ராசி மணியைப் பார்த்துக் கொண்டே சாம்பார் தாளித்துக் கொண்டிருந்தாள் கடுகு வெடிப்பதன் மணமும், கறிவேப்பிலை மணமும் சேர்ந்து வீடே சாம்பார் மணத்தில் மிதந்து கொண்டிருந்தது.
தயிர் வடைக்கு , கொத்தமல்லி நறுக்கி வைத்துக் கொண்டாள். சாப்பிடும் முன்பாக போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்..
" பார்க்க சகிக்கவில்லை இப்பொழுது " என்று நினைத்துக் கொண்டாள்.
"எப்பொழுது நீ பார்க்கும்படியாக இருந்திருக்கிறாய் " என்று கேட்ட மைண்ட் வாய்சை அலட்சியம் செய்தபடி லைட் மேக்கப்புடன், வந்து டீவி முன்னால் அமர்ந்தாள் .
ஜன்னல் வழியாக, விஷ்ணுவின் கார் வருகிறதா என்று டிவியில் ஒரு கண்ணும், வெளியே ஒரு கண்ணுமாக இருந்தாள் .
விஷ்ணு தன் நண்பர்களை மாலை தேநீருக்கு அழைத்து வருவதாக சொல்லியிருந்தார்.(விஷ்ணு ராசியின் கணவர் என்பது
முந்தைய பதிவைப் படித்தவர்களுக்குத் தெரியும் )
அதற்குத் தான் ராசி தயார் செய்து காத்திருந்தாள் .
டிவியின் "முந்தானை முடிச்சில் " அவள் சிக்கியிருக்கும் போது. ,கார் ஹாரன் சத்தம் கேட்டது.
டிவியின் " அழுகையை " நிறுத்தி விட்டு கதவைத் திறந்தாள் .
உள்ளே விஷ்ணுவும் அவர் நண்பர்களும் நுழைந்தனர்.
எல்லோரும் சக அலுவலர்கள். இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள்.
எல்லோரையும் ராசிக்கும் , ராசியை எல்லோருக்கும், அறிமுகப் படுத்தி வைத்தார் விஷ்ணு .
எல்லோருக்கும் , ஐஸ் வாட்டர் எடுத்து வர உள்ளே சென்றாள் ராசி. இரண்டு பெண்களும் அவள் பின்னோடியே வந்தனர்.
"ஷைபி , நீ இதை எடுத்து வா" என்று டம்ளரை பிரியா கொடுத்தாள்.
உன் பேர் என்ன சொன்ன ? விசாரித்தாள் ராசி.
ஷைபியா , ஆனால் எல்லோரும் என்னை ஷைபி என்று தான் செல்லமாக கூப்பிடுவார்கள் ஆண்டி(aunty) என்றாள் அவள்.
(அத்துடன் அவள் நிறுத்தியிருக்கலாம். விதி விளையாட ஆரம்பித்தது அவள் நாவில்.)
ஏன் "விஷ் " சார் கூட அப்படித் தான் கூப்பிடுவார் என்ற போது
ராசி "ஓ ..........."
நான் ஆண்டி(aunty) ....... ஆனால் அவர்..... "விஷ் " ....... ஷாமே........ " விஷ் ".
ஷைபியாவை சற்றே உற்றுப் பார்த்த ராசிக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. பருவப் பெண். அழகாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள்.
சற்று நேரத்திற்கு முன்பாக" பாக்க சகிக்கலை "என்று சொன்ன மைண்ட் வாய்ஸ், இப்ப சமாதானப் படுத்தியது , பருவத்தில் எல்லாமே அழகு தான் .நீயும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தாய் என்று.
பெண்ணிற்கே உரிய ஜாக்கிரதை உணர்வு ,சற்று தூக்கலாகத் தெரிய ஆரம்பித்தது ராசியிடம்
.
எல்லோரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
ராசி எல்லோர் குடும்பங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள் .
"ஷைபி " உன் கணவர் எங்கே வேலை பார்க்கிறார் ? -- ராசி
ஏதோ ஜோக்கைக் கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்து விட்டு
"தெரியாது. கேட்டுத் தான் சொல்ல வேண்டும் "என்றாள் ஷைபி
ஓ .............இன்னும் திருமணமாகவில்லை , நினைத்தாள் ராசி.(அதற்கென்ன இவ்வளவு சிரிப்பு)
அதற்குள் பிரியா "இவள் இப்படித் தான் .எப்பவுமே ஒரே "கல கல" தான்.ஒரே சிரிப்பு தான். இவள் கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது " என்று பிரியா சொன்னதை ராசி அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது விஷ்ணுவிற்கு புரிந்து விட்டது.
