Wednesday 27 February 2013

இளமை ரகசியம்




அன்று     வந்த    லெட்டரைப்    பிரித்துக்      கொண்டே ,  ஜன்னலருகில்      சென்று ,    கண்களிலிருந்து     மிகவும்     தள்ளி     பிடித்துப் ,     படித்துக்  கொண்டிருந்தேன்.   என்னவர்  வந்து  ,  அதை    வாங்கி  ,    இரண்டடி   தள்ளி       நின்று  லெட்டரைப்  பிடித்துக்      கொண்டு   " இப்பொழுது      படி "      என்று    கிண்டலடித்தார்.  

அப்பொழுது      தோன்றியது ,     அடடா.........     நமக்கு     வயதாகிக்   கொண்டே      வருகிறது.    சாளேஸ்வரம்      போலிருக்கிறது   ,   என்று  நினைத்துக்       கொண்டேன்.   ஆனால்     அந்த      நினைப்பே ,   என்    வயதை     இன்னும்      கூட ,     கூட்டியது    போலிருந்தது.

அப்பொழுது   தான்  ,  முக  நூலில்   அலைந்து   கொண்டிருந்த ,  ஒரு  விஷயத்தைப்    படித்திருந்தேன்.

'ரோஸ்'   என்ற    பெண்மணியைப்  பற்றியது  .
இவருடைய  கல்லூரி  நாட்கள் ,  மிகவும்   இன்பமயமானவை.  
பட்டம்   வாங்கும்   முனைப்புடன்   கல்லூரிக்கு  செல்கிறார்.
(எல்லோரும்   பின்பு   எதற்காக  கல்லூரிக்கு  போகிறார்கள்  என்று  நினைப்பது  புரிகிறது.
இருந்தாலும்   பரவாயில்லை.  தொடர்ந்து  படியுங்கள்.)

முதலில் , மற்ற  மாணவ மாணவிகள்   பழகத்   தயங்கினாலும்  (ஏன் ?...... சஸ்பென்ஸ்)
பிறகு  ,  நல்ல    நட்புடன்      பழகுகிறார்கள்   .

எல்லா    மாணவிகளையும்   போல் , விதம் , விதமாய்   அலங்கரித்துக்   கொண்டு ,   கல்லூரிக்கு  வருவது , இவர்   வழக்கம்.  அலங்காரத்தில்  ஒரு குறையும்,  இருக்கக்   கூடாதாம்.

எல்லோரையும்  போல்  கேண்டீன்,  கிளாஸ் கட்  ,  ஒன்றாக  சினிமாவிற்கு   போவது   என்று   கூத்தடிக்கிறார்.
எல்லோருக்கும்,  ஒரு  இனிய  தோழியாய் ,  கல்லூரியில்   வலம்  வருகிறார்.
முனைப்புடன்   படிக்கவும்  செய்கிறார்.

மூன்று   வருடம் , போனது   தெரியாமல்   ஓடி   விடுகிறது. கல்லூரியில்  farewell day   வருகிறது.

எல்லோரும்,  ரோசை   பேச  அழைக்கிறார்கள்.  அவரும்  மேடை  ஏறுகிறார்.
அவரால்  ஏறமுடியவில்லை.  இரண்டு பேர்   துணையுடன்   ஏறுகிறார்.

ஏறும்போது,    தான்  படிப்பதற்காக   எழுதி வைத்திருந்த   பேப்பரில்  ஒன்றிரண்டை , கீழே   வேறு   போட்டு  விடுகிறார்.

ஏன்    இத்தனை   தடுமாற்றம்   ?

அவருடைய  வயது  87.(இது  தான் அந்த  சஸ்பென்ஸ்)

ஆச்சர்யமாயிருக்கிறதா?

இத்தனை  வயதில்   எத்தனை  ஆர்வம். !  எத்தனை   தன்னம்பிக்கை!
எத்தனை  விடா  முயற்சி  !


நாம் இன்னும்  அவர் பேச்சை  கேட்கவில்லை  .கேட்போம்.

மிகவும்  நடுங்கும்  கைகளால்  மைக்கைப்   பிடித்துக்  கொண்டே   தொண்டையை   கனைத்துக்  கொண்டு   பேச  ஆரம்பிக்கிறார்.

குரல்  நடுங்குகிறது.
 அவருடைய  பேச்சு இப்படி செல்கிறது,

"  முதலில்  எல்லோரும்   என்னை மன்னிக்க வேண்டும்.  என் குரல்  நடுக்கத்தை   என்னால்  கட்டுப்  படுத்த முடிய வில்லை.

