Sunday 20 October 2013

குடைக்குள்..................




குடைக்குள்  குழல்.

இது என்ன குழல் ?.........

கோவர்த்தனகிரி  பற்றியோ?

 இல்லை

மாயக் கண்ணனின் புல்லாங்குழலா?  வேய்ங்குழலா?.....என்று யோசிக்க  வேண்டாம்.

நானே....நானே சொல்லி விடுகிறேன்.......

தேங்குழல் .

என்னவர் கொஞ்சம் " நொறுக்ஸ் " பிரியர்  . அவருக்காக  என்ன முறுக்கு செய்யலாம், என்று யோசித்ததில்  சட்டென்று  மின்னலடித்தது ,போன வாரம் தேங்குழல்  மாவு  மெஷினில் அரைத்து வைத்தது  பற்றிய  நினைவு .

காலரைக்காபடி  மாவு எடுத்து , கச்சிதமாய் எள்ளு சேர்த்து , பெருங்காயம், உப்பு, சேர்த்து   பிசைந்து  முறுக்கு அச்சில்  போட்டு  எண்ணெயில் பிழிய  ஆரம்பித்தேன். ஒவ்வொரு தேங்குழலும்  என்னை எடுத்து விடேன் என்று கெஞ்சுவது போல்  குதித்து,குதித்து  மேலே வந்து   வந்து  தான் வெந்து விட்டதை பறை  சாற்றியது. அதை எடுத்துக் கொண்டிருக்கும் போதே  என்னவர் வந்து  ஒரு முறுக்கு  சுடச்சுட  எடுத்து வாயில் போட்டு "தேங்குழலென்றால்  அது நீ செய்தால் தான்  சுவை....... கர கரவென்று  என்று  வாயில் போட்டவுடன்  கரைகிறது "எனக்கு    பட்டம்  அளித்து விட்டு சென்றார்.

இது இன்றைய நிலைமை.
சில பல  வருடங்களுக்கு முன்பாக ...........இருங்கள்......... உடனே பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  என்று நினைத்துக் கொண்டு என்னை வயதானவளாக்கி விடப் போகிறீர்கள். முன்பே  ஒரு பதிவில் சொன்னது போல் , இளமையின் வாயிற்படியில்  நிற்கும் பாட்டி நான்.

ஜஸ்ட் , முப்பத்தைந்து  வருடங்கள் முன்பு நடந்தது  நினைவிற்கு வந்து முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
திருமணமாகி  இரண்டு வருடமிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித் தான்  தேங்குழல்  செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தேன்
அப்பவே என்னவர் " எதற்கு ரிஸ்க்  எடுக்கிறாய். நான் வேண்டுமானால் கடையிலிருந்து  வாங்கி வந்து விடுகிறேனே" என்று  சொல்ல ,

எனக்கும்  சரி  என்று சொல்ல ஆசையிருந்தாலும் , என் சுயமரியாதை  என்னாவது  " எல்லாம் எனக்கு செய்யத் தெரியும்.நான் செய்து கொடுக்கிறேன் பாருங்கள் " என்று வீறு கொண்டு எழுந்தேன்
"எப்படியோ போய்த் தொலை "  என்று சொல்லி விட்டு  அவர் ஆபிசிற்கு சென்று விட  ,அன்று மாலையே  .........(விதி  சமையலறையில் புள்ளி வைத்து கோலம் போட்டு  விளையாடப் போவது   தெரியாமல்)  தேங்குழல்  பிழிய  ஆரம்பித்தேன்.

அதன்  விளைவு......அவர்  மட்டும் தான் மாட்டிக் கொண்டார் என்று இது நாள் வரை  நினைத்திருந்தேன்.இப்பொழுது  தான் புரிகிறது . நீங்களும்    கூட  என்னிடமிருந்து தப்பிக்க வில்லை என்று.(பதிவாக்கி விட்டேனே அதை சொல்கிறேன்.)

அரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரியான  விகிதத்தில்  சேர்த்து ,அம்மா அரைத்து கொடுத்திருக்கிறார்களே.  இதில் என்ன பெரிய  டெக்னிக்  இருந்து விடப் போகிறது  என்ற அசால்ட்டுடன்   வேலையை ஆரம்பித்தேன்.
(இந்த  " நினைப்பு தான்  பிழைப்பைக் கெடுக்கும்  "என்று சும்மாவா  சொன்னார்கள்  ).

சுடச்சுட  காபி ஒன்றைக் குடித்து விட்டு , அரைப்படி மாவு   எடுத்து  பாத்திரத்தில் போட்டு விட்டு,  இதில் எவ்வளவு உப்பு போடலாம்  என்று  யோசனையான யோசனை செய்து ( what's app இல்லை,
skype இல்லை, இ  மெயில் இல்லை,  செல்போன்  இல்லை, ஏன்  வீட்டில்  டெலிபோன் வசதி  கூட  இல்லாத  காரணத்தால் )  நானே  முக்கியமான முடிவை எடுத்தேன்.(அதாங்க  எவ்வவளவு உப்பு என்கிற முடிவு)  கண்ணளவு  உப்பு ,பெருங்காயம்,  எள்ளு சேர்த்து  தண்ணீர் விட்டுப் பிசைந்து  முறுக்கு அச்சில் போட்டு  துளியூண்டு  மாவு எடுத்து , எண்ணெயில் போட்டு  காய்ந்திருக்கிறதா  என்று பார்த்தேன்.(இதெல்லாம் சரியாக செய்து விடுவேன்)

பின்  பிழிய  ஆரம்பித்தேன்........ம் ம் ம் ம் ம் ........அழுத்தினதில்   அச்சே உடைந்து விடும் போல் இருக்கிறது. ஆனால் தேங்குழல்  வரவில்லை.
 கொஞ்சமாய் சிறிது தண்ணீர் கலந்தேன்.   .
 ஆனால் மாவு  கொழ கொழ  என்றாகி விட்டது.
சரி, கொஞ்சம்  மாவு போட்டால் கெட்டியாக்கி விடலாம்  என்று கொஞ்சம் மாவு சேர்த்தேன்.
இப்படி குரங்கு,அப்பம் கதையாய் ,  ஒரு வழியாய்  மாவை சரி செய்து
பிழிய ஆரம்பித்தேன்.  நன்றாக அழகாய்  சிறு சிறு  முறுக்குகளாய் வந்தது.
பார்க்க மிக மிக அழகாய்  மேலெழும்பப் பார்த்தது.

திடீரென்று  "பட் "  என்று ஒரு சத்தம்.

என்னவென்று திரும்பிப் பார்ப்பதற்குள்  அடுத்த" பட்  ."

கொஞ்ச நேரத்தில் மீண்டும்" பட் ...... பட்........  பட் ".
தேன்குழல்  தான்  ஊசி பட்டாசாய்  வெடித்துக் கொண்டிருந்தது.

பயத்தில்  என்ன செய்வதேன்றே  தெரியவில்லை. சரி சட்டென்று  ஸ்டவ்வை குறைத்தேன்.
வீட்டில் வேறு யாருமில்லை. திரு.....திரு... முழியுடன்  சமையலறையில்   நான்.......
ஒரு வேளை மாவு ஊற   வேண்டுமோ?  . ஒரு பதினைந்து நிமிடம்  கழித்து  மீண்டும் இந்த  வேலைக்குத் திரும்பினேன்.

மீண்டும் "பட் ......பட் .......பட் .......".
இதற்குள் சமையலறை முழுவதும்  எண்ணெயில் புள்ளியாய் .(கோலம் தான் பாக்கி) எங்கே காலை
வைத்தாலும்   ஒரே" பிசுக் பிசுக் ".

எப்படியும் இத்தனை மாவையும்  முறுக்காக்கி தானே  ஆக வேண்டும்.
வீணாக்க  மனம் வரவில்லை/
என்ன தான் செய்வது?

