Sunday, 25 August 2013

ஒரு உஷார் ரிப்போர்ட்!!!



 நமக்கு ஏதாவது இலவசமாக கிடைத்தால்  வேண்டாமென்று சொல்லி விடுவோமா என்ன? எதைப்  பற்றியும் யோசிக்காமல்  வாங்கிக் கொள்கிறோம். யாருமே, எதுவும், இலவசமாகக் கொடுப்பதில்லை என்பதை நாம் மறந்து விடுகிறோம் .இலவசங்களுக்கு , கண்டிப்பாக ஒரு மறை முக விலை இல்லாமலே போகாது  என்பது தான் உண்மை.

 வெளி நாட்டுக்கு செல்பவர்களுக்கு  அந்தந்த விமான நிலையங்களில் இருக்கும் " duty free shops" பற்றித் தெரிந்திருக்கும்.

இரண்டும் ,அதற்கு மேலும் ஃ ப்ளைட் மாறுபவர்களை  ,  இந்தக் கடைகள் சுண்டியிழுக்கும். .நேரத்தை செலவிட  நுழைவார்கள். முதலில் எதையும் வாங்கத் தயங்கும்  நாம்,  நம் சக பயணி ,அதுவும் இந்தியர் ஒருவர் வாங்கிவிட்டால்  நம்மையறியாமலே ,நம் கை, நம் பர்சைத் தேடும்.
எதையாவது வாங்கிக்  கொண்டு, ஊருக்குப் போய் பெருமையடிக்க. 

எனக்கு ,இன்று வந்த மெயில்   duty free shops இல் பொருட்கள் வாங்கும் போது  நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சிரிக்கையைப் பற்றிக் கூறியது.

விஷயத்தைப் படித்த எனக்கு பகீரென்றது.சிலருக்குத் தெரிந்திருக்கலாம்..
தெரியாதவர்களுக்காக...............

" உண்மைச் செய்தி " என்கிறது மெயிலில் வந்த விவரம்.

இந்தியர் ஒருவர் Bangkok விமான நிலையத்திலுள்ள duty free shopற்கு சென்று சாக்லேட்டுகளும், ஒரு பாக்கெட் சிகரெட்டும்  வாங்கியிருக்கிறார். கடை ச்சிப்பந்தி  ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் இன்னொரு பாக்கெட் சிகரெட்டும் 
போட்டிருக்கிறார்(வேண்டுமென்றே).  நம் நண்பரோ  ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால், இன்னொரு பாக்கெட்  சிகரெட்  இலவசம் போலிருக்கிறது என்றெண்ணிக் கொண்டு சந்தோஷத்துடன்  கடையை  விட்டு வெளியே வருகிறார். 

அங்கே ,ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு . போலீஸ்காரர் ஒருவர் அவருடைய கையில் இருந்த பொருட்கள் நிறைந்த பையையும் , அவர் கையில் வைத்திருந்த ரசீதையும் செக் செய்து விட்டு,  பில்லாகாத   ஒரு சிகரெட் பாக்கெட்டைத்   திருடி விட்டார் என்று சொல்லி " shop lifting "குற்றத்துக்காக   அவரைக் கைது செய்து விடுகின்றார்..அவர்  பாங்காக் சிறையில்  ,கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் இருக்க நேரிடுகிறது. நிறைய பணம்(அந்த ஊர் பணம்) ,செலவழித்தபின் தான் விடுதலை ஆகிறார்..

பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் புகார் கொடுத்திருக்கலாமே என்று தான் தோன்றும். நம் தூதரகத்தை ,நண்பரின் உறவினர் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு  கிடைத்த பதில்,"இதைப் போல் நிறைய இந்தியர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். பொருட்கள் வாங்கும் போது  நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கை விரித்து விட்டது .

" Duty Free Shopsஐ  விட்டு வெளியே வரும் போது நாம் வாங்கியிருக்கும் அத்தனை பொருட்களுக்கும் ,பில்லில் பணம் கட்டியதற்கான அத்தாட்சி இருக்கிறதா என்பதையும் , இதைத் தவிர வேறு பொருட்கள் எதுவும்  நம்மிடம் இல்லை என்பதையும்  உறுதி செய்து கொள்ள  வேண்டும் " என்று அறிவுறுத்துகிறது  இந்தியத் தூதரகம்.

உண்மை தானே!

