Wednesday, 30 January 2013

மறந்து போச்சே!!















TV  பார்த்துக்  கொண்டிருந்த நான்   அவசரமாக   சமையலறை  சென்றேன்.

அங்கு போன பின்   அப்படியே  சிலையாக    நின்றேன். கேஸ்  ஸ்டவையே  பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருசிலவினாடிகள். ஆனால்   எதற்கு  சமையலறை வந்தேன். சுத்தமாக    மறந்து போனேன்.

வந்ததற்கு  தண்ணீராவது   குடிப்போம்  என்று  குடித்து விட்டு மீண்டும்   ஹாலிற்கு   சென்றேன்.

என்   கணவர்   "என்ன  ஆச்சு  ?"  என்று  கேட்க

வடிவேலு    பாணியில்   "என்ன  ,....      என்ன  ஆச்சு"  என்று திருப்பிக்   கேட்டேன்.

"காபி   கேட்டேனே...........   என்ன ஆச்சு   ?"  என்று   அழுத்தம்   திருத்தமாக   அவர் திருப்பிக்   கேட்ட பின்  தான்   புரிந்தது.   நான்  என்ன மறந்தேன்   என்று.

சில சமயங்களில்   பிரபல   சினிமா நடிகர்  நடிகையர்   பெயர்  சட்டென்று  
மறந்து  போகிறது.

எதாவது    முக்கியமான    டாகுமென்ட்ஸ்   எதையாவது    உள்ளேயிருந்து  எடுத்துக்  கொடு  என்று    என்னிடம்  கேட்டால்  வீட்டையே  தலைகிழாக  கவிழ்த்துப்   போட்டு   அதிலிருந்து  தேடி  கொடுக்கிறேனாம்.  இதை சொல்வது என் கணவர்.

அதனால் இப்பொழுது எல்லாம்  நான்   search time என்று  ஒரு நாள் வாங்கிக்  கொள்கிறேன்.

சரி    இது   எதனால்    இப்படி  மறக்கிறேன்?  ஒரு வேளை    இது dementia,  Alzheimer's disease   ஏதாவதாக   இருக்குமோ,   என்னவோ   என்று  கலங்கிப்  போனேன்.(இதற்குத்  தான்  எதையும்   அரை குறையாகத்  தெரிந்து  வைத்துக் கொள்ளக்  கூடாது  என்கிறது)

ஆரம்பித்திலேயே   சிகிச்சை   ஆரம்பித்துவிடலாம்,(சிகிச்சை  செய்யும் அளவிற்கு   வியாதி முற்றிவிட்டது )    என்றெண்ணிக்  கொண்டு  எங்கள்   குடும்ப  மருத்துவரை   அனுகினேன்.    அவரிடம்  என் பயத்தை   எடுத்துக்   கூறினேன்.

'எப்படி உனக்கு இந்த வியாதிகள்   பற்றித்தெரியும் ?' என்று  கேட்க  பெருமையாக  சொன்னேன்   சென்ற மாதம்  படித்த   ஒரு   ஆங்கில  வாரப்  பத்திரிக்கையின்  பெயரை.

'அப்புறம்  என்ன கவலை உனக்கு?    நீதான்   போன    மாதம்  படித்ததை   அழகாக பேர்  மறக்காமல்    சொல்கிறாயே   ?  நீயாக   கற்பனை  செய்யாதே  எதையும் ?
சினிமா நடிக நடிகையர்   பெயர் மறந்தால் என்ன ? ஒன்றும்  கெட்டு   விட வில்லை '. ,  என்று திட்டி விட்டு   வாங்கிய    பீஸிற்கு     வைட்டமின்  மாத்திரை  எழுதி  கொடுத்து விட்டு   ,ஒரு  துண்டு அறிக்கை  ஒன்றும்  கொடுத்தார்.

 வயதாவதால்  ஏற்படும் சாதாரண   மறதிக்கும்,  பெரிய  மறதி  வியாதிக்கும்   இருக்கும்  மிகப்  பெரிய  வித்தியாசங்களை  அது   எடுத்துக்  கூறியது.

வயதானால்   மறதி    ஏற்படுவது  உண்டு.
எல்லா மறதிகளும்  Alzheimer's disease   என்று பயப்பட வேண்டாம்  என்று   கூறியது  அறிக்கை.

சாதாரண  மறதியினால்   ஏற்படும்   தொல்லைகளோ   ஏராளம்.

மறதிக்கு   ஏதாவது    தீர்வு  இருக்கிறதா  என்று  அந்த அறிக்கையில்   தேடினேன்.

கிடைத்தது.

