும் மிகவும் லேட் ஆகிவிடுகிறது.

    இதற்கெல்லாம் மூல காரணம் [1] Office Routine Work லிருந்து விடுதலை பெற்றது [2] இந்த வலையுலகில் மாட்டிக்கொண்டுள்ளது மட்டுமே.

    பஸ் பயணத்தில் அருகில் உள்ளவர் தூங்கி வழிந்து நம் மீது சாயும் போது மிகவும் கடுப்பாகத்தான் இருக்கும். அதையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,
      தூக்கம் வருவேனா என்கிறது. அதுவே பகலில் அப்பப்போ கோழித் தூக்கமாக வருகிறது. என்ன செய்வது சொல்லுங்கள்!
      நன்றி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  3. நகைச்சுவையான பதிவு ரசித்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் பின்னுட்டத்தை மிகவும் ரசித்தேன் MTG.
      நன்றி.

      Delete
  4. ஸாரிங்க தூக்கத்தில் பின்னுட்டம் இட்டதால் நிறைய 'ன், வந்துவிட்டது போல

    ReplyDelete
  5. பத்திரிக்கைச் செய்தியில் துவங்கி அருமையான
    திரைக்கதைப் போல தூக்கம் பற்றிய தகவல்களைப்
    பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
    சுவாரஸ்யமான பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் என் பதிவைப் படித்துப் பாராட்டியதற்கு.

      Delete
  6. நான் இரவு ஒன்பது மணிக்கே சாமியாடும் ஆள். தூக்கம் வராமல் துன்பப்பட்ட நாட்களும் உண்டு! ஏ ஸி ஹாலில் கச்சேரியில் சுகமான ராகத்தின் இன்பத்தில் சிறு குறட்டை விட்டதும், உடனே சுதாரித்ததும் உண்டு! :))

    ReplyDelete
    Replies
    1. //நான் இரவு ஒன்பது மணிக்கே சாமியாடும் ஆள்//எல்லோர் காதிலும் விழுந்து விடப் போகிறது. கண் திருஷ்டி பட்டு விடும்.
      நாங்களெல்லாம் தூக்கம் வராத கேஸ். நானும் கச்சேரிக்குப் போய் பார்க்கிறேன். தூ'க்கம் வருகிறதா பார்க்கலாம்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  7. சுவையான பதிவு
    தூங்குவதில் எனக்குப் பிரச்சனை பெரும்பாலும் ஏற்படுவதில்லை. தூக்கம் கண்களைச் சுழட்டும் 10-11.30 வரை ஏதாவது எழுதிப் படித்துக் கொண்டிருப்பேன். காலை 6 மணி வரை தூங்குவேன்.
    எப்பேதாவது யோசிக்க வேண்டிய விடயங்கள் இருந்தால்தான் பிரச்சனை ஏற்படும். http://goo.gl/a3tajU

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் சார் , உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார். உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான். நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் தூக்க மாறுபாடு பற்றி படித்து விட்டேன். என்கணவரும் உங்களின் விசிறி. அவர் தான் அவ்வப்போது உங்கள் பதிவுகளுக்கு பரமசிவம் என்கிற பெயரில் கருத்திடுகிறார்.
      நன்றி டாக்டர்.

      Delete
  8. தூக்கம் வரவில்லை. சரி, முருகனை பாடுவோம் என

    நினைத்தபோது நீ வரவேண்டும்
    நீல எழில் மயில் மேலே நீ முருகா..

    என வாய்க்குள்தான் பாடினேன்.

    டோண்ட் டிஸ்டர்ப் ஹிம்
    அவருக்கே ஜல தோஷம் . பக்தாஸ் ரொம்ப அதிகமா அபிஷேகம் பண்ணிட்டா.
    ஒரு செற்றிசைன் சாப்பிட்டு தூங்கிட்டு இருக்காரு.