இதைப் போலவே இன்னொருவர் துபாய்  விமான நிலையத்திலும் ,மாட்டிக் கொண்டு விட்டு,  இரண்டு நாட்கள் போல் விமான நிலையத்திலிருக்கும் சிறையில் கழித்து விட்டு , டாலரில்............கொடுக்க வேண்டியவர்களுக்கு,   கொடுத்து விட்டு பின் வீடு திரும்பியிருக்கிறார்.

இவர்கள் சிறையில் இருக்கும் பொழுது அவர்கள் குடும்பத்தினரின் மனநிலையை நினைத்துப் பாருங்கள்........உங்களுக்கு  பதட்டமாக இல்லை!

சிறிய எச்சரிக்கை உணர்வுடனும் , இலவசங்களுக்கு  ஆசைப் படாமலும் இருந்தாலே  போதும். பிரயாணம் சுகமாகும்.

நாட்டிற்கு நாடு  சட்டங்களும் வேறுபடும். நாம் வேறு நாட்டில் இருக்கும் பொழுது, அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு  உட்பட்டவர்களாகிறோம்  என்ற நினைவுடன்  நாம் நடந்து கொண்டாலே,  இது போன்ற உபத்திரவங்களிளிருந்து தப்பித்து விடலாம்.

இப்பொழுதெல்லாம், வெளிநாட்டுப் பயணம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது .நம் உறவினர், நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து  அவர்களும் எச்சரிக்கையடைய  வழி செய்வோம்.

நானும் இந்த செய்தியை என் முக நூலில் பகிரப் போகிறேன்.

ஆசையே துன்பத்திற்கு காரணம்  என்பது போல் இருக்கிறது இந்த இரண்டு நிகழ்வுகளும்.

நண்பர்களே  .....எச்சரிக்கையுடன் பயணம் செய்வோம்.பயணத்தை இனிதாக்குவோம்.


                                                  SHUBH YATRA!!!!
செய்தி உதவி : திரு.லக்ஷ்மிநாராயணன்.
image courtesy----google.

46 comments:

  1. தற்பொழுது ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று
    அறிவிக்கப்படுவது, அதில் ஏமாறுவது எல்லாம் சகஜமாகி விட்டது.

    ஒரே பொருளை ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி என்றாலும், ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதும் ஒன்றுதான்.
    நமக்கு இலவசமாக வியாபாரிகள், நம்மை அறியாதவர்கள் ஏன் தர வேண்டும் என்ற கேள்வி யாருக்குமே உரைப்பதில்லை.

    சமீபத்தில் ஆடித் தள்ளுபடி விஷயத்தில் ஒரு படி மேலாக போய்விட்டது.புது புது மருத்துவ மனைகளில், ஹெல்த் செக் அப் செய்துகொள்ளும்போது ஒருவருக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்தால் இன்னொருவருக்கு இலவசமாக செய்கிறோம் என்ற அறிவிப்புகளும் வர துவங்கி விட்டன.

    கிளியரன்ஸ் சேல் என்று தள்ளுபடி தருவது இன்னொரு தினுசான ஏமாற்று வித்தை.

    நேற்றைய டி.வி. விளம்பரிங்களில் ஒரு பகல்பூர் சாரியாம் , ரூபா 4500 ஆன்லைனில் வாங்கினால் ரூ 2050 ஆம்.

    ஏமாறாதே ஏமாற்றாதே...என்னும் பாடலை கேட்போம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பு ஐயா ,உங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.

      Delete
  2. அனைவரும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய தகவல்
    விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், உங்கள் வருகைக்கும், குர்த்துரைக்கும்

      Delete
  3. .இலவசங்களுக்கு , கண்டிப்பாக ஒரு மறை முக விலை இல்லாமலே போகாது என்பது தான் உண்மை.

    .எச்சரிக்கையுடன் பயணம் செய்வோம்.பயணத்தை இனிதாக்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. நண்றி ராஜராஜேஸ்வரி , உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  4. மிகவும் பயனுள்ள எச்சரிக்கை தந்திடும் பகிர்வு.

    தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில், நான் வேறு இந்திய நண்பருக்காக, ஷார்ஜா விமான நிலையத்தில் உள்ள Duty free Shop க்குள் தனியாக நுழைந்து, மிகவும் விலை ஜாஸ்தியான சீமைச்சாராயம் வாங்கி வந்தேன்.

