" நான் காபி போடப் போகிறேன்.உங்களுக்கும் காபி போடவா? "
" ம் "
" டிகாக்ஷன் போதுமா?"
" உனக்குத் தெரியாதா? "
" சரி மெயில் செக் செய்தீர்களா? "
" ம் "
" கிரெடிட் கார்ட் பணம் கட்டியாச்சா? "
" ம் "
" கணேஷ் போன் செய்தான்.
அடுத்த வாரம் வருகிறானாம். "
" ஓ "
" பக்கத்து வீட்டில் மாடியில் ஏதோ கட்டுகிறார்கள்? "
" ஓ "
" நான் டி. நகர் போய் வருகிறேன்."
"சரி."
" பால் பாக்கெட் வந்தால் பிரிட்ஜில் வைத்து விடுங்கள் ."
"ஓ. கே. "
இந்த நீள நீள கேள்விகள் எல்லாம் என்னுடையவை.
ஒரு எழுத்து , மிஞ்சி மிஞ்சிப் போனால், இரண்டு எழுத்து வரை நீண்டிருக்கும் பதில்கள் என்னவருடையது.
இந்த ஒற்றை எழுத்து பதில்கள் கிடைக்கவே நான் தவமிருந்த நாட்களும் உண்டு.
ஒன்று, பேப்பரில் அவர் தலை அமுங்கியிருக்கும்,இல்லை டிவியில் நடக்கும் சண்டைகளில், (NDTV, HT, Times Now களி ல் நடக்கும் விவாதங்கள் ) தன் மனதைப் பறிகொடுத்தபடி அமர்ந்திருப்பார்.
திருமணமான இத்தனை வருடத்தில் என் கணவர் பற்றி நான் தெரிந்து கொண்டது இது.
" Man of very few words " என்ற பட்டம் கூட பெற்றிருக்கிறார்.
இந்தப் பட்டத்தை அவருக்கு வாங்கிக் கொடுத்த பெருமையெல்லாம் என்னைத் தான் சேரும் என்று...... நான் பெருமைபட்டுக் கொள்ளவில்லை.
அவர் தான் சொல்கிறார். அவருக்குப் பேசவே நேரம் கொடுக்காமல் நானே பேசிக் கொண்டிருக்கிறேன் என்று .
ஏதோ .....இந்தப் பெருமையாவது என்னை சேர்ந்ததே! அதுவே போதும்.
அது எப்படித் தான் அவரால் இப்படி இருக்க முடிகிறதோ என்று தோன்றும் எனக்கு.சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். பேசாமலா......?(மயக்கம் வரும் போலிருக்கிறதே)
இந்த Man ம் பேசும் சந்தர்ப்பங்கள் உண்டு.
அன்றும் அப்படித் தான் இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒற்றை எழுத்து பதில் பறந்து வந்து கொண்டிருந்த நேரம், .......
நான் " எங்கள் ப்ளாக் "கில் திரு .ஸ்ரீராம் அவர்களின் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் வந்திருந்த " குவாட்ரி சைக்கிள் " பற்றிய விஷயம் படித்தபின் அவரிடம்,
"இங்கே பாருங்கள் ஒரு புது வண்டிக்கு நம் மத்திய அரசு ஒப்புதலளித்திருக்கிறது.இதோ முக நூலிலும், பதிவிலும் வந்திருக்கு" என்று சொன்னது தான் தாமதம்.
சட்டென்று என்கையிலிருந்து ipad மின்னல் வேகத்தில் மாறி அவர்கையிலிருந்தது.
ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டார்.
அதற்குப்பிறகு ,
" இது Reva கார் மாதிரியே இருக்கு.
எவ்வவளவு கி.மி. கொடுக்குமோ தெரியலையே
வண்டி பெட்ரோலில் ஓடுமா அல்லது டீசலில் ஓடுமா?
பார்த்தால் rear என்ஜின் போல் தெரிகிறது.
எத்தனை பேர் உட்காரலாம். என்று சரமாரியாய் கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்."
என்னிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று தெரியும்.
எனக்கு வண்டிகள் பற்றிய அறிவு கொஞ்சம் ( கொஞ்சம் தான் )கம்மி.உடனே எனக்கு வண்டி பற்றிய அறிவேயில்லை என்று தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
என்னவருக்கு இந்த வண்டிஎன்று இல்லை , எந்த வண்டியானாலும் இதே போல் ஆர்வம் பிய்த்துக் கொண்டு போகும். அன்று சைக்கிள் ஓட்டும் போதும் இந்த ஆர்வத்தைப் பார்த்திருக்கிரேன் ,. இன்று கார் ஓட்டும் போதும் துளி கூட ஆர்வம் குறைந்த பாடில்லை.