யோசித்தேன்.
எண்ணெய்  தெளிக்காமல் இருந்தால் போதும். என்  மாமனாரின் ' மான் மார்க் ' குடை  நினைவிற்கு வந்தது.
சட்டென்று அதை எடுத்து பிரித்து  என்னருகே வைத்துக் கொண்டேன்.
பின்  முறுக்கு  பிழிந்தேன். என்னிடமா வேலை காட்டுகிறாய்.........தேன்குழலே ......என்று  குடையை வாணலிக்கு மேல் உயரத்தில்  பிடித்துக் கொண்டேன். இப்பொழுது சுளீரென்று  என்கையில் ஒரு சொட்டு . ஆனால்  சமையலறை  சுவர், தரை  எல்லாம்  ஓரளவிற்கு தப்பியது.(மான் மார்க் குடை காரர்களுக்கு இது தெரிந்தால்  தேங்குழல்  செய்யப் போகிறீர்களா? வாங்குங்கள் எங்கள் மான் மார்க் குடையை என்று  விளம்பரப் படுத்தியிருப்பார்கள்).)
அப்புறம் கையில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு ,குடையைப் பிடித்துக் கொண்டு  ஒரு பாதி மாவை  முறுக்காக்கி விட்டேன்.

எனக்கே என்னைப் பார்க்க  பாவமாய் இருந்தது.

" டிங்...டாங் "

என்னவர் வருகை. 
" ஒரே வாசனை அடிக்கிறதே  தேங்குழல்  செய்து விட்டாயா?"என்று கேட்டுக் கொண்டே  சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்து   "இதென்ன குடை  சமையலறைக்குள் " என்று கேட்க  நான் என் சாதனைப் பற்றி சொல்ல
அவர் விழுந்து  ,விழுந்து ,சிரித்தது இன்றும் பசுமையாய்  நினைவில் வந்து மோதுகிறது.

இன்னும் மாவு பாக்கியிருக்கிறதா  என்று எட்டிப் பார்த்து   விட்டு "நான் உனக்கு ஒரு ஐடியா  கொடுக்கிறேன். "என் ஸ்கூட்டர்  ஹெல்மெட்  போட்டுக் கொண்டு கையில் கிளவுஸ்  போட்டுக்கோ  குடையையும் பிடித்துக் கொள் ." நீ, சமையலறை, தேங்குழல் எல்லோருக்கும்  சேஃப்டி  , பார்க்கவும்  ராணி ஜான்ஸி மாதிரி வீராங்கனையாக இருப்பாய் . என்ன கேடயம் தான் இல்லை "என்று நக்கலடிக்க  எனக்கோ கண்ணீர்  முட்டிக் கொண்டு எட்டிப் பார்த்தது.

ஒரு வழியாய்  தேங்குழல் ப்ராஜெக்ட்  முடித்தேன்.
இந்த கலாட்டாவில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். கண்ணளவு உப்பு போட்டிருந்தேன்..அது  கண்ணளவு இல்லை ,இம்மியளவு  தான் என்று  பரிந்தது. ஆனால்  ரொம்ப லேட்டாகத் தான் தெரிந்தது.அவர் தானே சாப்பிடப் போகிறார். நான் ஏன் சாப்பிடுகிறேன்?எனக்கென்ன தலையெழுத்தா?

அதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வருகிறது.  . என்  கணவர்  சும்மாவா இருப்பார். அடுத்த வாரமே  ஒரு விசேஷத்திற்காக  ஊருக்குப் போகும் போது.
குடைக்குள் தேங்குழல் பிழிந்த கதை  எல்லோருக்கும்  நோட்டீஸ் அடிக்காத  குறை தான்.

எல்லோரும் என்னைப் பார்த்ததாலே,  தேங்குழல் பற்றி விசாரிக்க  ஆரம்பித்தார்கள்.

" இப்ப எப்படி ராஜி? தேங்குழல் வெடிக்குதாடி  இன்னும் ? " இது  இந்து  சித்தி 

"  தேங்குழல் பிழிவதாக  இருந்தால் என் தம்பி  ஆபிசிற்கு  சென்ற பிறகு செய் . " இது.......தம்பி மேல் கரிசனம் காட்டும்  அக்காவின்  குரல்.( ம்க்கும்......)

" அக்கா .....எனக்கும் சொல்லிக் கொடேன் . என்ன குடையெல்லாம்  உபயோகிக்கலாம்" இது என் மாமா  பெண்,  குழலியின்   கிண்டல்.

