Friday 25 January 2013

கோலம்........... ஒரு மந்திர ஜாலம்.



கோலங்கள்    நகரங்களில்     மறைந்துக்   கொண்டிருக்கும்    ஒரு கலையாகி விட்டதென்றே  நினைக்கிறேன்.

மிக  அதி காலையில்  எழுந்து  வீட்டு  வாசலில்  ,பசுஞ்சாணி  நீரால்   வாசல்  தெளித்து   அரிசி மாவினால்   புள்ளி  வைத்து  கோலம்  போடுவதை  இக்கால நவநாகரீகப்   பெண்கள்    பலர் அறிய   மாட்டார்கள்  என்றே   நினைக்கிறேன்.

வீட்டு வாசலைக்   குனிந்து  பார்க்கவே   நேரமில்லை.
கழுத்தை  நெறிக்கும்  வேலை.

அது மட்டுமா?
வெளியே  நடந்து போகும் போதும்  , ICU  விலிருந்து  தப்பித்து வந்தவர்கள்   போல்   காதுகளிளிருந்தும்   கைக்கும்   ஒயர் ராக   தோ    தொங்கிக்  கொண்டிருக்க    (ஆண்கள், பெண்கள்  இருவரும்  இதே மாதிரி)   எங்கேயோ   பார்த்து  பேசிக்கொண்டே    நடக்கிறார்கள்.
 இதில்    கோலம்   போடுவதாவது............

வீடுகள்  எல்லாம்   அடுக்கு மாடிக்  குடியிருப்புகளாதால்  கோலத்திற்கு  தான்  கேடு.

சரி,    தனி    வீடுகளிலாவது    கோலம்  இருக்கிறதா என்றால்   அங்கும்   அதனுடைய    முக்கியத்துவத்தை   இந்து   வெகு நாட்களாகி விட்டன.    


அங்கெல்லாம் கோலம் இருக்கிறது   ஆனால்  ஒரு சில வீடுகளைத் தவிர  பெரும்பாலான   வீடுகளில்        பெயிண்ட்  அல்லது   ஸ்டிக்கர்   கோலம்  தான்  நம்மைப்  பார்த்து  சிரிக்கும்.


ஆனால்,  மறைந்த  கோலத்தில்  தான்     எத்தனை  எத்தனை   விஷயங்கள்  அடக்கம். .

மார்கழி   மாதத்தில்   முன்பெல்லாம்    பெரிய பெரிய   கோங்கள்   வீட்டு
வாசலை   அடைத்திருக்கும். 

நீ முந்தி,   நான் முந்தி   ,  உன் கோலம் பெரிதா , என் கோலம்   பெரிதா  என்று விட்டிற்கு   வீடு   ,   அறிவிக்கப்படாத   கோலப்போட்டியே  நடக்கும்.

கோலம் போடும் பெண்களுக்குத் துணையாக அந்தப் பெண்ணின்    கணவரோ,

சகோதரரோ   அந்த அதிகாலை   நேரத்தில்    தலையில்   மப்ருடன்    அவரும்     தூய்மையான    ozone  காற்றை   சுவாசிப்பார்.   

கணவர் ,  மனைவி   கோலம் போடும் அழகையும் ,  கோலத்தின்   அழகையும்   சேர்ந்தே    ரசிக்கலாம்.

புத்துணர்ச்சி  கிடைக்கும்.

கோலத்தைப்   போட்டுவிட்டு   கையில்   கோலப்பொடி   டப்பியுடன்  அப்படி நின்று,   இப்படி நின்று   தான் போட்ட கோலத்தை   பெருமிதத்துடன்   பார்க்கும் போதே   தன்னம்பிக்கை   அவளுக்குள் ஊற்றெடுப்பதை   கண் கூடா  காணலாம்.

கோலம் போடுவதும்   ஒரு யோகப் பயிற்சி   என்று தான் கூறுகிரார்கள் .
சரியான இடைவெளி  விட்டு  , புள்ளி   வைத்து   ,அதை   லாவகமாக   வளைத்து  , வளைத்து,  இழைகள்   இடும்போது    அந்தப்   பெண்மணி   தானும்   அல்லவா  குனிந்து, வளைந்து, கைகளை  நீட்டி   , மடக்கி,  கால்களை  அங்கு மிங்கும்   கோலத்தின்   மேல்  படாமல்   நேர்த்தியாக  நகரும்  போது   பார்த்தால்   ,  நமக்கு ஒரு  யோகா  செண்டர்  நினைவிற்கு    வருவதைத்   தடுக்க  முடியாது.

