google images |
சோபாவில் சாய்ந்து சோம்பலாய் உட்கார்ந்திருந்த என்னை , செல்பேசியின் மணியோசை வாட்ஸ் ஆப் செய்தி வந்திருப்பதை அறிவித்து அழைத்தது . யார், என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று ஆவலோடு பார்த்தேன். அனுப்பியிருந்தது, வெளி நாட்டில் இருக்கும் என் தம்பி மனைவி.
" உங்களை எங்கே இணையப் பக்கம் காணவே காணோம் . ஏன் உடம்பு சரியில்லையா ? " என்று அக்கறையோடு விசாரித்திருந்தாள் . இது நடந்தது ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பாக.
சென்ற வாரம் வெளியூரில் இருக்கும் சகோதரி , " என்னடி நாள் முழுசும் பண்ணிட்டிருக்கே. முக நூல் பக்கமே காணோமே. நலம்தானே ! " என்று கேட்டிருந்தாள் .
உறவுகளின் பாசம் என்னை நெகிழ வைத்தது.
ஆனாலும் இணையப் பக்கம் ஏனோ வரவேயில்லை. யாருக்கும் பின்னூட்டடமிடவில்லை. பொங்கலுக்குக் கூட யாருக்கும் வாழ்த்துத் தெரிவிக்க , சற்றே சோம்பலாயிருந்தது. உடல், மனம் இரண்டும் தான்.
நட்புகளின் அக்கறையும் பின்னர் தெரிய வந்தது. பல நண்பர்கள், தோழிகள், முகநூலில் என் டைம்லைனில் வந்து அவர்களாகவே பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து இணையப் பக்கம் என்னை வரவைக்க முயற்சித்தார்கள்.அப்பொழுதும், அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்ததோடு விட்டு விட்டேன்.
சில, பல நாட்களுக்குப் பிறகு என் வலைத்தளம் பக்கம் இன்று தான் வந்தேன். ஏன் இத்தனை நாள் வரவில்லை என்கிற கேள்விக்கு இன்னமும் என்னிடம் விடையில்லை பல விதமான சிந்தனைகளில் ஆழ்ந்துப் போய் விட்டேன் என்று மட்டும் உணரத் தொடங்கினேன். எதனால் இந்த மனச்சோர்வு ?
இத்தனை வருட வாழ்க்கையில்எதிர்கொண்ட சவால்கள் தான் எத்தனைஎத்தனை !,
பெரும்பாலானவற்றில் வெற்றியும், சிலவற்றில் தோல்வியும் கண்டிருக்கிறேன்.தோல்விகளைக் கண்டு அப்பொழுதெல்லாம் அஞ்சாத கலங்காத மனம் சட்டென்று இப்பொழுது என்ன ஆச்சு? சுயப் பரிசோதனை செய்து கொண்டேன்.
முதுமையை எட்டிப் பிடிக்கிறேனோ?
"அப்படியொன்றும் உனக்கு வயதாகிவிடவில்லை." மனசாட்சி அதட்டியது.
உண்மை தானே ! ஒத்துக் கொண்டேன்.
குழந்தைகள் நம்மை விட்டுப் பிரிந்துசென்று வாழ்கிறார்களே. பிரிவின் சுமையை மனம் தாங்கவில்லையா?
"அட......உன் குழந்தைகள் தான் உன்னை விட்டு வேறு ஊர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்று வாழ்ந்து வருகிறார்களே . இப்பொழுது திடீரென்று என்ன வந்தது அதற்கு?" மீண்டும் மனசாட்சி.
ஆமாம். கரெக்ட் தான் நீ சொல்வது...என்று சொன்னேன்.
"உடல் நலமில்லையா? "என்னையே கேட்டுக் கொண்டேன்.
உன் உடலுக்கு என்ன கேடு ? நன்றாகத் தான் இருக்கிறாய்? சொன்னது மனசாட்சி.
அப்ப எனக்கு எழுதுவதுப் பிடிக்கவில்லையோ?
"அப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. அப்படித் தோன்றினால் ராசியின் அமெரிக்கப் பயணத் தொடரை ஆரம்பித்து வைத்திருக்க மாட்டாய்?" மனசாட்சியின் பதில்
அப்ப என்ன தான் என்னுடையப் பிரச்சினை?
அதற்குத் தான் என்னிடமும் பதிலில்லை என்று கையை விரித்து விட்டது மனசாட்சி.
