google image |
பள்ளி வாசலில் இறக்கிவிடப்பட்டேன்.
"பயமாயிருக்கிறது.."
கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
"எதற்கு?"
"ஃபெயிலாயிட்டா ?"
'அப்படி எல்லாம் ஆகாது .தைரியமாய் போ.""
"சரி ...".கால்கள் பின்ன மெதுவாக நடந்து முன்னேறினேன்.
பள்ளி வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் காற்றில் அசைய, அதிலிருந்த காகம் கரையத் தொடங்கியது.
'அந்தக் காகமாய் மாறிவிடக் கூடாதா ?' என்கிறத் தவிப்பு மனதிற்குள்
நான் படித்தது எல்லாம் மறந்து விட்டது போன்ற உணர்வு.
'குருபிரம்மா குரு விஷ்ணு மகேஸ்வரஹா .....'. மாணவிகளின் கோரஸ் குரல் பளீரெனக் கேட்டது.
இன்னும் பயம் அப்பிக் கொண்டது.
நானும் கூட சேர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டேன். 'என்னைக் காப்பாற்றுப்பா ஆண்டவனே .'
திரும்பிப் பார்க்காமல் ஓடி விடலாமா என்று கூடத் தோன்றியது.
இருக்கும் தைரியத்தையெல்லாம் சேர்த்துப் பிடித்துக் கொண்டு , தலைமையாசிரியையின் அறையை நெருங்கினேன்.
உள்ளே செல்லலாமா என்று யோசிப்பதற்குள்.,
பள்ளி சிப்பந்தி , "காலை அசெம்ப்ளி முடிந்து, மேடம் வரும் வரை இங்கு அமருங்கள் ." என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
பத்து நிமிடம் ஓடியது. தலைமையாசிரியை மாணவிகளுக்கு கொடுத்த அறிவுரைகள் காதில் விழுந்தன. மனம் தான் அதில் செல்லவில்லை.
" இப்பொழுது கூட நேரமிருக்கிறது சட்டென்று எழுந்து வாசல் வழியே போய் விடு" என்று மனம் அறிவுறுத்தியது.
அடுத்த நிமிடமே அதே மனம்," அப்படி பயப்பட என்ன இருக்கிறது? " என்று சமாதனப் படுத்த இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தேன்.
பள்ளி மாணவிகள் வரிசையாக தங்கள் அறைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.நானும் அவர்களில் ஒருத்தியாக சட்டென்று மாறிவிடக் கூடாதா ? என்று மனம் ஏங்க....
பள்ளி சிப்பந்தி என்னிடம் வந்து, " நீங்கள் உள்ளே செல்லலாம். " என்று சொல்ல ,தலைமையாசிரியை என்னைத் தாண்டி உள்ளே சென்றதைக் கூட கவனியாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறேன்.
மெதுவாக உள்ளே சென்றேன்.
தலைமையாசியையை என்னை வரவேற்று, "வாழ்த்துக்கள் " சொல்லி விட்டு, பள்ளி சிப்பந்தியைப் பார்த்து," நல்ல நேரம் முடிவதற்குள் அட்டெண்டஸ் ரெஜிஸ்டரில் புது டீச்சரிடம் கையெழுத்து வாங்கி விடு. அப்புறம் நளினி டீச்சரிடம் (AHM) அழைத்துக் கொண்டு போ" என்று சொன்னார்.
என்னுடைய நீண்ட ஆசிரியப் பணியின் முதல் சில நிமிடங்கள் தான் இது வரை நீங்கள் படித்தது.. என்னிடம் படிக்கப் போகும் மாணவிகளில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மாணவிகளும் அடங்குவர்.
நான் நல்லபடியாகப் பாடம் நடத்த வேண்டுமே என்கிற பதைபதைப்புடன் இருந்தேன். இது நாள் வரை மாணவியாக மட்டுமே இருந்தவள் , ஆசிரியையாக பொறுபேற்ற போது எனக்குள் தோன்றிய மனப் பதட்டம் .
என்னால் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு எந்த விதத் தீங்கும் நேர்ந்து விடக் கூடாதே என்கிறக் கவலையுடன் தான் என் பணியை ஆரம்பித்தேன்.
எனக்கும், என்னவருக்கும் அன்று நடந்த உரையாடல் தான் நீங்கள் மேலே படித்தது.
ஆனால் ,'ஸ்டார்ட்டிங் ட்ரபிள்' மட்டுமே என்னிடம் இருந்திருக்கிறது என்று எனக்கே புரிய ஒரு சில நாட்களானது.. அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் முழு ஈடுபாட்டுடன் பணியைத் தொடர்ந்தேன்.
மிகுந்த மனத் திருப்தியுடன் பணியிலிருந்து விருப்ப( உண்மையில் மனமேயில்லாமல் தான் ) ஓய்வு பெற்றேன் .
தங்களின் ஆசிரியைப்பணிக் காலத்தை மிக அழகாக உங்களுக்கே உள்ள நகைச்சுவை உணர்வுடன் ஓர் குழந்தை சொல்வதுபோலச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.
Deleteதங்களது கடந்தகால நினைவலைகள் நன்று - கில்லர்ஜி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்ஹ்டிற்கும் நன்றி கில்லர்ஜி.
Delete'திக் திக் திக்' .... முதல் வரியிலேயேக் கண்டுபிடிச்சிட்டேனே ! ஆனாலும் நகைச்சுவையாகக் கொடுத்து எங்க பயத்தை போக்கிட்டீங்க :)) எவ்வளவு நாட்களானாலும் அந்நாளை மறக்க முடியுமா ? சுவையான, மகிழ்ச்சியான நினைவுகள் !
ReplyDeleteஉங்களின் இந்தப் பதிவால் நானும் எங்கெங்கோ, ஏதேதோ ஊர்களுக்கெல்லாம் போய் வந்துவிட்டேன் !
நான் உங்களை எங்கெங்கோ அழைத்து சென்றிருக்கிறேனேன். அதையெல்லாம் பதிவாக்குங்களேன் சித்ரா.
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சித்ரா.
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteஉங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி சார்.
Deleteஆசிரியப்பணி என்பது மிகவும் உன்னதமான பணி. அதில் பணியாற்றியதே பெருமைக்குரியது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், வாழ்த்திற்குற்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteமாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இடம்பிடித்தவர் இனி வலை உலகில் அதிகம் காணலாமோ
ReplyDeleteவலையில் தான் என் பெரும்பாலான நேரம் செலவழிகிறது. ஆனால் படிப்பதிலேயே நேரம் போய் விடுகிறது. அதனாலேயே எழுத முடிவதில்லை. ஆனாலும் மீண்டும் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆவல் துளிர் விடுகிறது. எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.....
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.
நீங்கள் சொல்லி வரும் போதே உங்கள் ஆசிரியர் பணி முதல் நாள் என்பதை கண்டு பிடித்து விட்டேன்.
ReplyDeleteஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் விருப்ப ஓய்வு பெற்று இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி
Deleteஆசிரிய பணியை சீரிய முறையில் செய்து இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.
Deleteஆசிரியை பணி மகத்தானது...
ReplyDeleteஅந்த முதல் நாள் நிகழ்வு உண்மையில் திக்..திக்தான் அம்மா...
வாழ்த்துக்கள்.
முதல் நாள் வேலை - நல்ல அனுபவம் தான்.
ReplyDelete