பொறுப்புத் துறப்பு
இப்பதிவில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே!கற்பனையே!கற்பனையே!
இது மாதிரி யார் வாழ்விலாவது நிகழ்ந்திருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானது.________________________________________
நல்ல தூக்கத்திலிருந்தார் விஷ்ணு. திடீரென்று தூக்கம் கலைந்தது.
யாரோ அலறும் குரல் கேட்டது.
" ராசி, ராசி " கூ ப்பிட்டார் விஷ்ணு. பதிலையே காணோம்.
பார்த்தால் படுக்கையில் ராசியைக் காணோம்.
ராசிக்குத் தான் ஏதாவது ஆகிவிட்டதோ என்று அலறியடித்துக் கொண்டு படுக்கையிலிருந்து , விழாத குறையாக எழுந்தார். லுங்கியை , கைகளால் இறுக்கிக் கொண்டே, அவசர அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தார் விஷ்ணு.
ஹாலில் ராசி சம்மணக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு குனிந்து எதையோ கைகளால் திருகிவிட்டுக் கொண்டிருந்தாள் ராசி..
என்ன என்று பார்த்தார் விஷ்ணு ...பார்த்தால் சுருதிப் பெட்டி.
" என்ன செய்கிறாய் இந்த காலங்கார்த்தாலே. மணியைப் பார் நாலரை தான் ஆகிறது "
"அதுவா........... நான் சாதகம் செய்கிறேன்."
" சாதகமா?"
"ஆமாம். சாதகம் செய்தால் தானே மறந்து போன பழைய சங்கீதம் பிடிபடும்"
( பிடிபட்டது விஷ்ணுவிற்கும் , அலறல் சத்தத்தின் ரகசியம்)
"எதற்கு இப்ப போய் சாதகம் எல்லாம் . பேசாமல் படேன்" என்றார் விஷ்ணு.
" அப்புறம் எப்படி சூப்பர் சிங்கரில் பாடுவது? என்றாளே பார்க்கலாம்.
தலையை சுற்றி கீழே விழாமல் இருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டார் விஷ்ணு.
"இளம் வயதினர் தான் பாட முடியம் என்று நினைக்கிறேன்" என்றார் விஷ்ணு
ஈனஸ்வரத்தில் .
" அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்ப கூட நடுத்தர வயதினைக் கடந்த ஒருவர் கலக்கிக் கொண்டிருக்கிறாரே " என்று கூறி விட்டு சுருதி கூட்ட ஆரம்பித்தாள் .
ஸ ...............ப ....................
(பயங்கர அபஸ்வரம் என்பது விஷ்ணுவிற்கு புரியவில்லை.
ஆனால் " நாராசமாக இருக்கிறது " ,சொல்லவில்லை. நினைத்துக் கொண்டார்.)
தன் தலையெழுத்தை நொந்து கொண்டே மீண்டும் போய் படுத்தார் விஷ்ணு.
காதில் இந்த அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்க அப்படியே தூங்கியும் போனார்.
முழிப்பு வந்தபோது மணி ஏழு.
எழுந்து போய் தன் வேலைகளை முடித்துக் கொண்டு, டிபன் சாப்பிட டேபிளிற்கு வந்தார் .
அங்கே நீளமாய் பள்ளிக் கொண்டிருந்தது பிரெட் .அதன் காலடியில் ஜாம்.
என்ன புதுசாக இருக்கு? என்று விஷ்ணு வினவ
"எனக்கு சாதக ம் செய்து முடிப்பதற்குள், நேரமாகிவிட்டது .அதனால் தான் பிரெட்..
கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் " --ராசி .
"கொஞ்ச நா......ளா....."
மலைத்தார் விஷ்ணு.இது என்னடா கொடுமை என்று தோன்றியது .
ராசியோ பூஜை செய்ய ஆரம்பித்தாள் . கையில் பூக்களுடன் கந்த சஷ்டிக் கவசம் மிக சத்தமாக சொல்ல ஆரம்பித்தாள் .
" காக்க....காக்க "
என்று நிறுத்தி விட்டு இவரைப் பார்த்து ," சூலமங்கலம் சகோதரிகளின் பாட்டு போல் பாடுகிறேனா" என்றதும் நிஜமாகவே அதிர்ச்சியில் உறைந்தார்.