உடற்பயிற்சி  உடல் நலத்திற்கு மட்டுமல்ல  மன  நலத்திற்கும்  நல்லது  .
டையாபிடிஸ் ,இதய நோய்  ,மன அழுத்தம்   மட்டுமல்ல  இவற்றோடு  
இலவச  இணைப்பாக   வரும் மறதியையும் , உடற் பயிற்சி   கட்டுப்படுத்தும் என்கிறது.
 
வயதானவர்களுக்கு   உடற் பயிற்சியா?  என்று நினைப்பது  புரிகிறது.
நடை   பயிற்சியும்    உடற்  பயிற்சியே !
இதை    நான்   சொல்லவில்லை.     நடை  பயிற்சி,   மறதி  நோய்  வராமல்   தடுக்கிறது  என்று அமெரிக்காவின்  ஆராய்ச்சி  ஒன்று சான்றுகளுடன்  விளக்குகிறது..

நண்பர்கள்   உறவினர்கள்   சூழ  இருப்பதும்,   மறதி வராமல்   தடுக்கும்..

வலை  பதிவாளர்கள்   எல்லோரும்   மறதி  நோயை  சுலபமாக  விரட்டி  அடித்து    விடலாம்  போலிருக்கிறது.

பச்சை  காய்கறிகள்,  பழங்கள் ,   நிம்மதியான   நல்ல  தூக்கம், படிப்பது ,   sudoku   போடுவது   ,  செஸ்   விளையாடுவது  ,  எழுதுவது   எல்லாமே  மறதி   வருமுன் ,   காக்கும்.

இதைப்  போல்  நிறைய  சொல்கிறது   அந்த அறிக்கை

சரிஇதெல்லாம் கிடக்கட்டும்.  என்   கணவர்  திருமண   நாளை    மறந்து  விடுகிறாரே  .   .என்ன செய்வது ?    யோசித்தேன்.................

 ஹாலில்  தொங்கும்      காலண்டரில்   தேதியைக்    நல்ல  கலர்  மார்க்கரால்  கலர்  செய்து,,   அவரிடமும்  சொன்னேன்.
  
 ஊஹூம்  ............ அப்படி   செய்தும்......திருமண  நாளன்று   அவர்   என்ன  சொன்னார்    தெரியுமா ,  காலண்டரைப்   பார்த்துக்கொண்டே ,  ".ஓ...மறந்து   போச்சே ".




படித்தீர்களா   paatti  stories   ?  . படித்து   நிறை  ,குறை   எழுதுங்களேன்.

image courtesy--google.


34 comments:

  1. :) நல்லாவே மறந்திருக்கீங்க போங்க! :)

    இந்தக் காலத்தில் புத்தகங்களும், இணையமும் வந்து தேவையில்லாத, அளவுக்கு மீறிய தகவல்களை அள்ளித் தந்து நம்மைக் குழப்புவதென்னவோ வாஸ்தவம்!

    /காலண்டரைப் பார்த்துக்கொண்டே , ".ஓ...மறந்து போச்சே "./ அச்சச்சோ! அடுத்த வருஷம் மறக்கவிடாதீங்க, ஒரு வாரம் முன்பிருந்தே நினைவுபடுத்துங்க. ;)

    ReplyDelete
    Replies
    1. மஹி,

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
      அடுத்த வருடம் உங்கள் ஐடியா தான்.

      ராஜி

      Delete
  2. முக்கியமானதை மறந்து விட்டாரே... அடுத்த முறை மறக்க முடியாதபடி, ஒரு செட் பட்டு வேஷ்டி + சட்டை எடுத்துக் கொடுத்து பாருங்கள்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தனபாலன் சார்.
      உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.
      அடுத்த முறை நீங்கள் சொல்லிய படியும் செய்து பார்க்கிறேன்.

      ராஜி

      Delete
  3. வலை பதிவாளர்கள் எல்லோரும் மறதி நோயை சுலபமாக விரட்டி அடித்து விடலாம் போலிருக்கிறது.

    மறதியாவது ..!

    மலரும் நினைவுகளில்
    மூழ்க்கித் திளைக்கமுடிகிறதே ..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இராஜராஜெஸ்வரி,

      நீங்கள் சொல்வது சரியே!
      நமக்கு ஏது மறதி.
      நமக்கு மலும் நினைவுகள் தானே
      பதிவு.

      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      ராஜி

      Delete
  4. நல்லாம் நகைச்சுவையாகத்தான் ’மறக்காமல்’ எழுதியிருக்கீங்க. இருப்பினும் சிலவற்றை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

    >>>>> தொடரும் .>>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      உங்கள் வருகைக்கு கருத்துக்கு

      ராஜி

      Delete
  5. அருமையாகச் சொன்னீர்கள்
    எனக்கும் இதுபோன்ற சிறிய மறதிகள்
    நேர்கையில் கொஞ்சம் தெரிந்துவைத்திருப்பவை
    அதிகம் பயமுறுத்தும்
    இப்போது தங்கள் பதிவு தெளிவளித்தது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார்,

      திருப்தியாக இருக்கிறது நான் மட்டும் பயப்படவில்லை.
      என்னை போல் நிறைய பேர் உண்டோ?
      அப்பா.....பயம் விட்டது.

      நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.
      ராஜி

      Delete
  6. //வயதானவர்களுக்கு உடற் பயிற்சியா? என்று நினைப்பது புரிகிறது. நடை பயிற்சியும் உடற் பயிற்சியே ! நடை பயிற்சி, மறதி நோய் வராமல் தடுக்கிறது //

    வயதானவங்க நடக்கணுமா? நடக்கற காரியமா இது ?


    மேலு விபரங்களுக்கு இதோ இங்கே இருக்கிறது இணைப்பு:.

    http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html

    எங்கெங்கும் எப்போதும் என்னோடு பகுதி 1/ 3

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மீண்டும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சார்.

      உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

      ராஜி

      Delete
    2. உங்கள் பதிவைப் படித்துவிட்டு கருத்தும் தெரிவித்து விட்டேன்.

      ஒரு சின்ன கோரிக்கை.
      உங்களுடைய பதிவுகளை கொஞ்சம் reblog செய்யுங்களேன்.
      படிக்கிறோம்.

      ராஜி

      Delete
  7. //நண்பர்கள் உறவினர்கள் சூழ இருப்பதும், மறதி வராமல் தடுக்கும்..//

    நிச்சயமாக இல்லை. எல்லாவற்றையுமே மறந்து போக வாய்ப்பாகத்தான் இது அமையும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது வேண்டாத நினைவுகள் தானே.
      அதற்குத்தானே சார் நண்பர்களும் சுற்றமும்.

      ராஜி

      Delete
  8. //சரிஇதெல்லாம் கிடக்கட்டும். என் கணவர் திருமண நாளை மறந்து விடுகிறாரே . .என்ன செய்வது ? யோசித்தேன்.................

    ஹாலில் தொங்கும் காலண்டரில் தேதியைக் நல்ல கலர் மார்க்கரால் கலர் செய்து,, அவரிடமும் சொன்னேன்.

    ஊஹூம் ............ அப்படி செய்தும்......திருமண நாளன்று அவர் என்ன சொன்னார் தெரியுமா , காலண்டரைப் பார்த்துக்கொண்டே , ".ஓ...மறந்து போச்சே ".//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

    அவரை ‘ம ற க் கா ம ல்’ இந்த லிங்க்குக்குப்போய் அவரைப்போன்றே ஒருவரை சந்தித்து, எப்படி எதையுமெ மறக்காமல் இருப்பது என்பதைத் தெரிந்து கொள்ளச் சொல்லுங்கோ:

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html

    முன்னெச்சரிக்கை முகுந்தன்

    ooooOoooo

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      உங்கள் மீள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி சார்.

      அவரைக் கண்டிப்பாகப் படிக்க சொல்கிறேன்.

      நன்றி,
      வணக்கத்துடன்,

      ராஜி

      Delete
  9. உண்மைதான் மறதியை கூட நான் மறந்து போயிடுறேன் போங்க
    அப்பறம் உங்களுக்கு தெரியாதா ? தானம் கொடுத்தபின் அதை மறந்திடனுமாம்

    ReplyDelete
    Replies
    1. ஓ..... இப்படி ஒன்று இருக்கிறதோ?
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      ராஜி

      Delete
  10. மறதியைப்பற்றி ஒன்னுவிடாம மறக்காம எழுதிட்டிங்க.பதிவு முழுவதுமே ரசிக்கும்படி நகைச்சுவையுடன் எழுதியிருக்கிங்க.நானும் ஞாபகம் வைத்து, மறக்காம பின்னூட்டம் எழுதிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டிற்கும் நன்றி.

      ராஜி

      Delete
  11. வலை பதிவாளர்கள் எல்லோரும் மறதி நோயை சுலபமாக விரட்டி அடித்து விடலாம் போலிருக்கிறது.

    பச்சை காய்கறிகள், பழங்கள் , நிம்மதியான நல்ல தூக்கம், படிப்பது , sudoku போடுவது , செஸ் விளையாடுவது , எழுதுவது எல்லாமே மறதி வருமுன் , காக்கும்//

    உண்மைதான் நீங்கள் சொல்வது.

    எதற்கு சமையலறை வந்தேன். சுத்தமாக மறந்து போனேன்.//
    எனக்கும் அடிக்கடி இப்படி மறதி வருவது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஓ......
      என்னைப் போல் நீங்களும் சட்டென்று எதையாவது மறந்து விடுகிறீர்களா?
      நாம் நிறைய எதைப் பற்றியாவது யோசிப்பது தான் என்று நினைக்கிறேன்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி.