எதையாவது சொல்லி அவர் சமாளிப்பதற்குள் ஷைபியா தொடர்ந்தாள் ."நானும் பார்க்கிறேன். ஒருவர் கூட மாட்டுவதாகத் தெரியவில்லை .ஏன் " விஷ் "ஷிடம் கூட என் லவ் அப்ளிகேஷன் இருக்கிறது. ஆனால் அவர் தான் ஏக பத்தினி விரதத்தை முறிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது."என்றாள் .
விஷ்ணு ராசி முகத்தைப் பார்க்கத் தாயாராகவேயில்லை.
புயல் சின்னம் மையம் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.
" விஷ் சார் ,, நீங்கள் இப்ப சொல்லுங்கள் நான் ரெடி " இது ஷைபியா .
" உஷ்......உஷ்........ " இது பிரியா.
" அதெல்லாம் ஆண்டி(aunty ) தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்." மீண்டும் ஷைபியா .
"சரி , எல்லாம் ரெடி செய்து வைத்து விட்டு சொல்கிறேன். சாப்பிடலாம் " என்று சட்டென்று உள்ளே சென்றாள் ராசி.
உள்ளே சென்று, எல்லோருக்கும் மசால் தோசை , சுடச்சுட ரெடி செய்து விட்டு எல்லோரையும் சா ப்பிடக் கூப்பிட்டாள் .
"aunty" உங்கள் சாம்பார் வாசனை , சும்மா கமகம , என்று ஊரையே தூக்கியடிக்கிறதே என்று சொல்லிக் கொண்டே எல்லோரையும் முந்திக் கொண்டு ஷைபியா டேபிளில் உட்கார்ந்தாள் .
எல்லோரும் மெல்லிய உரையாடலுடன் சாப்பிட , ஷைபியா மட்டும் வெங்கலக் கடையில் யானை புகுந்தாற்போல் ஒரே சத்தம்.
எல்லோரையும் பேர் சொல்லி சார் என்றாள் .
யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
ஆனால் ராசிக்கு என்னவோ அவள் மூச்சுக்கு முன்னூறு முறை" விஷ் விஷ் "என்று சொல்வதும் எல்லோரும் அவளை "ஷைபி ஷைபி " என்று கூப்பிடுவதும் , என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு என்று தான் தோன்றியது ராசிக்கு.
விஷ்னுவிற்கு தெரியும் இன்று ராசியிடம் மையம் கொண்டிருக்கும் புயல் கரையை கடக்க இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று.
எல்லோரும் அவள் சிற்றுண்டியை வானளாவ புகழ்ந்து தள்ளி விட்டு விடை பெற்றனர்.ராசி மிச்சம் இருக்கும் வேலையெல்லாம் முடிக்க போனாள் .
" டமால் டமால் " என்று ஒரே சத்தம்.
விஷ்ணு கண்டுகொள்ளவேயில்லையே.சைனாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் aftershocks தம் வீடு வரை இருக்குமோ என்னமோ!
துலக்க வேண்டிய பாத்திரங்கள் தான் பெரும் சத்தத்துடன் சிங்கில் விழுந்து கொண்டிருந்தது.
யார் மேல் கோபித்து கொள்வது என்று புரியவில்லை.
விஷ் ....விஷ்...... என்று விசிலடித்தார் போல், பேசிய ஷைபியா வை கோபித்துக் கொள்வதா அல்லது விஷ்ணுவையா?
சாமான்கள் "விஸ்.... விஸ்......" என்று பறந்தன
இப்பவும் ஒரு ரியாக்ஷனும் இல்லை, கணவரிடமிருந்து.
நேராக ஹாலிற்கு வந்தாள் .
டிவியிலிருந்து கண்ணை எடுக்காமலே
" என்ன சொல்லு ?" என்றார்.
"ஒன்றும் இல்லை. ஏன் ஒருத்தரும் உங்கள் ஆபிஸில் அந்தப் பெண்ணை கண்டிக்க மாட்டீர்களோ?"