" ஆமாம் . எதற்கு உனக்கு இப்படி விபரீதமான ஆசையெல்லாம். எதற்கு திடீரென்று ஆரம்பித்தாய்? " என்றார் விஷ்ணு.
" அதுவா......புது பிளாட் பரிசாகக் கிடைக்கும். எனக்கும் சினிமாவில் பாட வேண்டும் என்று ஆசையிருக்கிறது."
எனக்குக் கூடத்தான் நீ பாடக் கூடாது என்று ஆசையாயிருக்கிறது, என்று சொல்லமுடியாமல் திணறி, " அதற்காக........." என்று இழுத்தார்.
" அதற்காகத் தான் ,விட்ட பாட்டைப் பிடிக்கிறேன் "
என்று சொன்ன ராசியைப் பார்த்து," ஏன் நாம் இப்ப இருக்கும் வீட்டிற்கு என்ன வந்தது. ?" கேட்டார் விஷ்ணு.
" வீட்டிற்கு ஒன்றுமில்லை. தானே வரும் ஸ்ரீதேவியை யாராவது வேண்டாம் என்பார்களா? என்றாள் .
ஏதோ அவள் சூப்பர் சிங்கர் ஆகிவிட்டது போலவும் ,பிளாட் ரிஜிஸ்டர் செய்ய கிளம்பும் போது , நான் ஏதோ வேண்டாம் ,என்று சொல்வது போலவும்,
( எல்லாம் நினைப்புத் தான்) நினைத்துக் கொண்டார் விஷ்ணு.
"அது மட்டுமா? A.R.Rahman கூட என் பாட்டைக் கேட்டு சினிமாவில் சான்ஸ் கொடுக்கலாம் " என்று மேலே ,மேலே , ராசி சொல்லிக் கொண்டே போக ,
சிரிப்பதா , அழுவதா என்று புரியவில்லை விஷ்ணுவிற்கு.
" பானை விற்பவன் ராஜகுமாரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு ராஜாவான கனவுக் கதை போலல்லவா இருக்கு " என்று புலம்பிக்கொண்டே ஆபிசிற்கு கிளம்பினார் விஷ்ணு
மாலை வீட்டிற்கு வந்ததும் இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது,
சாதகம் செய்தாள் ராசி என்று நினைத்தீர்களா?
இல்லை. அது தான் இல்லை.
தன லேப்டாப்பில், ஏகப்பட்ட சினிமா பாடல்களை, டவுன்லோட் செய்து கொண்டிருந்தாள் ராசி.
எல்லாம் பிராக்டீஸ் செய்யத்தான்.
அடுத்து, விஷ்ணுவிற்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு ,"jabong"
வலைத் தளத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
என்ன வேணும் உனக்கு? --இது விஷ்ணு.
உடனே ராசி ," எனக்குக் கொஞ்சம்கொஞ்சம் டிரஸ் வாங்க வேண்டுமே?'
நீ குமரனிலோ , நல்லியிலோ தானே எடுப்பாய்?
இல்லை நான் சூடிதார், பேன்ட் எல்லாம் எடுக்க வேண்டும். பாடும் போது நானும் ஸ்டைலாக இருக்க வேண்டாமா? என்ற போது நிஜமாகே அதிர்ந்தார்.
இவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதோ?இவள் பேண்ட் போட்டால் யார் பார்ப்பது?
நான் தான் மாட்டிக் கொண்டேன் என்றால்..... முகம் தெரியாத அந்த அப்பாவி ஜட்ஜ்களை நினைத்து பரிதாபப்பட்டார்.
இனிமேல் chemistry,physics என்று அவர்கள் ஏதாவது நினைப்பார்கள்..........இல்லை நினைக்கத் தான் முடியுமா.
அதைவிடவும் இவள் குரலுடன் போராடப் போகும் வாய்ஸ் ட்ரெய்னர் நிலையை நினைத்து ப் பார்த்தார். படு பயங்கரமாயிருந்தது.
