என்னை, திரு தமிழ் இளங்கோ , என் முதல் கணினி அனுபவம் பற்றி எழுதச் சொல்லி போஸ்டர் அடித்து விட்டார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் எழுத ஆரம்பிக்கிறேன்.
( வீண் போச்சா இல்லையா என்பதை நாங்களல்லவா சொல்ல வேண்டும் என்கிற முனகல் கேட்கிறது)
இதோ நான் Raj Kates (Bill Gates மாதிரி Raj Kates ) ஆன கதை.
என மகளும், மகனும், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கணினி வாங்கத் தீர்மானித்தோம்.
விலையைக் கேட்டோம். மயக்கம் வராத குறைதான்.இருந்தாலும் வாங்குவது என்பது முடிவானது.
மறு நாளே என் சக ஆசிரியைகளுடன் மதிய உணவு நேரத்தில் இதைப் பற்றி விவாதம் .ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை. அப்பொழுது தான் PC க்கள் வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்த நேரம். விவாதத்தில் வீட்டில் AC ரூமில் தான் கணினி இருக்க வேண்டும்( இல்லையென்றால் கோபித்துக் கொண்டு போய் விடும்) என்று பரவலாக சொல்லப்பட நான் அதை ....
அன்று மாலை ஆபிசிலிருந்து திரும்பிய கணவரிடம் எடுத்து சொல்ல.....
அவரோ........." ஏன் ........ ஆர்கெஸ்ட்ரா , ஆர்ச் ,என்று எதுவும் அரேஞ் செய்ய வேண்டாமா? "என்று கிண்டலாக கேட்க நானோ," நீங்கள் என்னவோ செய்யுங்கள் "என்று முகத்தை திருப்பிக் கொண்டேன்.
அந்த நாளும் வந்தது. கம்ப்யுட்டரை அன்று தான் மிக நெருக்கத்தில் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும். அதை இன்ஸ்டால் செய்பவர் என் மகளிடமும், மகனிடமும் விண்டோஸ், லினக்ஸ் , கேட்ஸ் என்று என்னென்னமோ சொல்ல எனக்குத் தெரிந்தது என்னவோ ,எங்கள் வீட்டு ஜன்னலும், கதவும் தான்.
மறு நாளிலிருந்து எனக்கும் கணினிக்கும் ஒரு பெரிய போராட்டமே ஆரம்பித்தது.ஸ்விட்சைப் போட்டால் என்னென்னவோ திரையில் தெரிய ஒன்றும் புரியாமல், பயந்து போய் சட்டென்று ஸ்விட்ச்சை ஃஆப் செய்து விட்டு ,ஒன்றும் தெரியாதவளாய் கமுக்கமாக உட்கார்ந்து கொண்டே ன்.
அடுத்து வீட்டிற்குள் நுழைந்தது என் மகள் . அவள் ஸ்விட்சை ஆன் செய்ததும் " அம்மா, இங்கே வா? எதற்கு கம்ப்யுட்டரை ஆன் செய்துவிட்டு ஆப் செய்திருக்கிறாய். ஷட் ...டவுன் அல்லவா செய்ய வேண்டும் ."என்று கோபப்பட
அவளிடம் என் பால பாடத்தை ஆரம்பித்தேன். "உனக்கு மவுஸ் கோ-ஆர்டினேஷனே வரவேயில்லை "என்று அவள் எரிச்சலாக ,
"கண்ணா, கண்ணா " என அபயக் குரல் நான் கொடுக்க என் மகன் ஆஜரானானான்.
அவன் " மவுஸ் வசப்பட " solitaire" விளையாடு, பிறகு மற்றதெல்லாம் கற்றுக் கொள்ளலாம். " என்று தகப்பன் சாமியானான்
மறு நாளிலிருந்து விளையாட ஆரம்பித்தேன். இரண்டொரு நாளில் எலி என் வசமானது (அதாங்க மவுஸ் ) .
ஆனால் , அதற்குப் பிறகு solitaire என்னை விடுவதாயில்லை. வீட்டிற்கு வந்தவுடன் கம்ப்யுட்டரை ஆன் செய்ததும், நான் செய்வது கார்ட்ஸ் விளையாட்டு விளையாடுவது தான். எல்லோரும் வீட்டில் திட்ட, திட்ட விளையாடியிருக்கிறேன் .
என் மாமியாரோ, " இதென்ன கூத்தால்ல இருக்கு! அம்மாவே சீட்டாடிக் கொண்டிருந்தால் குடும்பம் உருப்பட்டு விடும் "என்று முனக , இது சரிப்படாது என்று விட்டு தொலைத்தேன்.
