இன்று உலக டையாபிடீஸ் தினம்.
எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்ததில் கிடைத்த ஐடியா ," சாக்லேட்"
என்ன ........... டையாபிடிஸ் தினத்தன்று சாக்லேட் பற்றி எழுதி எல்லோர் எரிச்ச்சலையும் கொட்டிக் கொள்கிறாயா என்று கேட்கிறீர்கள் தானே!
அதே டையாபிடீஸ் காரர்கள் தான் அவசரத்திற்கு கையில் சாக்லெட்டுடன் அலைபவர்கள். நினைவில் வையுங்கள்.
அதோடு ,தலைப்பில் , கோடீஸ்வரர் ஆக வேண்டுமா என்று கேட்டு விட்டு எதைப் பற்றியோ சொல்கிறாளே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.
தொடர்ந்து படியுங்கள்.....
அதோடு ,தலைப்பில் , கோடீஸ்வரர் ஆக வேண்டுமா என்று கேட்டு விட்டு எதைப் பற்றியோ சொல்கிறாளே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.
தொடர்ந்து படியுங்கள்.....
சாக்லேட், சொல்லும் போதே நாவில் இனிப்பு கரைகிறது. இந்த சாக்லேட் கண்டு பிடிக்கப் படவில்லைஎன்றால், அல்லது இப்பூவுலகை விட்டு திடீரென்று மாயமாகிப் போனாலோ என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
மிகவும் துன்பத்திற்கு உள்ளாகப் போவது குழந்தைகளாகத் தானிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
நாமும் தான் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ள என்ன செய்வோம்??
மீண்டும், கல்கண்டு, சர்க்கரை, ஆரஞ்சு மிட்டாய் என்று தேட வேண்டியது தான்.
லட்டு போன்ற இனிப்புகளுக்கு உடனடி வாழ்வு கிடைக்கலாம்.
லட்டு போன்ற இனிப்புகளுக்கு உடனடி வாழ்வு கிடைக்கலாம்.
சாக்லேட் ஹீரோ என்கிற சொல்லே வழக்கத்தில் இருக்காது. (பாவம் திரு. மாதவன்.)
போர்ன்விடா, பூஸ்ட் , சாக்லேட் பால் எதுவும் இல்லாத வீடுகளை நினைத்துப் பாருங்கள்.(எனர்ஜியின் சீக்ரெட் என்று எதை சொல்வது? )
இதில் மிகவும் பாதிக்கப் படப் போவது பிரபலமான சாக்லேட் கம்பெனிகள் தான் . கதவை இழுத்து மூடி விட்டு அடுத்த வேலையில் இறங்க வேண்டியது தான்.
அவர்களை விடவும் அதிகம் பாதிப்புக்குள்ளாவது யாரென்று நினைக்கிறீர்கள். காதலன் தான் .அப்பப்போ கோபித்துக் கொள்ளும் காதலிக்கு சட்டென்று தன்னிடம் ஸ்டாக்கில் வைத்திருக்கும் ஒரு சாக்லேட் பாரை எடுத்துக் கொடுத்து சமாதானப்படுத்த முடியாதே. கணவனும் ஊடலில் இருக்கும் மனைவியை சாக்லெட்டைக் கொடுத்து ,"ஸ்வீட் எடு, கொண்டாடு " என்று சொல்ல முடியாதே.ஆக கணவன், காதலன் பாடு எல்லாம் திண்டாட்டம் தான்., இனி.......
சாக்லேட்டை நம்பியே இருக்கும் விளம்பர நிறுவனங்கள் என்ன செய்யும் சொல்லுங்கள்.எத்தனை பேருக்கு பிழைப்பு இதை நம்பியே இருக்கிறது பாருங்கள்.
பொன் வைக்குமிடத்தில் பூ வைக்கலாம்.
சாக்லேட் இருந்த இடத்தில் பொன் வைத்தால் கூட நிரம்பாது என்றே நினைக்கிறேன்..
ரொம்பவே கஷ்டம் தான்.
இதில் " டார்க் " சாக்லேட்டைப் பற்றி வேறு பிரசாரம் செய்கிறார்கள்.
இதயத்திற்கு நல்லதாம். ஃ ப்ளாவினாயிட்ஸ் இருக்கிறதாம் . அதனால் மன அழுத்தத்தைக் குறைக்க டார்க் சாக்லேட் சாபிடுங்கள் என்கிறார்கள்.