நாலு சக்கரம் சின்ன சைசில் இருந்தால் கார். (உடனே லாரிக்கு எவ்வளவு சக்கரம் என்று யாரும் கேட்க வேண்டாம் )
ஹோண்டா என்பார், ஹுண்டாய் என்பார் (யாரையாவது திட்டுகிறாரோ என்று தான் முதலில் நினைத்தேன்).
Audi கார் என்று பேசுவார். (ஆடியோ, ஆடாமலோ கார் போனால் சரி )
BMW கார் என்றால் இது என்ன காருக்கு கூட இனிஷியலா என்று தோன்றும்.
பஜாஜ் என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு பஜ்ஜி நினைவுக்கு வந்து தொலைக்கும்.
வெஸ்பா என்றால் யாருப்பா என்பேன்.....
அவ்வளவு விசாலமான அறிவு வண்டிகளைப் பற்றி எனக்கு.
இவர் நண்பர்களும் இவரைப் போலவே வண்டிகள் விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி உரையாடக் கேட்டிருக்கிறேன்.
எங்கோ படித்திருக்கிறேன்,
" ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் பொம்மை கடைக்கு அழைத்து சென்றால் ஆண் குழந்தை கார் ஸ்கூட்டர் என்று வண்டிகளையே விரும்பும் , பெண் குழந்தை அந்த வண்டி பொம்மைகள் பக்கம் கூடத் திரும்பாது "
இது உண்மையா ?
இவருக்கு வண்டி ஆர்வம் மிகுந்த நண்பர்கள் இருக்கிறார்களா ,இல்லை ஆண்கள் , பெருவாரியாக வண்டி பற்றியே பேசி காரும் ஸ்கூட்டரும் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்களா ?
புரியவில்லை.
என் கணவருக்கு மட்டும் தான் வண்டிகள் கனவுக் கன்னியா !
எனக்குக் காரையும் , ஸ்கூட்டரையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
image courtesy--google.
உங்கள் கணவர் ஒரு எழுத்து பதில் தருபவரா?
ReplyDeleteஆச்சர்யம்.
சில கணவர்கள் தமது வாழ்க்கையில் ம் என்ற எழுத்தைத்
தவிர வேறு எதையுமே சொன்னது இல்லையாமே ?
சுப்பு தாத்தா.
நன்றி சுப்பு ஐயா.
Deleteஉங்கள் வருகைக்கும் என் கணவரைப் பார்த்து ஆச்சர்யபட்டதற்கும்.
மகிழுந்து என்பது எல்லோரும் விரும்புவது மனைவியைப் போல.நானும் அப்படித்தான் உபயோகித்து வருகிறேன்.வண்டி ஓட்டும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறேன்
ReplyDeleteநன்றி ஐயா.
Delete//" ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் பொம்மை கடைக்கு அழைத்து சென்றால் ஆண் குழந்தை கார் ஸ்கூட்டர் என்று வண்டிகளையே விரும்பும் , பெண் குழந்தை அந்த வண்டி பொம்மைகள் பக்கம் கூடத் திரும்பாது "//
ReplyDeleteஇது உண்மை தான். என் பேரன் பேத்திகளிடம் இதை நான் மிகவும் கவனித்திருக்கிறேன். என் பேரனிடம் நூற்றுக்கணக்கான கார் பொம்மைகள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிதாக வாங்க ஆசைப்படுவான். பேத்தி அப்படி இல்லை.
அருமையான கட்டுரையாக நகைச்சுவையாக யதார்த்தங்களை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும்.
Deleteஆண் குசந்தைகளுக்கு வண்டி என்றால் மிகவும் விருப்பமா? நான் என் பெறக் குசந்தைகளிடம் கவனித்தது இல்லை.
/// பஜாஜ் என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு பஜ்ஜி நினைவுக்கு வந்து தொலைக்கும்... ///
ReplyDeleteஹா.... ஹா....
வாங்க தனபாலன் சார். நலம்தானே !.
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
குறைவாய் பேசுபவர்கள் புத்திசாலிகள்.... Man of few words...
ReplyDeleteஇப்படி வேறா!
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
நல்ல எழுத்து நடை!.. நகைச்சுவை மிளிர்கின்றது வார்த்தைகளில்!... அருமை!..
ReplyDeleteநன்றி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், பாராட்டிற்கும்.
