புது வருட கொண்டாட்டங்களும் முடிந்தன . வாழ்த்துக்களும் பரிமாறி ஆகிவிட்டது.கோவிலுக்கு சென்று, இறைவனிடம் இந்த வருடத்தில் எனக்காக அவர் செய்ய வேண்டியவைப் பற்றிய லிஸ்டை சமர்பித்தாகிவிட்டது.
சற்றே 2012ஐ. திரும்பி பார்த்தேன் .ஓரிரு விஷயங்கள், என் நினைவுக்கு வந்தது.
சமீபத்திய சம்பவங்கள் .
அன்று வங்கி வேலை இருந்தது. நேரம் ஆகும்.தெரியும்.
அதனால் .முருங்கைக்காய் சாம்பார், கீரைக் கூட்டு ,சாலட் , ரசம் என்று எல்லாவற்றையும் முன்னேற்பாடாக சமைத்து டேபிளில் வைத்து விட்டு தான் போயிருந்தேன்.எல்லோரும் சாப்பிட்டாக வேண்டுமே.
வங்கி உள்ளே நுழைந்தேன் . பெரிய ' Q 'காஷியர் முன்பு. வரிசையின் நீளம் என்னை பயமுறுத்தியது.
ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. வரிசையும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
முதியவர் சிலரும் வரிசையில் காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.
அப்பொழுது புயல் போல் மூன்றுபேர் உள்ளே நுழைந்தனர்.அரசியல்வாதிகள்
போல் தெரிந்தனர்.எங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல்,நாங்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்றெண்ணி , எங்களை தாண்டிசென்று பணத்தை கட்டி விட்டுசென்றனர்.,
வரிசையில் நின்றிருந்த நாங்கள் மெதுவாக' உச்சு'க் கொட்டினோம் . அதுவும் மெதுவாகத் தான், அவர்கள் காதில் விழாத மாதிரி.
எங்களில் யாருக்காவது ஒருத்தருக்கு...
கோபம் வந்திருக்க வேண்டுமே. ம்ஹூம் வரவேயில்லையே!
அதற்குத் தான் பாரதி அன்றே ரௌத்திரம் பழகி விடு என்றானோ?
இன்னும் இப்படி யாராவது வந்தால் கூட இப்படி தான் வழி விட்டு நின்றிருந்திருப்போம். என்னைப் போல் எல்லோரும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு தான் வந்திருப்பார்களோ?
இதற்கு நாம் கொடுத்திருக்கும் பெயர்" பொறுமை."
இது எப்படி???
மற்றொரு நாள் ஒரு துணிக்கடைக்கு சென்றிருந்தேன்.
என்னருகில் ஒரு பணக்காரப் பெண்மணி(ப.பெ).தோற்றம் அப்படித்தான் சொன்னது.கையில் கனமான விலையுர்ந்த கைப்பை .
கடையின் உள்ளாடைகள் விற்கும் பகுதி அது.
ஏதோ அந்த விற்பனைப் பெண்ணிடம் ப .பெ கேட்டுக் கொண்டே இருந்தார் .
விற்பனைப் பெண் கொஞ்சம் கண் அசந்த நேரத்தில்அந்தப் ப.பெ. இரண்டு உள்ளாடைகளை தன்னுடைய கைப்பையிற்குள் திருட்டுத்தனமாக திணித்துக் கொண்டிருந்தார்.
நான் பார்த்தேன் .
எனக்கு, கை கால்' வெட வெட ' என்று நடுங்கியது.முதல் முறையாக shoplifting ஐ கண் கூடாக ப் பார்க்கிறேன் .
cctv ல் தெரிந்திருக்கும். கண்டிப்பாக இப்பொழுது கடை பரபரப்பாகி விடும். மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்த்தேன்.
ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. பில் கட்டும் இடத்தில் பார்த்தேன். எதற்கும் நாம் தள்ளியே நிற்போம் . (சினிமாவில் வருவது போல் நம் பைக்குள் சட்டென்று போட்டு விடுவாரோ .)என்ற பயம் தான்.
ஏனென்றால் இப்பொழுதாவது கையும் களவுமாக பிடிப்பார்கள் என்று நம்பினேன்.அதெல்லாம் ஒன்றுமேயில்லை.
எதுவுமே நடக்காதது போல் ப.பெ. காரில் ஏறிப்போவதைப் பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தேன் .
சரி, நானாவது சொல்லியிருக்கலாம்.
இல்லை என்னைப் போல் பார்த்தவர்கள் யாராவது .............
கண்டிப்பாக வேறு யாரும் இருக்கத்தான் இருப்பார்கள்.
எங்களுக்கென்ன என்று வந்து விட்டோம் என்பது தான் உண்மை.