ஆனால் ,இதெல்லாம் அவள் போட்டியில், பல படிகளைத் தாண்டினால் தானே ! ,(கொஞ்சம் நிம்மதியளித்தது விஷ்ணுவிற்கு.)
அவர்கள் தங்கள் விதியையல்லவா நினைக்க வைத்து விடுவாள் போலிருக்கிறதே என்று நினைத்தார் விஷ்ணு.
மேலே தொடர்ந்தாள் ராசி.
பாருங்களேன் மெலடி ரவுண்டிற்கு, திருமதி சாதனா சர்கம் பாடிய "அன்பே சுகமா?" பாட்டு பிராக்டீஸ் செய்திருக்கிறேன் கேட்கிறீர்களா......என்றதும்
இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தார் விஷ்ணு.
"எனக்குக் கொஞ்சம் தலைவலியாய் இருக்கு. அப்புறம் கேட்கிறேன்." என்று விஷ்ணு முடிப்பதற்குள் போன் ரீங்காரித்தது.
ராசி எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.. அவளுக்குத் தான் போன் என்பது புரிய ,அவசரமாய் போய் படுத்துக் கொண்டு விட்டார் விஷ்ணு.
போனில் ராசி, யாரிடமோ தான் இன்று பாதி பிராக்டீஸ் செய்த, பாட்டைப் பற்றி பிரதாபித்துக் கொண்டிருந்தாள் . மெலடி ரவுண்ட் , ஃபோக் ரவுண்ட் என்று ரவுண்ட் ,ரவுண்டாக சொல்லிக் கொண்டே போனாள்.
கடைசியாக அவள் சொன்னது தான் ஹை லைட் .
Dance attack ரவுண்டிற்கு ........(அதற்கு மேல் காதில் ஏறவில்லை விஷ்ணுவிற்கு.) Dance attack என்று கேட்டதுமே விஷ்ணுவிற்கு heart attack வராதது தான் குறை.
யாரது இவளை இப்படி உசுப்பேத்திவிடுவது. தெரிந்தால் அவரை ஆள் வைத்தாவது இரண்டு தட்டு தட்டி வைக்க சொல்லலாம் என்று தாதா மாதிரி நினைக்க ஆரம்பித்தார்.
இதை எப்படி நிறுத்துவது ,புரிய வில்லை. வேண்டாம் என்று சொன்னால் இவள் இன்றே vijay tv ஆபிசிற்கு போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
யோசித்து,யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்.
ஆபிசிலிருந்து வீட்டிற்கு, ஒரு பயத்துடனேயே, சென்றார் விஷ்ணு. ( டான்ஸ் பிராக்டீஸ் ஏதாவது செய்திருந்தால் அதை அப்படி தவிர்ப்பது என்று தான்).
உள்ளே நுழைந்ததும் "தெரியுமா உங்களுக்கு. அர்ஜுன் வருகிறான் நாளைக்கு ". என்றாள் . அர்ஜுன் அவர்கள் பேரன்.
பையன் வருகிறான்.
விடுதலை கிடைக்கும் என்று நம்பியிருந்தவரின் நம்பிக்கையில் ஒரு லாரி மண்.
அவர்களெல்லாம் வந்து போகும் வரை சாதகத்திற்கு ரெஸ்ட் கொடுத்து விட்டேன்.. தொண்டைக்கும் ரெஸ்ட், அதிகமாக பேச மாட்டேன்.
(மருமகளுக்கு அடிக்கிற அதிர்ஷ்டத்தை பார்.நினைத்தார். விஷ்ணு.)
மழலை கொஞ்ச ,கொஞ்ச மறுநாள் அர்ஜுன் வந்தான். ஒருவாரம் வரை ராசி ஒரு நிலையிலில்லை. ஒரே பாட்டு விவாதம் தான் மருமகளுடன். தொண்டைக்கு ரெஸ்டாவது ஒன்னாவது . சின்ன வயசுக்காரர்களிடம் கேட்டால் தான் நல்ல டிப்ஸ் கொடுப்பார்கள் என்று அவள் மருமகள் ஆர்த்தியை துளைத்துக் கொண்டிருந்தாள் .