Deleteஇதற்குத் தான் ராஜி 'Men are from Mars, Women are from Venus' என்று சொல்லுகிறார்கள். இரு துருவங்களில் அல்லவா இருக்கிறோம்! என் கணவரும் உங்கள் துணைவர் போலத்தான் ஆரம்ப காலங்களில் இருந்தார். அப்படியெல்லாம் விட முடியுமா? மாத்திட்டோம் இல்ல!
ReplyDeleteநிறைய இடங்களில் வாய் விட்டு சிரித்தேன். காமெடி உங்களுக்கு சுலபமாக வருகிறது. தொடரட்டும் உங்கள் காமெடிப் பதிவுகள்!
நானும் எவ்வளவோ முயன்று என் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டேன் ரஞ்சனி. அதையே என் பலமாக்கிக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டேன்.
Deleteநீங்கள் சொல்வது போல் வெவ்வேறு விருப்பங்களுடனும் சிந்தனையுடனும் இணையும் போது தான் சுவாரசஸ்யமாகிறது வாழ்க்கை.
நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
இரவு என்று ஒன்று வரும் போதுதான் பகலுக்கு மதிப்பு குளிர் இருக்கும் போதுதான் வெயிலுக்கு மதிப்பு மாறுப்பட்டு இருக்கும் போதுதான் வாழ்க்கை சுவைக்கிறது
Deleteஅவரும் உங்களைப் போல படபடவென்று பேச ஆரம்பித்தால் அப்புறம் கேட்க ஆள் இருக்காது
வழக்கம் போல நகைச்சுவையாக அழகாக பகிர்ந்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள் கதையோ கட்டுரையையோ படிப்பதைவிட இப்படி நடக்கும் வாழ்க்கை சம்பவங்களை நகைச்சுவையோடு படிக்கும் போது இனிக்கிறது..தொடருங்கள்..
அட....அட.... உவமைகள் எல்லாம் பலமாக இருக்கிறதே!
Deleteஎன் பதிவைப் படித்து என் நகைச்சுவையை ரசித்ததற்கு நன்றி MTG.
Truth ia always stranger than fiction. that is why incidents are interesting.
thankyou.
கணவரோட கனவு கன்னியை பற்றி பதிவு போடவும் ஒரு பெரிய மனசு வேணுமே!!
ReplyDeleteஎனக்கு எவ்வளவு பெரிய மனசு. அவருடைய கனவுக் கன்னி யாரென்பதை உலகத்திற்கே.......சாரி ...பதிவுலகத்திற்கே தெரிவித்து விட்டேனல்லவா!
Deleteதேவனையும் கல்கியையும் நினைவுறுத்திப்போகும்
ReplyDeleteஅருமையான ஹாஸ்ய நடை
மிகவும் ரசித்துப்படித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ரமணி சார்,
Deleteரொமபவே சொல்லி விட்டீர்கள். கல்கியும் தேவனும் எவ்வளவோ உயரத்தில்.அவர்கள் முன் நான் ஒரு துரும்பு .
நீங்கள் ரசித்து படித்து இவ்வளவு பெரிய பாராட்டை எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி ரமணி சார்.
ReplyDeleteஅதிகமாகப் பேசுபவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.அவர்களது பலம் ,பலவீனம் தெரிந்து கொள்வது எளிது. அதிகம் பேசாதவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது கடினம்.அவர்கள் வாயைத் திறக்காமல் இருப்பதே அவர்களின் பலம்.
GMB சார்,
Deleteஇந்த விஷயத்தில் இராமாயண வாலி போல் நான் எதிராளியின் பலத்தில் பாதி ......இல்லை,இல்லை....முழு பலமும் எனக்கு வந்து சேர்ந்து விடும்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
உங்கள் கணவர் புத்திசாலி, விவரம் தெரிஞ்சுகிட்டார் சந்தோஷமா இருக்க கத்துகிட்டாரு. பெண்களிடம் வாதம் பண்ணி பி.பி. எகிறி வராத வியாதியெல்லாம் வரும், ஆனா அதுங்க குத்து கல்லாட்டம் இருக்கும். பெண்கள் கிட்ட வாயை குடுத்தா செத்தான் மனுஷன். குஷ்டமப்பா..............சீ ........கஷ்டமப்பா............
ReplyDeleteஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெயதேவ் சார்.
Deleteஉங்கள் கணவருக்கு என் கணவர் அண்ணன் எனலாமோ! என் வீட்டில் நான் பேசாவிடில் சத்தமே இருக்காது. எனக்குப் பேசாவிடில் தலை வெடிக்கும். நல்ல பதிவு. ரசித்தேன்.இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
எனக்கு யாராவது துணை கிடைப்பார்களா என்று பார்த்தேன். இதோ நீங்கள் வந்து விட்டீர்கள். நானே தேவலாம் ...போலிருக்கிறதே!