வெளியே வந்து யோசித்தேன் .
இங்கும் யாரும் ரௌத்திரம் பழகவில்லை.
பாரதியைப் படித்து வைத்தோம்.
ஆனால் ரௌத்திரத்தை வீட்டினருடன்(பெரும் பாலும் வாழ்க்கைத்துனையுடன்) தான் பழகுவோம் போலிருக்கிறது..
வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருக்கும் என் சுபாவத்தை இந்த வருடமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
2013 ல் அது நடக்கிறதா பார்ப்போம். நூற்றாண்டே ' டீன்ஸ் ' ல் (teenage) அந்த வயதிற்கே உரிய எனர்ஜியுடன் இருக்கப்போகிறது.
அதனால் தவறு செய்பவர்கள் நிச்சயமாகக் குறைந்து விடுவார்கள்
நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது என்று பரிபூரணமாக நம்புகிறேன்.!!!!
courtesy google images
அருமை மிகவும் அருமையாக மனம் திறந்து அழகாகவே எழுதியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
வைகோ சார்,
Deleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .
ராஜி
//இங்கும் யாரும் ரௌத்திரம் பழகவில்லை.
ReplyDeleteபாரதியைப் படித்து வைத்தோம். ஆனால் ரௌத்திரத்தை வீட்டினருடன்(பெரும் பாலும் வாழ்க்கைத்துனையுடன்) தான் பழகுவோம் போலிருக்கிறது..//
அதே அதே ! வாழ்க்கைத்துணையுடன் மட்டுமே தான் பெரும் பாலான பெண்கள் காட்டுகிறார்கள். ஒரு சில ஆண்களும் கூடவே அப்பைத்தான்.
>>>>>>
வைகோ சார்,
Deleteஉங்கள் மீள் வருகைக்கு நன்றி முதலில்.
வெளியாட்களிடம் ரௌத்திரம் பழகினால் விளைவுகள்
பயங்கரமாயிருக்கும் அல்லவா?
அதனால் தான்.
ராஜி
//வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருக்கும் என் சுபாவத்தை இந்த வருடமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.//
ReplyDeleteநினைத்துக் கொண்டிருப்பதற்கே என் வாழ்த்துகள்.
>>>>>
நினைப்பதோடு நிறுத்திவிட மாட்டேன் .
Deleteகண்டிப்பாக சமயம் வரும்போது செயல்படுத்துவது என்ற தீர்மானத்தில் உள்ளேன்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
ராஜி
//நூற்றாண்டே ' டீன்ஸ் ' ல் (teenage) அந்த வயதிற்கே உரிய எனர்ஜியுடன் இருக்கப்போகிறது.
ReplyDeleteஅதனால் தவறு செய்பவர்கள் நிச்சயமாகக் குறைந்து விடுவார்கள்
நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது என்று பரிபூரணமாக நம்புகிறேன்.!!!!//
இந்த அசைக்க முடியாத உங்கள் நம்பிக்கைக்கும் என் வாழ்த்துகள்.
>>>>>>
வைகோ சார்,
Deleteநம்பிக்கை தானே வாழ்க்கை .
நல்லதே நடக்கும் என நம்புவோம் .
வாழ்த்துக்களுக்கு நன்றி.
ராஜி
If I'm right I could call 'rowthiram' as righteous anger. You're right. We're helplessly watching baddies resorting to their dirty acts in all corners of life. While we have an urge to expose them, we're bound by the things that are going to happen to us as a result of our bringing to book the bad things and baddies. You're not alone in such a mold of thinking, there are thousands out there turning their heads in other way when they witness unpalatable things happening in front of their eyes.Thanks for calling a spade a spade.
ReplyDeleteyes you are right.
DeleteIt is righteous anger.
We are all victims at one time or the other and none of us raise our voices as protests, though we have a fiery instinct to expose them.
thankyou for posting your valuable comments here.
raji
மிகவும் யதார்த்தமான ஒருசில அன்றாட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, அழகானதோர் பதிவு தந்துள்ளீற்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
வைகோ சார்,
Deleteமிக்க நன்றி சார்,நீங்கள் மீண்டும் மீண்டும் வந்து பின்னுட்டங்கள் அளிப்பதற்கு.
இந்தப் பின்னூட்டங்கள் தான் மிகப் பெரிய டானிக் .
டானிக்கிற்கு, பாராட்டுக்கு, வாழ்த்துக்கு,நன்றி
ராஜி
I call 'rowdiram' as righteous anger. In the scheme of things we are in today, no one likes to have 'rowthiram'. We have an urge to bring to book all the unpalatable things that we are witnessing right before our eyes, but the consequence we will have as a result of our exposure of baddies and bad things bind our hands. You're not alone being silent spectators to such wrong things happening around, almost all people are like that- 'rowthiram' has been buried along with Bharathi. Nice read. Thanks for calling a spade a spade.
