Thursday 24 October 2013

டெடியும் வெங்காயமும்


நேற்று  சூப்பர்  மார்கெட் சென்றிருந்தேன். .மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டே, காய்கறி செக்ஷனில் சில காய்கறிகளை எடுத்துத்  தள்ளு வண்டியில் வைக்கும் போது "வீட்டில் வெங்காயம் தீர்ந்து விட்டதே"நினைவிற்கு வர  வெங்காயம் எடுத்து கவருக்குள் போடப்போனேன் .

தடுத்த என் கணவர்," எதற்கு வெங்காயம்?"என்றார்.

" சட்னிக்குத் தான் "

" சட்னிக்கு வெ......ங்........கா........யமா? . "

" சாப்பாட்டின் விலையே  ஐந்து ரூபாய் தான் .  ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார்.  அந்த சாப்பாடு எந்த ஹோட்டலில்  என்று விசாரித்து  சாப்பாடே ,   சாப்பிட்டு விடலாம். வெங்காயம் மட்டும் வேண்டாம்."என்று  என் கணவர் சொல்ல

" கால் கிலோ வாங்கிக் கொள்கிறேனே ."  நான் கெஞ்ச

"நீயென்ன அம்பானியின்  உறவு என்கிற நினைப்போ?
பேசாமல் ' பாதாம் பருப்பு 'வாங்கி சட்னி செய். அது போதும் " என்று அதட்ட நானும் வெங்காயத்தைப் பிரிய மனமில்லாமல் (கண்ணில் நீருடன்) நகர்ந்தேன்.

அப்பொழுது  " மிஸ் ,,,எப்படி இருக்கிறீர்கள் ? " பின்னாலிருந்து வந்த  குரல்  என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
என்னிடம் படித்த மாணவி கல்யாணி. தான்  என்னைக் கூப்பிட்டாள் .

' கல்யாணி  எப்படி இருக்கிறாய் ' குசலம் விசாரித்தேன்.
இரு குழந்தைகளின்  தாய் அவள்.. அவள் கணவருக்கு  என்னை அறிமுகப் படுத்தி வைக்கும் போது ," இவர்கள் என் டீச்சர். கொஞ்சம்  ஸ்டிரிக்ட்
தான். "
பின் என்னைப் பார்த்து , " ஆனால் அது தான்  நல்வழிப் படுத்தும்   என்னும்  பெரிய உண்மை  நான் தாயான பின் தான் எனக்குப் புரிந்தது ." என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேச  கடையிலிருந்த ஓரிருவர் என்னையும்,என் மாணவியையும்   ஒரு சில நிமிடங்கள் கவனிக்க  ,எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ,என் மாணவி  போய் விட்டாள்.ஆனால்  நான்  பழைய நினைவுகளில்  ஆழ்ந்து கொண்டிருப்பதை கவனித்த என் கணவர்  என்னைத் தோளில் தட்டி  சுயநினைவிற்குத் திருப்பினார்.

என் மனதிற்குள் நான்  ஆசிரியையாய்  பணியாற்றிய  நினைவுகள் மட்டுமல்ல என் ஆசிரியர்களும்  நினைவில் வந்து போனார்கள்.

'A Teacher is a Second Mother ' ஒவ்வொரு  ஆசிரியையும் தாய்க்கு சமமானவள்  தான் . மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.