' இப்படித் தான் "விஷ் விஷ்" என்று விசிலடித்துக் கொண்டிருப்பாளோ?'
"ஐயோ !.... அவள் சும்மா கல கல என்று பேசுவாள். மற்றபடி நல்ல பெண் ," என்று சர்ட்டிபிகேட் கொடுத்தது தான் தாமதம் , தொம் தொம் என்று குதித்தாள் ராசி.(வார்த்தையில் குதித்ததை நிஜமாகவே குதித்தால்.......நினைத்தாலே நடுக்கமாயிருந்தது விஷ்ணுவிற்கு )
அவள் நல்லவள் என்றால்...............அப்ப, நான்.. என்று முறைத்தாள்
நான் ஒன்றும் பேசவில்லை, என்று எழுந்து போய் விட்டார் விஷ்ணு .
மறு நாளிலிருந்து வீட்டில் மௌன யுத்தம் ஆரம்பமானது.
காபி டேபிளிற்கு வந்தது. ஒரு" நங் "
(நீராகாரமாயிருந்தது. ஈ விழுந்தால் சுதாரித்து எழுந்து ' கேட் வாக் ' செய்யும்.)
சிறிது நேரத்தில் இன்னொரு" நங்". இட்லியும் சட்னியுயம்.
சாப்பிட்டால் காது மூக்கிலிருந்தெல்லாம் நீர் வந்தது.(சட்னியில் ராசியின் கோபம் காரமாயிருந்தது)
அவருக்கு பிடிக்காத பாகற்காய், வாழைத்தண்டு .. இத்யாதி......... சமையலில்.இது சாம்பாரா , இல்லையில்லை ,ரசம்....இல்லை.....
பட்டிமன்றமே நடத்திவிடலாம் !
மயான அமைதி வீட்டில்.
ஒரு விதத்தில் இது விஷ்ணுவிற்கு சௌகர்யமாயிருந்தது.
இது தான் சாக்கென்று அவர் பாட்டிற்கு ஆபீஸ் ,டிவி, பேப்பர் என்று நிம்மதியாக இருந்தார் .
ராசிக்கோ கோபம் கொஞ்சமும் குறைவதாய் இல்லை.
எப்படி சமாதானம் செய்வது, என்றே புரிய வில்லை ,விஷ்ணுவிற்கு
இத்தனை வயதிற்கு மேல் இதென்னடா தொல்லை என்று தோன்றியது
அவருக்கு.
இவ்வளவு வருடங்களாகியும் இவளைப் புரிந்து கொள்ள முடியவேயில்லையே என்று தன்னையே கடிந்து கொண்டார்.
இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு வாரம் ஓடியது.
ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. கொஞ்சம் வீடு சகஜ நிலைக்குத் திரும்பும் போலிருந்தது.
காலை ஒரு எட்டு மணியிருக்கும் .போன் சிணுங்கியது . எடுத்தது ராசி.
எதிர் முனையில் ஷைபியா .
"ஆண்டி எப்படி இருக்கீங்க.
நான் இப்ப அங்கே வரணுமே என்றாள் ."விஷ் சார்" இருக்கிறாரா " என்று கேட்டு ராசியின் BP யை எகிற வைத்தாள் .
ம் ம் .........ராசி சொன்னது.
"அப்படிஎன்றால் கதவை திறங்கள்."
ஓ .............. வந்தே விட்டாளா? என்று நினைத்துக் கொண்டே போய் கணவரிடம்
உங்கள் " விஷ்..... "(அழுத்தமாக) வந்திருக்கிறாள் "என்று கடுகடுத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் .
விஷ்ணு தான் போய் கதவை திறந்தார்.
புயலாக நுழைந்தாள் ஷைபியா .
"ஆண்டி" எங்கே சார் ?.இருவரும் ஒன்றாக நில்லுங்கள்.நமஸ்காரம் செய்ய வேண்டும் "என்று கூறிக் கொண்டே கல்யாணப் பத்திரிக்கையை நீட்டி விட்டு "சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று தான் யாரிடமும் சொல்லவில்லை.உங்களுக்குத்தான் முதல் இன்விடஷன்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,
ராசி உள்ளேயிருந்து எட்டிப்பார்த்து கூலாக "ஒரு நிமிடம் இரும்மா .இதோ வருகிறேன் " என்று உள்ளே சென்றவள் வெற்றிலை பாக்கு ஒரு ப்ளவுஸ்பிட் சகிதம் தாம்பூலம் கொடுத்து ஆசீர்வதித்தாள் .