  
குழந்தை   பிறந்து   காப்பிடும்    வைபவத்தில்    ஆரம்பித்து   நூற்றாண்டு   விழா  வரை    ,வாழ்வின்  ஒவ்வொரு  மகிழ்ச்சியான   விழாக்களை  அமர்க்களமாய்   நாம்   கொண்டாடுவதை,   வெளியுலகிற்கு   அறிவிக்கும்   அறிவிப்புப்  பலகை   என்றே கொள்ளலாம். 


கோவில்  திருவிழாக்களிலோ,  கல்யாண  வீடுகளிலோ   ,   தீபாவளி   பொங்கல்  போன்ற பண்டிகை  நாட்களிலோ   கோலத்தின்   முக்கியத்துவத்தை     சொல்லவே வேண்டியதில்லை.

அரிசி மாவினால்  கோலமிடும் போது   எறும்பிற்கும்   உணவளித்து 
  food pyramid  ஐ    ம்மை    றியாமலே   காப்பாற்ற முனைகிறோம்.  அதை சுற்றி இடும்   செம்மண்,  தீய சக்திகள்   வீட்டிற்குள்   வர விடாமல்   தடுக்கும்   என்று   பெரியவர்கள்    சொல்லக்  கேட்டிருக்கிறேன்.

 கோலத்தைப்   பற்றியெல்லாம்   ஆய்வுகள்   மேற்கொள்ளப்   படுவது   சற்றே நம்  புருவத்தை  உயர்த்துகின்றன.

கோலம் போடும்   பெண்கள்  கணிதப்  பாடத்தில்   சிறந்து  விளங்குவதற்கான  சாத்தியக் கூறுகள்  ஏராளம்  என்கிறார்,.ஒருகணிதப்   பேராசிரியை.

கோலப்பொடியை   வில்களிற்கு  இடையே   எடுத்து இடும் போது  மூளைக்கு
செல்லும்  நரம்புகள்    தூண்ப்படுவதால்   ,மண வளர்ச்சிக்   குன்றிய  குந்தைகளுக்கு   ஒரு தெரபியாகக்  கொடுக்கிறார்கள்   என்று   தகவல்.


நம் கோலத்தின்   அருமை  புரிந்த  அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும்  கூ   இதில்   ஆர்வம்  காட்டுவதாக   பிரெஞ்சு  ஆய்வாளர்   ஒருவர் கூறுகிறார்.
 அதற்காகவே   இந்த ஆய்வாளர்   வருடா வருடம்   மார்கழி   மாதத்தில்   சென்னை  மைலாப்பூர்   வந்து   தங்கி   விடியோவும்   மைலாப்பூர்  மாமிகளை  பேட்டியும் ,   எடுத்து  செல்வதாக  பத்திரிகை   செய்தி  கூறுகிறது.  

இத்தனை  இருந்து என்ன..........

நம்   மாறி  வரும்  வாழ்க்கை   முறை,   அடுக்கு   மாடிக்    கட்டடங்களின்
 ஆக்கிரமிப்பு,     போன்ற  காரணங்களால்   கோலமிடும்   கலை   நம்மிடையே   மெல்ல  மெல்ல    அழிவது   தெரியாமல்   அழிந்து  கொண்டிருக்கிறது

எல்லாமே    காலத்தின்    கோலம்!!!!


image courtesy- google.

27 comments:

  1. //கணவர் , மனைவி கோலம் போடும் அழகையும் , கோலத்தின் அழகையும் சேர்ந்தே ரசிக்கலாம்.

    புத்துணர்ச்சி கிடைக்கும்.//

    ஆஹா, இதைக்கற்பனை செய்து பார்த்தேன். உடனே புத்துணர்ச்சி கிடைத்து விட்டது. கற்பனைக்கே இவ்வளவு சக்தியென்றால் ...... ;)

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      உங்கள் வருகைக்கும் விரைந்து கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி.

      வணக்கத்துடன்,

      ராஜி






      Delete
  2. //கோலத்தைப் போட்டுவிட்டு கையில் கோலப்பொடி டப்பியுடன் அப்படி நின்று, இப்படி நின்று தான் போட்ட கோலத்தை பெருமிதத்துடன் பார்க்கும் போதே தன்னம்பிக்கை அவளுக்குள் ஊற்றெடுப்பதை கண் கூடாக காணலாம்.//

    ஆமாம். இது ஒரு மிகச்சிறந்த கலை தான்.