    இதையெல்லாம் கேள்விப்பட்டால் மிகவும் சங்கடமாகவே உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் பாருங்கள் சார். அதைவிட வேறு நாட்டில் சிறையா.... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

      நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      உங்களைப் பற்றி சுப்பு தாத்தா ஏதோ சொல்கிறார் பாருங்கள்.ஒரு ஐந்தாறு கருத்துரைக்குப் பிறகு மீள் வருகை புரிந்து .....ஏதோ கேட்கிறார் போலிருக்கிறது.

      Delete
    2. //உங்களைப் பற்றி சுப்பு தாத்தா ஏதோ சொல்கிறார் பாருங்கள்.ஒரு ஐந்தாறு கருத்துரைக்குப் பிறகு மீள் வருகை புரிந்து .....ஏதோ கேட்கிறார் போலிருக்கிறது.//

      Replied to him as follows:

      -=-=-=-
      sury Siva 25 August 2013 11:43
      வை. கோபாலகிருஷ்ணனும் சீமைச் சாராயமும்
      என்னதான் சூழ்நிலை என்று சொன்னாலும்
      ஒத்து போகவில்லையே - சுப்பு ரத்தினம்//

      சூழ்நிலையை இங்கு விவரிக்க விருப்பம் இல்லை. ஆனால் அந்த சூழ்நிலை பற்றி என்னுடன் பயணித்த என் மனைவிக்கும், எங்களுக்கு Send off கொடுக்க ஷார்ஜா விமான நிலையம் வந்திருந்த வந்திருந்த என் மூத்த மகன், மருமகள் ஆகியோருக்கும் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ.

      எனக்கு அது போதுமே ! ;)

      -=-=-=-=-

      உடனே பதில் தர மறந்து விட்டேன். மிகவும் தாமதம் ஆகிவிட்டது. Sorry Madam. vgk

      Delete
  5. நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு. அறியத் தந்தமைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் முகில் உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

      Delete
  6. இன்பச் சுற்றுலா துன்பமாகுமே? சரியான எச்சரிக்கை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  7. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

      Delete
  8. சரியான வார்த்தை சொல்லி இருக்கீங்கப்பா..

    காய்கறிகள் வாங்கினால் ப்ளாட்ஃபாரத்தில் உட்கார்ந்து விற்பவரிடம் ஐயே கொஞ்சம் கறிவேப்பில கொடேன்.. இப்படி கேட்டு வாங்குவதில் தொடங்குகிறது இலவசப்போராட்டம்...

    அது அப்படியே தொடர்ந்து ட்யூட்டி ஃப்ரீ ஷாப் வரை நீள்கிறது..

    இப்பெல்லாம் எங்கப்பார்த்தாலும் இலவசம் அதிகமாக போர்ட் நீட்டிக்கொண்டு இருக்கிறது...

    ஆனால் நீங்க சொன்னது போல இலவசம்னு சொன்னதுமே நாம ஆட்டு மந்தைப்போல் ஓடிப்போய் எடுத்து குவிப்போம் அது நமக்கு பயனுள்ளதா இருக்கிறதா என்றுக்கூட பார்க்கமாட்டோம்... ஆனால் அதில் நமக்கு கொக்கி காத்திருக்கிறது என்பது தெரியவும் மாட்டேங்கிறது..

    ட்யூட்டி ஃப்ரீ ஷாப்ல எப்பவும் நாங்க வாங்குவதே இல்லை.. அதனால் இந்த டென்ஷனே இருப்பது இல்லை.. ஆனாலும் இப்ப உங்களோட இந்தப்பகிர்வு நிறையப்பேருக்கு நாம் எடுத்துச்சொல்ல உதவியாக இருக்கும்..

    கண்டிப்பாக முகநூலில் பகிருங்கப்பா.. நானும் உங்களோடதை முகநூலில் ஷேர் பண்றேன்... இதுபோன்ற நல்ல விஷயங்கள் விழிப்புணர்வு தரும் கட்டுரைகள் அவசியம்....

    இனிமே ட்யூட்டி ஃப்ரீஷாப் போகும்போதே சமர்த்தா விண்டோ ஷாப்பிங் செய்துவிட்டு வந்தால் மதி... :)


    பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

    இவ்ளோ நல்ல விஷயம் சொல்லியும் நான் ஓட்டு போடலன்னா எப்படியாம்??