பத்திரிக்கையை படித்து , கண்டிப்பாக கல்யாணத்திற்கு வருகிறேன் என்று சொன்ன ராசியை ஆச்சர்யமாகப் பார்த்தார் விஷ்ணு.
" விஷ் சார் நான் கிளம்புகிறேன் "என்று சொன்ன ஷைபியாவிற்கு ராசி " பாத்து ஜாக்கிரதையாக போய்ட்டு வாம்மா " என்று சொன்னதும் விஷ்ணுவிற்கு மயக்கம் வராத குறை தான்.
அவள்போனவுடன் ராசி ரொம்பவும் சகஜமாக" சரி வாங்க சாப்பிடலாம் என்றாளே பார்க்கலாம் ,,,,விஷ்ணு கீழே விழாமல் இருக்க சுவற்றை பிடித்துக் கொண்டார்.
இப்ப " விஷ் " டர்ன் .
முறைத்துக் கொண்டார்.
என்னை நம்பாமல் தானே இத்தனை கலாட்டா செய்தாய்"
"இதற்கு பெயர் வெறும் " possessiveness " உங்களுக்குப் புரியவேயில்லை "விளக்கம் கொடுத்தாள் ராசி.
இதற்கெல்லாம் மசியவேயில்லை விஷ்ணு .
முகம் கொடுத்தும் பேசவேயில்லை .
ஆனால் மனதிற்குள் "ஆமாம். புரியவேயில்லை தான் . கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் ........." சொல்லிக் கொண்டார்.
இந்த ஊடல் எப்ப முடியும்?
இன்னொரு பதிவில் நாம் ராசி தம்பதியை சந்திக்கும் போது கண்டிப்பாக ராசியாகி விடுவார்கள் .
அடுத்த கலாட்டா என்னவாயிருக்கும்...........
பி .கு. விஷ்ணுவின் மேல் பரிதாபப் பட்டு யாரும் அவருக்கு அனுதாப மன்றம் ஆரம்பிக்க வேண்டாம்.
விஷ்ணுவும் ராசியும் கற்பனை கதாபாத்திரங்களே.
image courtesy-----google.
எப்படியோ சந்தேகம் தீர்ந்தது... (விஷ்ணுவுக்கு நல்ல ராசி...!)
ReplyDeleteஅடுத்து வேறு ஒரு கலாட்டாவா...?
ஆவலுடன்...
நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteமிகவும் அழகாக நகைச்சுவையாக எழுதி அசத்தியுள்ளீர்கள். நிறைய இடங்களில் மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன். தொடர்ந்து இதுபோல எழுதி அசத்துங்கள். உங்களுக்கு எழுத்துலகில் ஓர் நல்ல எதிர்காலம் உள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
வைகோ சார்,
Deleteநீங்கள் ரசித்து படித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் வாழ்த்துக்கு,ஆசீர்வாதத்திற்கு, பாராட்டுக்கும் நன்றி சார்.
ReplyDeleteசத்தியமா, நான் விஷ்ணுவையும் ராசியையும் பற்றி
அடுத்த என் பதிவில் எழுதவில்லை.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
ஐயா,
Deleteஉங்கள் அடுத்த உளவியல் பதிவில் possesiveness பற்றி சொல்லப் போகிறீர்களா? படிக்க காத்திருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா.
All is well that ends well.It's delighfult to read your blogs.Thanks for sharing.
ReplyDeleteThankyou sir for visiting my blog and appreciating it.
Deleteமுதலில் ராசி மட்டும் வந்து கலக்கினாள். இப்போது அவளது பதி விஷ்ணுவும் வந்து கலக்குவது நன்றாக இருக்கிறது. அங்கங்கே வாய்விட்டு சிரித்தேன்.
ReplyDeleteஅடுத்த பதிவில் விஷ்ணு எப்படி தன் ஊடலைக் காட்டப்போகிறார்? காத்திருக்கிறேன்.