கோபம் கோபமாய் வந்தது விஷ்ணுவிற்கு. ஏதாவது செய்து மகனும் மருமகளும் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்றால் ஆர்த்தி இன்னும் மோசமாக்கி கொண்ர்டிருக்கிறாளே என்று நினைத்தார்.
தன் கோபத்தை ஆர்த்தியிடமே சொன்னார் விஷ்ணு.
அதற்கு ஆர்த்தியின் பதிலென்ன தெரியுமா?
" மாமி ' சூப்பர் சிங்கருக்கு 'த் தானே போகிறேன் என்று சொல்கிறார்கள்.
' மானாட மயிலாட 'விலா ஆடப் போகிறார்கள்" என்றாளே பார்க்கலாம்.
இப்படிவேற ஒரு ஆசையா ....இவளுக்கு .
ஏதாவது பழி தீர்த்துக் கொள்கிறாளோ நம்மிடம். திறந்த வாயை மூடவில்லை விஷ்ணு.
பி.கு.
சூப்பர் சிங்கரில் ராசி ஜெயித்தாளா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஆசையா ? அதிக நாள் இல்லை. சுமார் இரண்டு வருடங்கள் தான் காத்திருங்கள். ஏனென்றால் சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்து தானே சீனியர்ஸ் ஆரம்பிக்கும்.
அதற்குப் பிறகு முடிவு தெரியும்.
அதுவரை விஷ்ணுவின் கதி.............
அவருக்கு, உங்களால் ஆனது , என்ன யோசனையாயிருந்தாலும் ..............சொல்லுங்கள்.
விஷ்ணு வரவேற்பார்...
image courtesy-----google
நகைச்சுவையான பதிவு...நன்கு இரசித்து சிரித்தேன்...வாழ்த்துகள் தோழி...
ReplyDeleteநன்ரி தமிழ் முகில் உங்கல் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteராசி என்பது ராஜலட்சுமியின் சுருக்கமோ?
ReplyDeleteஅந்த ராசி என்பவர் நீயூஜெர்சியில் தான் இப்படி பாடி சாதகம் பண்ணுவதாக தெரிகிறது அந்த ராசி கத்தும் ஸாரி பாடும் குரல் எங்க வீடுவரை கேட்குதும்மா
ReplyDeleteஉங்களுடைய அடுத்தடுத்த வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி MTG.
Deleteஉங்களை மாதிரி நிறைய பேருக்கு சந்தெகம் வரும் என்று தான் ஆரம்பித்தேலேயே
disclaimer statement கொடுத்து விட்டேன். அப்புறம் கூடவா........
அது கிடக்கட்டும்.....
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
"அவருக்கு, உங்களால் ஆனது , என்ன யோசனையாயிருந்தாலும் ..............சொல்லுங்கள். விஷ்ணு வரவேற்பார்..."_____ "ராசி இதுவரை தனக்குன்னு எதுவும் கேட்டதில்லையே, அதனால அவங்க விருப்பத்தை நிறைவேத்திதான் பார்ப்போமே", என விட்டுக்கொடுக்கலாம்.
ReplyDeleteஅல்லது இரண்டு பரிசுகள் (சூப்பர் சிங்கர் & மானாட மயிலாட) நமக்குக் காத்துக் கொண்டிருக்கிறது (ராசிக்கு கிடைத்தால் அது விக்ஷ்ணுவுக்கும் சொந்தம்தானே) என்று விக்ஷ்ணு நம்பிக்கை கொள்ளலாம். (அவருக்கு நம்பிக்கை வருவதற்குள் எங்களுக்கு வந்தாச்சு).
சூப்பர் சிங்கரில் வெற்றிவாகை சூடி அப்படியே 'மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்.
சரியான நகைச்சுவைப் பதிவு. ரசித்துப் படித்தேன்.
உங்களுடைய நம்பிக்கைய்உம் வாழ்த்துக்களும் ராசிக்கு பெரிய ஊக்கம் கொடுக்கும்
Deleteஆனால் விஷ்ணூ பயப்படுவது ராசியின் அல்ப்பரைகளை எப்படி தாங்கிக் கொள்வது என்பது பற்றித் தான். நீங்கள் தான் ராசியை உசுப்பேற்றி விடுகிரறீர்கள் என்ரு தெரிந்தால்.....