இதற்குள் எங்கள் பள்ளியில் சில ஆசிரியைகளை கம்ப்யுட்டர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் அடியேனும் ஒருத்தி.
அங்கு போய் excel, power ponit presentation எல்லாம் கற்றுக் கொண்டு வந்தேனா?
வீட்டில் இதை பற்றி ஒரேயடியாக " பீட்டர் "விட்டுக் கொண்டிருக்க, என் அம்மா அப்பொழுது, " நீ என்ன தான் கற்றுக் கொள்கிறாய் சொல்லேன் ?" என்றார்.
உடனே நான் என் கம்ப்யுட்டர் அறிவை வெளிப்படுத்தினேன்.
என்னவோ ஒரு பாடத்திற்கே slides தயாரித்தேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .
நான் " WELCOME " என்று ஒரேயொரு வார்த்தையில் என் திறமையெல்லாம் கொட்டினேன்.
வார்த்தையிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு மூலையிலிருந்து குதித்தோடி, பல்டியடித்து , சர்ரென்று சறுக்கி வரவைத்து மியுசிக்குடன் கணினியில் சர்க்கஸ் காட்டினேன்.
ஒரு பதிலும் வரவில்லை என் அம்மாவிடமிருந்து. என்னவென்று பார்த்தால் என் அம்மாவினால் பேசவே முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர், அருவியாய் கொட்டி, ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
ஈன்ற பொழிதுனும் பெரிதாக உவந்திருப்பார் போலிருக்கிறது.
இந்த அருமையான சந்தர்ப்பத்தில் என் மகளுக்கு மூக்கின் மேல் வியர்க்குமே! வந்து விட்டாள் . "என்ன பாட்டி? ஒரே ஃ பீலிங்க்ஸ் தான் போ !
எனக்கு கொஞ்சமே கொஞ்சம் விஷயம் தெரியும் என்று யாராவது சொன்னால் என் மகனிற்கு பொறுக்குமா . வந்து விட்டான் அவனும்." இது ஒரு பெரிய விஷயமில்லை பாட்டி. நீ கூட செய்யலாம் " என்று என் மானத்திற்கு பங்கம் விளைவிக்க இருவரும் முயற்சி செய்தனர்.
ஆனால் என் அம்மாவோ ." பரவாயில்லைடி ! இஞ்சினீயர் படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். " என்று பெருமையோ பெருமை.
(எனக்குத் தானே தெரியும் நான் இஞ்சி நீரா , வெந்நீரா என்று )
கொஞ்ச நாளில் அதில் ,CD போட்டு படம் பார்ப்பது, ஆடியோ CD போட்டு சினிமா பாட்டு கேட்பது என்று ஓரளவிற்குக் கற்று கொண்டேன்.
(என்னவெல்லாம் செய்கிறேன்.........என்று என்மேலேயே எனக்கு பொறாமை ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்)
பின் இணைய உலகம் புரிய ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் dial up connection தான். அந்தப் பெருமை பற்றியெல்லாம் சொல்லப் போவதில்லை.
மெயில் வந்த புதிது. நானே தட்டுத் தடுமாறி ஒரு மெயில் ஐடி ஆரம்பித்துக் கொண்டேன்.
அதிலிருந்து என் தம்பியின் மனைவி லதாவிற்கு மெயில் அனுப்பி வைத்தேன். அரை மணி நேரமானது.... பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு ஒரு 15 நிமிட இடைவெளியில் பதில் வந்திருக்கா,பதில் வந்திருக்கா .... என்று பார்க்க ஆரம்பித்தேன். பதில் வரும் வரை விடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு ஒரு ISD கால் செய்து " மெயில் அனுப்பியிருக்கிறேன் " என்று சொல்லிவிடலாமா என்று கூட யோசித்தேன்.
(இப்பொழுதும் , ஒரு பதிவு எழுதிவிட்டு 5 நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது கருத்து இட்டிருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்.)
லதா பார்த்தால் தானே! இரண்டு நாட்களுக்குப் பிறகு பதில் வந்திருந்தது.
ஒரே எதிர்பார்ப்புடன் திறந்தால் "உங்களுக்கு மெயில் ஐடி இருக்கிறது என்று புரிகிறது. ஆனால் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. எல்லாம் HTML இல் இருக்கிறது. என்று என் மெயில் செட்டிங்க்ஸ் மாற்ற சொல்லிக கொடுத்து எனக்கு மெயில் அனுப்பினாள்.
எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்து விட வேண்டாம்.
இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங், டிக்கெட் வாங்குவது, பில்லிற்கு பணம் கட்டுவது, முக்கியமாக சினிமா பார்ப்பது என்று எல்லாமே இணையத்தில் நானே பார்த்துக் கொள்கிறேன்.