ஆமாம், ஒரு சந்தேகம்:கணவருக்கு எத்தனை வயதானாலும், திருமணமாகி எத்தனை வருடங்களானாலும், கணவனை நம்ப மாட்டாளா மனைவி?
இந்த சின்ன ஊடலை நிறைய வீடுகளில் பார்க்கலாம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் மிகைப் படுத்தி எழுதியிருக்கிறேன் அவ்வளவு தான்.மற்றபடி சந்தேகம் எல்லாம் இல்லை.
Deleteஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரஞ்சனி
வெங்கலக் கடையில் யானை புகுந்தாற்போல் ஒரு குடும்பப்பகிர்வுகள்.. !
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteதங்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பானது என்பதை
ReplyDeleteபதிவைப் படித்ததும் உனர முடிந்தது
ரசித்துப்படித்தோம்
தொடர வாழ்த்துக்கள்
ரமணி சார்,
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
உங்களின் நகைசுவை முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDelete/விஷ்ணுவும் ராசியும் கற்பனை பாத்திரங்களே./-- நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி. . வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.
GMB சார்,
Deleteநிஜமாகவே கற்பனை தான் சார்.
/விஷ்ணுவும் ராசியும் கற்பனை பாத்திரங்களே./-- நம்புகிறேன்///
என் உறவினர்கள் சிலரும் இதையே சொல்கிறார்கள்.
நன்றி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
அருமை சகோதரி.மிகவும் இரசித்துப் படித்தேன்.சிரித்து மகிழ்ந்தேன்.பகிர்வுக்கு நன்றி!!!
ReplyDeleteநன்றி சகோதரி உங்கள் முதல் வருகைக்கும் ,பாராட்டிற்கும்.
Deleteஉங்கள் வலைத்தளம் சென்றேன்.
followers gadget இல்லையோ உங்கள் தளத்தில் .Fun with Mathematics தளம் என்னைக் கவர்ந்தது. அங்கும் வந்து கருத்திடுகிறேன்.
நன்றி.
எனது தளத்திற்கு வந்து கருத்திட்டமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.Followers gadget பதிவுகள் அனைத்திற்கும் கீழே வருமாறு வைத்துள்ளேன் தோழி.
Deleteநன்றி.
////////////
ReplyDeleteடிவியின் "முந்தானை முடிச்சில் " அவள் சிக்கியிருக்கும் போது. ,கார் ஹாரன் சத்தம் கேட்டது.
டிவியின் " அழுகையை " நிறுத்தி விட்டு கதவைத் திறந்தாள் .
////////////
இதை எழுத்தாளர் touchல் சேர்த்துக்கிறோம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நான் ஆண்டி(aunty) ....... ஆனால் அவர்..... "விஷ் " ....... ஷாமே........ " விஷ் ".
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃ
சாமான்கள் "விஸ்.... விஸ்......" என்று பறந்தன
ஃஃஃஃஃஃஃஃஃஃ
பட்டாசு!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
காலை ஒரு எட்டு மணியிருக்கும் .போன் சிணுங்கியது . எடுத்தது ராசி.
எதிர் முனையில் ஷைபியா .
ஃஃஃஃஃஃஃ
அடக்கடவுளே என்று தலையில் கை வைக்கத் தோன்றியது.....
இப்படியா எழுதுவது. வரிக்கு வரி திறனாய்வு செய்யனும் போலவே.
நன்றி பாண்டியன்,
Deleteஇப்படி வரிவரியாக ரசித்துப் படிப்பதற்கு.
நன்றாக ரசித்து படித்திருக்கிறீர்கள். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
ஆனால் ராசிக்கு என்னவோ அவள் மூச்சுக்கு முன்னூறு முறை" விஷ் விஷ் "என்று சொல்வதும் எல்லோரும் அவளை "ஷைபி ஷைபி " என்று கூப்பிடுவதும் , என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு என்று தான் தோன்றியது ராசிக்கு.
ReplyDeleteவிஷ்னுவிற்கு தெரியும் இன்று ராசியிடம் மையம் கொண்டிருக்கும் புயல் கரையை கடக்க இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று. ..
கதை தலைப்பு அருமை.
ஊடலையும் நல்ல நகைச்சுவையாக கூறி விட்டீர்கள்.
ராசியின் மையம் கொண்ட புயல் கரையை கடந்து விட்டது, ஆனால் விஷ்ணுவின் புயல்?