 பல வருடங்களுக்குத் தொடர்ந்தது..
நல விசாரிப்புடன்.  தேங்குழல்   விசாரணையையும்   முடுக்கி விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்பவும்  சுமார் ஐந்து  வருடங்கள் , முன்பாக அறுபது  வயதான உறவுப் பெண்மணி தன்  மருமகளிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது ,"நான் சொன்னேனில்லை சமயோசிதமாக  யோசித்து வேலை செய்வாள். தேங்குழல்  எண்ணெயில் பிழிந்தவுடன் வெடித்தது  என்று     குடை பிடித்தாள் ."என்று சொல்ல ,

அந்தப் பெண்ணோ  ,"தேங்குழலிற்குக்.................குடையா ..............." என்று  கேட்க    நான் அந்த இடத்தில்  ஏன்  நிற்கிறேன் சொல்லுங்கள்.


யாருக்காவது  தேங்குழல் செய்வதில்  சந்தேகமா  ?என்ன குடை உபயோகிக்கலாம்  என்பதற்கு  ஆலோசனை  வேண்டுமா?
rajalakshmiparamasivam.blogspot.com என்கிற லிங்கில்  தொடர்பு  கொள்ளவும்.

image courtesy----google.



46 comments:

  1. //என்னவர் கொஞ்சம் " நொறுக்ஸ் " பிரியர் . //

    என்னைப்போன்ற ருசியும் ரஸனைகளும் உள்ள அவர் நீடூழி வாழ்க !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்களது ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி கோபு சார். அவரிடமும் உங்கள் ஆசிகளை சொல்கிறேன். நன்றி.

      Delete
  2. //ஒவ்வொரு தேங்குழலும் என்னை எடுத்து விடேன் என்று கெஞ்சுவது போல் குதித்து, குதித்து மேலே வந்து வந்து தான் வெந்து விட்டதை பறை சாற்றியது. அதை எடுத்துக் கொண்டிருக்கும் போதே என்னவர் வந்து ஒரு முறுக்கு சுடச்சுட எடுத்து வாயில் போட்டு .......

    "தேங்குழலென்றால் அது நீ செய்தால் தான் சுவை....... கர கரவென்று என்று வாயில் போட்டவுடன் கரைகிறது "எனக்கு பட்டம் அளித்து விட்டு சென்றார்.//

    பிழைக்கத்தெரிந்த மனிதர் ! வாழ்க வாழ்கவே !!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இதையும் அவர் படித்து சிரித்து விட்டார்.

      Delete
  3. //(விதி சமையலறையில் புள்ளி வைத்து கோலம் போட்டு விளையாடப் போவது தெரியாமல்) தேங்குழல் பிழிய ஆரம்பித்தேன்.

    அதன் விளைவு......அவர் மட்டும் தான் மாட்டிக் கொண்டார் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன்.இப்பொழுது தான் புரிகிறது . நீங்களும் கூட என்னிடமிருந்து தப்பிக்க வில்லை என்று.(பதிவாக்கி விட்டேனே அதை சொல்கிறேன்.)//

    ஆஹா மிகவும் விறுவிறுப்பான அதன் சுவையே இங்கு தான் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து படித்துவிட்டு வருகிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. //திடீரென்று "பட் " என்று ஒரு சத்தம்.

    என்னவென்று திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த" பட் ."

    கொஞ்ச நேரத்தில் மீண்டும்" பட் ...... பட்........ பட் ".
    தேன்குழல் தான் ஊசி பட்டாசாய் வெடித்துக் கொண்டிருந்தது.//

    ஆஹா! கதையின் நடுவே நல்லதொரு திகில் ! ;)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்களை ரொம்பவும் பயமுறுத்தி விட்டதோ தேன்குழல்!

      Delete
  5. தங்கள் கைவண்ணம் அருமை!.. ( எதில் என்பதை - நீங்கள் - நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!..)

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொன்னால் ....
      நன்றி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்

      Delete
  6. குடை பிடித்தார், கோவர்த்தன கிரியில்...


    அந்த பாட்டு உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதா...

    என் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்.
    என்ன காணோமே அப்படின்னு பார்த்தேன்.

