இன்று உலக Hypertension தினம்.
இந்த Hypertension வருவதால் என்ன நடக்கும்?
BP எகிறும்.
BP மிக உயரத்திற்கு சென்று High BP என்ற உயரத்தை தொட்டால் எத்தனை எத்தனை விபரீதங்கள் உண்டாகும் என்பது நம் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம்.
இந்த BP ஐ நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதற்கான வழியும் நம் கையில் தான் இருக்கிறது.
இந்த High BP வருவதற்கு மருத்துவர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள்.
புகை பிடிப்பது, மது அருந்துவது , Stress , கோபம் ....என்று பல.
பெரும்பாலானோருக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரை ,"ரொம்ப கோபப்படுவீர்களோ? கொஞ்சம் உங்கள் கோபத்தை குறைத்தால் நல்லது." என்பது தான் .
ஆனால் நம்மால் கோபத்தை குறைத்துக் கொள்ள முடிகிறதா?
இல்லையே!
நம் ஒவ்வொருவரும் தினம் நம் எத்தனை முறை கோபப்படுகிறோம் என்று கணக்கெடுத்து எழுதி அதை மீண்டும் பார்த்தோமென்றால் நம் மீதே நமக்கு கோபம் வந்து விடும்.
ஒரு சின்ன கதை நினைவிற்கு வருகிறது.பலருக்குத் தெரிந்திருக்கும்.(பெயர் மட்டும் என் கற்பனை)
வடிவேல் என்பவர் உயர்ந்த பதிவியில் இருக்கும் ஒரு அதிகாரி.
ஆபீஸில் அவரைக் கண்டால் சிம்ம சொப்பனம் அத்தனை கோபக்கார மனிதர்.பைல் எல்லாம் கண ஜோராய் பார்க்கும்
அவர் டாகடர் கோபத்தை குறைக்க அறிவுரை கூற , அதற்கே அவர் கோபமானார் என்றால் பார்த்துக் கொளுங்களேன்.
ஆனால் எப்படியாவது கோபத்தைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தார். யோகா, தியானம்......
ஒன்றிற்கும் அவர் கோபம் மசியவேயில்லை.
இறுதியில் அவருடைய வயதான தந்தையிடம் அடைக்கலமானார். வடிவல்.
கோபத்தை அடக்கும் வித்தையை கற்றுக் கொள்வதற்குத் தான்.
அவர் தந்தை ஒரு நல்ல உபாயம் கூறுகிறார்.
"ஒவ்வொரு முறை நீ கோபப் படும் போதும் இந்த சுவற்றில் ஆணியை அடித்து எண்ணிக் கொண்டு வா? என்கிறார்.
மறு நாளே ஆரம்பிக்கிறார்.
அன்று இரவு தூங்கப் போவதற்கு முன்னால் சுவரைப் பார்த்தால் 14 ஆணிகள் .
பார்க்க , பார்க்க ,பயந்து போய் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப் படுத்திக் கொள்கிறார். கோபத்தை விட தன் ஆரோக்கியத்தின் மேல் பயம் அதிகமாகிறது.
அடுத்த நாளிலிருந்து கோபத்தை குறைக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒரு நல்ல நாளில் கோபமே இல்லாத மனிதராக மாறுகிறார்.
தன தந்தைக்கும் ஆணிக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறார் வடிவேல்.
இல்லை.
இன்னும் இந்தப் பயிற்சி முடிவடையவில்லை என்கிறார் அவர் தந்தை.
"நாளையிலிருந்து நீ கோபப்படாத ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஆணியாய் பிடுங்கி விடு " என்கிறார் தந்தை.
தந்தை சொல் தட்டாத தனயனாய் மறு நாளிலிருந்து செய்கிறார் வடிவேல்.
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு தந்தையே வடிவேலுவை கூப்பிட்டு சுவற்றைப் பார்க்க சொல்கிறார்.
