சென்ற வாரம் வெளுத்து வாங்கிய மழையில் குடும்பத்துடன் தீபாவளீ
ஜவுளிஎடுக்க மாம்பலம் சென்றிருதோம்.ஆட்டோவில் நான், என் மருமகள்,என் அம்மா
மற்றும் என் ஒன்றரை வயது பேரன் (இந்த ப்ளாக்கின் கதாநாயகன்),
என் மகன் மட்டும் பைக்கில்.என் கணவர் வரவில்லை என்று கூறி விட்டுNDTVல் ஐக்கியமாயிருந்தார்.மழை அப்பொழுதுதான் சற்றே விட்டிருந்தது.
முதலில் ஒரு பிரபலமான கடைக்கு சென்றோம்.எங்கு பார்த்தாலும் கூட்டம்,ஒரே தலை மயம்.இதில் எப்படி ஜவுளி எடுக்கப் போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் பேரன் 'ஓ' என்று அழஆரம்பித்து விட்டான்.அதனால் அங்கிருந்து கிளம்பி RMKV சென்றோம்.
நாங்கள் ஆட்டோவில் சர்ரென்று போய் இறங்கி விட்டோம்.என் மகன் பைக்கை பார்க் செய்ய முடியாமல் தின்டாடிவிட்டு இதை ஒரு காரணமாக வைத்து மீண்டும் வீட்டிற்குதிரும்புகிறேன் என்று போனில் சொல்லி விட்டு அவனும் NDTV பார்க்க சென்று விட்டான்.என் மருமகளின் முகத்தில் சிறிய வருத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் எனக்காகவும் என் 72 வயது அம்மாவிற்காகவும் முகத்தில் புன்னகை மிளிற எங்களுடன் கடைக்குள் நுழைந்தாள்.
முதலில் அம்மாவிற்கு புடவை எடுக்கச் சென்றோம்.வாங்கியும் விட்டோம்.அழகான சில்க் காட்டனில் கட்டம் போட்ட புடவை.அது முடிந்த பின் தான் கூத்து ஆரம்பமானது.
என் மருமகளிற்காக சூடிதார் பிரிவிற்குள் நுழைந்தோம்.என் பேரன் மெதுவாக 'ஆச்சா ஆச்சா' என்று ஆரம்பித்தான்.(இந்த 'ஆச்சா ' வார்த்தை அடிக்கடி அவன் கூறுவது ).நாங்கள்மும்மரமாக சூடிதார் செலக்ஷனில் ஈடுபட்டோம்.ஐந்து நிமிடம் பார்த்தான்,பெரிதாக அழ ஆரம்பிதான்.அழுகைக்கு நடுவே 'ஆச்சா? ஆச்சா?'என்ற கேள்வி வேறு.அவன் அழுகையை நாங்கள் அடக்க முடியாமல் திணறிக்கொன்டிருந்த போது,
பக்கத்திலிருந்தவரின் செல்போனில்'ஒய் திஸ் கொலை வெறி' ரிங் டோன் ஒலிக்க ஆரம்பித்தது.தாரை தாரை யாகவந்த கண்ணீர்,கொழு கொழு கன்னத்தில் வழிய வழிய அழுகையை பாதியில் நிறுத்தி விட்டு, அவர் சட்டைப் பாக்கெட்டையே பார்த்துக்கொன்டிருந்தான்.அவனுக்கு பிடித்த பாட்டு.அப்பாடி என்று பெருமூச்சு விட்டோம்.
அப்பொழுது பார்த்து அவர் செல் போனை எடுத்துப் பார்த்துபட்டனை அமுத்தி மீண்டும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.அவ்வளவு தான் என் பேரன் மீண்டும் முகாரி ராகத்தை விட்ட இடத்திலிருந்து பிடித்தான்.இப்பொழுது இன்னும் சற்றே உரத்த குரலில்.அந்த செல்போன் காரர் என்னவோ ஏதோ என்று திரும்பிப் பார்க்க அவரைப் பார்த்துக் கை நீட்டி 'கொல் வென்' 'கொல் வென்' என்று அதேப் பாட்டைக் மழலையில் கேட்க அவருக்கு புரியவில்லை.
ஆனால் மிரண்டு போய் 'இது என்னடா? துணிவாங்க வந்த இடத்தில் கொலைப் பழி விழும் போல் தெரிகிறதே என்று நினைத்திருப்பாரோ என்னவோ, குடும்பத்துடன் மெதுவாக அந்த இடத்தை விட்டு ஜனசமுத்திரத்தில் கரைந்தார்.