    தேன் குழல் பண்ணிக்கொண்டு இருந்தீர்கள் போல இருக்கு.
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் பாட்டு எது தெரியவில்லையே!
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுப்பு ஐயா

      Delete
  7. //மீண்டும் "பட் ......பட் .......பட் .......".
    இதற்குள் சமையலறை முழுவதும் எண்ணெயில் புள்ளியாய் .(கோலம் தான் பாக்கி) எங்கே காலை
    வைத்தாலும் ஒரே" பிசுக் பிசுக் ".//

    சமையலறைக்குத் தங்கள் மேலுள்ள பாசம் மட்டுமே இந்த ’பிசுக் பிசுக்’குக்காரணம்.

    இதோ என் மேல் ஒரு குளத்திற்கு ஏற்பட்ட பாசத்தைப்பாருங்கோ:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. ' பிசுக் பிசுக் 'கிற்கு இப்படி ஒரு அர்த்தமிருக்கிறதா.எதையாவது சொல்லி பெண்களை சமையலறையில் பூட்டி வைக்கும் உபாயம் இது.

      உங்கள் மேல் குளத்திற்கு ஏற்பட்ட பாசத்தை படிக்கிறேன் கோபு சார்.

      Delete
  8. //என்னிடமா வேலை காட்டுகிறாய்.........தேன்குழலே ......என்று குடையை வாணலிக்கு மேல் உயரத்தில் பிடித்துக் கொண்டேன். இப்பொழுது சுளீரென்று என்கையில் ஒரு சொட்டு . ஆனால் சமையலறை சுவர், தரை எல்லாம் ஓரளவிற்கு தப்பியது.(மான் மார்க் குடை காரர்களுக்கு இது தெரிந்தால் தேங்குழல் செய்யப் போகிறீர்களா? வாங்குங்கள் எங்கள் மான் மார்க் குடையை என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள்).)

    அப்புறம் கையில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு ,குடையைப் பிடித்துக் கொண்டு ஒரு பாதி மாவை முறுக்காக்கி விட்டேன்.//

    அடடா, நல்லதொரு நகைச்சுவையாக உள்ளது.

    முல்லைக்குத்தேர் கொடுத்த பாரி வள்ளலையே மிஞ்சி விட்டீர்கள், நீங்கள்.

    குடையெல்லாம் ஓட்டை ஓட்டையாக ஆகியிருக்குமே !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ///முல்லைக்குத்தேர் கொடுத்த பாரி வள்ளலையே /// இது இன்னும் நகைச்சுவை
      கோபு சார்.

      Delete
  9. //கண்ணளவு உப்பு போட்டிருந்தேன்..அது கண்ணளவு இல்லை ,இம்மியளவு தான் என்று பு ரி ந் த து.

    ஆனால் ரொம்ப லேட்டாகத் தான் தெரிந்தது.அவர் தானே சாப்பிடப் போகிறார்.
    அடடா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்களே ! அவர் உங்களை நினைக்க நீங்க சந்தர்ப்பமே தரவில்லையே !

    //நான் ஏன் சாப்பிடுகிறேன்?எனக்கென்ன தலையெழுத்தா?//

    அதானே பார்த்தேன். ;)))))

    ReplyDelete
  10. அரட்டையானாலும் அருமையான நகைச்சுவையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. உங்களது அடுத்தடுத்த வருகைக்கும், மிகவும் ரசித்துப் படித்ததற்கும், அருமையாய் பாராட்டி கருத்து எழுதியதற்கும் மிக்க நன்றி கோபு சார். உங்களை மாதிரி அனுபவம் வாய்ந்த பதிவரிடமிருந்து வரும் பின்னூட்டங்கள்
      என்னைப் போன்றவர்களுக்கு மிகப் பெரிய ஊக்க போனஸ் சார்.
      நன்றி! நன்றி! நன்றி!