இது சம்பந்தமான ' Mom At School 'காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாருங்கள் . கேளுங்கள் .
உங்களுக்கு பிரியமான உங்கள் ஆசிரியர் கண்டிப்பாக நினைவிற்கு வருவார்.
நினைவிற்கு வரும் ஆசிரியர் பெயரைப் பின்னூட்டத்தில்  குறிப்பிட மறக்க வேண்டாம். அத்துணை  ஆசிரியர்களுக்கும்  என் வணக்கங்கள்.
காணொளி  இங்கே


அது என்ன " டெடியும் வெங்காயமும் " என்று தலைப்பு என்று கேட்கிறீர்களா.?
கானொளியில்  நீங்கள் கேட்ட டெடியைப்பற்றியும் சூப்பர் மார்கெட்டில்  நான் பார்த்த  (வாங்காத)   வெங்காயத்தைப்  பற்றியும்  தானே எழுதியிருக்கிறேன்.
இரண்டுமே  கண்களைக்  குளமாக்கின.
அதனால் தான் இது " டெடியும்  வெங்காயமும்."

image courtesy--google.
video  courtesy-- you tube.

51 comments:

  1. ஆர் ஜே எர்னஸ்ட் - எனக்கு உடனே நினைவுக்கு வந்த என்னுடைய ஆசிரியர் பெயர். கண்ணில் நீரை வரவழைப்பது வெங்காயம் மட்டுமில்லை சில பழைய நினைவுகளும்தான்!! :))))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசிரியருக்கு வணக்கம் .காநோளியைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. அதுவும் கண்களை குளமாக்கியிருக்குமே!
      நன்றி உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும்.

      Delete
  2. டெடியும் வெங்காயமும்."

    டெடிக்கேட்டட் டூ வெங்காயம்...!

    ReplyDelete
    Replies
    1. ஹா,,,,,,ஹா,,,,,,,ஹா,,,,,,,,
      நன்றி.

      Delete
  3. சின்ன வெங்காயம் திருச்சியில் கிலோ நூறு ரூபாய் விற்கிறது. இது நேற்றைய விலை. இன்று எப்படியோ! ..... போய்க் கேட்டால் தான் தெரியும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நூறு ருபாயா? மயக்கமே வரும் போலிருக்கிறது விலை.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  4. //நினைவிற்கு வரும் ஆசிரியர் பெயரைப் பின்னூட்டத்தில் குறிப்பிட மறக்க வேண்டாம். //

    ஒன்றாம் வகுப்பு: பட்டம்மா டீச்சர் [மடிசார் புடவையுடன்]

    இரண்டாம் வகுப்பு: லெக்ஷ்மண வாத்யார்

    மூன்றாம் வகுப்பு: கந்த சுப்ரமணிய வாத்யார்

    நான்காம் வகுப்பு: ஐயங்கார் வாத்யார்

    ஐந்தாம் வகுப்பு: நாடார் வாத்யார்

    >>>>>

    ReplyDelete
  5. ஆறாம் வகுப்பு: N. சுந்தரம் வாத்யார்

    ஏழாம் வகுப்பு: பட்டாபிராமன் சார்

    எட்டாம் வகுப்பு: S.M. பசுபதி ஐயர்

    ஒன்பதாம் வகுப்பு: V. துரைராஜ் வாத்யார்

    பத்து + பதினொன்றாம் வகுப்புகள்: R. ஸ்ரீனிவாஸன் என்பவர் [ஆர்.ஸ்ரீ]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹப்பா ....மூச்சு வாங்குதே !
      இத்தனைப் பெயர்களும் நீங்கள் உங்கள் ஆசிரியர்களின் மேல் வைத்திருக்கும் பிரியத்தையும், மரியாதையையும் காட்டுவதோடு, உங்கள் மேலுள்ள மதிப்பும் கூடுகிறது வைகோ சார்.
      உங்கள் ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்.
      நன்றி வைகோ சார் உங்கள் கருத்துக்கு.

      Delete
  6. பாதாம் பருப்பில் சட்னியா!? ரொம்ப லொள்ளுதான் உங்களுக்கு!!

    ReplyDelete
    Replies
    1. பின்னே பாதாம் பருப்பின் விலையைத் தாண்டிடும் போலிருக்கிறதே வெங்காயத்தின் விலை.
      நன்றி ராஜி உங்கள் கருத்துக்கு.