    என்று பதில் சொன்னாள் தேவானை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் , நான் கண்ட நேரத்திற்கும் காக்க காக்க என்று கந்தனைக் கூப்பிடக் கூடாதோ?
      கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான் சார் நம் கந்தன். அதனால் உரிமையுடன்
      பாடத்தான் போகிறேன். வள்ளி, தேவானை கோபித்துக் கொண்டால் தான் என்ன? கோபிப்பதானால் கூட என்னைப் பார்த்து தானே கோபிக்க வேண்டும்? வம்புக்கு இழுத்தாலாவது அம்பாளின் கடைக்கண் பார்வைக் கிட்டுமல்லவா>
      வன்தொண்டன் ஆகிவிட்டுப் போகிறேன்.
      வந்து கருத்திட்டு, அம்பாள் கடைக்கண் பார்வைக்கு, வழி காண்பித்த உங்களுக்கு நன்றிகள் பலப்பல.

      Delete
  9. தூக்கமின்மையை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கும் எனக்கு உங்கள் நகைச்சுவை கலந்த அனுபவப்பதிவைப்பார்க்கும் பொழுது சிரிப்பு வந்தது.எனக்கும் இதே பிரச்சினைதான்....நாற்பதை கடந்ததும் இந்த பிரச்சினை அநேகருக்கு வரும் போலும்:(

    ReplyDelete
    Replies
    1. நாற்பதைத் தானே தாண்டியிருக்கிறீர்கள் அதற்குள்ளாகவா இந்த பிராப்ளம் உங்களுக்கு? என் பதிவை நகைச்சுவை என்று அங்கீகரித்தற்கும் ரொம்ப நன்றி
      ஸாதிகா.

      Delete
  10. எல்லாம் வயசுக் கோளாறுங்க!...

    மற்றபடி ஓடும் பேருந்தில் தூங்கி விழுந்து மண்டையை உடைத்துக் கொள்வது - பாவம் தானே!..

    எனெனில் நானும் அந்த ரகம் தான்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  11. ஹா... ஹா... ரசித்தேன்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி D D சார். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்கும்.

      Delete
  12. ரசித்தேன்.......

    தூக்கம் - சில சமயங்களில் பிரச்சனை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  13. ராஜி மேடம் தூங்குவதற்கு முன் மூச்சி பயிற்சி சிறிது நேரம் பண்ண முயற்சி செய்யுங்கள்! நிச்சயமாக தூக்கம் உங்கள் கண்களை தழுவும்!

    ReplyDelete
    Replies
    1. மூச்சு பயிற்சியெல்லாம் செய்து பார்த்து விட்டேன். இதெல்லாம் இந்த வயதில் வரும் என்று ஒத்துக் கொண்டேன். வயசு ஏற ஏற தூங்கும் ஸ்டைல் மாறுது.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மஹா.

      Delete
  14. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க ..இல்லேன்னா நீங்க இன்னும் எந்திரிக்கலேன்னு அர்த்தமாயிடும் !

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ ...... அப்படியா?
      நன்றி பகவான்ஜி

      Delete
  15. பிரயாணத்தின்போது ஏகாந்தம் எனக்கும் பிடிக்கும், ராஜி! நிறைய பேர்களுக்கு இந்த தூக்கம் பிரச்னையாகி வருகிறது. முதலில் தூக்கம் வரவில்லை என்று நினைப்பதை, அதைப் பலரிடமும் சொல்லி நிரந்தரம் ஆக்கிக் கொள்வதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் உங்கள் மனது நீங்கள் திரும்ப திரும்ப ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே நம்ப ஆரம்பிக்கிறது. அதனால் மாத்தி யோசியுங்கள்!
    நிறைய சிரித்துவிட்டேன்; நான் தூங்கப் போறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் மாத்தி யோசிக்க முயற்சிக்கிறேன் ரஞ்சனி. எப்படியாவது தூக்கம் வந்தால் சரி.பிரயானத்தின் போது ஏகாந்தம் உங்களுக்கும் பிடிக்குமா? மிகவும் பிடித்த விஷயம் எனக்குஅது.
      என் பதிவைப் படித்து சிரித்ததற்கு நன்றி ரஞ்சனி.
      தூங்கப் போவதற்கு வாழ்த்துக்கள்!