வடிவேலுவும் மகிழ்ச்சியாக ஆணிஎடுத்தபின் இருக்கும் சுவற்றில் இருக்கும் ஓட்டைகளை காண்பிக்கிறார்."
எத்தனை ஆணிகளை பிடுங்கிவிட்டேன் பாருங்கள் " என்கிறார் வடிவேல்.
"அதையே தான் நானும் சொல்கிறேன். நீ கோபப்ட்டதால் சுவற்றில் மட்டுமல்ல உன் கோபத்துக்கு ஆளானவர்கள் மனதிலும் இப்படித்தானே வடு ஏற்பட்டிருக்கும். பார்த்தாயா, உன் கோபத்தின் விளைவை " என்கிறார் தந்தை.
வடிவேலுவிற்கு இப்பொழுது நன்றாகவே புரிகிறது தன் தவறு .
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு தன் மன, மண , உடல் நலத்தையும் பேணிக் கொண்டு தன்னை சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியமும் கெடாமல் பார்த்துக் கொள்கிறார்.
எப்பவுமே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தான்"
நாமும் கோபத்தை குறைத்து Hypertension வராமல் பார்த்துக் கொண்டு நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்போம்.
பி.கு....எங்களுக்குத் தெரியாத என்னத்தை சொல்ல வந்துவிட்டே என்று யாரும் கோபப்பட வேண்டாம்.
Hypertension தினம் ஆயிற்றே . ஒரு பதிவு எழுதலாமே என்று தான்.......
image courtesy --google.
தெரிந்த கோபம்
ReplyDeleteதெரியாத அருமையான கதை
இனி ஆனியைப் பார்க்கும்போது
கோபத்தின் தீமை மட்டுமல்ல
கோபப்படும்போது ஆனியின் ஞாபகமும்
அவசியம் சேர்ந்தே வந்துவிடும் என நினைக்கிறேன்
அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நம் கோபத்தினால் எதிராளிக்கு ஏற்படும் நாவினால் சுட்ட வடுவும் நினைவிற்கு வந்தால் கோபமே பட மாட்டோம்.
Deleteநன்றி ரமணி சார் உங்கள் கருத்துக்கு.
நாமும் கோபத்தை குறைத்து Hyper tension வராமல் பார்த்துக் கொண்டு நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்போம்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.
Deleteநீ ஆணியே புடுங்க வேண்டாம் என்ற வடிவேல் காமடி ஆகலியே?
ReplyDeleteநன்றி ஐயா உங்கள் கருத்துக்கு
Deleteஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெறித்து
ReplyDeleteதூங்காமல் தூங்கி சுகம்பெறுவது எக்காலம்... ? என்பார் பத்திரிகிரியார்.
ஆணவம் தலை தூக்குகையிலே நமது எதிர்பார்ப்புகள் பொய்க்கையிலே
நம்மை மதிக்கவில்லை என்று நினைக்கும்பொழுது,
சினம் தலை தூக்குகிறது.
ரத்த அழுத்தத்துக்கு அதிகப்படியான எமோஷன்ஸும் காரணமாக இருந்தாலும்,
ஒரு முப்பது விழுக்காடு இது ஜெனடிக் சம்பந்தமுடையது.
என்ன செய்வது ? அப்பாவும் தாத்தாவும் அடிக்காமல் விட்ட ஆணிகளை
நாம் அடிக்கவேண்டியிருக்கிறது...
சுப்பு தாத்தா.
பதிவெல்லாம் போடுகிறேன். ஆனால் என்னை ஆணியடிக்க சொன்னால் ஆணியின் எண்ணிக்கைக்கு குறைவிருக்காது என்றே நினைக்கிறேன்.
Deleteஎன்ன தான் செய்வது என்றே புரியவில்லை.
