தொடர்ந்து படிக்க / பார்க்க
"விட்டலாச்சார்யா வீடு "
" ஏன் ? என்னாச்சு? " என்கிற கேள்வியுடன் தன கணவன் ராஜேஷைப் பார்த்துக் கேட்டாள் .
அதுவா ... ஒண்ணுமில்ல........... என்ற ராஜேஷ் ஏதோ சொல்ல முயல ...ராசி விடுவதாயில்லை.
விஷ்ணுவிடம், " நிஜமாவே எனக்குப் புரியல. எதைப் பார்த்து நீங்கள் பயந்தீர்கள் "?
"நீ காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தால் , உனக்கும் அந்தப் பயம் வந்திருக்கும்."
" ஏதோ பிசாசைக் கனடாப் போலேல்ல உங்க முகம் வெளிறிப் போயிருந்தது "
விஷ்ணு கேட்டார் " ராசி நீ காரில் உட்கார்ந்திருக்கும் போ து என்ன வேடிக்கைப் பார்த்தாய் சொல்லு ?
ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்த மரங்களை , டிராபிக் அதிகம் இல்லாத ரோட்டை , அப்புறம்............கால்படியளவு சைஸில் இருக்கும் டம்ளரில் இருந்த கோல்ட் காபியை சிப்பிக் கொண்டிருந்த ராஜேஷை , ... அவன் ஓட்டிக் கொண்டு வந்த பயமுறுத்தும் வேகம் எல்லாம் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
" இதையெல்லாம் பார்த்தே சரி ....... காரில் ராஜேஷ் எந்தப் பக்கம் உட்கார்ந்து கார் ஓட்டினான் என்று பார்த்தாயா? "
ராசி விரலை கன்னத்தில் வைத்ததுக் கொண்டு "ஆமாமில்ல..... என்னவோ வித்தியாசமாக இருக்கே ன்னு நினைத்தேன்.
அட... ஆமாம் . இந்தியாவில் வலப்பக்கம் இருக்கும் டிரைவர் சீட் இடப் பக்கம் இருக்கு இல்ல . இப்ப தான் புரியுது. சரி ....அதுக்கு ஏன் நீங்க பதற வேண்டும்."
"அது மட்டும் தான் வித்தியாசமாகத் தோன்றுகிறதா? இந்தியாவில் " Always drive left " என்பது இங்கே " Drive Right " . அதை கவனிக்கவில்லையா ராசி."
" ஜன்னல் வழியாக ப்ராக்குப் பார்த்துக் கொண்டு ஜாலியாக உட்கார்ந்திருந்தாயே , எதிர்த்தாற் போல் நீ பார்த்திருந்தால்....... அரண்டு போயிருப்பாய் "
" வலப்பக்க டிரைவிங் என்பதை ஒரு நிமிஷம் மறந்து விட்டு , இந்தியாவில் இருப்பதாக நினைத்துக் கொண்டு , ராஜேஷ் 'ராங்' சைடில் ஓட்டுகிறானே என்று நான் குழம்பி நிமிர்ந்தால் ,மிகப் பெரிய டிரக் ஒன்று தூரத்தில் எதிரே வருவது தெரிந்தது . என் குழப்பத்தில் நம் காரின் மேல் மோதப் போகிறதோ என்று கலங்கிப் போனேன்.. உனக்கு என் பயம் புரியல அவ்வளவு தான்."
ராஜேஷ்," அப்பா, உங்கள் பயம் ரொம்ப சகஜம். போன வாரம் என் நண்பன் ஒருவரின் அம்மா இப்படித்தான் பயந்து போனார்கள். " சொன்னான் .
அப்பொழுது ,"எல்லோரும் சாப்பிடலாம் வாங்க என்று கூப்பிட்ட ஆர்த்தியிடம் ராசி விஷ்ணு இருவரும்," நாங்கள் பிறகு சாப்பிடுகிறோமே கொஞ்சம் படுத்தால் தேவலை போல் இருக்கிறது" என்று சொல்லவும் ,
ராஜேஷும், ஆர்த்தியும் , " நீங்கள் இரண்டு பேரும் தூங்குங்கள் . நாங்களும் அர்ஜுனை அழைத்துக் கொண்டு வாராந்திர பர்ச்சேஸ் முடித்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டு சென்றனர்.
பாவம்...... இருவருக்கும் நல்ல அசதி. சரியான தூக்கத்தில் சட்டென்று ஆழ்ந்து விட்டனர் ராசியும், விஷ்ணுவும்.. சன்னமான குறட்டை ஒலி விஷ்ணுவிடமிருந்து வந்து கொண்டிருந்தது. ஏசி சத்தம் அறையை நிரப்பிக்கொண்டிருந்தது.