என்  குரலை   என்னால்  சரி  செய்ய  இயலாது.  ஆனால்  எனக்குத்  தெரிந்ததை  ,  என்  அனுபவத்தை ,  உங்களுடன்  பகிர்ந்து  கொள்ள முடியும். "

என்று  கூறித்  தொடர்கிறார்.

நாம்   வயதாவதால்   விளையாடுவதை  நிறுத்தி  விடவில்லை.  மாறாக  விளையாட்டை   நிறுத்தியதால்   தான்  வயதானவர்களாகி  விட்டோம்..

நம  இளமையை  தக்க  வைத்துக்  கொள்ள  நான்கு  ரகசியங்களைக்  கூறுகிறேன்.  கேட்டுக்  கொள்ளுங்கள்.
 1.  முதலில்    சிரிக்கக்   கற்றுக்  கொள்ளுங்கள்.
தினம்  தினம்  சிரிக்க வேண்டும்.எல்லாவற்றையும்   ஒரு    நகைச்சுவை   உணர்வுடன்    பார்க்கக்   கற்றுக் கொள்வோம்.
சிரிக்க  சிரிக்க  இளமையாய்  உணர்வோம்.

2.  கனவு    காணுங்கள். 
என்று  கனவு    காண்பதை    நிறுத்துகிறோமோ   அன்றே   நாம்  இறக்கத் தயாராகி   விட்டோம்  என்று  பொருள். கனவை  நனவாக்குவதற்கு ,  வயதை  மறந்து   முன்னேறுவோம்.
நம்மை  சுற்றி,  எத்தனையோ  பேர்  நடைபிணங்களாய்  வாழ்கிறார்கள்.  ஏன் தெரியுமா?  கனவு  காண்பதை  நிறுத்தி ,  வெகு  காலமாயிருக்கும்.

3.  வயதாவதற்கும்,  வளர்ச்சிக்கும்   இருக்கும்  மிகப் பெரிய  வித்தியாசம்  என்ன  தெரியுமா/

இப்பொழுது  எனக்கு  87  வயது. ஒரு  வருடம்  ஒன்றுமே  செய்யாமல்  படுக்கையிலேயே  இருந்தால்  கூட   எனக்கு  88  வயதாகி  விடும்.

எதையாவது,  புதிது  புதிதாகக்  கற்றுக்  கொள்வது தான்  வளர்ச்சி.
நாம்  வளர்வதற்கான    சந்தர்ப்பங்களை   நாம்  தேடிக்  கொண்டேயிருக்க வேண்டும்.


4.  எதற்காகவும்   வருத்தப்படாதீர்கள்  .
வயதானவர்கள்,    செய்த  எதற்காகவும்  ,வருந்துவதில்லை. செய்யத் தவறியவைக்காக   ,வருந்துபவர்கள்   தான்   ஏராளம்."

என்று  பேச்சை  முடிக்கிறார்.   

1970களில்  ஹிட்   பாடலான      The  Rose   என்ற  பாப்   பாடலைப் ,  பாடி  முடிக்கிறார்.(இணையத்தில்  இந்தப்  பாடல்  இருக்கிறது. மிகவும்  நல்ல  கவிதை)

வர்   மேலே சொன்ன   அறிவுரைகள்   எல்லாம்   அந்தப்   பாடலின்   விளக்கம்  தான்.

தேர்வு  எழுதி  பாசாகி  விடுகிறார். 
அதற்கு  அடுத்த  வாரம்   உறக்கத்திலேயே  உயிர்  பிரிகிறது.
2000  மாணவர்கள்    இறுதி  யாத்திரையில்   பங்கு  கொள்கின்றனர்.
வாழ்நாள்  இறுதி வரை  எதையாவது    கற்றுக்கொண்டும், உற்சாகமாகவும் ......   அந்த      மாணவர்களுக்கு    ஒரு  நல்ல  உதாரணமாய்    இருந்திருக்கிறார்.

இதைப்    படித்தவுடன்   எனக்குள்ளும்  ,   ஒரு  புது  உற்சாகம்   பீறிட்டுக்   கிளம்பியது.
சாளேஸ்வரம்    தானே  . கண்ணாடி  போட்டுக்  கொண்டால்  ஆயிற்று.
அதற்கு  எதற்காக  வருத்தம்   என்று  என்னையே  கடிந்து  கொண்டேன்.
வயதானால் என்ன ? வளர்ச்சி  நம் கையில்  அல்லவா?