      Delete
  7. இவர்கள் அனைவரையும் பற்றியும், மேற்கொண்டு நான் திறந்தவெளி பல்கலைக்கழங்கள் மூலம் மூன்று பட்டங்கள் வாங்கியதைப்பற்றியும், மிகவும் சுவாரஸ்யமாக நான் ஏற்கனவே என் “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தொடர் பதிவினில் எழுதியுள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    7+1=8 பகுதிகள் மட்டுமே. ஆசிரியராக இருந்துள்ள தாங்கள் அவசியமாகப்படித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்துச்சொல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அவசியம் படிக்கிறேன்,வைகோ சார். படித்து கருத்திடுகிறேன்.
      நன்றி உங்கள் மீள் வருகைக்கு.

      Delete
  8. Replies
    1. thankyou for your first visit and appreciating it.
      Please do come again to my blog and ofcourse please give your comments and suggestions.
      thankyou

      Delete
  9. பதிவும், பகிர்வும், காணொளியும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    'A Teacher is a Second Mother ' ஒவ்வொரு ஆசிரியையும் தாய்க்கு சமமானவள் தான் ;)

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் அடுத்தடுத்த வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  10. இருப்பினும் நேற்று கால் கிலோ சின்ன வெங்காயம் ரூ 25 கொடுத்து வாங்கி வந்தேன். அழகாக உரித்தும் கொடுத்தேன்.

    அப்படியே வற்றல் குழம்பில் போட்டார்கள். தொட்டுக்கொள்ள நிறைய தேங்காய் துருவல் + பச்சை நிலக்கடலை போட்ட வாழைப்பூ கூட்டு. ஆனந்தமாக சாப்பிட்டு மகிழ்ந்தோம். பணம் இன்று போகும் ... நாளை வரும்.

    வெங்காய வற்றல் குழம்பு, நல்லெண்ணையை ஊற்றி, பிசைந்து சாப்பிடுவது இன்று போனால் நாளை வருமா? வரவே வராது என்பது என் அபிப்ராயம். ;)))))

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,
      பதிவிற்காக எழுதியது தான். சாப்பாட்டில் போய் என்ன சிக்கனம் வேண்டியிருக்கு.
      இன்று கூட எங்கள் வீட்டில் மாலை என்ன டிபன் என்று நினைத்தீர்கள்.
      வெங்காய பஜ்ஜி தான் சார்.
      உங்கள் வற்றல் குழம்பு படித்ததும் , நாளை வற்றல் குழம்பு செய்ய தீர்மானித்து விட்டேன்.

      Delete
  11. அருமையான காணொளி
    எனக்கும்
    மும்தாஜ்
    சுப்ரமணியம்
    ஆசிரியர்கள் நினைவுக்கு வந்து போகிறார்கள்
    அவர்கள் குறித்த நினைவுகளில் சில நேரம்
    மூழ்கிப் போகும்படியான காணொளிப்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    (நாங்களும் மிடில் கிளாஸ்தான் ஆகையால்
    கொஞ்ச நாள் பாதம் சட்னியோடு
    இட்லி தின்னப் பழகிக் கொண்டோம் )

    ReplyDelete
    Replies
    1. யங்கள் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
      //(நாங்களும் மிடில் கிளாஸ்தான் ஆகையால்
      கொஞ்ச நாள் பாதம் சட்னியோடு
      இட்லி தின்னப் பழகிக் கொண்டோம் )///
      ஹ....ஹா...ஹா...
      நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  12. உண்மைதான் - ஆசிரியப் பெருமக்கள் - மற்றொரு - பெற்றோர்!..

    நீங்கள் கேட்டிருந்தபடி - எனது ஆசிரியப் பெருமக்களை - இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் . தயவு செய்து வாசிக்கவும்!..

    http://thanjavur14.blogspot.com/2013/09/

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை' சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்கள் பதிவிற்கு சென்று படித்து இடுகிறேன்.
      உங்கள் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்.