அதற்குள் இவன் கையில் டைரி மில்க்கைக் கொடுத்தோம்.சற்றே தணிந்தான்.ஒரு நிமிடம் தான்.மீண்டும்'ஆச்சா ஆச்சா' என்று அழுகை.என் மருமகளும்,நீங்களே எதை எடுத்தாலும் எனக்கு ஓகே தான் .நீங்கள் தனியாக வந்து எடுத்துவிடுங்கள்.என்று கூறஒரு ஆட்டோ பிடித்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.வீட்டிற்கு வந்தவுடன் இயல்பாகி விளையாட ஆர்ம்பித்து விட்டான்.
என் கணவரும்,மகனும் ,'உங்களுக்கு அவன் தான் சரி.நாங்கள் சீக்கிரம் செலக்ட் செய்யச் சொன்னால் செய்வீர்களா? இது தான் சமயம் என்றுபழி தீர்த்து கொண்டனர்.
என் கணவர் நக்கல் பார்ட்டி வேறு.இப்பொழுதெல்லாம் காபி கேட்கும்போது கூட என்ன காபி 'ஆச்சா' இல்லை அபினவ் வை (என் பேரனின் பெயர்) கூப்பிடவா? என்கிறார்.
ஒரு விஷயம்.இன்னும் நாங்கள் ஜவுளி எடுக்கவில்லை.இந்த வாரம் செல்கிறோம்.என் பேரனையும் தான் அழைத்துச் செல்கிறோம்.அவன் இல்லாமலா!

அடாது மழைபெய்தாலும் விடாது ஜவுளி வாங்கச் சென்றுள்ளீர்கள். அதை நகைச்சுவை கலந்து அழகாக எழுதி பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களுக்கு ஒரு சில யோசனைகள்:
ஒரேயடியாக மொய்மொய் என்று எழுதாமல், சின்னச்சின்ன பத்தி [Paragraph] யாகப் பிரித்துப் பிரித்து எழுதுங்கோ.
எழுத்துக்கள் BOLD ஆக பளிச்சென்று இருக்கட்டும்.
முடிந்தால் டார்க் ப்ளூ கலரில் எழுத்துக்கள் இருக்கட்டும். படிப்போருக்கு அப்போது தான் ஆசை ஏற்படும்.
WORD VERIFICATION என்பதை முதலில் நீக்கி விடவும். அப்போது தான் நிறைய பேர்கள், ஆவலுடன் பின்னூட்டம் இட வருவார்கள்.
நானும் ஒரு நாள் சுடிதார் வாங்கப்போனேன். அதைப்போய் படியுங்கோ, கருத்து எழுதுங்கோ.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
சுடிதார் வாங்கப்போறேன் பகுதி 1 / 3
மேலும் கீழேயுள்ள இணைப்பை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் மேலும் பல மிகச்சிறந்த படைப்புகளுக்கான இணைப்புகள் INDEX போல கொடுக்கப்பட்டுள்ளன். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாகப்படித்து, கருத்து எழுதுங்கோ.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
நான் இன்று உங்கள் தளத்தின் முதல் Follower ஆகியுள்ளேன்.
அன்புடன்
VGK
'தீபாவளி ஆச்சா'தான் என்னுடைய முதல் பதிவு.கணினி பற்றிய விரிவான அறிவு ஏதுமின்றி விளையாட்டாக ஆரம்பித்தேன்.
Deleteஉங்களைப் போன்ற சீனியர்களின் அறிவுரைகளை பின்பற்றி
இனி வரும் பதிவுகளை இன்னும் நன்றாக எழுத முடியும் என்று நம்புகிறேன்.
word verification பற்றிய யோசனைக்கு மிக்க நன்றி.
அதை இப்பொழுது நீக்கி விட்டேன்
ராஜி
தங்களின் முதல் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
DeleteWord Verification என்ற நந்தியை நீக்கியதற்கு என் அன்பான நன்றிகள்.
நல்ல தரமான பதிவுகளாகத்தந்து அசத்துங்கள்.
தாங்கள் எழுத்துலகில் தொடர்ந்து ஜொலித்திட என் அன்பான ஆசிகள்.
அன்புடன்
VGK
காபி 'ஆச்சா' இல்லை அபினவ் வை கூப்பிடவா?
ReplyDeleteநல்லா பிளாக்மெயில் செய்கிறார்கள் ...
முதல் பதிவுக்கு வாழ்த்துகள்...
இராஜராஜேஸ்வரி,
Deleteஇது என்னுடைய முதல் பதிவு.
எழுத வேண்டும் என்ற ஆர்வம் பல வருடங்களாக இருந்தாலும் இப்பொழுதுதான் அது அமைந்தது.என்னுடைய முதல் பதிவில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டதில் மகிழ்கிறேன்.
நன்றி.
ராஜி
Got to know about your blog just now Raji-Ma! Very nice post! :) hope you had a Nice Diwali with Abinav!
ReplyDeleteMahi,
ReplyDeleteThankyou Mahi for visiting my blog and posting your valuable comments.
I had a happy Diwali with my Abhinav.
Wish you and your family a very Happy and a Prosperous 2013.
Thankyou,
Raji