நீ என்ன லூசா? என்று கேட்காதீர்கள்.
ஆனால் அதை இங்கே வெளிநாட்டில் தினமும் கண் கூடாக பார்க்கிறேன்.
வாய் நிறைய சிரிப்பு !
" ஹாய் ! நலம் தானே! "
விசாரிப்புகள். எல்லோரும் எல்லோரிடமும்.
வெளிநாட்டவர் மட்டுமில்லை நம் இந்தியர்களிடமும் இந்தப் பாசத்தைப் பார்க்கிறேன்.
" ஆண்டி எப்படியிருக்கிறீர்கள்? "என்று ஆங்கிலத்தில் வினவ நாமும் பதிலுக்கு அவர்களை நலம் விசாரிக்க அங்கே மொழி, ஜாதி ,மதம் , மாநிலம் எல்லாம் மறந்து நாம் இந்தியர்கள் என்கிற ஒருமைப்பாட்டை கண் குளிர காண முடிகிறது.
இது வரை இந்தியாவில் மட்டுமே நம் சுதந்திர தின விழாவை பார்த்திருந்த நான் , இம்முறை அமெரிக்காவில் நம் சுதந்திர தின விழாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.
11.08.2013 அன்று நடந்த நமது சுதந்திர நாளையொட்டிய விழாவிற்கு சென்ற போது பார்த்த கூட்டம் .அப்பப்பா!..... அலை மோதுகிறது.
( இங்கு 11ந்தேதியே சுதந்திர தின விழா கொண்டாடி விட்டார்கள். 18ந்தேதியன்றும் கொண்டாடவிருக்கிறார்கள்.)
மலைக்க வைக்கிறது அவர்களின் "வந்தே மாதரம் " முழக்கம்.
அமெரிக்கர்கள் சிலர் நின்று ,வைத்த கண் வாங்காமல் இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு கர்வமாக இருக்கிறது.
இந்தியன் என்று சொல்கிறோம் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்லாமல் சொன்னது கூட்டம்.
தன் வீட்டை விட்டு, பெற்றோர், உற்றார் உறவினர்களை விட்டு , நாடு கடந்து வந்து, சுதந்திர தின விழாவை கொண்டாடுவதைப் பார்த்தால் நிஜமாகவே மெய் சிலிர்த்துப் போய் விடும்.
தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட , ' வந்தே மாதரம் ' விண்ணைப் பிளக்கிறது.
ஒருவருக்கு ஒருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி.
இளம் பெண்கள், ஆண்கள், சிறுவர் சிறுமியர், என எல்லோருமே நம் இந்திய உடைகளில் அனிவகுத்து உலா வந்து கொண்டிருந்தனர்.
பலர் கைகளில் நம் தேசியக் கொடி . பார்க்கப் பார்க்க பரவசமாகிறது நெஞ்சம்
இங்கு இருக்கும் "Oak Tree Road " செல்லும் வழி எல்லாம் " ட்ராபிக் ஜாம் ".
ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் வரை இருந்த , டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டதற்கு மகிழ்ந்தேன், நிஜமாகவே ஒரு இனிமையான அனுபவம் .
எல்லாக் கார்களிலும் இந்தியர்களே!
சுதந்திர தினம் மட்டுமில்லை, எல்லா விழாக்களுமே பெரிய அளவில் கொண்டாடி தாய் நாட்டை" மிஸ் " செய்யாமல் இருக்க பிரயத்தனப் படுகிறார்கள்.
நம் இந்தியக் கடைகளில் இந்த மாதிரி விழாக் காலங்களில் நம்மஊரில் என்னென்ன கிடைக்குமோ அத்தனையும் கிடைக்கிறது.
திரைக்கடலோடி" டாலரில் சம்பாதிக்கிறார்கள் ". உண்மை தான்.
அவர்கள் படும் பாட்டைப் பார்த்தால்.....
அதுவும் குழந்தைகளை வைத்துக் கொண்டு , ,டே கேரில் குழந்தைகளை விட மனமில்லாமல் விட்டு விட்டு,வேலைக்கு செல்லும் இவர்கள்
அக்குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை சொல்லிக் கொடுக்க ,டான்ஸ், பாட்டு, சுலோகம் என்று எத்தனை கிளாஸ்,............... அவர்களை அழைத்துக் கொண்டு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையில் வீட்டு வேலை, வெளி வேலை எல்லாவற்றையும் , உதவிக்கு யாரும் இல்லாமல் தானே செய்து கொண்டு நிர்வாகம் செய்வது ஆச்சர்யப் பட வைக்கும் ஒன்று.