சற்று நேரம் கழித்து........
"The temperature outside is......." என்கிற ஏர் ஹோஸ்ட்ஸ் குரல் காதில் விழ , எதிரே வந்த டரக் டிரைவர் லாவகமாய் வண்டியைத் திருப்பிக் கொண்டு செல்ல ...... ஒரே 'மச மச' என்கிறக் குழப்பமான கனவில் விஷ்ணு தவித்துக் கொண்டிருக்கும் போது,
,ஊ.....ய் ........ஊ.........ய்.........., என்கிற சத்தம் அவரை எழுப்பி விட்டது. பதறியடித்துக் கொண்டு எழுந்தார் விஷ்ணு.
,ஊ.....ய் ........ஊ.........ய்.........., என்கிற சத்தம் அவரை எழுப்பி விட்டது. பதறியடித்துக் கொண்டு எழுந்தார் விஷ்ணு.
ராசி படுக்கையில் இல்லை . இவள் தான் ஏதோ கலாட்டா செய்திருக்கிறாள் . என்று புரிய பதட்டத்துடன் எழுந்து கீழே இறங்கி சென்றார் விஷ்ணு.
ராசி சமையலறையில் அப்பளம் பொரித்துக் கொண்டே "திரு திரு " என்று பயந்து போய் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள் .
விஷ்ணு " ராசி என்ன ஆச்சு ?" என்று பதற , ராசியோ கேசை சிம்மில் வைத்து விட்டு , ஸ்விட்ச் ஒன்றைத் தட்டிக் கொண்டிருந்தாள் .
விஷ்ணுவோ எங்கோ மேலே பாரத்து, சத்தம் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்.
" என்ன செய்கிறீர்கள்?" என்று ராசி விரட்ட அவர் பங்கிற்கு அவரும் ஏதேதோ ஸ்விட்சைத் தட்டி விசில் சத்தத்தை நிறுத்த முயன்றனர்.
" என்னமோ போங்க என்ன அமெரிக்காவோ ? பாருங்களேன்.... ஸ்விட்சை 'ஆன்' செய்தால் லைட் 'ஆப்' ஆகிறது. 'ஆப்' செய்தால் 'ஆன்' ஆகிறது. எந்த புத்திசாலி எலக்ட்ரீஷியன் வீட்டிற்கு வயரிங் செய்தானோ....... ஒரு ஸ்விட்ச் பாக்கியில்லாமல் எல்லாமே உல்டா செய்திருக்கிறான் " ராசியின் குரலில் இருந்தது அலுப்பா, கோபமா புரியவில்லை விஷ்ணுவிற்கு .
என்னென்னவோ செய்தும் , ராசி விஷ்ணு இருவராலும் விசில் சத்தத்தை அடக்க முடியவில்லை.
கடைசியாக விஷ்ணு மேலே இருக்கும் 'ஸ்கை லைட் ' டைப் ( சூரிய வெளிச்சம் வருவதற்காக மேற் கூரையின் கண்ணாடி ஜன்னல் ) பார்த்து " யாருடா அது என் ராசியைப் பார்த்து விசிலடிக்கிறது? தைரியம் இருந்தால் என் முன்னாடி வாடா " என்று தன் சட்டைக் கைகளை மடித்துக் கொண்டு ,சண்டைக்குத் தயாராவது போல் கிண்டலடிக்க ....
"ஆமாம் . இது ஒண்ணு தான் குறைச்சல். இந்த விசிலை எப்படியாவது நிறுத்தப் பாருங்கள் என்று சொன்னால் ...... இந்த ரணகளத்திலும் உங்களுக்குக் கிண்டலடிக்கத் தோன்றுகிறது ......?" என்று ராசி பல்லைக் கடித்துக் கொண்டு முறைக்க ......
திடீரென்று " The traffic in Route I-27 is heavy and...... " என்கிற ஆண் குரல் ஒன்று ஒலிக்க, ராசி விஷ்ணு இருவருமே அரண்டு போய் திரும்ப , டிவியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.. ( இருக்கிற ஸ்விட்சையெல்லாம் தட்டி விட்டுக் கொண்டிருந்ததன் விளைவு).
ராசி ஸ்விட்சை அணைக்க முயல......விஷ்ணு ," வேண்டாம் ராசி. வேண்டாம் எதையாவது தட்டப் போக விட்டலாச்சார்யா படம் போல் யாராவது மேலேருந்து சட்டென்று குதித்து விடப் போகிறார்கள் ......" என்று மீண்டும் கிண்டலடிக்கவும், ராஜேஷ் ஆர்த்தி உள்ளே வரவும் சரியாயிருந்தது.