    போட்டாச்சு த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஞ்சுபாஷினி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.எனக்கு இந்த விஷயம் தெரிந்த உடனேயே அதைப் பதிவாக்கி விட்டேன்.

      தமிழ்மணத்தில் எனக்கு ஓட்டு போட்ட முதல் ஆள் நீங்கள் தான். உங்கள் கருத்துரையைப் படித்த பின்னர் தான் நான் மேலே பார்த்தேன். அட...ஓட்டு போட்டிருக்கிறார்கள். சரி...போனி பண்ணி விட்டீர்கள்.....நன்றி.
      ஓட்டு போட்டதற்கு ஸ்பெஷல் நன்றி.

      Delete
  9. உங்கள் அரட்டை உலகம் என்னும் பயனுள்ள தளத்தில் என்னையும் இணைத்துக்கொண்டேன்.. அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஞ்சு ( என் மருமகள் பெயரும் மஞ்சு தான்) எழுதும் போதே அதனால் வாஞ்சையுடன் வந்து விடுகிறது என்னைத் தொடர்வதற்கு.

      Delete
  10. நல்ல தகவல்கள். இப்படியும் நடக்குதா?! ஆனா எனக்கொரு சந்தேகம், எதனால தெரிஞ்சே பைகளில் சிகரெட் பாக்கட் போட்டார் அந்த கடை சிப்பந்தி?!

    ReplyDelete
    Replies
    1. //எதனால தெரிஞ்சே பைகளில் சிகரெட் பாக்கட் போட்டார் அந்த கடை சிப்பந்தி?!//
      எல்லாம் தெரிந்தே செய்தது தான்.All are hand in gloves.

      Delete
  11. வை. கோபாலகிருஷ்ணனும் சீமைச் சாராயமும்
    என்னதான் சூழ்நிலை என்று சொன்னாலும்
    ஒத்து போகவில்லையே



    சுப்பு ரத்தினம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கு நன்றி சுப்பு ஐயா. உங்கள் கருத்தைப் பற்றி வைகோ சாரிடம் சொல்லி விட்டேன் பாருங்கள்..

      Delete
    2. sury Siva 25 August 2013 11:43
      வை. கோபாலகிருஷ்ணனும் சீமைச் சாராயமும்
      என்னதான் சூழ்நிலை என்று சொன்னாலும்
      ஒத்து போகவில்லையே - சுப்பு ரத்தினம்//

      சூழ்நிலையை இங்கு விவரிக்க விருப்பம் இல்லை. ஆனால் அந்த சூழ்நிலை பற்றி என்னுடன் பயணித்த என் மனைவிக்கும், எங்களுக்கு Send off கொடுக்க ஷார்ஜா விமான நிலையம் வந்திருந்த வந்திருந்த என் மூத்த மகன், மருமகள் ஆகியோருக்கும் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ.

      எனக்கு அது போதுமே ! ;)

      Delete
  12. மிகவும் பயனுள்ள எச்சரிக்கை ரிப்போர்ட். கடைக்காரர்களுக்கும் நம் பலவீனம் தெரிந்திருக்கிறது. இலவசம் எல்லாம் இலவசம் அல்ல; இலவசத்திற்கு விலை ஆபத்து என்று புரிகிறது.
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  13. பயனுள்ள பதிவு. இங்கே ஒரு துணிக்கடையில் 500ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாம். வேறோர் மாநிலத்தில் 500ரூக்குச் சாப்பிட்டால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்னு அறிவிப்பு! தினசரிகளில் வருது! ப்ளாட் வாங்கினால் தங்கம்னு! தங்கம் விக்கிற விலையிலே எப்படிக் கொடுக்க முடியும்னு யோசிக்க மாட்டாங்களா?????

    நல்லவேளையாக நாங்க ப்ராங்க்பர்ட், துபாய், ஷிகாகோ னு விமானம் மாற மணிக்கணக்காகக் காத்திருந்த போதிலும் இந்தக் கடைகள் கவர்ந்ததில்லை. ஒரு முறை கூட இந்தக் கடைகளில் உள்ளே சென்று பார்த்ததும் இல்லை. ஒரு காஃபி கூட வாங்கியதில்லை. :))))))

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் இலவசமாகத் தருகிறார்களா? நல்ல வேடிக்கை . பேசாமல் நகைக் கடையில் விற்கலாம் என்றே யோசிக்க வைக்கிறது அதன் விலை.
      நன்றி வருகை புரிந்து கருத்து இட்டதற்கு.