Hindustan Timesஇல் வ்ந்திருக்கும் செய்தி ஆச்சர்யத்தில் என்னை ஆழ்த்தியது.
2012இல் 374080 கோடி ரூபாய் இந்தியாவிற்கு வெளி நாடு வாழ் இந்தியர்களால் கிடைத்துள்ளது. அப்பொதைய டாலர்
மதிப்பு வெறும் 53 ரூபாய்கள் மட்டுமே.இப்போதோ அது 62 ரூபாய் ஒரு டாலர் எனில் , நம் நாட்டு முன்னேற்றத்தில் இவர்கள் அனுப்பும் அந்நிய செலாவணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது தானே!
அதே பத்திரிக்கையில் ," தாய் நாட்டிற்கு இவ்வளவு பணம் அனுப்பியுள்ளவர்கல் இந்தியர்கள் மட்டுமே " என்று வெளியாகியிருக்கிறது.
இது இன்னும் பெருமை கொள்ளும் விஷயம் தானே!
தேசம் விட்டு, தேசம் வந்து, வேற்று கலாசாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல் , ஆனால் அதை மதித்து, தன் கலாசாரத்தை விடாமல் , வாழும் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு என் சல்யூட்!!!
image courtesy-----google
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
ReplyDeleteஅங்குள்ளவர்களின் நாட்டுப்பற்றும்
அரியவைகளை இழந்ததை உணர்ந்து தவிப்பது குறித்தும்
தாங்கள் பதிவு செய்தவிதம் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
தேசம் விட்டு தேசம் வந்து உழைப்பவர்களை பற்றி நன் கு உணர்ந்து பதிவில் சொல்லியமைக்கு உங்களுக்கும் ஒரு சல்யூட்
ReplyDeleteநன்றி.
Deleteசுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஒருவருக்கு ஒருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி.
ReplyDeleteவெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு என் சல்யூட்!!!
நன்றி.
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
1947 முதல் இன்று வரை அப்படி எத்தனை சுதந்திர தினங்களில் பங்கு கொண்டாச்சு ?
ReplyDeleteஎத்தனை சாக்லேட் தின்னாச்சு ?
பல தரம் நானே கொடி ஏத்தியாச்சு... வீரமாக பேசியும் ஆச்சு.
ஒரு சராசரி இந்தியனுக்கு நேர்மை, நாணயம், கடமை கட்டுப்பாடு உணர்வுகள் வந்தாச்சா ? தெரியலையே
வந்தே மாதரம்.
சுப்பு தாத்தா.
நன்றி.
Deleteசுதந்திர தின வாழ்த்துக்கள்!
வாழ்க பாரதம்!..இனிய சுதந்திரம் என்றும் வாழ்க!..
ReplyDeleteநன்றி.
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
உங்களுக்கு ஒரு சல்யூட்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி.
Deleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
தங்கள் நாட்டு விழாக்களை வேறொரு நாட்டில் கொண்டாடுவதை ஒருசில நாடுகளில்தான் பார்க்க முடியும். அதில் அமெரிக்காவும் ஒன்று.
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துகள்.
நன்றி சித்ரா.
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
சுதந்திரதின வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி.
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நாடு விட்டு நாடு போய் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள், இந்தியா வரும்போது தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்பது கூட இல்லையே, ஏன்? வெளிநாடுகளில் எல்லா இடங்களிலும் gentlemen ஆக இருக்கும் இவர்கள் இங்கு வந்ததும் குப்பைத்தொட்டியை பயன்படுத்துவதில்லையே, ஏன்?
ReplyDeleteஅந்த நாட்டின் சரித்திரத்தை படித்து பரீட்சை எழுதி அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறும் இவர்கள், நம் நாட்டின் சரித்திரத்தைப் படித்திருப்பார்களா?
சொந்த நாட்டை, இவர்களுக்குக் கல்வி தந்து இவர்களை இன்றைய நிலைக்கு உயர்த்திய நாட்டை கேவலமாகப் பேசுகிறார்களே, ஏன்?
யாருக்கோ கைகட்டி சேவகம் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள் ஏன் நம் நாட்டை முன்னேற்ற முன் வருவதில்லை?
மன்னிக்கவும் ராஜி. உங்களை வருத்தப்பட வைப்பது என் நோக்கமில்லை.
வெளிநாட்டிற்கு போய் வந்தவுடனே சிலர் ஆடும் ஆட்டம் மனதை புண்படுத்துகிறது. அதன் விளைவே இந்த காமென்ட்.