எவ்வளவு வளர்ந்து விட்டேன் பாருங்கள் .
எப்படி என்றால்,
" இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட கூகுலைப் பார்த்து தான் சொல்வாய் . அது மட்டுமா , வங்கியிலிருக்கும் பணத்திற்கு வீட்டிலிருந்தபடியே அருமையாய் உலை வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாய் ' என்று கணவர் சலிக்கும் அளவிற்கு..
" கம்ப்யுட்டரிலேயே கதையெல்லாம் எழுதுகிறேன் என்று எல்லோருக்கும் என் வீட்டில் ஒரே பெருமை "
என்று சொல்லிக் கொள்ள ஆசை தான்.
ஆனால் ஒருவரும் சொல்வதில்லை.
அதனால் நானே அவர்கள் சொன்னதாக ஒரு சின்ன பொய்........அவ்வளவே தான்.
நான் கம்ப்யுட்டரில் Raj Kates .. ..........Raj Kates .......... ஆகிவிட்டேன் தானே !!
நீங்கள்...................?
விருப்பமுள்ளவர்கள் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
IMAGE COURTESY-----GOOGLE.

நேற்று வந்த ஆனால் மிகப் "பிரபலமான Raj Kates" யே பதிவு எழுத வந்துட்டார் ஆனா அந்த வீணாப் போன பில் கேட்ஸ் ரொம்ப அலட்டிகிட்டு இருக்கிறார்
ReplyDeleteநன்றி MTG உங்கள் உடனடி வருகைக்கும், கருத்துக்கும்.
Delete'Raj Kates' - க்கு இவ்வளவு அர்த்தம் இருக்கின்றதா!.. நல்ல நயமான எழுத்தோவியம்!. முயற்சி திருவினையாக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்!..
ReplyDeleteநன்றி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.
Deleteமுதல் கணினி அனுபவத்தை அழகாய் சொல்லியுள்ளீர்கள் தோழி. வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்களும் எழுதுங்களேன். படிக்கிறோம். நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.
Deleteவிரைவில் எழுதுகிறேன் தோழி.
Deleteஅம்மாவினால் பேசவே முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர், அருவியாய் கொட்டி, ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
ReplyDeleteஈன்ற பொழிதுனும் பெரிதாக உவந்திருப்பார் போலிருக்கிறது.//
ஆம் , தாய்க்குதான் தெரியும் மகளின் அருமை, பெருமை எல்லாம்.
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது அனுபவம்.
இப்பொழுதும் அம்மாவிற்கு ஒரே பெருமை தான் நான் பதிவெழுதுவதில். நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteஇஞ்சி நீர், .வெந்நீர் - ஹா ஹா ஹா....
ReplyDeleteஉங்கள் அனுபவங்களை நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு அம்மாவுக்குத் தன் குழந்தை எந்த வயதில் எது செய்தாலும், கற்றுக்கொண்டாலும், பெருமைதான்!
நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் பாராட்டிற்கு.
Deleteஇப்பொழுதும் நீங்க ஏமாறக்கூடாது என்று நினைத்துதான் பாதியிலேயே வந்து கருத்திட்டிருக்கிறேன்.மேற்கொண்டு படித்துவிட்டு வருகிறேன்.
ReplyDeleteநன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteஏமாற்ற மனமில்லாமல் மீண்டும் வந்துவிட்டேன்!
ReplyDeleteநீங்க கணினியில் 'வெல்கம்' சர்க்கஸ் காட்டிய விதத்தை வர்ணித்தது செம காமெடி. முதல் மெயில் அனுப்பியது என எல்லாமும் எஞ்ஜாய் பண்ணி படித்தேன்.
" பரவாயில்லைடி ! இஞ்சினீயர் படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். "___________அம்மாவுக்கு எவ்வளவு பெருமை.
"நீங்க கம்ப்யுட்டரில் நீங்க கதை எழுதுவது எங்க எல்லோருக்கும் ஒரே பெருமை" _______ நாங்க சொல்லிவிட்டுப் போகிறோமே!.
அனுபவத்தைக் கலக்கிட்டீங்க.
சித்ரா, அத்தனையும் உண்மை . நிஜமாகவே நடந்தது. எழுதும் போது கொஞ்சம் மிகைப் படுத்ஹ்டியது போல் இருக்கும். ஆனால் நடந்தது அப்படியே எழுதியிருக்கிறேன்.
Deleteஎன் அம்மாவின் பெருமை சொல்ல வார்த்தைகளே இல்லை சித்ரா.