      Delete
  11. //என் கணவர் சும்மாவா இருப்பார். அடுத்த வாரமே ஒரு விசேஷத்திற்காக ஊருக்குப் போகும் போது. குடைக்குள் தேங்குழல் பிழிந்த கதை எல்லோருக்கும் நோட்டீஸ் அடிக்காத குறை தான்.//

    ஹாஹா... நான் இதுவரை தேன்குழல் சாப்பிட்டதில்லை, இனிமேலும் சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லை.... சும்மா நகைச்சுவைக்காக...

    ரசிக்க வைத்த பதிவு....

    ReplyDelete
    Replies
    1. இது வரை தேன்குழல் சாப்பிட்டதில்லையா? உங்கள் மனைவியை என்னைத் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். தேன்குழல் செய்முறை , எந்த பிரான்ட் குடை எல்லாவற்றிற்கும் ஆலோசனை வழங்குகிறேன் அதுவும் மிகக் குறைந்த கட்டணத்திற்கே!
      நன்றி உங்கள் வருகைக்கும், உங்களுடைய (g+1)ற்கும், பாராட்டிற்கும்.

      Delete
  12. அடுத்து சீடை செய்த அனுபவம் தயாராய் இருக்குமே... அதை எடுத்து விடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!

      Delete
  13. நாம் செய்ததை நாமே சாப்பிடுவதாவது... மற்றவர்கள்தானே சாப்பிட வேண்டும்? :))

    ReplyDelete
    Replies
    1. கரெக்டாக சொல்லிவிட்டீர்கள் ஸ்ரீராம் சார்.
      நன்றி சார் உங்கள் கருத்துக்கு

      Delete
  14. இதைத்தான் சமயோஜித புத்தி என்பது.
    வேடிக்கையாகச் சொல்லிப்போனாலும்
    எனக்கு அது தவிர வேறு சரியான
    வழியில்லை என்றுதான் தோன்றுகிறது
    பதிவை மிகவும் ரசித்தேன்
    (குறிப்பாக அடைப்புக் குறிக்குள் இருந்தவைகளை )
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒருவராவது நான் செய்த்தது சரியே என்று சொன்னீர்களே! மிக்க நன்றி ரமணி சார். ஆனால் என் கணவரின் கோபத்திற்கு ஆளாகி விட்டீர்களே , அவர் அக்காவின் கரிசனத்திற்கு நான் அடைப்புக் குறிக்குள் போட்டதும் உங்களுக்குப் பிடித்து விட்டதே அதைச் சொல்கிறேன்.நான் செய்தவை யாவும் சரியே என்று சொல்லும் என் அன்பு சகோதரருக்கு மிக்க நன்றி.

      Delete
  15. தீபாவளி வருகிறது அதனால்தான் நீங்கள் தேங்குழல் வெடியை அறிமுகப்படுத்தி இருக்கீறீர்களா...இந்த மாதிரி பட்டாசை அறிமுகப் படுத்தும் போது இது குழந்தைகளுக்கு அல்ல என்ற எச்சரிக்கை வார்னிங்க் கொடுங்கள் இல்லை என்றால் யாரவது வழக்கு தொடுக்கப் போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் வார்னிங் கொடுப்பது இருக்கட்டும். உங்களுக்கு தேன்குழல் (பதிவு) பிடித்து விட்டது இல்லையா? அதற்கு மிக்க நன்றி MTG

      Delete

  16. ///இளமையின் வாயிற்படியில் நிற்கும் பாட்டி நான்//
    இதுதான் மிக ஹைலைட்டான நகைச்சுவை வரியாக நான் கருதுவது. சபாஷ்

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு எழுதியிருக்கிறேன். எல்லாவற்றையும் விட்டு விட்டு ,யாராவது படிக்கத் தவறியிருந்தாலும் உங்கள் கருத்தின் மூலமாக நான் பாட்டி என்பதை எல்லோருக்கும் தெரியப் படுத்தி விட்டீர்களே!சந்தோஷம் தானே!(just for joke)
      நன்றி இருமுறை வருகை தந்து பாராட்டியதற்கு.