உற்சாகமாகி    என்ன  செய்வது  என்று  யோசித்தேன். 
அதையே    பதிவாக்கி   விட்டேன்.  நீங்களும்  படித்து   விட்டீர்கள் .

வந்ததற்கு   கருத்துக்களை   எழுதிவிட்டுப்   போங்களேன்.


The  Fox   Story  படிக்க  "இங்கே க்ளிக்"கவும்

image  courtesy---google.
   

34 comments:

  1. மூன்றும் முத்துக்கள்...

    பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் , பாராட்டுக்கும் நன்றி சார்.

      Delete
  2. இப்போதான் சாளேஸ்வரமா? அப்போ உண்மையிலேயே யூத் தான் நீங்க!

    திருமதி ரோஸ் சொன்ன வார்த்தைகள் எல்லாமே அனுபவ பூர்வமானவை.

    நம் மன ஆரோக்கியம் நன்றாக இருந்தால் உடல் இளமையாகவே இருக்கும்.

    அருமையான பதிவு, ராஜி!

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் சாளேஸ்வரம். ஆனால் யூத் இல்லை.
      திருமதி ரோஸ் சொன்ன அனுபவங்கள் மிக அருமையாக இருந்ததைப் பார்த்து பதிவிட்டுவிட்டேன்.

      நன்றி ரஞ்சனி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும்.

      Delete

  3. எதையும் கற்றுக் கொள்ள வயது தடை அல்ல. ஒருவரின் வயதை மூன்றுவிதமாகப் பார்க்கலாம் 1. பிறந்ததிலிருந்து இதுவரை கழிந்த க்ரோனோலோஜிகல் வயது. 2.biological age- ஒருவரின் உடலின் மூப்பு குறித்த வயது. வயதானவர் இளமையாகத் தோன்றலாம். இளமையானவர் வயதாகத் தோன்றலாம். 3- psychological age. - ஒருவர் அவர் என்னவாக நினைக்கிறாரோ அந்த வயது. . நான் என்னை ஒரு இளைஞனாகவே எண்ணுகிறேன். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பேண வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. ம்ம்ம் இப்பதான் உங்கள் இளமையின் ரகசியம் புரிகிறது சகோ! நல்லகருத்துகள் சொல்லும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆகாஷ் !
      உங்களைப் பல நாட்களாக வலைப் பக்கம் காணோமே!
      நலம் தானே ! உங்கள் மனைவி குழந்தை எப்படியிருக்கிறார்கள்.?

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆகாஷ்.
      உங்கள் கதை இப்பொழுது தான் படித்தேன்.
      அங்கு கருத்துத் தெரிவிக்கிறேன்.


      சகோதரி,
      ராஜி.

      Delete
  5. உற்சாகமாகி யோசித்து பதிவெழுதி எங்களையும் உற்சாகப்படுத்தி விட்டீரக்ள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸாதிகா!

      உங்கள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. Very inspiring story told in your inimical style. Kudos!

    ReplyDelete
  7. நாம் வயதாவதால் விளையாடுவதை நிறுத்தி விடவில்லை. மாறாக விளையாட்டை நிறுத்தியதால் தான் வயதானவர்களாகி விட்டோம்..//

    உற்சாக ஊற்றாய் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி .
      உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.

      Delete
  8. ரோஸ்அவர்கள் சொன்னதைவிட நீங்கள் சொல்லியது மிக அருமை.கால சக்கரம் எல்லா மாற்றங்களையும் சந்திக்க சொல்லும்.முதுமையில் இளமையாய் இருப்பதெப்படி என்பதை பழகிக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,
      உங்கள் வருகைக்கும், அருமையான பாராட்டுக்கும்.

      Delete
  9. very nice recording of one's feeling. True also. spr

    ReplyDelete
    Replies
    1. Welcome sir!

      I appreciate your visit and your appreciative comments.
      thankyou.

      Delete
  10. மிகவும் அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    சிரிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும், நகைச்சுவை உணர்வு எப்போதும் வேண்டும்.

    நடைபிணமாக வாழாமல் கனவு காணவேண்டும், கற்பனை உலகை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    ஏதாவது புதிது புதிதாகக்கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
    [நாம் பதிவாவது வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்]

    எதற்காகவும் வருத்தப்படக்கூடாது.