***நாடு போய் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள், இந்தியா வரும்போது தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்பது கூட இல்லையே, ஏன்? ***
Deleteநான் எல்லாம் ஆகஸ்ட் 15 கொண்டாடுவதில்லை. ஜூலை 4 தான். :)
***வெளிநாடுகளில் எல்லா இடங்களிலும் gentlemen ஆக இருக்கும் இவர்கள் இங்கு வந்ததும் குப்பைத்தொட்டியை பயன்படுத்துவதில்லையே, ஏன்?***
few rotten apples spoil the barrel. :) Most of them try look for one garbage can but..
***அந்த நாட்டின் சரித்திரத்தை படித்து பரீட்சை எழுதி அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறும் இவர்கள், நம் நாட்டின் சரித்திரத்தைப் படித்திருப்பார்களா?**
They spend only few hours to study the american history/govt. trust me, please.
***சொந்த நாட்டை, இவர்களுக்குக் கல்வி தந்து இவர்களை இன்றைய நிலைக்கு உயர்த்திய நாட்டை கேவலமாகப் பேசுகிறார்களே, ஏன்?
யாருக்கோ கைகட்டி சேவகம் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள் ஏன் நம் நாட்டை முன்னேற்ற முன் வருவதில்லை?***
Well, just like our daughters-in-law .. புகுந்த வீடுதான் தன் வீடு..
ரஞ்சனி,
Deleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
வருண் சார்,
Deleteநன்றி.
இனிய சுத்ந்திர தின வாழ்த்துக்கள்.
நான் சொல்ல வருவதை வரூண் சொல்லிவிட்டார்.
Delete//யாருக்கோ கைகட்டி சேவகம் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள் ஏன் நம் நாட்டை முன்னேற்ற முன் வருவதில்லை?**//
யாருக்கோ சேவகம் செய்ய வந்தவர்களுக்கு அவர்களை கவனிக்கவே நேரம் கிடைப்பத்தில்லையே அப்ப்டி இருக்கும் போது அவர்களாள் எப்படி நாட்டை முன்னேற்ற வைக்க முடியும்.
//வெளிநாட்டிற்கு போய் வந்தவுடனே சிலர் ஆடும் ஆட்டம் மனதை புண்படுத்துகிறது. // ரஞ்சனி மேடம், உங்க கருத்திலேயே உங்கள் கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது. சிலவருடம் வெளிநாட்டுக்குப் போய்வந்தவர்களில் சிலர் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அதற்காக மொத்தமாக எல்லாரும் இப்படித்தான் என்ற முடிவுக்கு தயவு செய்து வந்துராதீங்க.
Deleteபாதியிலேயே கை தவறி கமெண்ட்டை பப்ளிஷ் பண்ணிவிட்டேன். :) தொடர்கிறேன்.
Delete//யாருக்கோ கைகட்டி சேவகம் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள் ஏன் நம் நாட்டை முன்னேற்ற முன் வருவதில்லை?// இந்தக் கேள்வியும் மிகவும் பொதுவான கேள்வி! பெரும்பாலான அமெரிக்கவாழ் இந்தியர்கள் இந்திய மென்பொருள் கம்பெனிகள் மூலம் இங்கே வந்து, அவர்களுக்காகவே வேலை பார்ப்பவர்களே! மேலும் இங்கிருக்கும் இந்தியர்கள் வருமானத்தில் பெரும் பகுதி இந்தியாவுக்குத்தானே வருகிறது? குடும்பச் செலவுகளுக்கு, வீடு வாங்க, ஃப்ளாட் வாங்க, இடம் வாங்க, தோட்டம் வாங்க என்று NRI பணம் இந்தியாவுக்கு வருவதும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே! இதுவும் இந்திய முன்னேற்றத்துக்கு ஒரு காரணி அல்லவா?
//இந்தியா வரும்போது தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்பது கூட இல்லையே, ஏன்?
சொந்த நாட்டை, இவர்களுக்குக் கல்வி தந்து இவர்களை இன்றைய நிலைக்கு உயர்த்திய நாட்டை கேவலமாகப் பேசுகிறார்களே, ஏன்?// நாட்டுப்பற்றில்லாத இந்தியர்கள் இந்தியாவிலும் உண்டு, நாட்டுப்பற்றுடன் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் உண்டு. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போலதான் இது!