இன்னொரு பதிவில் நாம் ராசி தம்பதியை சந்திக்கும் போது கண்டிப்பாக ராசியாகி விடுவார்கள் .//
ராசி தம்பதி ராசியாகி விடுவார்கள் மகிழ்ச்சி.
நிறை வீடுகளில் நடக்கும் ஒரு சின்ன செல்ல ஊடல் தானே கோமதி.
Deleteசுவைக்காக மிகைபடுத்தியிருக்கிறேன்.
கண்டிப்பாக இன்னொரு பதிவில் ராசி தம்பதியினர் ராசியாகி விடுவார்கள்.
நன்றி கோமதி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் .
ஒருமுறை பேருந்தில் கூட்டமாயிருந்ததால் நான் முன்புறப் படிக்கட்டருகில் நிற்க, என்னவள் உள்ளே சென்று விட்டாள். அப்போது ஒரு இளம் அழகி என்னிடம் ‘‘..... ஸ்டாப்பிங் இதுவா?’’ என்று கேட்க, நான், ‘‘அடுத்த ஸ்டாப்புங்க’’ என்றேன். வீட்டிற்கு வந்ததும் புயலே அடித்தது. ‘‘அதென்ன ரகசியமாப் பேசினீங்க/’’ ‘‘ஏண்டி பஸ்ல ஸ்பீக்கர் வெச்சு கத்தாத குறையாவா பேசுவாங்க. இடம் கேட்டா, சொன்னேன்’’ ‘‘அதென்ன பஸ்ல அத்தனைபேரு இருக்கும் போது உங்ககிட்ட இடம் கேக்கறா?’’ ‘‘நான் பர்சனாலிட்டியா இருக்கறதால கேட்டிருப்பா’’ என்ற என் பதிலுக்குப் பின் நிகழந்திருப்பதை உங்களால் கற்பனித்துக் கொள்ள முடியும்! யப்பா... சமாதானப்படுத்தவே பத்துநாளாச்சு! உங்களின் இந்த விஷ்ணு-ராசி கலாட்டா அத்தனை இயல்பாக, ரசித்துச் சிரிக்கும்படி அமைந்திருக்கிறது! கற்பனைக் கதை என்று நீங்கள் சொன்னதால் ஏற்றுக் கொள்கிறோம்- மற்றபடி நடைமுறையை உரித்து வைத்திருக்கிறது! (அந்த காக்கா விட்ஜெட்டை வலதுபுறம் வைக்க முடிந்தால் நல்லது. படிக்க டிஸ்டர்பாக இருக்கிறது)
ReplyDelete//ஒரு இளம் அழகி//
Deleteஎன்று நீங்கள் எந்த தைரியத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.திருமதி சரிதா என் பதிவை படிப்பதில்லை என்று நினைக்கிறேன். படித்தால் உங்கள் வீட்டில் ஒரு புயல் சின்னம் உருவாகும்.
//கற்பனைக் கதை என்று நீங்கள் சொன்னதால் ஏற்றுக் கொள்கிறோம்//
நிஜமாகவே கற்பனை தான் சார். ஆனால் என் உறவினர்கள் உட்பட நம்ப மாட்டேன்கிறார்கள்.
//(அந்த காக்கா விட்ஜெட்டை வலதுபுறம் வைக்க முடிந்தால் நல்லது. படிக்க டிஸ்டர்பாக இருக்கிறது)//
காக்கா பறந்து போச்சே!
நன்றி கணேஷ் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
நான் சொன்னது பதினைந்து வருஷத்துக்கு முந்தி நடந்ததை ராஜி மேடம்! அப்போ இளம் அழகிகளை கண்டா ‘சைட்’ அடிக்கிற (கெட்ட?) பழக்கம் இருந்துச்சு. இப்ப மனசு வளர்ந்து பக்குவமாய்டுச்சு! வீட்டம்மா என்னை நல்லாப் புரிஞ்சு வெச்சுட்டாங்க இத்தனை வருஷத்துல! அதனால இப்ப புயல் இந்த மாதிரி விஷயத்துல வராது! வேற எந்த விஷயத்துல வரும்னுல்லாம் நானாச் சொல்லி வாயக் குடுத்து வம்புல மாட்டிக்க மாட்டேம்ப்பா!
