Wednesday 20 February 2013

மெரினா (part 1)




சென்னையில்     பிறந்து,  வளர்ந்த     எனக்கு     மிகவும்     பிடித்த    இடம்,   "மெரினா "   பீச்   தான்.

 பீச்   என்று   சொல்லும்   போதே  " ஜில் "  என்று   மாலைக்     காற்று,    என்   முகத்தில்    வீசுவதைப்     போல்  இருந்தது.

இந்த   பீச்சில்    அப்படி  என்னதான்    இருக்கிறது ?   

எதை   சொல்ல  ?  எதை   விட ?

காலையில்     பீச்சிற்கு      சென்று       பார்க்க        வேண்டும் .   
லேசில்     வாய்க்கவில்லை     எனக்கு .   என்  கணவர்   என்னிடம்    சத்தியம்   வாங்காத  குறை  தான். "   அழைத்துப்    போகிறேன்.    ஆனால்    சீக்கிரம்   வீடு    திரும்ப   வேண்டும்  " என்று    உறுதி  மொழி    வாங்கிக்    கொண்டார்.  . ( சீக்கிரமா............?   அது   தானே   பெரும்   பாடு.   ).       நானும்   என்    மனதிடம்   சொல்லி  வைத்தேன்.   " என்   வார்த்தையைக்    காப்பாற்றி  விடு "   என்று.

ஒரு   விடுமுறை    நாளில்  அதிகாலை    எழுந்து     6  மணி  வாக்கில்    பீச்சிற்குக்    கிளம்பினோம்.
வண்டியைப்    பார்க்   செய்து   விட்டு    அங்கிருந்தே     கடலைப்   பார்த்தேன்.
ஆஹா.............   ஆஹா.......... சூரிய   உதயம்     அப்பொழுது  தான்   ஆரம்பமானது.   கடல்   கன்னியிடம்   அனுமதி  பெற்று   மெதுவாக   எட்டிப்  பார்த்தான்  கதிரவன்..   ஆரஞ்சு    நிறம்  அடித்த    நகத்தை   வெட்டிப்   போட்டது   போல்     சூரியன்     வெளியே  வர   ஆரம்பித்தான்.  பிறகு   கொஞ்சம்  கொஞ்சமாக   ஆரஞ்சு  பந்தாக முழுதாக  வெளியே   வந்த    அந்தக்  காட்சி   ,  சிலிர்த்தது   எனக்கு.

அப்பொழுது   நம்  வங்காளவிரி  குடாவைப்   பார்க்க  வேண்டுமே  .  ஏதோ   வைரத்துகள்களை     கொட்டி    வைத்தது   போல   ஜொலிக்க     ஆரம்பித்து விட்டாள் , நம்   கடல்  என்னும்  கன்னி.  

சூரியன்  கொஞ்சம்  கொஞ்சமாக     தன்  வெள்ளிகிரணங்களை     வீசிக்   கொண்டே  மேலெழும்பினான்.

என்னை  மறந்து   நின்றிருந்த   நான்   சுற்றிப்    பார்த்தேன்.
ஓ.......................மார்னிங்    வாக்கர்ஸ்.

பெரிய  பெரிய   அதிகாரிகள்    ட்ராக்   சூட்டில்    நடை பயிற்சி   மேற்கொண்டிருந்தார்கள்.  ஹாயாக    நண்பர்களுடன்  உறவாடிக்  கொண்டே........

IAS   ஆபீசர்ஸ்,அரசியல்வாதிகள் ,  எல்லாம்  சர்வ  சாதரணமாக   பார்க்க  முடியம்..( ஆனால்   இங்கேயெல்லாம்     மனு    எதுவும்  கொடுக்கக்  கூடாதாம்.....வருத்தம்  தான் )

  
 ட்ராக்   சூட்டில்  அழகழகாய்   இளம்  பெண்கள் ,    உடல்  வெயிட்  பற்றிய   அக்கறையுடன் .   காதுகளிலிருந்து  தொங்கும்  ஓயார்களுடன்     தனியாகப்  பேசிக்கொண்டே    நடந்து  கொண்டிருந்தார்கள்.

இந்தப்   பெண்களைப்    பார்க்காதது    போல் ,   பார்த்துக் கொண்டே    இளைஞர்கள் ,  ( வாக்கிங்   போகிறார்களாம்.)

சற்றே     வயதான     பெண்கள்     காலில்   ஷுவுடன்    தங்கள்  கணவர்களிடம்  " தொண தொண " வென்று    எதையோ   சொல்லிக்  கொண்டிருக்க  கணவர்களோ  வெறும்    உம் ........உம்.........

இன்னும்  சற்றே  வயதானவர்கள்   " முணுமுணு "  வென்று  சுலோகங்கள்  சொல்லிக்  கொண்டேநடக்க

 இன்னும் சிலபெண்கள் , காலை   என்ன    சமைப்பது   என்ற சிந்தனையுடன்    நடக்கிறார்கள்.


