பக்கத்து வீட்டுக் குழந்தை விடாமல் அழுது கொண்டேயிருந்தது
கேட்டது.
" அருணா , ஏன் குழந்தை அழுது கொண்டேயிருக்கிறான்? " என்று
கேட்டென். " தூங்க , இப்படித்தான் அழுகிறான் " என்று கூறினாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம், லேட்டஸ்டான சினிமாப் பாட்டு ஜன்னல்
வழியாக அருணா வீட்டிலிருந்து மிதந்து வந்தது. குழந்தையின்
அழுகையும் சட்டென்று நின்றது.
சினிமாப் பாட்டு தாலாட்டியதோ ?
நம்முடைய தாலாட்டுப் பாட்டு என்னானது?
நகரங்களில் பெரும்பாலான தாய்மார்களுக்கு தாலாட்டுப் பாட்டு
தெரியாது என்றே நினைக்கிறேன்.
அவர்களுக்கு இருக்கும் வேலை சுமையில் இதெல்லாம் எங்கே..............
அதுவும் இல்லாமல் இணையம், t.v. , f.m .., என்று எல்லாமே தாயின்
தாலாட்டும் சுமையை பகிர்ந்து கொள்கின்றன.
தாலாட்டுப் பாடலைக் கேட்டுக் கொண்டே உறங்கும் குழந்தை
ஒரு பெரிய நிம்மதியுடன் தூங்கப் போகும். பாதுகாப்பற்ற உணர்வே
இல்லாமல் இருக்கும்.
இந்தப் பாதுகாப்பு உணர்வு அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் ஒரு பெரிய காரணி என்பதை மறுப்பதற்கில்லை.
யாருக்குத் தெரியும் நம் வீட்டுக் குழந்தை ஒரு பெரிய விஞ்ஞானியாகவோ , மருத்துவராகவோ , விளையாட்டு வீரராகவோ சாதனை புரியலாம் .
அதற்கான கிளாசில் பின்னர் சேர்க்கலாம் ,என்று இப்பொழுது அதற்கான சின்ன விதையை தாலாட்டின் மூலம் விதைக்கிறாள்.
இதையும் தவிர குழந்தைக்கு என்ன வேதனையோ? அந்த சமயத்தில்
தாயின் தாலாட்டு பெரிய ஆறுதல் இல்லையா?
சில தாலாட்டுப் பாடல்கள் தாயின் உள்ளக் கிடக்கையை அற்புதமாக
எடுத்துக் கூறும்.
தன் பிறந்த வீட்டை மிஸ் பண்ணுகிறாளோ என்று கூடத் தோன்றும்.
"மாமா அடித்தாரோ மல்லிப் பூச்செண்டாலே" என்ற பாடலைப் பாருங்களேன் ,உங்களுக்கே புரியும்.
தன் குலப் பெருமை , தாத்தா பெருமை என்று கூறி பாடும் போது ஒரு உளவியாளர் , போல குழந்தையை ஊக்குவிக்கிறாள்.
இதையெல்லாம் தாண்டி ஒரு தாய் தனக்குள்ள வருத்தத்தை வெளிபடுத்தவும் தாலாட்டை உபயோகிப்பதாக படித்திருக்கிறேன்.
அப்படி என்றால் அவளுக்கும் அது ஒரு பெரிய உதவி தானே.
குழந்தையின் மன நலம் மட்டுமல்ல, தன் மன நலமும் அல்லவா பேணுகிறாள்.
நம் கலாசாரத்திலேயே தாலாட்டு என்று ஒன்று இருந்தது என்றே கூறலாம்.
"மண்ணு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனை " என்று ராமன் தாலாட்டு ,
"ஆயர் பாடி மாளிகையில் " கிருஷ்ணனை இன்னும் சிறு குழந்தையாகத்
தாலாட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆராரோ பாடி (குரல் மோசமாக இருந்தாலும்) குழந்தையின் மனம், மற்றும் உடல் நலம் காப்போம்.
PAATTI STORIES படிக்க இங்கே சொடுக்கவும்.படித்து நிறை குறை எழுதுங்களேன்.
image courtesy---google.
தாலாட்டின் அருமையை
ReplyDeleteதாராளமாக தந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
முன்னதாக வந்து என் தாலாட்டைப் பாராட்டியதற்கு நன்றி.
Deleteராஜி
தங்களின் பதிவு அருமையாக எங்களையும் தாலாட்டிச்சென்றது.
ReplyDeleteபாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிக்ள்.
முதலில் வந்து தாலாட்டியவரின் பாராட்டுக்கிடைக்க நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அம்பாளே நேரில் வந்து பாராட்டியது போலவாக்கும்!
மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
வைகோ சார்,
Deleteஉங்கள் வருகைக்கும் ,என் தாலாட்டைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சார்.