நன்றி சித்ரா, உங்கல் வருகைக்கும், பாராட்டிற்கும்.
இப்போதைக்கு விக்ஷ்ணு, ராசியுடன் 'ராசி'யாகப் போவதே உகந்தது.
Delete//Dance attack ரவுண்டிற்கு ........(அதற்கு மேல் காதில் ஏறவில்லை விஷ்ணுவிற்கு.) Dance attack என்று கேட்டதுமே விஷ்ணுவிற்கு heart attack வராதது தான் குறை.
ReplyDeleteயாரது இவளை இப்படி உசுப்பேத்திவிடுவது. தெரிந்தால் அவரை ஆள் வைத்தாவது இரண்டு தட்டு தட்டி வைக்க சொல்லலாம் என்று தாதா மாதிரி நினைக்க ஆரம்பித்தார்.//
;)))))
நல்ல நகைச்சுவை விருந்து. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி வைகோ சார் உங்கள் வ்ருகைக்கும், பாராட்டிற்கும்
DeleteI appreciate Rasi's sincere effort in participating some competition at this age. I am certain she never had such an opportunity when she was growing up. She realized that we live only once, WHY NOT give it a TRY to become a super singer?
ReplyDeleteவயதாக ஆக, இளசுகளுக்கு தன் அனுபவத்தில் கற்றவற்றை அறிவுரையாய் அக்கறையுடனும் சிரத்தையுடனும் வழங்கி வாங்கிக்கட்டிக் கொள்வதற்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ஏதாவது இது போல் பெரிய முயற்சி எடுப்பது நல்லது. அப்படி முயலும்போது நேரம் பற்றாது. போட்டித் தேதி வேகமாக் நெருங்குவதுபோல் இருக்கும். That means Rasi learned how to kill her time and make her life exciting and interesting..
விஷ்ணு, இதுதான் சாக்குனு (எனக்கு கொலெஸ்டிரால் அதிகமா இருக்கு, வால்க்ப் போகணும்னு டாக்டர் சொல்லுறாருனு) காலையில் எழுந்து ஒரு லாங் வாக் போய் வரலாம். அதற்கு வழி செய்த ராசிக்கு மனதாற நன்றி சொல்லணும். இதுபோல் நஷ்டத்தில் இலாபமடைய பல வழிகள் இருக்கின்றன.
-----------
நீங்க பெரிய எழுத்தாளர்னு இப்போத்தான் தெரிந்து கொண்டேன்.
கதை கரு கற்பனையாக இருந்தாலும் வரும் பாத்திரங்கள் உங்களுக்கு பரிச்சயமானவைகள் போல ஒரு அன்னோனியம் தெரிகிறது. :) இது(வும்) என் கற்பனையே.
நன்றி வருண் உங்கள் வருகைக்கும், விஷ்ணுவிற்கு நீங்கள் சொல்லும் யோசனைக்கும், என் எழுத்தை ரசித்துப் படித்து பாராட்டுவதற்கும்.
Delete" மாமி ' சூப்பர் சிங்கருக்கு 'த் தானே போகிறேன் என்று சொல்கிறார்கள்.
ReplyDelete' மானாட மயிலாட 'விலா ஆடப் போகிறார்கள்" என்றாளே பார்க்கலாம்.
ரசிக்கவைத்த நகைச்சுவைப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நன்றி உங்களுக்கு.வருகை புரிந்ததற்கும்,பாராட்டிற்கும்.
Delete
ReplyDeleteயாரோ சிலர் தங்களுடையா நிறைவேற முடியாத ஆசைகளை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொள்கிறார்களோ?
சார், ராசி ஒரு கற்பனை கதாபாத்திரமே!
Deleteநீங்கள் இங்கு வ்ந்து பாராட்டியதற்கு நன்றி சார்.
விஷ்ணுவுக்குத்தான் தற்போதைய ’ராசி’ பலன் பார்க்கவேண்டும்
ReplyDeleteகலக்கல் காமெடி
உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும், நன்றி சார்.
Deleteஉங்கள் யோசனை கூட நன்றாகத்தான் இருக்கிறது.விஷ்ணு அதை கவனத்தில் கொள்ளலாம் தான்.