Deleteநன்றி திருமதி வேதா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
" ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் பொம்மை கடைக்கு அழைத்து சென்றால் ஆண் குழந்தை கார் ஸ்கூட்டர் என்று வண்டிகளையே விரும்பும் , பெண் குழந்தை அந்த வண்டி பொம்மைகள் பக்கம் கூடத் திரும்பாது "
ReplyDeleteஇது உண்மையா ?//
உண்மைதான் என்று சொல்லும் என் டெல்லி பேரன் . எத்தனை விதமான கார், மோட்டார் பைக் அவனிடம் இருக்கிறது கடைக்கு போனால் வாங்கி தரவில்லை என்றால் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டுதான் வருவான்.
என் கணவரும் நிறைய பேச மாட்டார்கள்.
பாலசுப்பிரமணியன் சார் சொல்வது சரிதான்.அவர்கள் வாயைத் திறக்காமல் இருப்பதே அவர்களின் பலம்.
பதிவு நகைச்சுவையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
அவர்களுடைய அந்த பலத்தையே நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டியது தான்,கோமதி.வேறென்ன செய்வது!
Deleteநன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
ராஜி மேடம், உங்க கணவருக்கு என்றில்லை, பெரும்பாலான கணவன்மார்களின் கனவுக்கன்னி இந்த 4 சக்கர வாகனி:)தான்!! :)))) எங்க வீட்டில் ஒரு படி மேலே! புதுசா கார் வாங்குவதற்கு ஆறு மாதத்திற்கும் மேலாக ரிஸர்ச் செய்தார் என்றால் பார்த்துக்குங்களேன்! ஒரு கட்டத்தில் எனக்கு வெறுத்தே போய்விட்டது. அந்த அளவுக்கு கம்ப்யூட்டர், ஐபேட், போன் என எல்லாவற்றிலும் கார் படங்களும், வெப்சைட்டுகளும்தான். வீக் எண்ட் என்றால் ஆறேழு டீலர்களிடம் இருந்து போன் வந்துவிடும். அப்படியிப்படின்னு ஒரு வழியாக கார் தேடல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
ReplyDelete...ம்...ஊஹூம், அப்பாடான்னு பெருமூச்சு விடப்படாது! இப்ப புதுக்கார் வித் மற்ற கார்களுடன் கம்பேரிஸன் நடக்குது! அவ்வ்வ்வ்வ்வ்வ்......
பை த வே, என்னவர் பேசாமல் இருக்கமாட்டார், ஆனார் கார் தேடும்போது பேச்சு கொஞ்சம் குறைந்துவிடும். நான் லூஸுப்பொண்ணு மாதிரி ஏதாவது அரைமணி நேரம் பேசியதும், மெதுவாக "சீதைக்கு ராமன் சித்தப்பனா?" கதையா ஏதாவதொரு வரி பேசுவார்! :)))) ஹிஹி...ஹீ!
ஸோ, யு ஆர் நாட் அலோன்! கம்பெனிக்கு நிறைய ஆட்களுண்டு! :)))
---
வழக்கம் போல ரசித்துப் படிச்சாச். இனி உங்க முந்தைய பதிவுகளெல்லாம் பார்க்கணும், வரேன்! :)
////ஸோ, யு ஆர் நாட் அலோன்! கம்பெனிக்கு நிறைய ஆட்களுண்டு! :))) ///
Deleteமனம் திருப்தியாகிவிட்டது இதை படித்தவுடன்.
யான் பெரும் இன்பம் நிறைய பேர் பெறுகிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சி.:))
நன்றி மஹி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
---
உங்கள் கையில் ஒரு ப்லாக் (BLOG) இருப்பதால் எழுதித் தள்ளி விட்டீர்கள். அவர் கையிலும் ஒன்றை கொடுத்துப் பாருங்கள்.
ReplyDeleteதமிழ் சார்,
Deleteநானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன்.ம்ஹும் .....ஆரம்பிப்பதாயில்லை ப்ளாக் அவர். ஆனால் என்னை விடவும் நிறைய பதிவுகளைப் படித்து கருத்திடுபவர் அவர்.
நன்றி தமிழ் சார் உங்கள் வருகைக்கும் என்னை மாட்டி விடும் யோசனையை என்னவருக்கு கொடுத்தற்கும்.
கைனடிக் ஹோண்டா வாங்கனும்ன்னு அவர் சொன்னபோது ...நீங்க 'என்னது ,கையை நீட்டி போண்டா வாங்கணுமா?'ன்னு கேட்டதை என்னால் மறக்கவே முடியவில்லை !
