இளம் ஆண்கள் , பெண்கள், கையில் இருக்கும் சிவப்பு ரோஜாக்கள் காதலர் தினம் இன்று என்பதை முரசடிக்கிறதோ?
அது மட்டுமா ? சாக்லேட் டப்பாவும், நுற்றுக் கணக்கான ருபாய் கொடுத்து வாங்கிய கார்டையும் , கொடுத்து காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால், ரோஜாப்பூ , வாழ்த்து அட்டை என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ,மணமான தம்பதியர் காதலர் தினம் நாள் தோறும் கொண்டாடி வருகிறோம். இது மூன்றாம் பேருக்குத் தெரியாது.
அதிகாலையில் , சுடச்சுட டிகாக்ஷன் இறங்கியவுடன் முதல் டிகாக்ஷன் தன கணவனுக்காக ,என்று எடுத்து வைத்துவிட்டுத் தான் தனக்கு காபி கலந்து கொள்ளும் மனைவியை வீடு தோறும் காணலாம்.
வேலைக்குக் கிளம்பும் மனைவிக்கு, உதவியாக இப்பொழுதெல்லாம் கணவர் சமையலிலும், குழந்தை வளர்ப்பிலும் பெரிய உதவிக்கரம்
நீட்டுகிறார்கள்.
மொடமொடக்கும் காட்டன் புடவையும், கைப்பை , சகிதமாக கிளம்பும் மனைவியை பைக்கில் பெருமையாக உட்கார வைத்துக் கொண்டு அவள் அலுவலகத்தில் , பத்திரமாக கொண்டு விடும் கணவர்கள் ஏராளம்.
தன் ருசி, இரண்டாம் பக்ஷமாகவும் கணவருக்கு பிடிக்குமே என்று சமைக்கும் மனைவியின் அன்பை என்னவென்று சொல்வது.
இருவரில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தன் துணைக்காக டாக்டர் வீட்டிற்கு அலைபவர்கள் நிறைய பேர்.
இதில் பெண்கள் ஒரு படி மேலே போய் கணவருக்காக விரதம் இருப்பது சர்வ சாதாரணம்.
புடவைக் கடையில் கணவனை உட்கார வைத்து விட்டு மனைவி புடவை செலக்ட் செய்து கொண்டிருப்பாள் . உண்மையே.
ஆனால் அதைக் கணவனிடம் காட்டி "எனக்கு நல்லாருக்குமா?"என்று கணவர் விருப்பம் தெரிந்து கொண்டு வாங்காத மனைவிகளே இல்லை எனலாம்.
கணவனும் தன் பர்ஸ் இளைப்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் மனைவியின் சந்தோஷத்தை மட்டுமே அவள் முகத்தில் தேடுவான்.
மனைவி கடையில் ஆண்கள் பிரிவில் நுழைந்து , தன் கணவருக்காக ஷர்ட் செலக்ட் செய்யும் போது விற்பனை ஆளே கொஞ்சம் கை அசந்து தான் போவான். இது கண் கூடு.
எத்தனையோ வீடுகளில் மனைவியின் திறமையை கண்டுபிடித்து வளர்க்கும் ஆசானாய் கணவன்.
சண்டையே வராதா என்கிறீர்களா? உண்டே!
ஊறுகாய் தானே தயிர் சாதத்திற்கு சுவை கூட்டும்.
ஊடலும் வாழ்க்கையை சுவையாக்கும்.
இந்த அன்பெல்லாம் அறுபது ஆனாலும், மணிவிழா முடிந்தாலும் ,
தொடரும். இந்த வயதிற்குப் பிறகு தாரமே தாயாகும் விந்தையைக்
காணலாம்.
இதிலெல்லாம் என்ன இருக்கிறது? இதைத்தான் தினம் எங்கள் வீட்டில் காண்கிறோமே என்று முணுமுணுப்பது கேட்கிறது.
இதையே தான் நானும் சொல்கிறேன்.
' ஐ லவ் யு ' சொல்லாமல் ,ரோஜா இல்லாமல் தினம் தோறும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று.
உண்மை தானே!!
image courtesy -- google.
தன் ருசி, இரண்டாம் பக்ஷமாகவும் கணவருக்கு பிடிக்குமே என்று சமைக்கும் மனைவியின் அன்பை என்னவென்று சொல்வது.
ReplyDeleteவாழ்த்துகள்...
வாருங்கள் இராஜராஜேஸ்வரி .
Deleteஆமாம் . அப்படி தானே சமைக்கிறோம்.
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
//சண்டையே வராதா என்கிறீர்களா? உண்டே!
ReplyDeleteஊறுகாய் தானே தயிர் சாதத்திற்கு சுவை கூட்டும்.
ஊடலும் வாழ்க்கையை சுவையாக்கும்.//
;))))) ஊறுகாய் அவசியம் தேவை தான்.
//இதையே தான் நானும் சொல்கிறேன்.
' ஐ லவ் யு ' சொல்லாமல் ,ரோஜா இல்லாமல் தினம் தோறும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று.
உண்மை தானே!!//
உண்மை தாங்க “ரோஜாவுக்கு பதில், வெங்காயம் + பச்சை மிளகாயை தன் மனைவிக்கு கண் எரிச்சல் ஏற்படாதவாறு தானே நறுக்கிக்கொடுத்தாலே அவளுக்கு ரோஜாவை விட “ஐ லவ் யூ” வை விட அதிக சந்தோஷம் ஏற்பட்டு விடுமே.
இருப்பினும் ரோஜாவை அழகாக அவளுக்கே தெரியாதபடி அவள் தலையில் சொருகி விட வேண்டுமாக்கும்!