      Delete
  13. டெடியையும் வெங்காயத்தையும் கண்ணீரால் இணைத்த உங்களது திறமையைக் கண்டு மூன்றாவது முறை கண்ணீர் (ஆனந்தக்கண்ணீர் தான்!) வடித்தேன்.

    எனக்கு எங்கள் தலமைஆசிரியர் திருமதி ஷாந்தா நினைவுக்கு வந்தார். அவர் பின்னால் மற்ற எல்லா ஆசிரியர்களும்!

    வெங்காயம் அதிகம் பயன்படுத்துவதில்லை அதனால் கண்ணீரும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தலைமை ஆசிரியருக்கும் மாறர் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
      உங்கள் வருகைக்கும், என் திறமையை பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ரஞ்சனி.

      Delete
  14. அருமையான காணொளி வெங்காயம் உரிக்காமல் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.
    முதல் வகுப்பில் இருந்து திறந்தவெளி பல்கலைகழகத்தில் படித்தவரை எனக்கு பிடித்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் வை,கோ சார்ப்பொல்.
    ஜானகி டீச்சர், உமா டீச்சர், பிரேமா டீச்சர். ஞானஒளி டீச்சர் மிக மிக முக்கியமான அன்பான டீச்சர்கள்.
    அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பான வணக்கம், உங்களுக்கும் சேர்த்து.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் என் நன்றிகள் கோமதி.
      உங்கள் ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்.
      அந்தக் காணொளி கண்டு என் கண்களும் குளமாயின.
      நன்றி.

      Delete
  15. /," இவர்கள் என் டீச்சர். கொஞ்சம் ஸ்டிரிக்ட்
    தான். "/ நம்ப முடியவில்லை.......!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், படித்து கருத்திட்டதற்கும் நன்றி GMB சார்.

      Delete
  16. கண்ணீருடன் செல்கிறேன்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  17. காணொளி லோட் ஆகவில்லை! என் இணைய இணைப்பு ஸ்லோவாக உள்ளது! வெங்காயம் விலை உச்சிக்கு அல்லவா சென்று விட்டது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இணைய இணைப்பு சரியானதும் அவசியம் பாருங்கள் காணொளியை , சுரேஷ் சார்.கண்ணில் நீர் வரவழைத்து விடும்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  18. பாதாம் பருப்பு சட்னி.... வாவ். ரொம்ப சீப்பா இருக்கும் போல இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. சமீபத்திய வெங்காய விலைகளுடன் ஒப்பிடும் போது,பாதாம் சீப்பாகி விடும் தானே!
      நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  19. மடிப்பாக்கத்தில் இன்றைய வெங்காய விலை ரூ.50/-
    தக்காளி ரூ.56/-

    இரண்டும் ஒவ்வொரு கிலோ வாங்கியிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவிற்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள். தக்காளியை வைத்து எழுதி விடுகிறேன். எல்லோரையும் இம்சிக்க இலவச ஐடியா கொடுப்பீர்கள் போலிருக்கிறதே.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  20. பேசாமல் ' பாதாம் பருப்பு 'வாங்கி சட்னி செய். அது போதும் " என்று அதட்ட நானும் வெங்காயத்தைப் பிரிய மனமில்லாமல் (கண்ணில் நீருடன்) நகர்ந்தேன்
    -----------
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பாண்டியன் .
      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி .

      Delete
  21. முன்னால வெங்காயம் உரிச்சாதான் கண்ணிர் வரும் ஆனால் இப்போ இந்தியாவில் உள்ளவர்களுக்கு வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறதாமே?

    வழக்கம் போல பதிவு அருமை

    ReplyDelete
    Replies
    1. நான் போன மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் போதே என் மாப்பிள்ளை என்னிடம்,,"வெங்காயம் வாங்கிக் கொண்டு போங்களேன் " என்று சொன்னார். நான் தான் வாங்காமல் வந்து விட்டேன்.
      என்ன செய்வது !
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி MTG

      Delete
  22. வெங்காய சட்னிக்கு நீங்க படும்பாட்டை நினைத்து எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது. எப்படிங்க 'பாதாம் பருப்பு' சட்னிக்கு ஐடியா வந்தது !!

