நம் நாட்டிலிருந்து Miss world, Miss Universe எல்லாம் வந்த பிறகு நம் ஊர் பெண்களின் மனமோ அழகு நிலையங்களை சுற்றியே வட்டமிட ஆரம்பித்தன.
முன்பெல்லாம் அழகு நிலையங்களை மேல்தட்டுப் பெண்கள் , நடிகைகள் ஏகபோக உரிமை கொண்டாடி வந்தார்கள். ஆனால் இப்பொழுது நடுத்தர வர்க்கப் பெண்களும்
" பார்லர் " சென்று தங்களின் அழகை மேலும் மெருகூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தெருவுக்குத் தெரு காளான்கள் போல் முளைத்திருக்கும் அழகு நிலையங்களே அதற்கு சாட்சி.
அழகு அவர்களின் தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. நல்ல விஷயம் தான்.
சில சமயம் தரமற்ற நிலையங்களுக்கு சென்று வம்பை விலைக் கொடுத்து வாங்குவதும் அங்கங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன.
வம்புகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இயற்கை அளித்த அழகு சாதனம் ஒன்றைப் பற்றிப் பார்ப்போமா?
வேறென்ன? . நம் பொக்கிஷம் வேம்பு தான் .ஒவ்வொரு வேப்ப மரமும் ஒரு beauty parlour தான்.
இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கும் வேம்பைப் பற்றிய ரகசியம்
இதோ
தினமும் இரண்டு அல்லது மூன்று வேப்பிலைகளை கண்ணை மூடிக் கொண்டு மென்று தின்று விடுங்கள். உங்கள் உடம்பிலுள்ள அசுத்தங்களை நீக்கும் நல்ல டிடர்ஜன்ட். (நன்றாகவே கசக்கும்.
கண்ணை மூடினால் கசப்பு குறையலாம் அல்லது இரண்டு நாட்களில் கசப்பு பழகிவிடும்)
அப்புறம் என்ன , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பாருங்கள்.
வேப்பிலைகளை தண்ணிரில் கொதிக்க வைத்து அதை நீங்கள் குளிக்கும் நீரோடு கலந்து விடுங்கள். ஒரு நல்ல de-odorant ஆக நம் உடலிற்கு துர்நாற்றத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
அழகி கிளியோபாட்ரா கழுதைப் பாலை பாத் டப் பில் நிரப்பி குளித்தாள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாம் வேப்பிலை நீரில் குளிப்போமே?
தோல் அலர்ஜிக்கு மிகச்சரியான மருந்து இந்த வேப்பிலை. வேப்பிலையை அரைத்து தோல் அலர்ஜி இருக்கும் இடத்தில் தடவி வாருங்கள். இரண்டு மூன்று நாட்களில் பலன் தெரியும்.
இப்பொழுது நிறைய பேருக்கு வருகின்ற sun allergy துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடும் .
இளம் பெண்களின் மிகப் பெரிய பிரச்சினையே பருக்கள் தான்.
அழகிய பருவ மங்கையான உங்கள் வீட்டுப் பெண்களை வேப்பிலை பேஸ்ட் face mask போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள்.
அப்புறம் பாருங்கள். கன்னமா? தங்ககிண்ணமா? என்று உங்கள் கண்ணே பட்டு விடும் .ஜாக்கிரதை.
வேப்பெண்ணை கூட ஒரு மிகப் பெரிய கிருமிநாசினி தான். இதை முகத்தில் தடவினால் பருக்கள் வந்து சென்ற தடயமே இல்லாமல் இன்ஸ்டன்ட் ஆக முகம் வசீகரிக்கும். வெட்டுக்காயம் தீப்புண்ணிற்கும் மிகப்பெரிய ஆறுதலளிக்கும் இது.
பற்கள் பளபளக்க வேண்டுமா?
கைவசம் இருக்கவே இருக்கிறது வேப்பங்குச்சி..பிறகென்ன ........
பற்களைப் பார்த்து முகம் திருத்திக் கொள்ளலாம்.