சண்டை போடாத தம்பதியே பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.
Deleteநன்றி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//' ஐ லவ் யு ' சொல்லாமல் ,ரோஜா இல்லாமல் தினம் தோறும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று.// கரெக்ட்டா சொன்னீங்க! :)
ReplyDeleteநல்ல பதிவு.
நன்றி மஹி
Deleteப்ளாகர் டெம்ப்ளேட் மாற்றி இருக்கீங்க, பச்சை நிறம் அழகா இருக்கிறது.
ReplyDeleteபச்சை கலரையும் பேபி பிங்க் ஆக முயற்சி செய்தேன் பலனில்லை.
Deleteநமது காதலை வெளிப்படுத்த ரோஜாவை வெட்டி கொடுத்தும் சாக்லெட்டை வாங்கி கொடுப்பதை விட நமது இனிய சாக்லெட்தன பேச்சால் மனைவியின் முகத்தைதயே ரோஜா மலர் போல ஆக்குவதும் காதலே நானும் எனது காதலை இப்படித்தான் இன்று வரை வெளிபடுத்துகிறேன்...அப்ப அப்ப ஊறுகாயும் எடுத்து கொள்வதுண்டு
ReplyDeleteஊறுகாய் சுவையே.
Deleteஅளவோடு ஊறுகாய் சேர்ப்போம்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
''.. ஐ லவ் யு ' சொல்லாமல் ,ரோஜா இல்லாமல் தினம் தோறும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று...''
ReplyDeleteUNMAI!!!!!UNMAI!!!!happy kaathalar thinam...
Vetha.Elangathilakam.
நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.
Deleteநீங்க முதல் இரண்டு பத்திகளில் சொல்லியுள்ள சிவப்புரோஜா,சாக்லேட், கார்டு,காதலர்தினம் கொண்டாடுவது இவை நம்ம ஊரில் நடக்கிறது என்பது கேட்கவே புதிதாய் உள்ளது.
ReplyDeleteமூன்றாவது பத்தியிலிருந்து படிக்கப்படிக்க,தினமும் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதை எவ்வளவு கோர்வையாய்,அழகாய் கண்முன்னே கொண்டு வந்திருக்கீங்க!பாராட்டுக்கள்.
"ஊறுகாய் தானே தயிர் சாதத்திற்கு சுவை கூட்டும்."___ஆமாங்க,ஊறுகாய் இல்லாட்டி ஒரு துவையலாவது வேண்டும்.என்னுடைய பதிலும் உண்மைதான்.
சித்ரா, நீங்கள் february 14ஐ ஒட்டி இந்தியா வந்து பாருங்கள்.
Deleteமற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால் சென்னையில் இன்று மாலை நீங்கள் சிவப்பு ரோஜா வாங்க முடிகிறதா பாருங்கள்.
விலையோ யானை விலை. அப்படியும் கிடைக்காது.காதலர் தினக் கொண்டாட்டம் அப்படி களை கட்டும்.
'aping the west' இப்பொழுது கனகச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஊறுகாயோ, துவையலோ கொஞ்சமாக எடுத்துக் கொள்வோம்.
அது தான் நல்லது.
நன்றி உங்கள் விரிவான கருத்துரைக்கு.
ஆகா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இருவரில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தன் துணைக்காக டாக்டர் வீட்டிற்கு அலைபவர்கள் நிறைய பேர்.
ReplyDeleteஇதில் பெண்கள் ஒரு படி மேலே போய் கணவருக்காக விரதம் இருப்பது சர்வ சாதாரணம்.//
உண்மைதான் நீங்கள் சொல்வது.
//
' ஐ லவ் யு ' சொல்லாமல் ,ரோஜா இல்லாமல் தினம் தோறும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று.//
உண்மை உண்மை.
தினந்தோறும் தங்கள் வாழ்க்கைதுணையை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்வோம்.
அருமையான சிறப்புக்கட்டுரை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteஹா ஹா ஹா !!
ReplyDeleteநல்லாருக்கு சிஸ்டர்... ம்ம்ம் கலக்குங்க....
உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரரே!
Delete/ எத்தனையோ வீடுகளில் மனைவியின் திறமையை கண்டுபிடித்து வளர்க்கும் ஆசானாய் கணவன்.//
ReplyDeleteஇதோ இது அல்லவோ காதல்
super
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Delete// ஊறுகாய் தானே தயிர் சாதத்திற்கு சுவை கூட்டும்.
ReplyDeleteஊடலும் வாழ்க்கையை சுவையாக்கும்.// - அழகான உதாரணம்.ஆமாங்க கணவன், மனைவிக்குள்ளதான் நிஜமான காதலே இருக்கு. அதுல போலி கிடையாது(சில விதிவிலக்கானவர்கள் தவிர). அழகான சிந்தனை.!
ஆமாம். நீங்கள் சொல்வது போல் தம்பதிகளிடையே இருப்பது உண்மை காதலே.
Deleteஉங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி.
ஒவ்வொரு வீட்டிலும் முதிய தம்பதிகளிடையே நடப்பதை வெகு யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறீர்கள் ராஜி!
ReplyDeleteமனதிற்குள் இருக்கும் காதலை நம் செய்கைகள் மூலம் வெளிப்படுத்தி தினம் தினம் காதலர் தினமாகவே கொண்டாடுகிறோம்.
உங்களது ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அத்தனையும் உண்மை உண்மை என்றும் சொல்லிக் கொண்டே!
ஆமாம். இளைஞர்கள் கையில் ரோஜாவைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றுவதைப் பதிவாக்கிவிட்டேன்.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.