    நல்ல பொன்மொழிகளாக உள்ளன. ;)))))
    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
    முதல் மூன்றும் நானும் ஓரளவு கடைபிடிக்கிறேன்.

    இவைகள் மூன்றையும் கடைபிடிக்க முடியாதபோது நான்காவதை என்னால் கடை பிடிக்க முடியாமல் போகிறது. அதாவது வருத்தப்படாமல் இருக்க முடிவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார்,

      நீங்கள் சொல்வது போல் நமக்கெல்லாம் வயதானால் வரும் தொல்லை நிறைய நம்மை அணுகாது என்றே எண்ணுகிறேன்.
      எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோமே.
      //[நாம் பதிவாவது வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்]//
      அதைத் தான் நாம் வஞ்சனையில்லாமல் செய்து கொண்டிருக்கிறோமே!

      திரு. அப்துல்கலாம் சொன்னதை பதிவர்களாகிய நாம் தான் கடைபிடிக்கிறோம்.(கனவு காண்பதை சொல்கிறேன்.)

      நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.

      Delete
  11. நல்ல பகிர்வு.

    ஆங்கிலத்தில் முன்பே படித்திருக்கிறேன் - மின்னஞ்சலில்! தமிழில் படித்ததில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்ஜி

      நீங்கள் சொல்வது போல் முக நூலில் வலம் வந்து கொண்டிருப்பது தான் . என்னை மிகவும் கவர்ந்தது .
      பதிவாக்கினேன்.

      Delete
  12. இது மாதிரியான விஷயங்கள் இங்கு அடிக்கடி நடக்கும்.சில வருடங்களுக்குமுன் 95 வயது பாட்டியும்,அவருடைய 21 வயது பேத்தியும் ஒன்றாக காலேஜ் முடித்தனர்.

    உடலில் ஏதாவது பிரச்சினை என்றதும் வயதுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்தினாலே இளமையுடன் இருக்கலாம் போலிருக்கிறது.உங்கள் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா, உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்

      Delete
  13. Nalla pathivu...ellaame naam ninaippathilthaan irukkirathu. Nalla vishayangalai yosiththaal vaazhkkai inikkum.

    Nice to read a positive note post! :)

    ReplyDelete
  14. புதிது புதிதாகக் கற்றுக் கொள்வது தான் வளர்ச்சி.
    நாம் வளர்வதற்கான சந்தர்ப்பங்களை நாம் தேடிக் கொண்டேயிருக்க வேண்டும்.//
    அருமையான பதிவு பகிர்வு நாமும் வளர்ச்சியை வளர்த்து கொள்வோம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நாம் புதிது புதிதாக கற்றுக் கொள்ளத் துவங்கும் போது நம்மைப் பற்றிய சிந்தனை இருக்கவே இருக்காது.

      உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி.

      Delete
  15. வாழ்நாள் இறுதி வரை எதையாவது கற்றுக்கொண்டும், உற்சாகமாகவும் ...... அந்த

    மாணவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாய் இருந்திருக்கிறார்.//

    நமக்கும் நல்ல உதாரண்மாய் இருக்கிறார். நம் உடலுக்கு தான் வயது ஆகிறதே தவிர மனதுக்கு வயது ஆகவில்லை. பதிவு எழுத கற்றுக் கொண்டோம், இன்னும் எத்தனையோ விஷயங்களை மற்ற பதிவர்களிடம் கற்றுக் கொள்கிறோம். கற்றுக் கொண்டே இருந்தால் நம் உடல் துனபங்கள் அல்லது வேறு துனபங்கள் வந்து நம்மை தொந்திரவு செய்யாது.
    இளமை ரகசியத்தை கற்றுக் கொடுத்த உங்களுக்கு நன்றி.

    அருமையான பகிர்வு ராஜி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி ,

      ஆமாம்.நீங்கள் சொல்வது போல் பதிவு எழுத கற்றுக் கொண்ட பிறகு நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது.

      இளமையின் ரகசியத்தை திருமதி ரோஸ் சொன்னதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அவ்வளவு தான்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  16. வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற தமிழ் பாடல் வரு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வாழ்ந்து பார்த்தாலே போதும் . நமக்கு இளமையின் ரகசியம் புரிந்து விடும்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  17. இளமையின் ரகசியத்தை அம்பலமாக்கியதற்கு நன்றி :) அருமையான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிநயா உங்கள் கருத்துக்கு

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்