வேப்பிலையைக் காய வைத்து பொடி செய்து சின்ன சின்ன துணிப்பைகளில் புடவை பீரோவில் போட்டு வைத்தால் ,அது உங்கள் பட்டுப் புடவைகளை பூச்சி அரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொடுக்கும் செக்யூரிட்டி ஏஜன்ட்.
இதையெல்லாம் மனதில் வைத்து தான் நம் முன்னோர்கள் வேப்பிலையை தெய்வமாய் கொண்டாடும் பாரம்பர்யத்தை விட்டுச்
சென்றிருக்கிறார்கள்.
அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் , ஐரோப்பியர்களும் கூட வேம்பைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் விட்டுக் கொடுக்காமல் நாமே வேம்புப் பொருட்களின் ஆராய்ச்சியில் முந்திக் கொண்டு patent rights வாங்கிவிட்டால் நல்லது.
PAATTI STORIES படித்தீர்களா?
இங்கே படித்து நிறை குறை சொல்லுங்கள்.
image courtesy--google
Useful post!
ReplyDeleteநன்றி மஹி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteபயனுள்ள பதிவு... ஆனா நாம எவ்வளவு எடுத்து சொன்னாலும் வெளிநாட்டு தயாரிப்புகளை வாங்கி காசையும் உடலையும் கெடுத்து கொள்வார்களே தவிர உள்ளுரில் எளிதில் கிடைப்பவைகளை உபயோகிக்கமாட்டார்கள்
ReplyDeleteவேம்பு போலவே மஞ்சளிலும் பல நன்மைகள் உள்ளன
எதுவும் எளிதில் கிடைத்தால் மதிப்பில்லையே?
Deleteஅதனால் தான் எளிதில் வம்பை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள்.
வேம்பைப் போலவே மஞ்சளும் அதிசய மூலிகை.
நன்றி உங்கள் வருகைகைக்கும் பாராட்டுக்கும்.
தங்களின் இந்தப்பதிவினால் கசக்கும் வேம்பு இனிக்கத்தொடங்கி விட்டது.
ReplyDelete//அப்புறம் பாருங்கள். கன்னமா? தங்ககிண்ணமா? என்று உங்கள் கண்ணே பட்டு விடும் .ஜாக்கிரதை.//
அட்டா என்ன அழகான சொல்லாடல் !
“வெள்ளிக்கிண்ணந்தான் தங்கக்கைகளில்” என்று ஓர் பாட்டு “உயர்ந்த மனிதன்” என்ற படத்தில் வரும். அதையும் தாண்டி தங்கக்கிண்ணம் என்றே சொல்லிட்டீங்க.
இதைக் கேட்கும் போதே புல்லரிக்குது.
>>>>>.
///இதைக் கேட்கும் போதே புல்லரிக்குது//
Deleteஹா........ஹா........ஹா........
நன்றி சார் உங்கள் கருத்துக்கு
//சில சமயம் தரமற்ற நிலையங்களுக்கு சென்று வம்பை விலைக் கொடுத்து வாங்குவதும் அங்கங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன.
ReplyDeleteவம்புகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இயற்கை அளித்த அழகு சாதனம் ஒன்றைப் பற்றிப் பார்ப்போமா?//
அருமையான விழிப்புணர்வு தரும் பதிவு..
கசப்பான வேம்பினில் உள்ள பல இனிப்பான பயனுள்ள விஷயங்களைத் தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
வைகோ சார்,
Deleteஉங்கள் மீள் வருகைக்கும், பாராட்டுக்கும்.
வணக்கத்துடன்,
ராஜி
பயனுள்ள,எளிதாகச் செய்யக்கூடிய குறிப்புகள்தான்.கிடைத்தால் செய்து பார்க்கலாம்.
ReplyDeleteஎங்கம்மா தினமும் இரண்டு இலைகள் சாப்பிடுவாங்க.நானும்கூட துளிர் இலைகளையாவது சாப்பிடலாமே என நினைத்ததுடன் சரி.வேப்பிலையின் கசப்பு தெரியாதவாறு நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க.தொடர்ந்து வருகிறோம்...