    அழகிய அந்தத் தான் போட்ட கோலத்தை, பார்க்கும் கோலத்தில், அவளுக்கு எவ்வளவு ஒரு சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும்! ;)))))

    இதையெல்லாம் உணர்ந்தவர்களாலேயே உணர முடியும்.

    >>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அது சிறந்த கலை தான்.
      நீங்கள் ரசித்துப் படித்து மிண்டும் கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

      ராஜி.

      Delete
  3. படத்தில் வரையப்பட்டுள்ள நெளிக்கோலம் நல்ல அழகாக உள்ளது.

    //இத்தனை இருந்து என்ன..........

    நம் மாறி வரும் வாழ்க்கை முறை, அடுக்கு மாடிக் கட்டடங்களின்

    ஆக்கிரமிப்பு, போன்ற காரணங்களால் கோலமிடும் கலை நம்மிடையே மெல்ல மெல்ல அழிவது தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது

    எல்லாமே காலத்தின் கோலம்!!!!//

    அழகாக கோலத்தைப்பற்றி தாங்கள் வரைந்துள்ள இந்தக் கட்டுரைக்கோலம் மிகவும் பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நெளிக்கோலம் google image courtesy.

      உங்கள் மீள் வருகைக்கும். பாராட்டிற்கும் நன்றி சார்.

      வணக்கத்துடன்,

      ராஜி.

      Delete
  4. கோலத்தை பற்றி மிகவும் ஆர்வத்துடன், அந்த கால நினைவுகளுடன் எழுதி இருக்கிறீர்கள் ராஜி.
    கோலம் போடுவதும் யோகப்பயிற்சி போலத்தான் என்ற கருத்து நன்றாக இருக்கிறது.
    கோலம் போடும் பெண்களுக்கு கணக்கு நன்றாக வருமா? ஓ! புள்ளிக்கோலம் போடும் பெண்களுக்கா? சரி சரி, அது நமக்கு வராத கலை. அதனால்தான் கணக்கும் என்னுடன் பிணக்குக் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன்!

    கோலத்தைப் பற்றிய பதிவும் ஒரு அழகான கோலமாகவே அமைந்து விட்டது.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.
      கோலம் போடும் பெண்களுக்கும் கணித வல்லுனர்களுக்கும் ஒரே மாதிரி சிந்தனைத்திறன் இருப்பதாக செய்தித்தாளில் படித்தேன்.

      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.

      ராஜி

      Delete
  5. காலத்தின் கோலம்! - சரியாகச் சொன்னீர்கள்.....

    சிறு வயதில் அம்மா/சகோதரிகள் போடும் கோலத்திற்காக மாவு கையில் வைத்துக் கொண்டு இருந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அடுக்கு மாடி குடியிருப்புகளில் கோலம் எங்கே போடுவது என ஐந்து புள்ளி ஐந்து வரிசை கோலத்தோடு முடிகிறது பலர் வீடுகளில்.... பல வீடுகளில் ஸ்டிக்கர்.... பல வீடுகள் அலங்கோலம்!

    ReplyDelete
    Replies
    1. அந்த நாட்களெல்லாம் திரும்ப வராது .
      இன்னும் சிறிது நாட்கள் கழித்து நம் வீட்டுப் பெண்கள் கோலமா எப்படியிருக்கும் என்று கேட்பார்கள்.

      நன்றி,வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

      Delete
  6. //பெரும்பாலான வீடுகளில் பெயிண்ட் அல்லது ஸ்டிக்கர் கோலம் தான் நம்மைப் பார்த்து சிரிக்கும்//

    உண்மையான வார்த்தைகள்.
    ஆழ்ந்து அனுபவித்து செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை நொடியில் செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் விஷயமாக மாற்றிவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

      ராஜி.

      Delete
  7. கோலம் பற்றிய ஆராய்ச்சிகளும் அழகுதான் ..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

      ராஜி

      Delete
  8. சகோதரி கோலம் பற்றிய பதிவு பார்த்தேன். நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வேதா
      உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      அடுத்தடுத்து உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

      ராஜி

      Delete
  9. கலாச்சாரம் , பண்பாடு என்பதின் பெயரில் சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் பலவற்றை தூக்கிக்கொண்டு செல்கின்றோம். அனால் நமது அடையாளங்களில் சிறந்து விளங்கும் பலவற்றை விட்டு விடுகிறோம், அப்படி நலிந்து நலிந்து வரும் ஒன்றான் கோலங்களை பற்றி அழகான ஒரு பதிவு. ரசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் ,

      உன்னுடைய கருத்துக்கு மிக்க நன்றி .
      வெகு நாட்களாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயம்,பதிவானது.