நீங்கள் என்னை நினைத்து பெருமையடைவது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கும் முதல் கணினி அனுபவம் இருக்குமே . எழுதுங்களேன். படிக்க காத்திருக்கிறோம்.
நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், பெருமைகொள்வதற்கும்.
//" இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட கூகுலைப் பார்த்து தான் சொல்வாய் . அது மட்டுமா , வங்கியிலிருக்கும் பணத்திற்கு வீட்டிலிருந்தபடியே அருமையாய் உலை வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாய் ' என்று கணவர் சலிக்கும் அளவிற்கு..//
ReplyDeleteஎல்லாருடைய வீட்டிலும் இதே கதை தான்...
வங்கியில் நம் அக்கவுண்டில் பணம் இருந்தால் தூக்கம் வருமா சொல்லுங்கள்.அதை செலவழித்த பின் தான் நிம்மதியாக உறங்குவேன்.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
எவ்வளவு வளர்ந்து விட்டேன் பாருங்கள் .
ReplyDeleteஎன்னே மகிழ்ச்சி ? எனக்கும் அப்படித்தான்
நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteநகைச்சுவையுடன் சுவாரஸ்யமான அனுபவம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Delete// என் மாமியாரோ, " இதென்ன கூத்தால்ல இருக்கு! அம்மாவே சீட்டாடிக் கொண்டிருந்தால் குடும்பம் உருப்பட்டு விடும் "என்று முனக , இது சரிப்படாது என்று விட்டு தொலைத்தேன். //
ReplyDeleteஎன்னவோ அம்மன் கோயில் திண்ணையில் சீட்டு விளையாடிய மாதிரி அல்லவா சொல்லி விட்டார்கள்.
// ஆனால் என் அம்மாவோ ." பரவாயில்லைடி ! இஞ்சினீயர் படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். " என்று பெருமையோ பெருமை. //
இப்போது இதுமாதிரி நிறையபேர் இஞ்சினீயர் ஆகி விட்டார்கள்.
// இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட கூகுலைப் பார்த்து தான் சொல்வாய் .//
நன்றாக ஜோக் சொல்லியுள்ளார்.
உங்கள் பதிவு முழுக்க ரசித்து படித்தேன். நன்றி!
என் பதிவை நன்றாகவே படித்து ரசித்து இருக்கிறீர்கள். நீங்கள் விடுத்த அழைப்பிற்கு முதலில் நன்றி சார்.
Deleteவரி வரியாக் படித்து ரசித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
அன்றி தமிழ் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
சுவாரஸ்யமான அனுபவங்கள் கணிணியோடு ..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.
Deleteநல்லா இருக்கு உங்கள் கணணி முதல் அனுபவம். நானும் உங்களை மாதிரிதான் சாலிடேர் ஆடிக் கொண்டே இருப்பேன் - இப்பவும்!
ReplyDeleteஎன் அம்மாவும் உங்க அம்மாவைப் போலத்தான் - ரொம்பப் பெருமை.
அம்மாவிற்குத்தான் தெரியும் மகளின் அருமை பெருமை எல்லாம், இல்லையா?
நகைச்சுவை ஒவ்வொரு வரியிலும் இழையோடிகிறது. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள் Raj Kates!
என்னைப் போலவே நீங்களும் நன்றாகவே சீட்டாடுவீர்கள் போலிருக்கிறது.
Deleteஎல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் போலிருக்கிறது.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் ,என்னை Raj Kates என்று அழைத்ததற்கும் நன்றி ரஞ்சனி. .
//ஆனால் என் அம்மாவோ ." பரவாயில்லைடி ! இஞ்சினீயர் படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். " என்று பெருமையோ பெருமை.
ReplyDelete(எனக்குத் தானே தெரியும் நான் இஞ்சி நீரா , வெந்நீரா என்று )//
;)))))) அருமை. நல்ல சுவாரஸ்யமான அனுபவங்களுடன் கூடிய ஆக்கம். பாராட்டுக்கள்.
வைகோ சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.
Delete
ReplyDeleteநகைச் சுவை அனுபவப் பகிர்வு.ரசித்தேன் எனக்கு பதிவு எழுத முடியாமல் இருக்கும்போது ஒரு மாற்றத்துக்காக கார்ட்ஸ் கணினியில் ஆடுவேன்.
நன்றி GMB சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteநான் ஏற்க்னவே எழுதி அனுப்பிய கமெண்ட்டைக்காணோம் ???? ;(((((
ReplyDeleteமிகவும் அழகாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.
//" இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட கூகுலைப் பார்த்து தான் சொல்வாய் . அது மட்டுமா , வங்கியிலிருக்கும் பணத்திற்கு வீட்டிலிருந்தபடியே அருமையாய் உலை வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாய் ' என்று கணவர் சலிக்கும் அளவிற்கு..//
மிகவும் ரஸித்தேன். சூப்பர். பாவம் அவர் - பாடுபட்டு ஈட்டிய பணம் அல்லவா! இப்படி நீங்கள் கணினி மூலம் உலை வைத்தால் என்ன ஆவது? ;))))))
" கம்ப்யுட்டரிலேயே கதையெல்லாம் எழுதுகிறேன் என்று எல்லோருக்கும் என் வீட்டில் ஒரே பெருமை " என்று சொல்லிக் கொள்ள ஆசை தான்.ஆனால் ஒருவரும் சொல்வதில்லை. அதனால் நானே அவர்கள் சொன்னதாக ஒரு சின்ன பொய்........அவ்வளவே தான்.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... வாய் விட்டுச்சிரித்தேன்.
பகிர்வுக்கு ந்ன்றிகள்.
வைகோ சார்,
Deleteஉங்கள் மீள் வருகை என்னை மகிழ்விக்கிறது. நீங்கள் முதலில் போட்ட கமென்ட் மேலே இருப்பது தானே . இதைத் தவிர வேறு ஒன்றும் உள்ளதா?
spam எல்லாம் செக் செய்தேன்.
நான் கணினி மூலம் உலை வைக்கவில்லைஎன்றால் அவர் தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய Q வில் நின்று கட்டப் போகிறார். அவருடைய வேலை சுமையை குறைக்கலாமே என்று தான்....
நீங்கள் வருகை புரிந்ததற்கும், பாராட்டுரை எழுதியதற்கும் நன்றி வைகோ சார்.
That's wonderful depiction of your tryst with computer.Nice read ... enjoyed reading it.
ReplyDeletethankyou sir for enjoying my writing and giving appreciative comments.
Deleteசுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க ராஜி மேடம்! படிக்க ரொம்ப நல்லா இருந்தது. பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி மஹி ,
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
சுவாரசியமாக எழுதி இருக்கீங்க......
ReplyDeleteசுவையான அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.
Deleteநீங்கள் ராஜ்கேட் தான்
ReplyDeleteசுவாரஸ்யமாக சொல்லவேண்டியதை
சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
ReplyDeleteநிஜமாவே நீங்க பில்கேட்ஸ் போல ராஜ் கேட்ஸ்தான். ஏன்னா, உங்க தளத்துக்கு வர இம்புட்டு நாளாச்சே!. நல்லா நகைச்சுவையா எழுதுறீங்க. வாழ்த்துகள். இனி தொடர்ந்து வருவேன்.
ReplyDeleteநன்றி ராஜி , உங்கள் வருகைக்கும், என்பதிவை ரசித்து படித்து பாராட்டியதற்கும்.
Deleteநீங்கள் தொடர்ந்து வருவது பெருமகிழ்ச்சி!
நன்றி.
****இப்பொழுதும் , ஒரு பதிவு எழுதிவிட்டு 5 நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது கருத்து இட்டிருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்***
ReplyDeleteபரவாயில்லை, ரொம்ப ஆனஸ்ட்டாத்தான் எழுதி இருக்கீங்க. :)))
ஆனால் என்னை மாரி ஆள் பின்னூட்டம்னு ஒரு "மூட்ல" கன்னா பின்னானு பின்னூட்டமிட ஆரம்பித்தால்.. இந்த ஆசை, எதிர்பார்ப்பெல்லாம் போயிடும். "இனிமேல் இவன் வந்தால், பேசாமல் வாசிச்சிட்டு போயிடுடட்டுமே"னு கடவுளை வேண்ட ஆரம்பிச்சுடுவீங்க!
ஒரு சில பின்னூட்டங்கள் ஊக்குவிப்பதற்கு பதிலாக நம்மை காயப்படுத்துவம் உண்டுனு சொல்ல வந்தேன், கேட்ஸ் அவர்களே!
அம்மாவின் ஆனந்தக்கண்ணீர், மாமியாரின் பொறுப்பான "கண்டிப்பு".. இப்படி மொத்தத்தில் பதிவு ரொம்ப நல்லா வந்திருக்கு!
வாருங்கள் வருண் !
Deleteநீங்கள் வந்து எனக்கு பின்னூட்டம் இட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
என் பதிவை ரசித்துப் படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
சூப்பர், சூப்பர் உங்கள் முதல் கணினி அனுபவம்! கலக்கி விட்டீர்கள் போங்க.. :)
ReplyDeleteவாங்க மகாலட்சுமி!
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.