Deleteஎன் கருத்தை ஏற்று மதித்து காக்காவைத் துரத்தின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Delete//அதனால இப்ப புயல் இந்த மாதிரி விஷயத்துல வராது//
Deleteஓஹோ......அப்படியா........
ஹா.. ஹா.. ஒருவேளை ராசி சரிதா அவர்களோட ப்ரெண்ட்டோ?
ReplyDeleteஇருந்தாலும் இருக்கலாம்.
Deleteநன்றி உஷா
நான் உதைபடறதுல உஸா மேடத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பாருங்க ராஜி மேடம்! நண்பேன்டா!
Deleteபார்த்தேன்......பார்த்தேன்........
Deleteராஜி உந்த ராசிக்கு எத்தனை பரிமாணங்கள் ஆனால் உண்மையில் பெண்களின் மன இயல்பை கோடிட்டு காண்பித்துவிடீர்கள் அழகாக எழுத்து நடை அருமை
ReplyDeleteஆமாம் மலர். இது பெரும்பாலான பெண்களின் இயல்பு என்பது என் அபிப்பிராயம்.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.
இதைத்தான் 'கல்யாண கலாட்டா'னு சொல்வாங்களோ!ஆனால் பெண், மாப்பிள்ளை வீட்டில் நடக்குமுன்னே ராசியின் வீட்டில் நடந்துவிட்டதுதான் காமெடி.அடுத்த கலாட்டாவைக் காணவும் ரெடியாயிட்டோம்.
ReplyDeleteபதிவுதான் காமெடியா இருக்குன்னு பார்த்தால் பி.கு. அதைவிட காமெடியா இருக்கு.சூப்பரா எழுதறீங்க,தொடருங்கள்.
வாங்க சித்ரா,
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், உற்சாகமான் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க .
பி.கு ரொம்பவே ரசிக்க வைத்திருக்கு போலிருக்கிறது.
நன்றி சித்ரா.
நல்ல நகைச்சுவைப் பதிவு! எங்க வீட்டிலும் இப்படியான செல்ல மோதல்கள் அப்பப்ப வரும் என்றாலும் ஒரு வாரம் பத்துநாள் எல்லாம் தாங்காது. மேக்ஸிமம் ஒரு மணி நேரம், அரைமணி நேரம்தான்! ;)
ReplyDeleteபெரியவங்களா இருப்பதால் இவங்களுக்கு ஒருவாரம்-பத்துநாள் ஆகுதோ? ஹஹா!
வாங்க மகி ,
Deleteஉங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி.
நகைச்சுவையுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ராஜலக்ஷ்மி! பாராட்டுக்கள்!
ReplyDeleteவாங்க மனோ,
Deleteஎன் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி.
கற்பனையா..... நிஜம் போல இருக்கிறது உணர்வுகள்!
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
Deleteயதார்த்தமாக நடக்கும் விஷயங்களை கற்பனை பாத்திரங்கள் மூலம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் :)
ReplyDeleteநிறைய வீடுகளில் நடக்கும் செல்ல ஊடல் தானே மஹா. அதை கொஞ்சம் மிகைப் படுத்தி விட்டேன். நன்றி மஹா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteதங்களின் அதே வழக்கமான நகைச்சுவைப் பாணியில் அசத்திவிட்டீர்கள். குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன ஊடல்களை அழகாகக் கொண்டு வந்துள்ளீர்கள்!
ReplyDelete~அவள் மூச்சுக்கு முன்னூறு முறை" விஷ் விஷ் "என்று சொல்வதும் எல்லோரும் அவளை "ஷைபி ஷைபி " என்று கூப்பிடுவதும், என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு - அப்படியே நேரில் நடப்பதைப் பார்த்ததுபோல் உள்ளது.
சோ அனைவரின் வீட்டிலும் அதே நங் நங் தான் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மட்டும்தான் சிக்கினேனோ என்றெண்ணியிருந்தேன்.
இன்னும் பெரிய ஹைலைட் என்னன்னா - ~சாம்பாரா , இல்லையில்லை,ரசம்....இல்லை...பட்டிமன்றமே நடத்திவிடலாம்~..