தினமும் வேப்பிலை சாபிட்டால் மிகவும் நல்லதே. சர்வ லோக நிவாரணி ஆயிற்றே.
Deleteஉங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா.
வேப்பிலைக்கு மருத்துவ குணம் உண்டு என்பது தெரியும் ஆனால் முக அழகுக்கும் உடலால்கக வைத்துகொள்ளவும் உதவுகிறது என்பது அருமை.
ReplyDeleteவேம்பைக் நிறைய அழகு பொருட்கள் தயாரிக்கிறார்கள். இணையத்தில் தான் தெரிந்து கொண்டேன்.
Deleteகடை விரித்தாயிற்று. கொள்வார் தான் இல்லை.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
thank u for the info
ReplyDeletethanyou for your views.
Deleteபயனுள்ள குறிப்புகள்... சிறு வயதில் வேப்பிலை சாப்பிட்டதுண்டு.... மீண்டும் சாப்பிட வேண்டுமெனத் தோன்றிவிட்டது..... :)
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteநட்புடன்,
ராஜி
நமக்கு தெரிந்தும் பயன்படுத்தாமல் இருப்பதைப் பற்றி என்ன சொல்வது...?
ReplyDeleteநன்றி உங்கள் அருகைக்கும், கருத்துக்கும்.
Deleteஇன்றைப் போல் என்றும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் வேப்பிலையை தெய்வமாய் கொண்டாடும் பாரம்பர்யத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ReplyDeleteதாவரங்களுக்கு பூச்சிக்கொல்லியாகவும் பயன்படும் வேம்பு பற்றி
அருமையான அழகுக்குறிப்புகள் ..பாராட்டுக்கள்..
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.
Deleteநீங்கள் சொல்வது உண்மைதான் ராஜி, என் அம்மா வேப்பிலை அரைத்து சிறு உருண்டை அடிக்கடி வீட்டில் எல்லோருக்கும் கொடுப்பார்கள்,
ReplyDeleteபூச்சி இருக்காது வயிற்றில் என்று. எங்கள் புத்தக அலமாரியில் வேப்ப இலையை காய வைத்து அதனுடன் வசம்பும் போட்டு வைத்து இருப்பேன்.
வசம்பும் புத்தக பூச்சி வராமல் பாதுகாக்கும்.
நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி. உங்களுடைய பதிவில் வாழ்த்து மட்டும் சொல்லி வந்தேன்.
Deleteபதிவைப் பற்றி கருத்து இனிமேல் தான் எழுத வேண்டும்.
ராஜி
ReplyDeleteநீங்கள் கூறியது அனைத்தையும் அது வேம்பு தான் என்று தெரியாமல் விளம்பரப் படுத்தி அழகாக பாக் செய்து விற்றால் அள்ளிப்போகும். பகிர்வுக்கு நன்றி.
ஆமாம். நீங்கள் சொல்வது உண்மையே.இது விளம்பர உலகம் ஆயிற்றே.
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
இயற்கையாய் நமக்கு இருக்கும் அழகு போதுமே! இதைச் சொன்னால், உனக்கு வயசாச்சு என்கிறார்கள். அட்லீஸ்ட், இதைபோல இயற்கையாய் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்ளலாம்.வேண்டாத பக்க விளைவுகள் ஏற்படாமல் காக்கலாம்.
ReplyDeleteவேம்பில் இத்தனை நல்ல சமாச்சாரங்கள் இருப்பது நம் உலக அழகிகளுக்குத் தெரியுமா?
வேம்பின் அருமைகளை வெகு அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள், ராஜி!
பாராட்டுக்கள்!
உங்களுக்கு இன்று மெயில் அனுப்புவதாக இருந்தேன் ,உங்கள் நலம் விசாரித்துத் தான்.
Deleteகிட்டத்தட்ட ஒரு வாரமாக வலைப் பக்கமே காணோமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ரஞ்சனி.
Nice tips wrapped in beautiful write.
ReplyDeleteThankyou for your catchy comments.
Deleteraji