"போனது போகட்டும். உன் ராசியையும், விஷ்ணுவையும் அமெரிக்காவிற்கு அனுப்பும் வழியைப் பாரு. அவர்கள் அங்கு அடிக்கும் லூட்டி உன்னை உற்சாக மனநிலைக்குக் கொண்டு வரும் "என்று சொன்ன மனசாட்சி வேறு ஒரு அறிவுரையும் சொன்னது.
" ஒரு வேலையை இருபத்தொரு நாட்களுக்குத் தொடர்ந்து செய்தால் அதுவே பழக்கமாகி விடுமாம் . அதனால்......." ஆரம்பித்த மனசாட்சியை நான் இடை மறித்தேன்.
" இருபத்தோரு நாட்கள் நான் தொடர்ந்து எழுதாததால் தான் இந்த இணைய இடை வெளியோ எனக்கு ? "
"நிறுத்து. நான் சொல்ல வந்தது அதுவல்ல . இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து எழுது. எழுதுவது பழக்கமாகி விடும் என்று சொல்ல வந்தேன் " என்று மனசாட்சி மண்டையில் குட்ட
அட...... ஆமாம்.......யோசிக்க ஆரம்பித்தேன்.
இருங்கள். இருங்கள்... எங்கே போகிறீர்கள்? போய் விடாதீர்கள். இருபத்தொரு நாட்களுக்குத தொடர்ந்து எழுதி, பதிவுகள் வெளியிட்டு உங்களைக் கொல்லப் போவதில்லை. அந்த உறுதியைத் தருகிறேன்.
இருபத்தியொரு நாட்கள் தொடர்ந்து எழுதுகிறேன் . ஆனால்..... இடைவெளி விட்டே வெளியிடுகிறேன். சரி தானே!
எல்லாம் சரி தலைப்பு என்ன ஊஞ்சல் என்றிருக்கிறதே என்று கேட்கிறீர்களா?
அது தாங்க Mood Swings. மூட் ஆடும் ஊஞ்சலாட்டம்.
தங்களின் மீள் வருகையை வரவேற்க்கிறேன்
ReplyDeleteதொடருங்கள்
தமிழ் மணம் 1
நீங்கள் கொடுக்கும் வரவேற்பிற்கும், தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Delete//இருபத்தியொரு நாட்கள் தொடர்ந்து எழுதுகிறேன் . ஆனால்..... இடைவெளி விட்டே வெளியிடுகிறேன். சரி தானே! //
ReplyDeleteஎப்படியோ மீண்டும் எழுதினால் சரியே. ஊஞ்சலில் ஆடிக்கொண்டே எழுதுங்கோ. அலுப்பு இல்லாமல் இருக்கும். :)
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார். //ஊஞ்சலில் ஆடிக்கொண்டே எழுதுங்கோ// புன்னகையை வரவழைத்தது.
Deleteநன்றி கோபு சார்.
வாங்க வாங்க ராஜி!
ReplyDeleteஐயோ பாவம் முகநூல் அன்பு, முக நூல் நட்பு, முக நூல் சொந்தம், முக நூல் புன்னகை. லைக்னு இப்படி ஆயிட்டீங்களே, ராஜி. :(
***சில, பல நாட்களுக்குப் பிறகு என் வலைத்தளம் பக்கம் இன்று தான் வந்தேன். ஏன் இத்தனை நாள் வரவில்லை என்கிற கேள்விக்கு இன்னமும் என்னிடம் விடையில்லை ***
வரணும்னு ஒரு உந்துதல் இல்லை. என்மை மாதிரி டெய்லி நாலு பேரோட வாக்குவாதம் செய்து வம்பு இழுத்தீங்கனா, அந்த "உந்துதல்" வரும். நெஜம்மாத்தாங்க சொல்றேன்.
என்ன?? ஓ. உங்களை ஏன் ராஜினு ஒரு மட்டுமரியாதை இல்லாமல் விளிக்கிறேன்னா ..உங்களுக்கு "வயதாகிவிட்டது" என்கிற உணர்வு வரக்கூடாதுனு பெரிய மனது பண்ணி உங்களை "அவ"மதிக்கிறேன். அதனால் பொறுத்துக்கொள்ளுங்கள்! :)
இப்போதைக்கு இவ்ள்வளவுதான். மறுபடியும் வர முயல்கிறேன். ( எப்படி கம்மிட் பண்ணாமல் பேச கத்துண்ட்டேன்னு பாருங்க!!! "கம்மிட்மெண்ட்"னா அத்தனை பயம்ம்ம்மா இருக்கு, என்ன பண்றது? )
நீங்கள் சொல்வது போல் எழுத உந்துதல் இல்லையோ என்று நினைக்கிறேன்.