ReplyDeletesir,
DeleteRowthiram is not put to rest.
I feel Rowthiram is just relaxing.Let us not worry.When it comes out it will come out in huge numbers and with a 'big bang'.
Thankyou for commenting the second time.
raji
ReplyDelete2013 ல் அது நடக்கிறதா பார்ப்போம். நூற்றாண்டே ' டீன்ஸ் ' ல் (teenage) அந்த வயதிற்கே உரிய எனர்ஜியுடன் இருக்கப்போகிறது.
அதனால் தவறு செய்பவர்கள் நிச்சயமாகக் குறைந்து விடுவார்கள்
நம்பிக்கையூட்டும் வரிகள் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்.சொல்லிச் சென்ற விதம்
நிகழ்வினை கண்முன் காட்சியாய் விவரித்துப் போனது
தொடர வாழ்த்துக்கள்
ரமணி சார் ,
Deleteஉங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.
பின்னூட்டத்திற்கும் நன்றி .
ராஜி
அருமையாக எழுதியுள்ளீர்கள் .... நானும் கடைபிடிக்க முயல்கிறேன்.
ReplyDeleteஅனு,
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
ராஜி
பாரதியைப் படித்து வைத்தோம்.
ReplyDeleteஆனால் ரௌத்திரத்தை வீட்டினருடன்(பெரும் பாலும் வாழ்க்கைத்துனையுடன்) தான் பழகுவோம் ,,,
நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது என்று பரிபூரணமாக நம்புகிறேன்.!!!!
மாற்றிக்கொண்டு ரௌத்திரம் பழகினால் மாட்டிக்கொளள் நேரிடும் ...
நீங்கள் சொல்வது உண்மை தான்.
Deleteஅந்த பயம் எனக்கும் உண்டு.
ராஜி
//மாற்றிக்கொண்டு ரௌத்திரம் பழகினால்
Deleteமாட்டிக்கொளள் நேரிடும் ...//
இந்த இவர்களின் சொற்றொடர் வெகு அழகாக உள்ளது.
நான் மிகவும் ரஸித்தேன். ;)))))
தொடர்ந்து வருகை புரிவதற்கு நன்றி.
Deleteராஜி
2013 ல் அது நடக்கிறதா பார்ப்போம். நூற்றாண்டே ' டீன்ஸ் ' ல் (teenage) அந்த வயதிற்கே உரிய எனர்ஜியுடன் இருக்கப்போகிறது.
ReplyDeleteஅதனால் தவறு செய்பவர்கள் நிச்சயமாகக் குறைந்து விடுவார்கள் //
நம்புவோம்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
rajalakshmi paramasivam3 January 2013 22:31
Deleteவாருங்கள் கோமதி ,
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
நம்பிக்கை தானே வாழ்க்கை .
ஆமாம் உண்மை தானே.
அப்படியே நம்புவோம் .
அன்புடன்,
ராஜி
ராஜி,
ReplyDeleteதினசரி நடக்கும் நிகழ்ச்சிகளை ரௌத்திரத்துடன் வந்து கொட்டியிருப்பது புரிகிறது.ரௌத்திரத்துடன் டீனேஜை(2013)இணைத்திருப்பது நல்லாருக்கு! தொடருங்கள்!
சுவாமி தரிசனத்தையே வசதியானவங்க,இல்லாதவங்க என மாற்றிவிட்டோமே.முண்டியடித்து செல்பவர்களைவிட இதுதான் கடுப்பாகும்.
சித்ரா,
Deleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே .
சுவாமி தரிசனத்தில் இதை இன்னும் அதிகமாக காணலாம்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
ராஜி
அநியாயம் நடக்கும்போது பேசாமல் அப்புறம் மனது அரித்துக் கொண்டே இருக்கும். அவஸ்தைதான்!
ReplyDeleteசிலசமயம் நாம் பேசுவது தப்பாகிவிடுமோ பிறகு வருத்தப் பட நேருமோ என்ற பயம் தான் காரணம்.
எல்லோருமே மாறவேண்டும் இந்தப் புதிய வருடத்தில்!
பாராட்டுக்கள் ராஜி!
ஆமாம் நிறைய இடங்களில் நான் கேட்டு விடுவேன். சில சமயங்களில் கொஞ்சம் பயமாக இருக்கும்.
Deleteஆனால் அன்று பூராவும் அதையே மனம் சுற்றிக் கொண்டிருக்கும்.
அப்படி இருந்த போது தான் வந்தது இந்த பதிவு.
ராஜி.