    உங்கள் ஆசிரிய,மாணவி உறவும், 'டெடி' காணொளியும் மனதில் பதிந்துவிட்டன‌.

    ReplyDelete
    Replies
    1. என் கணவரின் இதயத்திற்கு நல்லது (அங்கு இருப்பது நான் தானே . அந்த அக்கறை தான்) என்று தான் பாதாம்பருப்பு சட்னி செய்வதுண்டு .உடனே பாதாம் பருப்பிலேயே என்று நினைக்க வேண்டாம். பெயர் தான் பாதாம் சட்னி. ஆனால் பொட்டுக் கடலையுடன் ஒரு நான்கைந்து பாதாம் போடுவேன். அவ்வளவு தான் சித்ரா.
      ஆசிரிய மாணவி உறவு மிகவும் பலம் வாய்ந்தது. ஓய்வு பெற்ற பின்னும்
      தொடரும் உறவல்லவா அது. அதனால் தான் உங்கள் மனதில் பதிந்து விட்டது .
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்..

      Delete
  23. கரெக்ட் மதுரைத் தமிழன்! வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர்தான் வருகிறது இப்போது! ஒரு வெங்காயத்தைக ண்ணால் பார்த்தோ, மூககருகில் வாசனை பிடித்துக கொண்டோ சாப்பிட்டுவிட வேண்டும போலிருக்கு. ஹி... ஹி...! என் பள்ளிக்கால ஆசிரியர்கள் நினைவை வரவழைச்சுட்டீங்க டீச்சர் உங்கள் எழுத்தின் மூலம்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பள்ளிக்கால ஆசிரியர்கள் பெயர் எழுதியிருக்கலாமே!
      உங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உரித்தாகுக!
      நன்றி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.

      Delete
  24. என்னது ? ஒன்பது ரூபாயா ? திடீர் னு எப்படி இவ்வளவு சீப் ஆகிவிட்டது
    சரி சரி, ஒரு கிலோ போடு என்றேன்.

    சார்...ஒரு கிலோ ஒன்பது ரூபாய் இல்லை.
    ஒரு வெங்காயம் ஒன்பது ரூபாய்.

    இன்னிக்கே வாங்கிட்டு போயிடுங்க..

    என்றார் அந்த மலிவு விலை கடைக்காரர்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஒரு வெங்காயம் பத்து ரூபாய்க்கும் விற்றதாக கேள்வி.
      கானொளியில் இருந்த டெடியைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
      நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  25. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  26. கண்களில் நீர் திரள்கிறது தோழி. எனது மாணவப் பருவமும், எனது ஆசிரியப் பணிக் காலமும் கண்களின் முன் நிழலாடின. எனக்கு கணிதப் பாடம் கற்பித்த என் தாய் தொடங்கி, எனது ஆங்கில ஆசிரியர் திரு.வரதன் அவர்கள், எனது தமிழ் ஆசிரியர் திருமதி.சரோஜா அவர்கள், எனது இயற்பியல் ஆசிரியர் திரு.ரகுநாதன் அவர்கள், எனது வேதியல் ஆசிரியர் திரு. சங்கரன் அவர்கள், எனது உயிரியல் ஆசிரியர் திருமதி.மனோரமா அவர்கள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் காணொளி கண்னில் நீர் வரவழைத்தது. எனக்குப் பாடம் கற்றுக் கொடுத்த அனைவரும் என் நினைவில் வந்து மோதினார்கள். அத்தனை ஆசிரியர்களுக்கும் , உங்கள் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
      நன்றி தமிழ்முகில் உங்கள் கருத்துக்கு

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்