ReplyDeletehttp://jokkaali.blogspot.com/
இது நல்லாருக்கே!
Deleteஉங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஹா....ஹா..... வண்டிகள் பெயரெல்லாம் உச்சரிக்கப்படும்போது உங்களுக்குத் தோன்றும் அந்தந்த வார்த்தைகளுக்குரிய அர்த்தங்களைப் பற்றிப் படித்தபோது குமுதத்தில் சில படங்கள் பெயரை எழுதி அதைத் தமிழ்ப்'படுத்தி' இருப்பார்கள். அது நினைவுக்கு வந்தது. உதாரணமாக 'கட்டி பதங்' என்றால் பதமான வெட்டு, 'யாதோன் கி பாராத்' என்றால் யாரோ அங்கே பார்க்கிறார்கள்.... இப்படி!
ReplyDeleteபதிவில் என்னுடைய பெயரைக் கொண்டுவந்ததற்கு நன்றி.
திரு, ஸார் எல்லாம் கட் பண்ணிவிட்டு சும்மா ஸ்ரீராம் என்றே சொல்லுங்கள். கூச்சமாக இருக்கிறது! (உங்களுக்கு[ம்] தெரிந்திருக்கும் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் என்று!)
நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்,ரசித்து சிரித்ததற்கும்.
Deleteசரியான நகைச்சுவை பதிவு. படிக்கவே ஜாலியா இருந்துச்சு.
ReplyDeleteஉங்களைத் தனியா தவிக்க விட்டுடுவோமா என்ன? கவலையே படாதீங்க,இவங்க எல்லோருக்குமே இந்த வண்டிகள்,எலக்ரானிக் பொருட்கள் எல்லாம் கனவுக் கன்னிகள்தான்.
ஒரு நாளைக்கு நெட்ல உக்காந்து இந்த வண்டி,கார்,எலக்ட்ரானிக் ஐட்டத்தையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு படிச்சுட்டு வந்து எடுத்து விடுங்க... பிறகு கார்,வண்டி எல்லாம் (விக்ஷ்ணு தம்மைப் பற்றி பேசவில்லையே என) உங்களைப் பார்த்து பொறாமைப்படும்.
உண்மையிலேயே இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் படித்த பின்னர் என்னை நானே தேற்றிக் கொண்டேன். நான் மட்டும் தனியாக இல்லைஎன்று புரிந்தது.வீட்டுக்கு வீடு மவுன விரதமிருக்கிறார்கள் என்று தெரிந்தது.
Deleteநீங்கள் சொன்ன ஐடியா நன்றாகவே இருக்கிறது. அதை செயல் படுத்திவிட்டு ஒரு பதிவெழுதி உங்களைஎல்லாம் இம்சிக்காமல் விட்டு விடுவேனா என்ன!
எத்தனை முறை சொன்னாலும் எல்லோரும் நம்ப மறுக்கிறீர்களே!
விஷ்ணுவும் ராசியும் கற்பனையே!
எங்க வீட்டிலேயும் இதே கதை தான் மேடம்!! நான் பேசி கொண்டே இருப்பேன்! அவர் எப்பவும் அவருடைய அலுவலக நினைப்பிலேயே இருப்பார்! சில சமயங்களில் தோன்றுவதுண்டு, நாம் அவருக்கு இரண்டாம் மனைவியோ என்று!! படித்து மிகவும் ரசித்தேன்!!
ReplyDeleteநன்றி மஹா , உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Delete" ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் பொம்மை கடைக்கு அழைத்து சென்றால் ஆண் குழந்தை கார் ஸ்கூட்டர் என்று வண்டிகளையே விரும்பும் , பெண் குழந்தை அந்த வண்டி பொம்மைகள் பக்கம் கூடத் திரும்பாது "
ReplyDeleteஉண்மைதான் மகன்கள் சிறுவயதிலிருந்து இன்றுவரை வகைவகையாக கார்கள் சேர்ப்பார்கள்.
கணவரும் கார்கள் மீது தனி கவனம் செலுத்துவார்,, கார்களை ஷோ ரூமிலிருந்து எடுத்துவந்தது போல எப்போதும் பளிச் என்று வைத்துக்கொள்வார்,,
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
நீங்களும் என் கட்சி தானா? ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
Deleteநன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.
என் மகன் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே ரோடில் போகும் வாகனம் என்ன வகை என்றும் , அதில் என்ன ரிப்பேர் என்றும் சொல்லிவிடுவான் ..
ReplyDeleteஆண் குசந்தைகளே இப்படித் தான் போலிருக்கிறது.
Deleteஉங்களது மீள் வருகைக்கு நன்றி சகோதரி.