என்னை, திரு தமிழ் இளங்கோ , என் முதல் கணினி அனுபவம் பற்றி எழுதச் சொல்லி போஸ்டர் அடித்து விட்டார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் எழுத ஆரம்பிக்கிறேன்.
( வீண் போச்சா இல்லையா என்பதை நாங்களல்லவா சொல்ல வேண்டும் என்கிற முனகல் கேட்கிறது)
இதோ நான் Raj Kates (Bill Gates மாதிரி Raj Kates ) ஆன கதை.
என மகளும், மகனும், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கணினி வாங்கத் தீர்மானித்தோம்.
விலையைக் கேட்டோம். மயக்கம் வராத குறைதான்.இருந்தாலும் வாங்குவது என்பது முடிவானது.
மறு நாளே என் சக ஆசிரியைகளுடன் மதிய உணவு நேரத்தில் இதைப் பற்றி விவாதம் .ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை. அப்பொழுது தான் PC க்கள் வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்த நேரம். விவாதத்தில் வீட்டில் AC ரூமில் தான் கணினி இருக்க வேண்டும்( இல்லையென்றால் கோபித்துக் கொண்டு போய் விடும்) என்று பரவலாக சொல்லப்பட நான் அதை ....
அன்று மாலை ஆபிசிலிருந்து திரும்பிய கணவரிடம் எடுத்து சொல்ல.....
அவரோ........." ஏன் ........ ஆர்கெஸ்ட்ரா , ஆர்ச் ,என்று எதுவும் அரேஞ் செய்ய வேண்டாமா? "என்று கிண்டலாக கேட்க நானோ," நீங்கள் என்னவோ செய்யுங்கள் "என்று முகத்தை திருப்பிக் கொண்டேன்.
அந்த நாளும் வந்தது. கம்ப்யுட்டரை அன்று தான் மிக நெருக்கத்தில் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும். அதை இன்ஸ்டால் செய்பவர் என் மகளிடமும், மகனிடமும் விண்டோஸ், லினக்ஸ் , கேட்ஸ் என்று என்னென்னமோ சொல்ல எனக்குத் தெரிந்தது என்னவோ ,எங்கள் வீட்டு ஜன்னலும், கதவும் தான்.
மறு நாளிலிருந்து எனக்கும் கணினிக்கும் ஒரு பெரிய போராட்டமே ஆரம்பித்தது.ஸ்விட்சைப் போட்டால் என்னென்னவோ திரையில் தெரிய ஒன்றும் புரியாமல், பயந்து போய் சட்டென்று ஸ்விட்ச்சை ஃஆப் செய்து விட்டு ,ஒன்றும் தெரியாதவளாய் கமுக்கமாக உட்கார்ந்து கொண்டே ன்.
அடுத்து வீட்டிற்குள் நுழைந்தது என் மகள் . அவள் ஸ்விட்சை ஆன் செய்ததும் " அம்மா, இங்கே வா? எதற்கு கம்ப்யுட்டரை ஆன் செய்துவிட்டு ஆப் செய்திருக்கிறாய். ஷட் ...டவுன் அல்லவா செய்ய வேண்டும் ."என்று கோபப்பட
அவளிடம் என் பால பாடத்தை ஆரம்பித்தேன். "உனக்கு மவுஸ் கோ-ஆர்டினேஷனே வரவேயில்லை "என்று அவள் எரிச்சலாக ,
"கண்ணா, கண்ணா " என அபயக் குரல் நான் கொடுக்க என் மகன் ஆஜரானானான்.
அவன் " மவுஸ் வசப்பட " solitaire" விளையாடு, பிறகு மற்றதெல்லாம் கற்றுக் கொள்ளலாம். " என்று தகப்பன் சாமியானான்
மறு நாளிலிருந்து விளையாட ஆரம்பித்தேன். இரண்டொரு நாளில் எலி என் வசமானது (அதாங்க மவுஸ் ) .
ஆனால் , அதற்குப் பிறகு solitaire என்னை விடுவதாயில்லை. வீட்டிற்கு வந்தவுடன் கம்ப்யுட்டரை ஆன் செய்ததும், நான் செய்வது கார்ட்ஸ் விளையாட்டு விளையாடுவது தான். எல்லோரும் வீட்டில் திட்ட, திட்ட விளையாடியிருக்கிறேன் .
என் மாமியாரோ, " இதென்ன கூத்தால்ல இருக்கு! அம்மாவே சீட்டாடிக் கொண்டிருந்தால் குடும்பம் உருப்பட்டு விடும் "என்று முனக , இது சரிப்படாது என்று விட்டு தொலைத்தேன்.
இதற்குள் எங்கள் பள்ளியில் சில ஆசிரியைகளை கம்ப்யுட்டர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் அடியேனும் ஒருத்தி.
அங்கு போய் excel, power ponit presentation எல்லாம் கற்றுக் கொண்டு வந்தேனா?
வீட்டில் இதை பற்றி ஒரேயடியாக " பீட்டர் "விட்டுக் கொண்டிருக்க, என் அம்மா அப்பொழுது, " நீ என்ன தான் கற்றுக் கொள்கிறாய் சொல்லேன் ?" என்றார்.
உடனே நான் என் கம்ப்யுட்டர் அறிவை வெளிப்படுத்தினேன்.