      Delete

  14. பாங்காக் கடை சிப்பந்தி ஒரு சிகரெட் பாக்கெட்டை ( வேண்டுமென்றே) கூடக் கொடுத்ததால் நண்பருக்கு சிறைவாசம். அந்த சிப்பந்தியின் நோக்கம் என்ன.? இவரைச் சிறையில் தள்ளுவதா.?ஏதோ தெரியாமல் கொடுத்திருக்கலாம் அல்லவா. ?இலவசமாகக் கிடைக்கிறதே என்று இவர் பேசாமல் இருந்திருக்கக் கூடும் அல்லவா.? சிப்பந்தியின் தவறைக் காட்டி அதைத் திருப்பிக் கொடுத்திருக்கவேண்டும் அல்லவா..? கேள்விகள்..... கேள்விகள். ... தவறை நம்மிடம் வைத்துக் கொண்டு பிறரைக் குறை சொல்லலாமா.?

    ReplyDelete
    Replies
    1. யாரையும் குறை சொல்வது என் நோக்கமல்ல GMB சார். இது ஒரு எச்சரிக்கைப் பதிவு அவ்வளவே!

      Delete
  15. அல்ப சிகரெட் பாக்கெட்டுக்காக அவமானப்பட நேர்ந்ததே!... நானும் - என் பயண வழித் தடத்தில் காத்திருக்க நேர்ந்தால் - விமான நிலையத்தினுள் அங்கே இங்கே என்று அலைவதும் இல்லை!.. எந்தப் பொருளையும் வாங்க ஆசைப்படுவதும் இல்லை!..

    ReplyDelete
    Replies
    1. நாம் ஒரு விமானத்திலிருந்து இறங்கி ஏறுவதற்குள் அந்த டென்ஷனே ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமில்லையா! உண்மைதான்.

      நன்றி துறை சார் உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

      Delete
  16. From my childhood days, my mom will ask me, to go and return goods which got into my bag "accidentally" or the money which was "overpaid" to me by the shopkeepers' "miscalculation" or whatsoever. So, I never feel comfortable when something like that happens (accidentally getting something free or assuming that buy one get one free kind of stuff) even today. Sometimes my friends used to laugh at me and, say that I am overreacting for nothing. I usually turn a deaf ear to them and go do the needful when it happens WITH MY KNOWLEDGE.

    One need to understand, when you are dealing with strangers here and you cant expect them to know how great you are or appreciate your honesty which they are not aware of. He/she is going to look at you and treat you, like anyone else. Your friends and colleagues might know your qualities and morals but not strangers.

    In US, I have read in several places, SHOPLIFTING IS A CRIME! I have also seen in India EVEN RICH PEOPLE shoplift for fun.

    I feel sorry for the person who got into trouble but let him take it as a good lesson and move on. And we all should.

    Thanks for educating people "SHOP LIFTING IS A CRIME!", Mrs. Paramashivam!

    ReplyDelete
    Replies
    1. I see that you have great morals .And for sure your mom holds the credit for teaching you honesty and integrity.
      Thankyou for visiting my blog and commenting on that.

      Delete
  17. இலவசங்களுக்கு ஆசைப்படுவதால் வரும் தொந்தரவு. அவசியமான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  18. இது மாதிரி ஒன்றிரண்டு சம்பங்கள் நடந்ததும் அதற்க்கான தீர்வு என்ன என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளும், விற்பனையாளர்களும் சேர்ந்து முடிவு செய்யவில்லையா? நீங்க சொல்வதைப் பார்த்தா தினமும் நூறு பேராவது மாட்டிகிட்டே இருப்பானுங்க போலிருக்கே!!

    ReplyDelete
    Replies
    1. நாம் ஈஸ்சரிக்கியாக இருப்பது தான் ஒரே தீர்வு. எல்லாமே hand in gloves ஆகா நடக்கும் பொது என்ன தீர்வு யாரால் கொடுக்க முடியும் ஜெயதேவ் சார்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  19. அவசரப் பயணிகள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை. பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
      மீண்டும் வருக!

      Delete
  20. Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
      மீண்டும் வருக!

      Delete
  21. இப்படி எல்லாம்கூட உண்டா!! இது மாதிரியான கடைகளில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு உதவும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா , உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் .

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்