ராஜி
இப்போதும் தாலாட்டு சத்தம் கேட்பதே மகிழ்ச்சியான விஷயமாகும்.இதை நீங்கள் சொல்வதே இனிமையாக உள்ளது
ReplyDeleteதாலாட்டைப் பற்றி அழகா சொல்லிருக்கீங்க. ஆனா இந்தக்கால தாய்மார்களுக்கு தாலாட்டுப் பாட்டு 4 வரியாவது தெரியுமா என்பதே கேள்விக்குறியா இருக்கே?! :)
ReplyDeleteசினிமாவில் வரும் சில தாலாட்டுப் பாடல்கள் மிகவும் அருமையா இருக்கும்..நான் எல்லாப் பாடல்களையும் சொல்லல, ஆனால் சில பாடல்கள் ரொம்பவே நல்லா இருக்கும் ராஜி மேடம்! ஊரில் எங்க வீட்டு வாண்டுகளுக்கு சிறுத்தை படத்தில் வரும் ஆராரோ,ஆரிராரோ...பாட்டு மிகப் பிடிக்கும். தூளியிலே ஆடவந்த..- சின்னத்தம்பி, தென்பாண்டி சீமையிலே..- நாயகன், அப்புறம் பழைய தமிழ் பாடல்கள் எல்லாமே குழந்தைகள் தூங்க நல்ல தேர்வுகள்தான்! :)
மஹி,
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நீகள் சொல்வது போல் தாலாட்டுப் பாட்டு பாடுவதும், கேட்பதும் மறந்து விட்டதென்றே சொல்லலாம்.
நன்றி,
ராஜி
தாலாட்டு பாடல் பற்றிய விவரம் அருமை.
ReplyDelete"ஆயர் பாடி மாளிகையில் " கிருஷ்ணனை இன்னும் சிறு குழந்தையாகத்
தாலாட்டிக் கொண்டிருக்கிறோம்.//
என் பேரனுக்கு பிடித்த பாடல். என் மருமகள் பாடி பாடி அவனுக்கு மனப்பாடம் ஆகி விட்டது. அவனும் அழகாய் தன் மழலைக் குரலில் பாடி எங்களை மகிழ்விப்பான்.
வாங்க கோமதி,
Deleteஉங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் மிக்க நன்றி.
ஆயர்பாடி மாளிகையில் பாட்டு கேட்க ,கேட்க இனிமை தான்.
நன்றி,
ராஜி
ராஜலஷ்மி,
ReplyDelete"அவர்களுக்கு இருக்கும் வேலை சுமையில் இதெல்லாம் எங்கே"__இதுதாங்க உண்மை.
அம்மாவின் அரவணைப்புடன் தாலாட்டும் சேர்ந்துகொண்டால் குட்டீஸுக்கு சொர்க்கம்தான்.தாலாட்டை வைத்தே அம்மாவின் மனநிலையை உணரலாம் போலிருக்கே.மேலும் தொடருங்கள்.
//தாலாட்டை வைத்தே அம்மாவின் மனநிலையை உணரலாம் போலிருக்கே.// இதை ஒரு சொற்பொழிவில் கேட்டேன் .
Deleteசில பாடல்களைக் கேட்டால் உண்மை என்றே தோன்றும்.
திருமணமான புதிதில் புகுந்த வீட்டில் தனிமையாய் இருப்பது போல் உணர்கிறாளோ என்று தோன்ற வைக்கும். இல்லை நான் தான் அப்படி நினைக்கிறேனோ.தெரியவில்லை.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஏன் followers gadget சேர்க்கவில்லை இன்னும்.?
நன்றி,
ராஜி
followers gadget ஐ சேர்க்க முடியவில்லை.டெம்ப்ளேட் மாற்றியும் பார்த்துவிட்டேன்,Experimental னு வருது.இது எதனால் எனத் தெரியவில்லை.
Deletefollowers gadget இல்லை போல் தெரிகிறது. அதற்கு பதிலாக இப்பொழுது. google +
Deletefollowers. gadget தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்
raaji
Sent from http://bit.ly/itamil
ReplyDeleteபெண்கள் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு அவர்கள் உறவின் மேம்பாட்டைத் தாலாட்டுப் பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு தெரிவித்து விடுகிறாள். பெண்களுக்கு அவர்கள் உறவுதான் முக்கியம். “ மாமன் அடிச்சாரோ மல்லிகைச் செண்டாலே “ என்று தாலாட்டுப் பாடும் தாய் “ அத்தை வீட்டு வாசலுக்கு நித்தம் நித்தம் போகாதே. படுபாவி அத்தையவள் பாம்பெடுத்து மேலிடுவாள்” என்று தாலாட்டுப் பாடியும் கேட்டிருக்கிறேன்.! இதைவிட சினிமாப் பாடல்களே குழந்தைகளுக்கு மேல் என்னும் நினைப்பைத் தருகிறது. தாலாட்டுப் பாடல்கள் இனிமையாய் இருப்பதோடு நல்லவையை புகட்டுவதாகவும் இருக்க வேண்டும்
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
Deleteராஜி
//இதையெல்லாம் தாண்டி ஒரு தாய் தனக்குள்ள வருத்தத்தை வெளிபடுத்தவும் தாலாட்டை உபயோகிப்பதாக படித்திருக்கிறேன்.
ReplyDeleteஅப்படி என்றால் அவளுக்கும் அது ஒரு பெரிய உதவி தானே.
குழந்தையின் மன நலம் மட்டுமல்ல, தன் மன நலமும் அல்லவா பேணுகிறாள்.//
வீ ட்டில் இருப்பவர்களுக்கும் சேர்த்து சொல்லிவிட முடிகிறது அல்லவா ?
நல்ல பதிவு
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஅது காதில் ரீங்காரிக்க கண்ணு சுளட்டி நித்திரையாவார்கள்.
ReplyDeleteதாங்கள் கூறியபல காரணங்களும். சேர. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Deleteராஜி