என்னவோ ஒரு பாடத்திற்கே slides தயாரித்தேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .
நான் " WELCOME " என்று ஒரேயொரு வார்த்தையில் என் திறமையெல்லாம் கொட்டினேன்.
வார்த்தையிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு மூலையிலிருந்து குதித்தோடி, பல்டியடித்து , சர்ரென்று சறுக்கி வரவைத்து மியுசிக்குடன் கணினியில் சர்க்கஸ் காட்டினேன்.
ஒரு பதிலும் வரவில்லை என் அம்மாவிடமிருந்து. என்னவென்று பார்த்தால் என் அம்மாவினால் பேசவே முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர், அருவியாய் கொட்டி, ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
ஈன்ற பொழிதுனும் பெரிதாக உவந்திருப்பார் போலிருக்கிறது.
இந்த அருமையான சந்தர்ப்பத்தில் என் மகளுக்கு மூக்கின் மேல் வியர்க்குமே! வந்து விட்டாள் . "என்ன பாட்டி? ஒரே ஃ பீலிங்க்ஸ் தான் போ !
எனக்கு கொஞ்சமே கொஞ்சம் விஷயம் தெரியும் என்று யாராவது சொன்னால் என் மகனிற்கு பொறுக்குமா . வந்து விட்டான் அவனும்." இது ஒரு பெரிய விஷயமில்லை பாட்டி. நீ கூட செய்யலாம் " என்று என் மானத்திற்கு பங்கம் விளைவிக்க இருவரும் முயற்சி செய்தனர்.
ஆனால் என் அம்மாவோ ." பரவாயில்லைடி ! இஞ்சினீயர் படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். " என்று பெருமையோ பெருமை.
(எனக்குத் தானே தெரியும் நான் இஞ்சி நீரா , வெந்நீரா என்று )
கொஞ்ச நாளில் அதில் ,CD போட்டு படம் பார்ப்பது, ஆடியோ CD போட்டு சினிமா பாட்டு கேட்பது என்று ஓரளவிற்குக் கற்று கொண்டேன்.
(என்னவெல்லாம் செய்கிறேன்.........என்று என்மேலேயே எனக்கு பொறாமை ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்)
பின் இணைய உலகம் புரிய ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் dial up connection தான். அந்தப் பெருமை பற்றியெல்லாம் சொல்லப் போவதில்லை.
மெயில் வந்த புதிது. நானே தட்டுத் தடுமாறி ஒரு மெயில் ஐடி ஆரம்பித்துக் கொண்டேன்.
அதிலிருந்து என் தம்பியின் மனைவி லதாவிற்கு மெயில் அனுப்பி வைத்தேன். அரை மணி நேரமானது.... பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு ஒரு 15 நிமிட இடைவெளியில் பதில் வந்திருக்கா,பதில் வந்திருக்கா .... என்று பார்க்க ஆரம்பித்தேன். பதில் வரும் வரை விடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு ஒரு ISD கால் செய்து " மெயில் அனுப்பியிருக்கிறேன் " என்று சொல்லிவிடலாமா என்று கூட யோசித்தேன்.
(இப்பொழுதும் , ஒரு பதிவு எழுதிவிட்டு 5 நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது கருத்து இட்டிருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்.)
லதா பார்த்தால் தானே! இரண்டு நாட்களுக்குப் பிறகு பதில் வந்திருந்தது.
ஒரே எதிர்பார்ப்புடன் திறந்தால் "உங்களுக்கு மெயில் ஐடி இருக்கிறது என்று புரிகிறது. ஆனால் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. எல்லாம் HTML இல் இருக்கிறது. என்று என் மெயில் செட்டிங்க்ஸ் மாற்ற சொல்லிக கொடுத்து எனக்கு மெயில் அனுப்பினாள்.
எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்து விட வேண்டாம்.
இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங், டிக்கெட் வாங்குவது, பில்லிற்கு பணம் கட்டுவது, முக்கியமாக சினிமா பார்ப்பது என்று எல்லாமே இணையத்தில் நானே பார்த்துக் கொள்கிறேன்.
எவ்வளவு வளர்ந்து விட்டேன் பாருங்கள் .
எப்படி என்றால்,
" இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட கூகுலைப் பார்த்து தான் சொல்வாய் . அது மட்டுமா , வங்கியிலிருக்கும் பணத்திற்கு வீட்டிலிருந்தபடியே அருமையாய் உலை வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாய் ' என்று கணவர் சலிக்கும் அளவிற்கு..
" கம்ப்யுட்டரிலேயே கதையெல்லாம் எழுதுகிறேன் என்று எல்லோருக்கும் என் வீட்டில் ஒரே பெருமை "
என்று சொல்லிக் கொள்ள ஆசை தான்.
ஆனால் ஒருவரும் சொல்வதில்லை.
அதனால் நானே அவர்கள் சொன்னதாக ஒரு சின்ன பொய்........அவ்வளவே தான்.
நான் கம்ப்யுட்டரில் Raj Kates .. ..........Raj Kates .......... ஆகிவிட்டேன் தானே !!
நீங்கள்...................?
விருப்பமுள்ளவர்கள் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
IMAGE COURTESY-----GOOGLE.