Deleteஉங்களைப் போன்றவர்களின் கருத்துரை கண்டிப்பாக என்னை எழுதத் தூண்டும் . சந்தேகமில்லை.
நன்றி வருண் உங்கள் வருகைக்கும், motivate செய்வதற்கும்.y
அனைவருக்கும் எப்போதேனும் ஏற்படும்
ReplyDeleteஒரு வித விரக்தி நிலைதான் இது என
நினைக்கிறேன்
காரணம் ஏதுமில்லை ஆனாலும்
என்னவோ இருக்கு என்கிற ஒரு மன நிலை இது
இதுபோன்ற நிலயில் நானும் சில நாள்
இருந்து மீண்டிருக்கிறேன்
ஆனால் அதை இத்தனைச் சிறப்பாக
என்னால் எழுத முடியாமல் போனது
மனம் கவர்ந்த பதிவு
ஊஞ்சல் தொடர்ந்து ஆட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteரமணி சார் நான் நீண்ட கட்டுரையாய் எழுதியதை நீங்கள் அழகாய் சின்னதாய் நறுக் கவிதையாய் வடித்திருப்பீர்கள். உங்கள் கவிதைகளை மிகவும் ரசிப்பேன் ரமணி சார்.
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி சார்.
உங்களுக்கும் இந்த ஊஞ்சல் வந்தாச்சா ! இது எனக்கு அடிக்கடி வருமே.
ReplyDeleteவிடுபட்டு சீக்கிரமே வாங்கோ !
என்னத்தை சொல்வது சித்ரா. இந்த மூட் சுத்தமாக அவுட் ஆனது . இப்பொழுது தான் மீண்டும் எழுதத் தோன்றுகிறது. மொத்தமாக ஐபேட் கேம்ஸ் வேறு என்னை ஆட்கொண்டது.
Deleteஉங்கள் பதிவுகள் படிக்க வேண்டும் சித்ரா.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சித்ரா.
வணக்கம்
ReplyDeleteஇரசனை மிக்க கதை பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரூபன்.
Deleteதமிழ் மண வாக்கிற்கும் நன்றி ரூபன்.
Deleteசில சமயங்களில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அலுப்பு வந்துதான் விடுகிறது. அந்நிலை மாறும்போது பழைய உற்சாகத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி பூஸ்ட் ஆகியிருக்கும்! தொடர்ந்து எழுதுங்க...
ReplyDelete//"நிறுத்து. நான் சொல்ல வந்தது அதுவல்ல . இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து எழுது. எழுதுவது பழக்கமாகி விடும் என்று சொல்ல வந்தேன் " என்று மனசாட்சி மண்டையில் குட்ட//
பாஸிட்டிவ்!
உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteமனச்சாட்சி இனி கேள்விகள் பல கேக்கட்டும்...
ReplyDeleteதொடருங்கள்...
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.
Deleteராசியும் விஷ்ணுவும் சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா சென்று விட்டார்களே - என்று நினைத்தேன்!..
ReplyDeleteசீக்கிரம் அனுப்பி வைக்கிற வேலையைப் பாருங்கள்!..
அம்மாம் துரை சார். சீக்கிரமாகவே பிளேன் ஏற்ற வேண்டும் ராசி விஷ்ணு தம்பதியினரை. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்.
DeleteWelcome back!
ReplyDeleteBest Wishes.
உங்களைப் போன்ற பதிவுலக ஜாம்பவான்களின் வாழ்த்துக்கள் கிடைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது துளசி மேடம். நன்றி மேடம்.
Deleteபுத்துணர்வுடன் பல அரட்டை அடிக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அனுராதாபிரேம்.
Deleteமீண்டும் பழைய உற்சாகத்துடன் எழுத வாருங்கள் ராஜி . மனசஞ்சலங்கள் மறைந்து விடும்.
ReplyDeleteவாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி கோமதி.
DeleteWelcome Back... :) சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், வரவேற்பிற்கும் நன்றி வெங்கட்ஜி.
