காலை காபியுடன் பேப்பர் ஐ படித்து முடித்து விட்டு லேப்டாப் ஐ திறந்தேன்.
முதல் பின்னூட்டமாய் திரு. ரூபன் அவர்களிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் நான் வலை சரத்தில் அறிமுகமாயிருப்பதை பறைசாற்றியது.
அவரைத் தொடர்ந்து பல நண்பர்களின் வாழ்த்து பறந்து வந்தது.
எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது. நம் எழுத்துக்கு கிடைக்கும் அங்கீகாரம் தானே நமக்கு மிகப் பெரிய பரிசு.
இன்றைய நாளைக் கொண்டாடிட வேண்டியது தான். எப்படி கொண்டாடுவது என்று யோசித்த போது சரி என்னைப் பற்றி நானே
முரசடித்துக் கொள்ளவேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.
பல பேர் பல முறை அறிமுகமாகியிருக்கலாம்..
ஆனால் எனக்கு முதன் முறை அறிமுகம் கிடைத்திருக்கிறது.
என்னாலும் எழுத முடியும் என்பது எனக்கே நிரூபணம் ஆனது.
நீண்ட நெடு நாட்களாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குடும்ப பொறுப்புகள் எழுத எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை.. யோசித்து எழுதுவதற்கு மனமும் அத்தனை சுதந்திரமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்
கடமைகள் சரியாக நிறைவேறியது. சரி, எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தேன்.
நான் செய்ய நினைக்கும் எந்த காரியத்திற்கும் மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்கும் என் கணவரே இந்த முயற்சிக்கும் ஒரு பெரிய கிரியாஊக்கி(catalyst).
என்னுடைய எழுத்துக்களை மதித்து, படித்து , பின்னூட்டங்கள் இட்டு வரும் அனைத்து வலைப்பதிவு நண்பர்கள் கொடுக்கும் ஊக்கங்கள் தான் அடுத்தப் பதிவு, அடுத்தது என்ன ,எதைப் பற்றி .....என்று என்னை அடுத்தடுத்து யோசிக்கத் தூண்டும்..தூண்டுகோல்கள்.நன்றி.
வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்திய மனோ சாமிநாதன் அவர்களுக்கும் , வலைப்பதிவாளர்களை தன் தளத்தில் ஊக்கு விக்கும்
சகோதரர் சீனா அவர்களுக்கும். நன்றி.
image courtesy--google.

இனிய வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
Deleteஅன்புடன்,
ராஜி.
வலைச்சரத்தில் முதல் அறிமுகத்திற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகிரியாஊக்கி(catalyst)கிடைத்துள்ளது மிகவும் அதிர்ஷ்டமே. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கவும்.
அன்புடன்
கோபு
வைகோ சார்,
Deleteஉங்களுடைய மெயில்களைப் படித்தேன். பிறகு உங்களைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்கிறேன்.இத்தனை ஊக்கம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.
என் கணவரும் உங்கள் வாழ்த்துக்களைத் தெரிந்து கொண்டார்.
நன்றி
வணக்கத்துடன்,
ராஜி.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் செய்ய நினைக்கும் எந்த காரியத்திற்கும் மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்கும் என் கணவரே இந்த முயற்சிக்கும் ஒரு பெரிய கிரியாஊக்கி(catalyst).//
உங்கள் கணவ்ருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றாக செய்யுங்கள் பின் தொடருகிறோம்.
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.வலைசரத்தில் அறிமுகம் மட்டுமே ஆகியிருக்கிறேன்.
Deleteஅதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறேன்.
நன்றி.
ராஜி
வ்லைச்சரத்தில் முதல் அறிமுகம். வாழ்த்துகள்... மேலும் பல பதிவுகள் எழுதி இன்னும் பிரபலமான பதிவராகவும் தான்....
ReplyDeleteநன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு
Deleteநட்புடன்,
ராஜி
வாழ்த்துகள் ராஜி!
ReplyDeleteதிருமதி மனோ அவர்கள் வலைச்சரத்தில் போட்டிருந்த பதிவிலேயே வாழ்த்து சொல்லியிருந்தேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இன்னொருமுறை வாழ்த்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!
ரஞ்சனி,
Deleteஅங்கும் பார்த்தேன். எனக்கும் இன்னொரு முறை வாழ்த்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சியே
நன்றி.
அன்புடன்,
ராஜி
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவில் வந்து வாழ்த்து தெரிவித்தேன், மனோ அவர்கள் குறிப்பிட்ட பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்தேன்.
ReplyDeleteதவறாக குறிப்பிட்டாலும் ஒருநாள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு நிச்சியம் ஏற்று சிறப்பாக செய்வீர்கள்.
வாழ்த்துக்கள் ராஜி.
மீண்டும் நன்றி கோமதி
Deleteநட்புடன்,
ராஜி
ராஜலஷ்மி,
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகமானதற்கு நல்வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி எழுத்துக்களில் தெரிகிறது.உங்களுக்குப் பின்னால் மிகப்பெரிய தூண்டுகோல் இருக்கும்போது என்ன கவலை,தொடருங்கள்.
சித்ரா,
Deleteநன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு .
ராஜி
This comment has been removed by the author.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
ReplyDeleteதங்கள் எழுத்துப்பணி தொடர
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
Deleteராஜி.