உள்ளே நுழைந்தவுடன், இருவரும் சர்க்கஸ் கூடார உதவியாட்கள் போல் களத்தில் இறங்கினார்கள்.
ஆர்த்தி சமையல்;அறைக்குள் நுழைந்து முதலில் கேசை அணைத்து, புகை போக்கியை ஆன் செய்து, ஜன்னலேல்லாம் திறந்து வைத்தாள் .
அதற்குள் ராஜேஷ் ஒரு துண்டை எடுத்து ஸ்மோக் டிடெக்டர் அருகில் விசிறிக் கொண்டே, ஸ்டுலை இழுத்துப் போட்டு மேலேறி ஸ்மோக் டிடெக்டரின் பேட்டரியை கழட்டவும், விசில் சத்தம் நிற்க, ... ராசியும், விஷ்ணுவும், எல்லாவற்றையும் ஆச்சர்யமாகப் பார்க்க, பிறகு இருவருக்கும் ஸ்மோக் டிடெக்டர் பற்றிய தகவலை இருவருக்கும் சொல்ல,
ராசி," புகையை கண்டறியும் கருவி தானா எங்களைப் பாடாய் படுத்தியது." என்று பெருமூச்சு விட்டாள் . .
பிறகு ராஜேஷைப் பார்த்து," ஏண்டா ... உங்கள் வீட்டு வயரிங் செய்த எலக்ட்ரிஷியன் கைகளுக்கு தங்கக் காப்பு தான் போட வேண்டும் . "
"ஏன்மா?" ராஜேஷ் கேட்க,
" பின்னே ஒரு ஸ்விட்ச் விடாமல் எல்லாவற்றையும் தலை கீழாக போட்டு வைத்திருக்கிறானே . அதற்கு சொல்கிறேன்."
ராஜேஷும், ஆர்த்தியும் வாய் விட்டு சிரித்து விட்டு,
"அப்படி நீங்கள் தங்கக் காப்பு போடுவதானால் இங்கே இருக்கும் எலக்ட்ரிஷியன்கள் எல்லோருக்கும் நீங்கள் போட வேண்டும்" என்று ஆர்த்தி சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு , சுவிட்ச் ரகசியத்தைப் புரிய வைத்தாள் .
இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கோ தெரியலியே என்று ராசி முணுமுணுக்க , ஆர்த்தியோ , இவர்கள் இங்கு இருக்கும் வரை நமக்குக் கொண்டாட்டத்திற்குக் குறைவிருக்காது போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள்.
ஆமாம். ஆர்த்தி நினைப்பது உண்மை தான் என்று நீங்களும் போகப் போக உணர்வீர்கள் பாருங்களேன்.
தொடர்ந்து வாருங்கள்....

//ஆர்த்தி சமையல்;அறைக்குள் நுழைந்து முதலில் கேசை அணைத்து, புகை போக்கியை ஆன் செய்து, ஜன்னலேல்லாம் திறந்து வைத்தாள் .
ReplyDeleteஅதற்குள் ராஜேஷ் ஒரு துண்டை எடுத்து ஸ்மோக் டிடெக்டர் அருகில் விசிறிக் கொண்டே, ஸ்டுலை இழுத்துப் போட்டு மேலேறி ஸ்மோக் டிடெக்டரின் பேட்டரியை கழட்டவும், விசில் சத்தம் நிற்க, ... ராசியும், விஷ்ணுவும், எல்லாவற்றையும் ஆச்சர்யமாகப் பார்க்க, பிறகு இருவருக்கும் ஸ்மோக் டிடெக்டர் பற்றிய தகவலை இருவருக்கும் சொல்ல, //
நல்லவேளை, விசில் சப்த கேட்டு தீ அணைப்பு வண்டிகள் ஏதும் வராமல் இருந்துள்ளது. :) நல்ல நகைச்சுவைக் கட்டுரை .... தொடரட்டும்.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.
Deleteஆஹா, வந்துட்டீங்களா !
ReplyDelete"யாருடா அது என் ராசியைப் பார்த்து விசிலடிக்கிறது? தைரியம் இருந்தால் என் முன்னாடி வாடா" ____ கலகல :)))
அமெரிக்காவுக்கு முதல் விசிட் மேற்கொள்பவரின் மனதினுள் எழும் அனைத்தும் வரிசைகட்டி வந்துள்ளன. ஆர்த்தியின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் ஆவலில் ...... நானும் !