Deleteவணக்கம் அம்மா. விட்டு விட்டால் தொடர சிறிது கஷடம் தன். நான் கூட பல நாட்களாக ஒன்றும் எழுத வில்லை. தங்கள் பணியை தொடர என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜன் சார். நீங்களும் தொடருங்கள் உங்கள்
Deleteபதிவுகளை.
நன்றி ராஜன் சார்.
அட நீங்களும் எனது கட்சிக் காரரேதான் :)) எனக்கும் அவ்வப்போது சில பல
ReplyDeleteசொல்ல முடியாத காரணங்களினால் ஆக்கங்களைத் தொடர முடியவில்லை
ஒரு நாளுக்கு இரண்டு பகிர்வும் வெளியிட்ட மனம் இன்று ஸ்தம்பிதம் அடைந்து
நிற்பது வியப்பைத் தருகிறது அம்மா ! இருப்பினும் தங்களைப் பாராட்டியே தீர
வேண்டும் இந்த வயதிலும் நுட்பமான எழுத்தாற்றலால் எங்கள் மனத்தைக் கொள்ளை
அடித்துச் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் அம்மா .தொடர்ந்தும் ஆக்கங்களைத் தாருங்கள்
நான் இப்போது என் வலையில் வெண்பா விருத்தம் ஒன்றினை வழங்கியுள்ளேன்
நேரம் இருந்தால் பார்த்து மகிழுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நன்றி உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் அம்பாளடியாள். சில சமயம் இப்படி நேரிட்டு விடுகிறது. இதற்குப் பெயர் தான் Bloggers Block என்று நினைக்கிறேன்.
Deleteஅதெல்லாம் சரி. "//இந்த வயதிலும் ' // என்று குறிப்பிட்ட்டிருக்கிறீர்களே , அதை மிகவும் ரசித்தேன். ஹா.....ஹா.....ஹா..... நீங்களும் சிரித்து விடுங்கள். (LOL)
நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
உங்கள் தளத்திற்கு சென்று உங்கள் கவிதையை படித்து ரசித்தேன் .
வணக்கம் அம்மா...
ReplyDeleteமீண்டு(ம்) வந்திருக்கிறீர்கள்...
தொடருங்கள்..
நன்றி குமார் உங்கள் வருகைக்கும், வரவேற்பிற்கும்.
Deleteதொடர்ந்து எழுதுங்கள் ராஜி மேடம்! உங்களை தொடர்ந்து வருவதில் நாங்கள் இருக்கிறோம் :)- MahalakshmiVijayan
ReplyDeleteஏன் இப்படி //Anonymous// ஆகிவிட்டீர்கள் மஹா.
Deleteஎன்னை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி மஹா.
சில நேரங்களில் இப்படித்தான் காரணமோ இல்லாமல்
ReplyDeleteஎதுவும் செய்யாமல் இருந்து விடுவோம்
பரவாயில்லை, மீண்டும் புத்துணர்வோடு வலைக்கு வாருங்கள்
வாசிக்கக் காத்திருக்கிறேன்
தம +1
உங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சார்.
Deleteமகிழ்ச்சி மகிழ்ச்சி மேடம்
ReplyDeleteவயது ஆக ஆக, இத்தகைய மனச்சோர்வு அவ்வப்போது எல்லோருக்கும் வருவது தான்! எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போல! நாமே நம்மை மீட்டுக்கொள்ள வேண்டியது தான்! இல்லாவிட்டால் முடங்கிப்போய் விடுவோம்! மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்! இனி அருமையான பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteஇந்த மூட் ஸ்விங் -ஐ வைத்தே இரண்டு மூன்று பதிவு தேற்றிவிடுங்கள்! அப்புறம் மூடாவது, ஊஞ்சலாவது ஒன்றும் கிட்டயே வராது.
ReplyDeleteவாங்க வாங்க சீக்கிரம் வந்து எழுத ஆரம்பிங்க.
ஏனோ இந்தப் பதிவு எனக்கு மெயிலில் வரவேயில்லை. உங்களுக்கு என்ன ஆச்சு என்று பார்க்க வந்தேன். இந்தப் பதிவு கண்ணில் பட்டது. இதை எழுதியே நாளாகிவிட்டது போலிருக்கிறதே!
மனநிலை சரியாகி மீண்டும் வலையுலகில் எங்களையெல்லாம் சிரிக்க வைக்க சீக்கிரமே வலம் வர வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html