      Delete
  16. ம்ம்ம்ம், நான் எட்டரைக்கெல்லாம் சாமியாடிக் கொண்டிருந்தேன் தான். அப்புறமாக் காலம்பர மூணு மணிக்கே முழிப்பு வந்துடறதாலே கொஞ்சம் லேட்டாப் படுத்துக்க ஆரம்பித்தேன். ஆனாலும் தூக்கம் வரச்சே பனிரண்டாவது ஆயிடறது. :( காலை நாலரை மணிக்கு டாண்ணு எழுந்தது போய் இப்போ ஐந்து மணிக்கு எழுந்துக்க அலாரம் வைச்சுக்க வேண்டி இருக்கு! :)))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா மேடம். தூக்கம் இப்படித் தான் பாடாய் படுத்துகிறது.
      நன்றி கீதா மேடம்.

      Delete
  17. ரஞ்சனி சொல்றாப்போல் மஹா சொல்றாப்போல் எல்லாம் பண்ணியாச்சு. கந்த சஷ்டி கவசமும் சொல்லுவேன். :))))) இன்னிக்கு அலைச்சல்லே முடியாமப் போய் இப்போக் கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்கலாம்னு போனால் நாலரையிலிருந்து நாலே முக்காலுக்குள் ஒரு குட்டித் தூக்கம். :))) ராத்திரி இப்படி வரதில்லை. அதான் எனக்கும் புரியலை.

    ReplyDelete
    Replies
    1. கீதா மேடம் நானும் பள வழிகளை முயற்சி செய்தாச்சு.குட்டித் தூக்கம் நானும் பகலில் ஒரு பத்து நிமிஷம் தான் தூநகுவேன். ராத்திரியில் இந்த தூக்கம் வராதது புரியாத புதிர் தான் மேடம்.
      நன்றி மேடம் ஒருமுறைக்கு இருமுறை வந்து கருத்திட்டதற்கு.

      Delete
    2. எங்க ஊரு சனிக்கிழமை மாலை 5 மணிக்குமேல் நானே வருவேன். அது வரைக்கும் எங்கள மாதிரி ஆளுங்களுக்கும் ஒரு பதிவு ரெடி பண்ணி வைங்க.

      Delete
    3. வாங்க சித்ரா. அவசியம் ஒரு பதிவு ரெடி செய்கிறேன்.

      Delete
  18. தூக்கம் பற்றி சிறப்பான பகிர்வு... முன்பெல்லாம் 8.30க்கே சாமியாடுவேன்.. இப்போது 11.....:)
    மதியம் என்றாவது அரைமணி கண் அயர்ந்தால் அன்று இரவு தூக்கம் காலி...:)) ஸ்லோகங்கள், எண்கள், இவை தான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி .
      மீண்டும் வருக!

      Delete
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு.

      Delete
  20. வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துகள், ராஜி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி வாழ்த்துக்களுக்கு.

      Delete
  21. ம்.. எனக்கு தூங்கறதுக்கு கூட நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க... நல்ல தூக்கம்தான் ப்ரெஷ்ஷா ஆக்டிவ்வா வைத்திருக்கும்.... அதிகமான வேலைகள்ல தினமும் தூங்க செல்லும் நேரமே இரவு 11.30 அப்படி ஆகிவிடுகிறது... பிறகு காலை 5.30 ஆகும் போது எழுந்திருக்க மனசே வராது இன்னும் இப்படியே கொஞ்ச நேரம் தூங்குவோமான்னு ஏக்கமா இருக்கும்... சோம்பல் பட்டு லேட்டா எழுந்தா எல்லோரும் கிளம்ப டென்ஷன் ஆக வேண்டியதுதான்... அப்புறம் ஆபிஸ்ல உட்கார்ந்ததும் தூக்கம் வரும். நமக்கு உட்கார்ந்துகிட்டே, நின்னுக்கிட்டே தூங்கறதெல்லாம் பழக்கமாயிடுச்சுங்க...! நல்ல தூக்கத்திற்கு உழைப்புதான் காரணமாயிருக்கும்னு நினைக்கிறேன். உங்கள் ஓய்வு வாழ்க்கையில் அது குறையத்தான் செய்யும். வீட்ல இருக்கிறவங்க பகல்ல எந்த காரணத்தை கொண்டும் தூங்காதீங்க... ! தினசரி நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இரவு சூடான பால் அருந்துங்கள். படுக்கைக்கு வந்த பிறகு எதையும் யோசிக்காதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உழைத்துக் களைத்த என்னைப் போன்றவர்களுக்கு தூங்க நேரமிருக்கிறது. ஆனால் தூக்கம் தான் வருவதில்லை உஷா.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி உஷா.