      Delete
  17. அடடா... நகைச்சுவையுடன் சொன்ன விதம் மிகவும் ரசிக்க வைத்தது... அநேகமாக இந்த பகிர்வுக்கு பின் குடை வியாபாரம் அதிகமாகும் என்று நினைக்கிறேன்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார். ,
      வெறும் 'குடை வியாபாரம் அதிகமாகும் ' என்று சொன்னால் போதுமா? எந்த பிரான்ட் என்று சொன்னால் நான் கமிஷன் வாங்கிக் கொள்ள சௌகர்யமாயிருக்கும்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  18. அட குடைபிடித்துக் குழல் ( தேன் குழல் )பிழிந்த கதை நகைச் சுவையுடன் ருசி கூட்டுகிறது. சரி ஏன் வெடித்ததாம்?

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கேள்வியை கேட்பார்கள் என்று எதிர் பார்த்தேன். என்ன டெக்னிக் என்பதை கண்டு பிடித்து விட்டேன்.
      நன்றி பாலு சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  19. நகைச்சுவையுடன் கூடிய 'குடைக்குள்...' தீபாவளி பட்டாசு சூப்பரா வெடிச்சாச்சு. பட்டாசு மட்டும் வெடித்தால் எப்படி? இன்னும் ஸ்வீட்,காரம் (மேலும் பல பதிவுகள்) எல்லாம் ஒவ்வொன்றாக அனுப்பிவிடுங்க.

    எல்லாவற்றையும்கூட தாங்கிக்கொள்ளலாம், ஆனால் சொதப்பியது மட்டுமல்லாமல் இந்த எண்ணெயை சுத்தம் செய்ய வேண்டி வரும் பாருங்க....வேணாம் _______......!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா.......இந்த எண்ணெய் சிக்கு போதவில்லையா . இன்னும் பல பதிவுகள் போட்டால் கிச்சனில் எண்ணெய் ஆறு ஓடுமே! ஆனாலும் கேட்டு விட்டீர்கள். விதி யாரை விட்டது. வந்து கொண்டேயிருக்கிறது பதிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக.. சமையலறை சுத்தம் செய்வதை நினைத்தால் தான் .....ஸ் .....ஹப்பா.......
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்

      Delete
  20. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்பார்கள்..தேங்குழலுக்கு ஒருநாள் வாழ்வு வந்து குடை பிடிக்கவைத்திருக்கிறது ..!

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி வருவதை மறந்து விட்டு தேங்குழலை இப்படி அவமானப் படுத்தி விட்டீர்களே. தேன்குழல் உங்களுக்கு நன்றாக, ருசியாக இருக்க வேண்டுமென்று .
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
      ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். தேங்குழலும் உங்களை மன்னிக்கட்டும்!

      Delete
  21. தீபாவளி அதுவுமா நல்லதொரு ஆலோசனை. ஆலோசனைக்கு நன்றிங்க

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைக்கு வெறும் நன்றி மட்டும் தானா? கட்டணம் கொடுங்கள். சிறப்பு ஆலோசனை வழங்குகிறேன். என்ன பிரான்ட் குடை, கிளவுஸ் எந்தமாதிரி........என்று எல்லாவற்றிகும், குறைந்த கட்டணமே!

      நன்றி ராஜி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  22. தீபாவளி வந்து விட்டது, தேன்குழலுக்கு குடை பிடித்த கதை அருமையான நகைச்சுவை படம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கோமதி !
      இந்தக் குடையும் என்னைப் பார்த்து சிரிக்கிறதைப் பார்த்து விட்டீர்களே!

      சில நாட்களாக வலைப் பக்கம் சரிவர வர முடியாமல் இருந்ததால் உங்கள் பதிவுகள் சிலவற்றிற்கு என்னால் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  23. குடை பிடித்துக் கொண்டு தேன்குழல் செய்த அனுபவத்தை அழகாய் நகைச்சுவை ததும்ப கூறியுள்ளீர்கள்.
    நாளை ஏதேனும் எண்ணெய் பலகாரம் செய்யும் போது, எண்ணெய் தெறித்தால் தற்காத்துக் கொள்ள அருமையானதோர் உபாயம்.
    பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
  24. //விதி சமையலறையில் புள்ளி வைத்து கோலம் போட்டு விளையாடப் போவது தெரியாமல்//

    நகைச்சுவை மிளிர ஒரு கதாசிரியையாய் ஜொலிக்கிறீர்கள்!!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்