      ராஜி

      Delete
  10. சின்ன வயசுல நானும் பெரியபெரிய‌ சிக்குக் கோலங்கள் போடுவேன்.நீங்க சொன்னமாதிரிதான் போட்டுமுடித்து சுத்திசுத்தி வந்து நின்னு ரசிப்பேன்.இப்போ 3 புள்ளி அதைவிட்டா 5 புள்ளி அவ்வளவுதான்.அதற்குமேல் போட்டால் வாங்கிவந்த கோலக்கட்டி காலியாகிவிடும் என்ற பயம்தான்.அதுவுமே patio ல் செவ்வாய் & வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே.

    அங்கங்கே கோலப்போட்டிகள் வைத்து ஓரளவு காப்பாற்றப்படுகிறது.

    "ICU விலிருந்து தப்பித்து வந்தவர்கள் போல் காதுகளிளிருந்தும் கைக்கும் ஒயர் ஒயராக ஏதோ தொங்கிக் கொண்டிருக்க"__ஒரே சிரிப்பு.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,

      நன்றி சித்ரா.
      இப்பொழுது சென்னை போன்ற நகரங்களிலே கூட 3 புள்ளி 5 புள்ளி கோலம் தான். அதனால் அங்கு நீங்கள் சின்ன கோலம் போட்டாலும் நாங்கள் அதை வரவேற்போம்.
      உங்கள் பெண்ணிற்கு (பெண் இருக்கிறாள் என்று படித்ததாக நினைவு) அந்த
      கலாசாரத்தை கொண்டு செல்கிறீர்களே அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் .

      நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

      ராஜி

      Delete


  11. //
    கோலத்தைப் போட்டுவிட்டு கையில் கோலப்பொடி டப்பியுடன் அப்படி நின்று, இப்படி நின்று தான் போட்ட கோலத்தை பெருமிதத்துடன் பார்க்கும் போதே தன்னம்பிக்கை அவளுக்குள் ஊற்றெடுப்பதை கண் கூடாக காணலாம்.//

    உண்மைதான்.கோலம் பற்றிய பதிவு அருமை.


    நான் வியாழக்கிழமை ஊருக்கு போய் விட்டு ஞாயிறு தான் வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  12. //வெளியே நடந்து போகும் போதும் , ICU விலிருந்து தப்பித்து வந்தவர்கள் போல் காதுகளிளிருந்தும் கைக்கும் ஒயர் ஒயராக ஏதோ தொங்கிக் கொண்டிருக்க//

    ஹாஹா :) ரசித்தேன், சிரித்தேன் :) கோலம் போட எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! அழகான கலை அழிந்து கொண்டிருப்பது கவலையைத் தருகிறது... :(

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிநயா,
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து வாருங்கள்.
      உங்கள் வலைப்பூவை இல்லையில்லை வலைப்பூக்கள் பார்த்தேன்.
      அங்கு வந்து கருத்திடுகிறேன்.

      Delete
  13. கோலம் பற்றிய பதிவு மிகவும் அருமை சகோதரி.

    "கோலம் போடும் பெண்கள் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம் "

    உண்மை தான் சகோதரி.

    என் தாய் ஒய்வு பெற்ற முதுநிலை கணித ஆசிரியை.எவ்வளவு பெரிய நெளிவுக் கோலமாயினும் எந்தவிதக் குழப்பமுமில்லாமல் அழகாய் போட்டு முடிப்பார்கள்.ஏனோ, எனக்கு நெளிவுக் கோலத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை.கோட்டுக் கோலமும் ரங்கோலியுமே எளிதாகத் தோன்றுகிறது.ஆனால் U.S வந்தபின், கோலம் போடுவதே வெகுவாகக் குறைந்து விட்டது.

    அருமையானதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அருமையான பாராட்டிற்கு நன்றி தமிழ்முகில்.

      Delete
  14. padithathil pidithathu
    கோலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்


    அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
    நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது.

    கோலம் போடுவதற்கான சில வழிமுறைகள்:

    * சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

    * தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.


    * கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியின் செம்மை சிவனையும் குறிக்கிறது.

    * கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

    * பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.



    * விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.



    * ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை (அ) சூரிய கோலம் நல்லது. திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும். வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது. சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


    * வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

    * கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    * இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.

    * இடது கையால் கோலம் போடக்கூடாது. ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

    * பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

    * கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

    * கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்