      Delete
  22. தூக்கம் வராவிட்டாலும்பரவாயில்லை. ஆனால் அந்த நேரத்தில் வேண்டாத நினைவுகள் அலைமோதும், மாத்திரை சாப்பிட்டுத் தூங்குவதைவிட தெரிந்த சுலோகங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். தூக்கம் வராவிட்டாலும் மனம் அலை பாயாது. என் நண்பர் ஒருவர் பேரூந்து பயணத்தில் பஸ் ஏறியவுடன் தூங்கி சாமியாடுவார் , ஆனால் பஸ் நிறுத்தம் வரும்போது உஷாராக விழித்துக் கொள்வார். தூக்கம் பற்றி ஒரு பதிவு எழுத கருவாகக் கிடைத்தது உங்கள் இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் வேண்டாத நினைவுகள் வந்து பாடாய் தான் படுத்துகின்றன. உங்கள் தூக்கம் பற்றிய பதிவைப் படிக்க ஆவல்.நன்றி உங்கள் வருகைக்கும், கருத்தக்கும் GMB சார்.

      Delete
  23. //சென்ற வாரம் ,பஸ்சில் மாயவரம் செல்லும் போது//

    எப்போ திரும்(பி)ப வந்தீங்கன்னு சொல்லவேயில்லையே?

    ReplyDelete
    Replies
    1. நான் இரண்டு நாட்களில் திரும்பி வந்து விட்டேன் . உங்கள் முதல் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  24. ஆஹா... தூக்கத்தில் அந்த அம்மா முன்னிருக்கையை தள்ளிவிடாமல் விட்டார்களே....

    ஹா... ஹா.... அருமை.

    ReplyDelete
  25. உண்மையான சொல்லுங்கள். நீங்கநானே அந்த அம்மாவைத் தள்ளிவிட்டீங்க?

    ReplyDelete
  26. நல்லதொரு பதிவு!

    சில புத்தகங்கள் இருக்கும். எத்தனை தடவை கையில் எடுத்தாலும், இன்றே முடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்தாலும் ஒரிரண்டு பக்கங்கள் கூட படிக்க முடியாது போரடித்து விடும். அந்த மாதிரி புத்தகங்களை தூங்கு முன் படிக்க ஆரம்பியுங்கள். தூக்கம் தானாகவே கண்ணை சுழ‌ற்ற‌ ஆரம்பித்து விடும்.

    அது போல கம்ப்யூட்டரில் சில கணிதம் சார்ந்த விளையாட்டுக்கள் உள்ளன. அவற்றை விளையாடினாலும் சீக்கிரம் உறக்கம் வந்து விடும்.

    மாயவரத்திற்கு அருகிலா நீங்கள் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. நானும் பல வகைகளில் முயற்சி செய்து விட்டேன் மனோ மேடம்.நீங்கள் சொல்லும் வழிகளையும் முயன்று பார்க்கிறேன்.
      நான் சென்னை வாசி மேடம். உறவினர்கள் நிறைய பேர் மாயவரத்திலிருக்கிறார்கள் . அதனால் தான் மாயவரம் விசிட்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  27. வலைப்பதிவிலேயே இருந்தால் இப்படித்தான் தூக்கம் வராது. நீங்கள் எப்படி? தொடர்ச்சியாக எழுதாதீர்கள். கொஞ்சநாள் கருத்துரைகள், பதில்கள். அப்புறம் பதிவு என்று வைத்துக் கொள்ளுங்கள். Settings இல் Comments Moderation இருந்தால் நீக்கி விடுங்கள். அதற்கென்று உட்காரும் நேரம் மிச்சமாகும். ஆட்சேபகரமான Comments ஐ மட்டும் நீக்குங்கள். உங்களுக்கு அப்படியான Comments வர வாய்ப்பில்லை.