என்னுடைய பழையப் பதிவுகளைத் தேடிப்பிடித்துப் படித்துப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. என் மனமார்ந்த நன்றிகள் பல. ராசி விஷ்ணு தம்பதியினர் என் பதிவுகளில் நிறிய உலா வந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலவற்றைத் தொகுத்து 'அப்பாவி விஷ்ணு" என்னும் தலைப்பில் மின்னூலாக்கியிருக்கிறேன். அதன் இணைப்பு இதோ http://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/
Deleteநேரம் கிடைக்கும் போது தரவிறக்கி படித்துப் பாருங்கள்.
//சோ அனைவரின் வீட்டிலும் அதே நங் நங் தான் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மட்டும்தான் சிக்கினேனோ என்றெண்ணியிருந்தேன்.//
Simple possessiveness. I think it is an expression of love.
உங்கள் வருகைக்கும், படித்துப் பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களுதியாயத் தளங்களைப் பார்த்தேன். தந்தையைப் பற்றியப் பதிவு என் மனதில் நிலைத்தது.அதைப் பற்றி அங்கு வந்து கருத்திடுகிறேன்.
உங்கள் தமிழ் இலக்கியப் பதிவுகள் .....நான் இளமையில் படிக்க விட்டதை, இப்பொழுது நின்று. நிதானித்து ரசித்துப் படித்து வருகிறேன். அதற்கு உங்கள் தளத்தைப் பின் தொடர ஆரம்பித்திருக்கிறேன்.
நன்றி அருள்.
இப்பொழுதுதான் `அப்பாவி விஷ்ணு`வைப் படித்து முடித்தேன். மிகவும் அருமை, ஒரு முழுநீளக் காமெடிப் படம் பார்த்தது போன்ற உணர்வு, வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிறைய இடங்களில் விஷ்ணுவின் மைண்ட்வாய்ஸ் தான் ஹைலைட்டே! இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், காபி வித் விஷ்ணு...ரொம்ப பாவம்ங்க. அப்படியே பக்கத்திலிருந்துப் பார்ப்பது போலிருந்தது. அதேபோல் ஒவ்வொரு பதிவிலும் இணைத்திருக்கும் படங்களும், பதிவுகளை முடித்திருக்கும் விதமும் அருமை.
வலையுலகில் பெரும்பாலும் ஆண் பதிவர்களே இப்படி நகைச்சுவையாக எழுதியிருப்பதாக எண்ணியிருந்தேன், ஆனால் உங்களின் பதிவுகளைப் படித்த பிறகு அந்த நினைப்பும் பொய்யென்பதை உணர்ந்தேன்.
`ஆசிரியை மற்றும் குடும்பத் தலைவி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை` என்று கூறியுள்ளீர்கள். ஆனால் என் பார்வையில் நீங்கள் ஒரு `யதார்த்தமான நகைச்சுவை எழுத்தாளராகத்` தோன்றுகிறீர்கள். சீரியசான பதிவுகளை எழுதுவது கடினமல்ல, இப்படி தங்களைப் போல் யதார்த்தமாக எழுதுவது தான் கடினமாக எனக்குத் தோன்றுகிறது.
முன்பு குறிப்பிட்டதைப் போன்று தங்களின் ஒவ்வொரு பதிவிலும், குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன ஊடல்களை அழகாக வடிவமைத்து, இன்றைய தேதியில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை இணைத்து (youtube, gangam style, super singer, smart phone) காலத்திற்கு ஏற்றாற் போல் சொல்லியிருப்பது மிகவும் அழகு.
இன்னும் தங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறொம்!
என்னுடைய வலைப்பதிவுகளை வாசனை செய்து, கருத்தளித்ததற்கு என் வணக்கங்களும் நன்றிகளும்!
என் எழுத்துக்களைப் பாராட்டுவதற்கு மிக்க நன்றி அருள். எனக்கு எழுத்தாளர் என்கிற பெயர் சற்றே அதிகம் என்று தோன்றுகிறது. அதிலும் நகைச்சுவை எழுத்தாளர் என்கிற அடை மொழி என்னை எங்கோ உயரத்தில் வைத்து விட்டது.
Deleteஅதற்கேற்றார் போல் இனி எழுதி விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டுள்ளேன்.
உங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி அருள்.
அப்ப தங்களை எழுத்தாளர்ன்னு சொல்வதற்குப் பதிலாக,`நகைச்சுவைப் பதிவர்`ன்னு சொன்னாச் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.
Delete