குறைகுடம் கூத்தாடும் என்பது போல இங்கே வந்து ஒரு சிலநாட்கள் தங்கிவிட்டு நாடு திரும்பும் ஆட்கள் இப்படிச் செய்வார்களோ என்பதே என் ஐயம். மற்றபடி பெரும்பாலானோர் உங்கள் அங்கலாய்ப்புக்கு அப்பாற்பட்டவர்கள்தான், அதனால்தான் இப்படி விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்! :)
ரஞ்சனி மேடம், உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது, நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுபக்கமும் உண்டு. நீங்க அந்தப் பக்கத்தையே பார்க்காம கொஞ்சம் இந்தப்பக்கம் திருப்பியும் பாருங்கோ! :) :)
விளக்கத்திற்கு நன்றி மகி.
Deleteஅந்தப்பக்கம் இந்தப்பக்கம் இரண்டையும் நிறைய பார்த்துவிட்டேன். எங்கள் இளைய தலைமுறையில் நிறைய பேர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.அவர்களைப் பற்றியே நிறைய எழுதலாம். வேண்டாம் என்று பார்க்கிறேன்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎப்படிங்க அந்த ஓரத்தில நீங்க கொடிய பிடிச்சிட்டு நின்றீர்கள்?
சிறப்பான பதிவு
உங்கள் முதல் வ்ருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Delete//எப்படிங்க அந்த ஓரத்தில நீங்க கொடிய பிடிச்சிட்டு நின்றீர்கள்?//
அந்தக் கொடியின் மீது க்ளிக் செய்தீர்கள் என்றால் புரியும் நான் எப்படி கொடியை பிடித்துக் கொண்டு நிற்கிறேன் என்று.
நன்றி. மேண்டும் வருக.
சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Deleteஇந்தியாவின் அருமை பெருமைகளை உணர்ந்து மதிக்குறதும், இந்திய கலாச்சாரத்தை காப்பதிலும் வேளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான் முதலிடம். நாங்கலாம் பிற்பாடுதான்.
ReplyDeleteநன்றி ராஜி!!
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சிறப்பான பகிர்வு......
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....
நன்றி!
Deleteஉங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவெளிநாட்டில் ஒருவருக்கு ஒருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சிதான்.
அவர்களுக்கு என் ராயல் சல்யூட் !
மிக்க நன்றி வைகோ சார்!
Deleteஇனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்
அருமையானதொரு அனுபவப் பகிர்வு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தோழி.
ReplyDeleteநன்றி தமிழ் முகில்.
Deleteஎளிதில் கிடைக்காத எதுவுமே மனதுக்கு அருகாகி விடுகிறது. உள்நாட்டில் இருப்போர் உணரும் சுதந்திரதினப் பெருமைகளை விட, வளர்க்கும் கலைகளை விட, பேசும் தமிழைவிட வெளிநாட்டில் இருந்துகொண்டு தாய்நாட்டை மிஸ் செய்யும் சகோதர, சகோதரிகளால் கலாச்சாரமும் பண்பாடும் வளர்வது உண்மைதான். நானும் இதைப் பலமுறை உணர்ந்துள்ளேன்.
ReplyDeleteநானும் நீங்கள் சொன்னபடியே உணர்ந்ததால் இந்தப் பதிவு வெளியிட்டேன்.
Deleteஉங்கள் வருகைக்கும், என்னைப் புரிந்து கொண்டு பாராட்டியதற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.
//வெளிநாட்டவர் மட்டுமில்லை நம் இந்தியர்களிடமும் இந்தப் பாசத்தைப் பார்க்கிறேன்.// வரவேற்கத்தக்க மாற்றம் இது! நான் இங்கு வந்த புதிதில் [ஏன் இப்பொழுதும் கூடத்தான்!!] வெளிநாட்டவர்கள் புன்னகையுடன் முகமன் கூறுவார்கள். நம்மவர்கள் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கடந்து போவார்கள். பலபேரிடம் புன்னகை செய்து பல்பு வாங்கிருக்கேன்! ;))))
ReplyDeleteஎன் கணவர் சிரிக்காமல் சொல்லுவார், அடுத்த முறை வாக் போகையில் கையில் $10 எடுத்துப் போகணும், எதிர்ப்படும் இந்தியர்களிடம் "பத்து ரூபா தரேன், கொஞ்சம் சிரிங்க" என்று சொன்னாலாவது சிரிப்பாங்களா என செக் செய்யணும் என்பார்!! :))))
மே பி, நியூ ஜெர்ஸியில் நட்பான ஆட்கள் அதிகமோ? :) ;)
நல்ல பதிவு.
நன்றி மஹி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Delete