நன்றி சுப்பு ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//பி.கு....எங்களுக்குத் தெரியாத என்னத்தை சொல்ல வந்துவிட்டே என்று யாரும் கோபப்பட வேண்டாம்.//
ReplyDeleteஆஹா, இந்த வரிகள் தான் மிகவும் அருமை. ;)))))
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.
Deleteநல்ல கதை...
ReplyDeleteகோபம் - கொடிய நோய்...
தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தனபாலன் சார்.
Deleteஆணி பிடுங்கும் வடிவேலுவைத் தெரியும். ஆணி அடித்து, ஆணி பிடுங்கி தன் கோவத்தை துறந்த வடிவேலுவை உங்கள் கதையில் தெரிந்து கொண்டேன்.
ReplyDelete(ஆணி பிடுங்கிய பின் சுவற்றில் இருந்த ஓட்டைகளைப் பார்த்து வீட்டுச் சொந்தக்காரரின் BP ஏறவில்லையா?) சும்மா தமாஷ்!
வீட்டுக்காரரின் BP ஏறினால் அவரையும் ஆணி அடிக்க சொல்லிடலாம்.
Deleteஹி,,,,ஹி ...... ஒ.கே தானே!
நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்களெல்லாம்? அடிக்கடி யாரைப் பார்த்தாலும் கோபப்படாதே, கோபப்படாதே என்று உபதேசம் பண்ணிக்கொண்டேயிருந்தால் உண்மையிலேயே கோபம் வந்துவிடும். ஆமாம், சொல்லிவிட்டேன்! (சாரி, எனக்கு BP உண்டு!)
ReplyDeleteசார்....சார்.....கோபப்படாதீர்கள். BP ஜாஸ்தியாகிவிடப்போகிறது.
Deleteஅதான் பி.கு. எல்லாம் போட்டிருக்கிறேனே!(joke தான் )
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDeleteநாளுக்கேற்ற பதிவு. BP குறைகிறதோ இல்லையோ முன் கோபமுள்ளவர்களிடம் அடுத்தவர் அண்டவே தயங்குவர் நாலு பேருடன் சுமுகமாகப் பழகினால் கோபம் குறைய வாய்ப்பு உண்டு என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான் GMB சார்.
Deleteயாருமே பேசக் கொஞ்சம் தயங்குவார்கள் தான்.
ஆனால் கோபம் வரும் அந்த நிமிடம் மூளை வேலை செய்ய மறுக்கிறதே!
நன்றி சார் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.
மறைந்த பதிவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநல்ல நீதிக் கதைதான். ஆனால் இந்த காலத்திற்கு ஒத்து வராது. ஆணி அடிக்க வேண்டிய நேரத்தில் ஆணி அடிக்க வேண்டும். ஆனால் எங்கே எப்படி அடிக்க வேண்டும் என்று பார்த்து அடிக்க வேண்டும்
ReplyDeleteஆமாம் MTG. நீங்கள் சொல்வதும் சரிதான். பார்த்தே ஆணி அடிப்போம் .
Deleteஆனால் கொஞ்சம் குறைப்போம். ஒ.கே.
நன்றி உங்கள் கருத்துக்கு.
Sorry for picking on you, hypertension (aka high blood pressure) is a single word!
ReplyDeleteThankyou for pointing.
DeleteI have corrected.
நான் இதுவரை கேட்காத கதை. சுவர் முழுக்கா ஆணிகளால் நிரம்பி, பக்கத்து வீட்டையும் நாடுவாரோ என்று எதிர்பார்த்தேன். எனக்கும் உபயோகமாக இருந்தது. நன்றி.
ReplyDelete// பக்கத்து வீட்டையும் நாடுவாரோ என்று எதிர்பார்த்தேன்.//
Deleteஹா....ஹா.....ஹா.......
நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் கருத்துக்கு.
எனக்குத் தெரியாத கதை இது. படிக்க சுவாரஸ்யமாகவும் நல்ல கருத்தை மனதில் பதியச் செய்யும் படியும் இருந்தது. அருமை!