இந்தியாவே   நடை  பயில்கிறது    சமீபகாலமாக.....
எல்லாம்  நம்மை  தடுத்தா ட்கொண்டிருக்கும்  "டையாபடீஸ் "  உபயம்.
  

எதிர்கால   ஒலிம்பிக்,  ஆசிய  விளையாட்டுப்  போட்டி  என்று   சர்வ     தேசப்  போட்டிகளில்     வெற்றி  பெறப்   போகும்     வீரர்களும்,     வீராங்கனைகளும்    ஓட்டப்  பயிற்சியில்   ஈடுபட்டிருக்கிறார்கள்.( இப்பொழுதே    ஆட்டோகிராப்  வாங்கிக்கலாம்).

சற்றே  தள்ளி   அந்தப்   பக்கம்  பார்த்தால்   ஹா ......ஹா..... ஹா.......  என்று   ஒரே  சிரிப்பு.
" வாய்  விட்டு   சிரித்தால்   நோய்    விட்டுப்   போகும்   "  இவர்களின்   சிறப்பு.
'ஹுமர்    கிளப்'    நடந்து  கொண்டிருக்கிறது.

இன்னொரு  பக்கம்    ஒரே   யோகிகள்    மயம்.  (யோகா   கிளாசை  சொல்கிறேன்).

இடுப்பு வரை   மணலில்  புதைய ,   நின்று   " பிசியோ  தெரபி "   செய்து  கொள்கிறவர்களும்  உண்டு.

இவர்களையெல்லாம்    பார்த்தபடி    பொக்கைவாய் சிரிப்புடன்    நம்
 தேசத்தந்தை     சிலையாகி    நின்றார்.(உழைத்துக்   களைத்த  காலம்  போய்,
களைப்பதற்காகவே  ,  இந்தியா    நடக்கிறதே  என்ற  சந்தோஷத்தில்) 

நடை   பாதை  ஓரத்தில்    இயற்கை  மருத்துவர்கள் .
அருகம்புல்   ஜூஸ்,    வல்லாரை  ஜூஸ்,  இஞ்சி  டீ,  சுக்கு  டீ.
கொத்தமல்லி  காபி,  சுக்கு  காபி   விற்பவர்களை   சொல்கிறேன்.

எதிர்புறத்தில்     இருக்கும்    senate  house   கடிகாரத்தைப்    பார்த்தேன்.
மணி    9   ஆகப்  போகிறதே !   இவர்  கோபித்துக்    கொள்ளப்  போகிறாரே   என்ற   பயத்துடன்    மெதுவாக  அவரை   திரும்பிப்   பார்த்தேன். 

அவர்    தன்னை    மறந்து    கடல்    கன்னியிடம்    மனதைப்     பறிகொடுத்தார்   போல்   தெரிந்தார்.   இது      என்ன   புது   வம்பு...............?

வாங்க   போகலாம்   !   என்று  இழுத்துக்    கொண்டு   வந்து   விட்டேன்.

பத்து  மணி  வாக்கில் எப்படியிருக்கும்   இந்த   பீச்.?

யோசித்துக்   கொண்டே   நடந்தேன்.   இந்தக்   கடலை    அலட்சியம்   செய்தபடி ,   பீச்   ரோட்டில்   பறக்கும்    வண்டிகள்    .,  தலை   தெறிக்க   எதையோ     நினைத்தபடி     அலுவலகங்களுக்கும்,  கல்லூரிகளுக்கும்   பறக்கும்    மக்கள்   கூட்டம்.

மத்தியான  மண்டை  பிளக்கும்   வெயிலில்  கூட    ,அங்கொன்றும் , இங்கொன்றுமாக    காதலர்கள்    இருப்பார்களாம்.   கேள்விப்பட்டிருக்கிறேன்.

மாலையில்     பீச்    மணலில்   கால்  புதைய    நடந்து  கொண்டே   பார்த்தால்........................................ நடப்போம்    வாருங்கள்.........    அடுத்தப்  பதிவில்.................................................................................................................................................


 image  courtesy-----google.

  RAMA STORY PART 4 படிக்க  இங்கே ' கிளிக்'கவும்

 

32 comments:

  1. //
    அவர் தன்னை மறந்து கடல் கன்னியிடம் மனதைப் பறிகொடுத்தார் போல் தெரிந்தார். இது என்ன புது வம்பு...............?

    வாங்க போகலாம் ! என்று இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்.//

    நல்ல வேலை செய்தீர்கள்.;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும்.

      Delete
  2. அப்பொழுது நம் வங்காளவிரி குடாவைப் பார்க்க வேண்டுமே . ஏதோ வைரத்துகள்களை கொட்டி வைத்தது போல ஜொலிக்க ஆரம்பித்து விட்டாள் , நம் கடல் என்னும் கன்னி.

    மெச்சவைக்கும் மெரினா பீச் காட்சிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்.

      Delete
  3. நல்ல ரசனை...

    பத்து மணி வாக்கில் போகாமல் இருப்பது நல்லது...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .

      Delete

  4. /சற்றே வயதான பெண்கள்........................என்ன சமைப்பது என்ற சிந்தனையுடன் நடக்கிறார்கள்/ நீங்கள் எந்த ரகம்.? அனுபவித்த எழுத்து..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

      Delete
  5. Nice read. Marina is not what it was years back.

    ReplyDelete
    Replies
    1. I understand your concern.

      Thankyou for visiting my blog and appreciating it.

      Delete
  6. மெரினாவினை அணுஅணுவாய் ரசிச்சேன்னு சொல்லுங்க! :)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ரசித்து முடிக்கவில்லை. இன்னும் ஒரு பதிவு இருக்கிறது.

      நன்றி உங்கள் கருத்துக்கு வெங்கட்ஜி

      Delete
  7. அதிகாலைக் கடலும், அந்திநேரக் கடலும்தான் ரசனை. கடலோடு சக மனிதர்களையும் ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையும் அந்தியிலும் கடலும் கடல் சார்ந்த இடங்களும் ரசிக்கப்படவேண்டியவை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  8. கொள்ளை அழகு! இல்லை வார்த்தை எல்லாமே சொல்ல

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் பாராட்டுக்கு.

      Delete
  9. எதை சொல்ல ? எதை விட ?

    நீங்கள் சொன்ன எல்லாமே அருமை.
    பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  10. 'கடல்'அதுவும்'மெரினா பீச்' என்றாலே ஒரு உற்சாகம்தான்.அதைவிட உங்க எழுத்துநடை உற்சாகமாக இருக்கிறது.எல்லா நிகழ்வுகளையும் கண்முன்னே நிறுத்திட்டீங்க‌.புது வம்புக்கான காரணத்தை நினைத்து சிரிப்பு வந்தது. அதேபோல் ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவையை அள்ளித் தெளிச்சிருக்கீங்க. மாலை பீச்சுக்கு நாங்களும் ரெடியாயிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மெரினா பீச் எப்பவுமே எனக்கு பிடித்தமான ஒன்று.
      அதுவும் மாலை ரம்யம் மனதிற்கு இதம்.

      மாலை மெரினாவிற்கு அவசியம் வந்திடுங்க.

      Delete
  11. I love to do people watching! :) nice post Raji madam!

    ReplyDelete
  12. உங்களோட நானும் மெரினா போய்ட்டு வந்தாச்சி.... அழகா ஒரு அனுபவத்தை பதிவாகிடீங்க!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா . மாலையில் மெரினாவில் என்னோடு மணலில் நடக்க வாருங்கள் இன்னும் ஓரிரண்டு நாளில்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சமீரா.

      Delete
  13. //இவர்களையெல்லாம் பார்த்தபடி பொக்கைவாய் சிரிப்புடன் நம்
    தேசத்தந்தை சிலையாகி நின்றார்.(உழைத்துக் களைத்த காலம் போய்,
    களைப்பதற்காகவே , இந்தியா நடக்கிறதே என்ற சந்தோஷத்தில்) //

    ha ha ........super

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மலர் பாலன்.

      Delete

  14. வணக்கம்

    அழகிய சொற்களில் அள்ளிப் படைத்தீா்
    பழமாய் இனிக்கும் படைப்பு

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  15. வாருங்கள் ஐயா,

    வணக்கம். உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  16. சென்னைக்குப் போகும்போதெல்லாம் நான் ரொம்பவும் மிஸ் பண்ணுவது மெரினா 'பீச்'தான். எத்தனை நாட்கள் சென்னையில் இருந்தாலும் பீச் போக நேரம் கிடைக்காது. ஸ்டேஷன் போகும்போது ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே போவேன்.
    பீச் என்றால் பழைய நினைவுகளும் கூடவே வரும். திருமணத்திற்கு முன் நானும் இவரும் சந்திக்கும் இடமும் காந்தி சிலை பீச் தான்.

    சூரிய உதயத்தை ரொம்பவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நகைச்சுவையுடன் அருமையான பதிவு.

    பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய மகிழ்ச்சியான நினைவுகளை நான் மலர்வித்திருக்கிறேன்
      என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

      அடுத்த முறை நீங்கள் சென்னை வரும் போது , நாம் பீச்சில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்.

      உங்களுடைய பாராட்டிற்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  17. ஊருக்கு போனால் ராயபுரம் போவதாக இருந்தாலும், மைலாப்பூர் போவதாக இருந்தாலும் சரி ஆட்டோ காரரிடம் பீச் வழியாதான் போக சொல்வேன்.

    அதே போல் சிறு வயதில் என் பள்ளியில் பீச் எதிரில் கடல் அலையை ரசித்து கொண்டே தான் படிப்போம், உச்சி வெயிலில் அங்காங்கே ஜோடிகள் உட்கார்ந்து இருப்பதும் தெரியும்

    காலையில் சில நேரம் வாக்கிங் போவதுண்டு ரொம்ப அருமையாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜலீலா.

      உங்கள் சிறுவயது நினைவுக்கு வருகின்றனவா?
      உச்சி வெயில் ஜோடிகள் விஷயத்தில் மாற்றமே வரவில்லை தான்.

      உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்