    மூத்த பதிவர் VGK அவர்களும் இப்படித்தான் தூக்கம் வராமல் இருக்கிறார் என்று தெரிகிறது. அவருக்கும் எனது ஆலோசனை இதுதான்.

    பஸ்ஸில் தூக்கம் பற்றி நகைச்சுவையாகச் சொன்னீர்கள். நான் மற்றவர்களுக்கு சுமைதாங்கியாகவும். மற்றவர்கள் எனக்கு சுமைதாங்கியாகவும் இருக்க நேரிட்டதுண்டு.

    ReplyDelete
  28. தி.தமிழ் இளங்கோ 19 December 2013 09:23

    //வலைப்பதிவிலேயே இருந்தால் இப்படித்தான் தூக்கம் வராது. நீங்கள் எப்படி? //

    வலையில் வசமாக மாட்டிக்கொண்டு விட்டேனே ஐயா. நான் என் செய்வேன்? வலையில் சிலர் என்னை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் ஐயா. ;)))))

    //தொடர்ச்சியாக எழுதாதீர்கள். கொஞ்சநாள் கருத்துரைகள், பதில்கள். அப்புறம் பதிவு என்று வைத்துக் கொள்ளுங்கள். //

    கரெக்ட்! வரும் பொங்கல் பண்டிகையிலிருந்து நானும் அப்படித்தான் செய்ய இருக்கிறேன். ”தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம்” ;)))))

    //Settings இல் Comments Moderation இருந்தால் நீக்கி விடுங்கள். அதற்கென்று உட்காரும் நேரம் மிச்சமாகும்.//

    இது நானாக செய்தது அல்ல. நண்பர் ஒருவர் நடுவில் செய்து கொடுத்தது. நீக்க விருப்பமில்லாமல் பலவிதத்தில் இதுவும் செளகர்யமாகவே உள்ளது. ருசிகண்ட பூனையாகி விட்டேன். இனி நீக்குவது கஷ்டம் தான்.

    //ஆட்சேபகரமான Comments ஐ மட்டும் நீக்குங்கள். உங்களுக்கு அப்படியான Comments வர வாய்ப்பில்லை.//

    அதுபோலெல்லாம் எனக்கு எதுவும் இதுவரை வந்தது இல்லை. எதையும் வெளியிடாமல் பதுக்குவதோ நீக்குவதோ கிடையாது.

    //மூத்த பதிவர் VGK அவர்களும் இப்படித்தான் தூக்கம் வராமல் இருக்கிறார் என்று தெரிகிறது. அவருக்கும் எனது ஆலோசனை இதுதான். //

    இரவினில் கண் விழிப்பது எதற்கு என்றால் மேலிடத்தின் தொந்தரவுகள் அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் மட்டுமே.

    எப்படியும் ஒரு 6 Hrs. to 8 Hrs. per day தூங்கத்தான் செய்கிறேன். எல்லோரையும்போல 10 PM to 6 AM என்று இல்லாமல் 1 AM to 9 AM அல்லது 2 AM to 10 AM அல்லது 3 AM to 11 AM என்பதுபோல ஏதாவது ஒரு 8 மணி நேரத்தூக்கம் நிச்சயமாக எனக்கும் உண்டு.

    விடியற்காலம் அலறிப்பிடித்து எழுந்து, கலைக்கடன்களை முடித்துவிட்டு, ஓடிச்சென்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 மணிக்கு கிளம்பும் பஸ்ஸைப்பிடித்து, 8 மணிக்குள் ஆபீஸில் அட்டெண்டன்ஸ் பஞ்ச் அடித்த நாட்களெல்லாம் வாழ்க்கையில் மிக அதிகம். அந்த துக்கமான நாட்களுக்காக இப்போது பழி வாங்கி வருகிறேன். துக்க நாட்களை தூக்க நாட்களாக மாற்றி, ஜாலியாக எஞ்ஜாய் செய்து வருகிறேன். ;)))))

    எனினும் தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி, ஐயா.

    அன்புடன் VGK


    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்