ReplyDeleteநன்றி பாலகணேஷ் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteநாமும் கோபத்தை குறைத்து Hyper tension வராமல் பார்த்துக் கொண்டு நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்போம்.//
ReplyDeleteஆம், நம் உடல் நலத்துக்காக சினம் தவிர்த்து பழகுவோம்.
’சினமடங்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே! ’
என்று தாயுமானவர் சொல்கிறார்.
பெரிய பெரிய ஞானிகளே இப்படி சொல்கிறார்கள். நாம் முயற்சி செய்யலாம் சினம் அடங்க.
சினத்தை அடக்க வேண்டியனவெல்லாம் விழிப்பும், முயற்சியும் தான் என்று சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி.
நல்ல கதை மூலம் சினத்தை தவிர்ப்பதை சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி.
இந்த கதையை சொல்ல கேட்டிருக்கிறேன்.. மறுபடியும் நினைவு படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி! எனக்கு கோபம் வரும் போதெல்லாம் எனக்கு பிடிச்ச பாட்டை ஒலிக்க விட்டு மனசை வேறு பக்கம் திசை திருப்ப விடுவதுண்டு! ஆமா கோவமே படாம எல்லாத்துக்கும் அமைதியா போனா நம்ம தலையில் மிளகாய் அரைச்சிடுவாங்க.. கோவ பட வேண்டிய விஷயத்துக்கு லைட்டா நம்ம எதிர்ப்பை காட்டலாங்க.. சும்மா ஆன்னா ஊன்னா தான் கோவப்படாது o.k?
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் லைட்டா ரொம்பவும் லைட்டா நம் கோபத்தைக் காட்டுவோம் . சரியா உஷா நான் சொல்வது.
Deleteநன்றி உஷா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .
கதை எனக்கு புதிது.வடிவேலு,ஆணி_____பெயர் தேர்வு நன்றாக இருக்கிறது. கதையையும் அழகா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteகோபம் வந்தால் யாருக்கு நஷ்டம் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். கோபம் இருக்கும் இடத்தில்தானே குணமிருக்கும் என்ற பழமொழியைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.கோபத்தைக் குறைத்துக்கொள்ள முயற்சி எடுக்க வைத்த உங்களுக்கும் நன்றிங்க.
ஆமாம் சித்ரா நீங்கள் சொல்வது போல் கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் தான் . ஆனால் கொஞ்சம் குறைப்போம் என்பது என் கருத்து. நம் உடல் நலம் நம் கையில் தானே!
Deleteஅதைத் தான் சொல்ல வந்தேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா
அருமையான கதை. இதுவரை அறியாத கதை.ஒரு நொடி கோபத்தால் பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்படும் மாறாத வடுக்களை அருமையாக எடுத்துக் கூறுகிறது.பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தோழி
Delete..............
ReplyDeleteநம் ஒவ்வொருவரும் தினம் நம் எத்தனை முறை கோபப்படுகிறோம் என்று கணக்கெடுத்து எழுதி அதை மீண்டும் பார்த்தோமென்றால் நம் மீதே நமக்கு கோபம் வந்து விடும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
விவிசி!!!
ஆணி அடித்தாற்போல ஒரு பதிவு. அருமை அருமை
//விவிசி//
Deleteஎன்ன இது புரியவில்லையே!!
என் பதிவை ரசித்துப் படித்து பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பாண்டியன்.
விழுந்து விழுந்து சிரித்தேன் என்பதன் சுருக்கம்தான் விவிசி! :))))
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கும், என் வலைப்பதிவிற்கு வந்து படித்து கருத்திட்டமைக்கும்.
Deleteஆணி அடித்த வடு பூசி மறைந்து விடும் . ஆத்திரத்தில் சொல் அடித்த வடு ஆறவே ஆறாது . பொருத்தமான கதை. பொருத்தமான நாளில்
ReplyDeleteநன்றி கெளரிமேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Delete