Monday 12 May 2014

சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்

நான் சொதப்பிய  சம்பவங்கள் சிலவற்றை, சிலவற்றைத் தான் (சொல்லாத  சொதப்பல்கள்  ஏராளம்) கட்டுரைகளாக   பதிவிட்டேன்.  அதைத் தொகுத்து  மின்னூல்  வடிவமைக்கலாமே என்று தோன்ற  அதை செயல் படுத்தி விட்டேன்.

நீ சொதப்பினாலும், நாங்கள் அதை அழகாக  வடிவமைப்போமே என்று freetamilebooks.com குழுவினர்  அதை போர்க்கால அடிப்படையில்  எடுத்துக் கொண்டு  வடிவமைத்துள்ளார்கள்.


புத்தக வடிவமைப்பும்,  அட்டைப் படமும்  நான்  பதிவிட்ட சொதப்பல்களை மிகவும்  அழகாக  அமைத்து விட்டன என்று சொல்லலாம். அதற்காக  freetamilebooks,com குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். திரு.சீனிவாசன், திரு, ப்ரியமுடன் வசந்த்,  திருமதி ப்ரியா அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்தப் புத்தகத்தைத் தரவிறக்கி படிக்கப் போகும் உங்களுக்கும் என் நன்றிகள்.
படித்த பின் உங்களின் மேலானக் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
                          http://freetamilebooks.com/ebooks/sirikka-vaikkum-sothappalgal.  புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் .

32 comments:

  1. படிக்க ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

    தங்களின் புதிய முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது விக்னேஷ். என் மின்னூலை

      தரவிறக்கிப் படிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.

      Delete
  2. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    சிரிக்கத்தயாராகி விட்டோம் [சொதப்பல்களாக இருப்பினும்] .

    தங்களின் புதிய இந்த நல்ல முயற்சி வெற்றிகரமாக அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபுசார்.

      Delete
  3. இறக்கிக் கொண்டேன். இந்தக் குழுவில் ப்ரியமுடன் வசந்த் இருக்கிறாரா? அட!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார், நீங்கள் தரவிறக்கிப் படிப்பதற்கு மிக்க நன்றி சார்.
      ப்ரியமுடன் வசந்த் தான் அட்டைபட வடிவமைப்பு, இந்த நூலிற்கு மட்டுமல்ல என்னுடைய " அப்பாவி விஷ்ணு " மின்னூலிற்கும் அவர் தான் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீராம் சார்.

      Delete
  4. அனைவருடைய மனமும் மகிழும்படிக்கு மேலும் பல நல்ல மின் நூல்களை வழங்க வேண்டும்.
    தங்களின் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கும், தரவிறக்கி படிப்பதற்கும் நன்றி துரை சார்.

      Delete
  5. நன்றி... பாராட்டுக்கள்...

    பதிவிறக்கம் செய்து விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்,
      உங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும், தரவிறக்கிப் படிப்பதற்கும் நன்றி சார்.

      Delete
  6. புத்தக வெளியீட்டிற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி சார்.

      Delete
  7. அந்த தையல் மிஷினை ஒரு வாட்டி கீழே போட்டுப்பாருங்கள் பாபின் எங்கிருக்கும் என்று தெரியும், :-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...நல்ல ஐடியாவாக இருக்கிறதே. செய்து விட்டால் போகிறது. உங்களிடம்
      damages claim செய்து கொள்கிறேனே!( சும்மா தமாஷ்)
      உங்கள் நகைச்சுவையான கருத்துக்கும், தரவிறக்கிப் படித்ததற்கும் மிக்க நன்றி குமார்.

      Delete
  8. உங்கள் மின்நூலை தரவிறக்கம் (DOWNLOAD) செய்து கொண்டேன். ஏற்கனவே படித்த உங்களது கட்டுரைகளை மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தரவிறக்கி படிப்பதற்கு மிக்க நன்றி தமிழ் சார்.