      ராஜி

      Delete
  12. Ha! Ha! That's very interesting. Why all husbands, including me, tend to forget more particularly their wives' birthdays? It's not due to Alzheimer's decease, but, we men, always take our life partners for granted.

    ReplyDelete
    Replies
    1. sir,

      Let me thankyou on behalf of my husband for giving an explanation for his act.(just for fun)

      Thankyou for visiting my blog and commenting on that.

      Raji

      Delete
  13. ராஜி....................!!!!!!!!!!!
    இன்று காலை எப்படி எங்க வீட்டுக்கு வந்து நடந்ததைப் பார்த்தீங்க?
    நீங்கள் சொல்லியதைபோலவே நானும் நேராக சமையலறைக்குச் சென்று விட்டேன். திரு திரு தான்!பேசாமல் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.
    திரும்பவும் வெளியே வந்தவுடன் தான் எதற்கு போனேன் என்று நினைவுக்கு வந்தது. திரும்பவும் போய்.........

    எங்கள் வீட்டில் யார் என்ன மறந்தாலும் என்னைத்தான் கேட்பார்கள். இப்போதெல்லாம் எனக்கும் இந்த மறதி வந்துவிட்டது.எல்லோருடையதையும் நினைவு வைத்துக்கொண்டு என்னுடையதை மறந்து போகிறேனோ?

    நல்ல பதிவு! நினைவாக இப்போதே போட்டுவிட்டீர்கள் மறப்பதற்கு முன்!





    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நீங்கள் சொல்வது போல் நானும் உங்களைப் போல் இருந்தவள் தான்.
      அப்படி இருந்த நான் தான் இப்படி ஆகிவிட்டேன்.
      என்ன இப்பொழுதெல்லாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உஷாராக இருக்கிறேன்.

      வயதாகி கொண்டு இருக்கிறாய் என்று mind voice சொன்னது.
      ஒத்துக் கொள்ள வேண்டியது தான்.

      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ரஞ்சனி.

      ராஜி

      Delete
  14. மறதி... :)

    ஒரு ஆங்கில quotation உங்களுக்காகவே -

    " As you get older three things happen. The first is your memory goes, and I can't remember the other two... "
    Sir Norman Wisdom

    ReplyDelete
    Replies
    1. அருமையாக இருக்கிறது நீங்கள் எழுதியிருக்கும் quotation.
      புதிய quotation ஒன்று கற்றுக் கொண்டேன் உங்களால்.

      நன்றி உங்கள் கருத்துக்கு.

      ராஜி

      Delete
  15. மறந்துடுச்சு மறந்துடுச்சுனு சொல்லுறவங்க சாப்பிட மறப்பதில்லை தூங்க மறப்பதில்லை சம்பளம் வாங்க மறப்பதில்லை. இன்னும் நிறைய இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

    ReplyDelete
  16. நீங்க என்ன வேணுமானாலும் மறந்து போனாலும் பரவாயில்லை ஆனா என் வலைப்பக்கத்திற்கு மட்டும் மறக்காமல் வந்துவிடுங்க சரிதானே நான் சொல்லுவது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீங்கள் சொல்வதைப் போல் சில விஷயங்களை யாருமே மறப்பதேயில்லை தான்.

      கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு மறக்காமல் வந்து விடுகிறேன்.மிக சுவாரஸ்யமாக எழுதும் உங்கள் பதிவை மிஸ் பண்ண முடியுமா?
      சரிதானே!

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      ராஜி

      Delete

  17. நான் என் பிள்ளைகளுக்குச் சொல்வதைச் சொல்கிறேன். எந்த விஷயத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அவை மறந்து விடும். அது இளைஞர்களுக்கு. முதியவர்களுக்கு. மறதி ஏற்படுவது சகஜம். பெயர் மறந்து போவது மிகவும் சகஜம். ஆனால் அது சில சமயங்களில் பாதிப்பு ஏற்படுத்தும். ஒரு முறை என் நண்பர் ஒருவருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர் போகும் போது அவர் பெயரைக் கேட்டேன். ஒரு முறை முறைத்தாரே பார்க்கலாம். மறதி யினால் ஏற்படும் சில சங்கடங்களைத் தவிர்க்க ஒரு வழி எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதுதான். எனக்கு பழைய விஷயங்கள் அண்மையில் நடந்ததுபோல் நினைவுக்கு வருகிறது.! (வலையில் எழுத் ஆரம்பித்த பிறகு.)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.
      நீங்கள் சொல்வது சரிதான். சில சமயங்களில் பெயர்கள் சட் என்று மறந்து விடுகிறது.
      அந்த அனுபவம் தான் இந்தப் பதிவு.

      மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்