ஆமாம் சித்ரா முதல் விசிட்டில் அமெரிக்கா ஆச்சர்யமாக மட்டுமல்ல மர்மமாகவும் விளங்கும். அதுவே என் பதிவில் பிரதிபலிக்கிறது .
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.
கதை நகர்வு நன்று
ReplyDeleteபடிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.
Deleteபடித்தேன், ரசித்தேன்.
ReplyDeleteநீங்கள் படித்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteஅருமை
ReplyDeleteதொடருங்கள் சகோதரியாரே
தொடர்கிறேன்
நன்றி
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமார் சார்.
Deleteஅங்கு எல்லாமே தலைகீழ் தான்...!
ReplyDeleteஆவலுடன்...
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.
Delete/////////////
ReplyDeleteகடைசியாக விஷ்ணு மேலே இருக்கும் 'ஸ்கை லைட் ' டைப் ( சூரிய வெளிச்சம் வருவதற்காக மேற் கூரையின் கண்ணாடி ஜன்னல் ) பார்த்து " யாருடா அது என் ராசியைப் பார்த்து விசிலடிக்கிறது? தைரியம் இருந்தால் என் முன்னாடி வாடா " என்று தன் சட்டைக் கைகளை மடித்துக் கொண்டு ,சண்டைக்குத் தயாராவது போல் கிண்டலடிக்க ....
//////////////
விவிசி.. ரணகளம். தொடர காத்திருக்கிறோம்.
நீங்கள் மிகவும் ரசித்துப் படித்துப் பாராட்டியதற்கு நன்றி பாண்டியன்.
Deleteமுன்னமே - இப்படியொரு சம்பவத்தை அறிந்திருந்தேன்..
ReplyDeleteஆயினும், தங்களின் கைவண்ணத்தில் - மனதைக் கவர்ந்தது..
வாழ்க நலம்..
நீங்கள் சொல்வது உண்மை துரை சார். நானே 'வீட்டில் விசில் ' என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.
Deleteஸ்மோக் டிடெக்டரின் முதல் அனுபவத்தின் இன்னொரு வடிவம் இது அவ்வளவு தான்.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.
இதெல்லாம் வெளிநாடுகளில் சகஜம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் துபாயில் ஒரு நாள் இரவு இந்த மாதிரி தீ அலெர்ட் நேர்ந்து குடியிருப்பில் இருந்த அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு கீழே ஓட அது ஃபால்ஸ் அலார்ம் என்று பிற்பாடு புரிந்தது
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் வெளிநாடுகளில் இது சகஜமே. நம் நாட்டிலிருந்து செல்பவர்களுக்கு ஸ்மோக் டிடெக்டர் எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கலாம் என்கிற கற்பனை தான் இது.
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலு சார்.
இந்த ஸ்மோக் டிடெக்டர் கதை நானும் சில ஆண்டுகள் முன்னர் பகிர்ந்திருக்கேன். இப்போ எல்லாம் சகஜமாப் போச்சு. ஏற்கெனவே அங்கே எல்லாம் உல்டானு தெரிந்ததால் திகைக்கவில்லை. போக்குவரத்திலும் பயம் ஏற்படவில்லை. உங்கள் பாணியில் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்பொழுதும் அமேரிக்கா செல்லும் போது , போக்குவரத்து ஒரு சில நாட்களுக்கு என்னை சற்று பயமுறுத்தவே செய்கிறது.
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.
நகைச்சுவையாக அமெரிக்க வாழ்வியல் முறையை சித்தரித்தவிதம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.
Deleteராஜி மேடம்,
ReplyDeleteஎனக்கென்னமோ ராசி என்பது உங்களையே சொல்லிக்கொல்வதாய் தோணுதே. ஓருவேளை உங்க சிரிக்க வைக்கும் சில சொதப்பல்களை முதலில் படித்ததாலோ?
Anyway, உங்க எழுத்து, நடை ரொம்ப நல்லாவே இருக்கு. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புள்ள சகோதரி ’அரட்டை’ ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். விபத்து காரணமாக இடது காலில் காயம்; ஒரே வலி; எனவே, ’காலில் கட்டு’. (நகைச்சுவை எழுத்தாளரான நீங்கள் ‘கால்கட்டு’ என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.) எனவே பல பதிவுகளை படிப்பதற்கு மட்டுமே முடிகிறது. பின்னூட்டங்கள், மறுமொழிகள் அதிகம் எழுத முடிவதில்லை.
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (10.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து பேசியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/10.html
வணக்கம்
ReplyDeleteதங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
நன்றி
சாமானியன்