நன்றி
நகைச்சுவையான பதிவு...நன்கு இரசித்து சிரித்தேன்...வாழ்த்துகள் ...
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும்,கருத்துப் பகிர்விற்கும் நன்றி.
Deleteமீண்டும், மீண்டும் வருக.
எளிமையான வரிகளில் இதமான நகைச்சுவை!.. விஷ்ணு அவர்கள் படும் பாட்டை நேரில் பார்ப்பது போலவே இருந்தது!...அருமை!..
ReplyDeleteநன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Delete"பொறுப்புத் துறப்பு" - அட! நல்ல வார்த்தை!
ReplyDeleteஹா...ஹா..... சூப்பர் சிங்கர் அவ்வளவு பாதிக்கிறதா? :)))))
"//பொறுப்புத் துறப்பு" - அட! நல்ல வார்த்தை!//
Deleteஇந்த வார்த்தைக் கூட ஸூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு காட்டப்படுவது தான்.
நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
இதமான நகைச்சுவை.....
ReplyDeleteபாவம் விஷ்ணு.....
நல்லவேளை மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை! :))))
நிஜமாகவே பாவமாக இருந்தால் ஒரு யோசனை சொல்லுங்களேன் அவருக்கு.
Deleteநன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
hahaa!! கலக்கறீங்க ராஜி மேடம்! மீண்டும் வரேன்!
ReplyDeleteவாங்க வாங்க மஹி . ஏதோ அவசரத்தில் படித்தாலும் ரசித்து சிரிக்கிறீர்கள்.நன்றி மஹி. மீண்டும் அவசியம் வாருங்கள்.
Deleteஅப்புசாமி சீதா பாட்டியின் இடத்தை ராசியும் விஷ்ணுவும் பிடித்து விடுவார்கள் போலிருக்கிறதே! என்ன, ஜோடி கொஞ்சம் வித்தியாசம் அவ்வளவுதான்! அருமையான நகைச்சுவை பதிவு ராஜி!
ReplyDeleteஅப்புசாமி சீதா பாட்டியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள்.
Deleteநன்றி ரஞ்சனி என்னை பாராட்டுவதற்கு.
ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
ReplyDeleteமனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
நகைச்சுவையாக இருந்தது.ஆசை யாரைத்தான் விட்டது
ReplyDeleteநன்றி திருமதி சந்திர கௌரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteநல்ல நகைச்சுவை,நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!! மிகவும் ரசித்தேன் :) ராசி மேடத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது,அப்படியே விஷ்ணு சாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கவும் விரும்புகிறேன்! இவை எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எழுத்தை மிக விரும்புகிரேன் :)
ReplyDeleteநன்றி மஹா,
Deleteஉங்கள் வருகைக்கும், என்னை கன்னாபின்னா என்று புகழ்ந்து தள்ளுவதற்கும்.
எல்லோரையும் போல் நீங்களும் நம்ப மாட்டேன்கிறீர்களே ,ராசியும் விஷ்ணும் கற்பனை கதாபாத்திரங்களே!
ராசியையும் விஷ்ணுவையும் பற்றி யாரும் சந்தேகமோ,அனுதாபமோ வந்து விடக் கூடாது என்பதற்காகவே விஷ்....விஷ்...விஷ்...(http://rajalakshmiparamasivam.blogspot.com/2013/04/blog-post_26.html) என்ற பதிவில் யாரும் அனுதாப மன்றம் ஆரம்பிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு விட்டேன்.
பரவாயில்லை! உங்கள் அனுதாபங்கள் விஷ்ணுவிற்கு கொஞ்சமாவது ஆறுதலைத் தருகிறதா பார்ப்போம்!
என் எழுத்தை விரும்பிப் படிப்பதற்காக ஸ்பெஷல் தாங்க்ஸ் இந்தாருங்கள்....பிடியுங்கள்!
நகைச்சுவையா எழுத உங்களுக்கு நல்லா வருது. பகிர்வுகு நன்றி
ReplyDeleteநன்றி ராஜி என் பதிவைப் படித்து கருத்திட்டதற்கு.
Delete