      Delete
  9. மற்றவர்கள் சொதப்பலைப் பார்த்து சிரிக்கும் சிற்றுலகம் இது. தன் சொதப்பல்களைச் சொல்லி மற்றவரை சிரிக்கவைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்னு நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! நீங்களாவது நம்புவீங்கதானே,மிஸஸ் ராஜி? உங்களுக்குத் தன்னம்பிக்கை ரொம்ப அதிகம். உங்க சொதப்பல்களிலும் ஒரு தனி அழகு இருக்கத்தான் செய்யும். இன்னும் அவைகளை நான் ரசிக்கவில்லை! ரசிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும், தரவிறக்கிப் படிப்பதற்கும் மிக்க நன்றி வருண்

      Delete
  10. வாழ்த்துக்கள் அம்மா! தரவிறக்கிக் கொள்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தரவிறக்கிப் படிப்பதற்கும் , வாழ்த்திற்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  11. பாராட்டுக்கள் அம்மா.
    நானும் தரவிறக்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என் மின்னூலை தரவிறக்கி படிப்பதற்கும், பாராட்டிற்கும் நன்றி அருணா.

      Delete
  12. ஆஹா, இன்னுமொரு மின்னூலா ! நேரமிருக்கும்போது படிக்கிறேன். படமே நூல் எப்படி இருக்கும் என்பதைச் சொல்கிறது. முயற்சிக்கும், வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  13. தரவிறக்கம் செய்து படிக்கிறேன்.

    மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தரவிறக்கம் செய்து படிப்பதற்கு நன்றி வெங்கட்ஜி.

      Delete
  14. நன்றி... பாராட்டுக்கள்...

    பதிவிறக்கம் செய்து விட்டேன்... Vetha.Elanagthilakam.

    ReplyDelete
    Replies
    1. தரவிறக்கம் செய்து படிப்பதற்கு நன்றி வேதா மேடம்.

      Delete
  15. காலை அடித்த வெய்யிலின் தாக்கம் ஏற்படுத்திய வெக்கையின் காரணமாய் தூங்க முடியாமல் இங்கும் அங்குமாய் உலாவிக் கொண்டிருந்தேன். . . தங்களின் மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்த ஞாபகம் வரவே, படிக்க இதுதான் சரியான நேரம் என லேப்டாப்பை திறந்து வைத்து, திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன் (நல்ல வேளை ஈ-பப் ரீடர் ஒன்று கைவசம் இருந்தது). . . சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரே மூச்சில் முக்கால் வாசி புத்தகத்தை வாசித்துவிட்டேன். வலை உலகிற்க்கு புதிது என்பதால் தங்களின் பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பு தற்போது தான் அடியேனுக்கு கிடைத்தது. . .எனினும் இதற்க்கு முன்பு தங்களின் "பீங்கான் ஜாடி உப்பு" கதையை படித்து ரசித்திருக்கிறேன். அருமையான அனுபவ மின்னூல். என்னை மறந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன். "சிக்கிக் கொண்டேன்" மற்றும் "வீட்டில் விசில்" படிக்கும் போதே முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. டில்லியில் "ஹைஹை" என குதிரை ஓட்டிய அனுபவம் மேலும் சிரிப்பை தூண்டியது. வாழ்த்துக்கள். . .பிரமாதம்.

    பி.கு: மீதம் இருக்கும் பகுதிகளையும் வாசித்துவிட்டு நாளை பின்னூட்டம் செய்கிறேன். . .

    மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை ஆர்வமாகப் படித்து, ஒவ்வொரு அனுபவத்தையும் நீங்கள் ரசித்து சிரிப்பது என்னை மகிழ்விக்கிறது. உங்களின் இந்தப் பின்னூட்டம் எனக்கு பெரிய பூஸ்ட். உங்களை மாதிரி வாசகர்கள் தான் என்னை எழுதத் தூண்டுபவர்கள் . உங்கள் வாழ்த்துக்களுக்கும், என் நூலை தரவிறக்கிப் படித்து ரசிக்கும் உங்களுக்கு என் மன்மார்ந்த நன்றிகள் விக்னேஷ்.

      Delete
  16. மின்னூல் வெளியீட்டிற்கு மிகவும் நன்றி.ரசித்துப் படிக்கப் புத்தகம் கிடைத்தது.வாழ்த்துகள் ராஜி. இன்னும்நிறையா புத்தகங்கள் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், படித்து ரசித்ததற்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்