சாக்லேட்டே இல்லை என்கிறேன். டார்க் சாக்லெட்டிற்கு எங்கே போவது ?
ஆமாம் உனக்கேன் இந்த விபரீத கற்பனை என்று கேட்கிறீர்கள் தானே!
கற்பனையெல்லாம் இல்லை.
கற்பனையெல்லாம் இல்லை.
விகடனில் இன்பாக்ஸ் பகுதியில் வந்திருந்த ஒரு செய்தி தான் என்னை பதிவு எழுத வைத்தது.
சாக்லெட்டிற்கு தேவையான மிகவும் முக்கியமான பொருள் கோகோ (cocoa).
அந்த கோகோவிற்கு 2020 இல் தட்டுப்பாடு வரப் போகிறதாம்.அதனால் சாக்லேட் என்கிற வஸ்து இல்லாமல் போகும் நிலை வரலாம். என்பது தான் அந்த செய்தி.
அதற்காக நிறைய கோகோ செடிகள் வளர்க்கத் திட்டமிடப் படுகிறதாம்.ஆனால் அது வளர்ந்து சாகுபடி செய்ய குறைந்த பட்சம் நான்கு வருடங்கள் ஆகலாம். அதற்குப் பிறகு தான் அறுவடையே. உடனே மனம் கணக்குப் போடுகிறது தானே! 2020 ற்கு இன்னும் ஆறு வருடங்கள் தான் இருக்கிறதே என்று.
கோகோ விளைந்து அறுவடை நடந்தால் தான் சாக்லேட். இல்லையென்றால் 2020ற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட் என்ன ?என்பது பற்றி தெரியாமலே போகும் நிலை கூட வரலாம்.
உடனே நிறைய சாக்லேட் வாங்கி பதுக்கலாம் என்று தானே தோன்றுகிறது. நானும் அப்படித் தான் நினைத்தேன்.
ஆனால் பாருங்கள் அன்று "மக்கள் " டிவி சானலில் கோகோ சாகுபடி செய்வது பற்றி விரிவான விளக்கம். நிறைய விவசாயிகள் ஊடு பயிராக
சாகுபடி செய்கிறார்கள் என்கிற செய்தி மகிழ்ச்சி.
ஆனால் நம் விவசாயிகள் மட்டும் தானா, கோகோ பயிர் செய்வார்கள்?
நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்தில்.. இப்ப ஆரம்பித்தால் தான் ,இன்னும் ஆறுவருடத்தில் எழப்போகும் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள முடியும் .இதோ போய் கொண்டேயிருக்கிறேன் நர்சரிக்கு.
நான் சொல்வது உண்மையே. நீங்களும் சாகுபடியை ஆரம்பியுங்கள். இன்னும் ஆறே வருடத்தில் பெரும் கோடீஸ்வரர்கள் நாம்.
பெல்ஜியம் நாட்டின் (உலகின் மிகச் சிறந்த சாக்லேட்டுகளை உருவாக்குபவர்கள்)
சாக்லேட் கம்பெனி எம்.டி, மற்றும் Cadbury, Hershey போன்ற கம்பெனிகளின் எம்.டிக்கள் நம் வீட்டு வாசலில் லைன் கட்டி நிற்பார்கள். .
எதற்கா........? கோகோ வாங்கத்தான்.
அப்புறம் என்ன " ஸ்வீட் எடு, கொண்டாடு " தான்.
image courtesy---google.

ஆஹா, இந்தத்திட்டம் என்னவோ மிகவும் நன்றாகவே உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படி என நான் ஒரு பதிவு ஏற்கனவே எழுதியுள்ளேன்.
அதனால் 6 வருடங்களை பொறுமையாக இருக்க முடியாதவர்கள் அங்கு வருகை தாருங்கள். சாகுபடி அறுவடை போன்ற எந்தத்தொல்லையும் அங்கு கிடையவே கிடையாது. மிகவும் சிம்பிள் சேமிப்புத்திட்டம் மட்டுமே. அதுவும் ஒரே மாதம் மட்டுமே. ஒரு பைசாவில் ஆரம்பித்தால் போதும் ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் - சுளையாக நிச்சயமாக உண்டு.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_06.html
நன்றி வைகோ சார்,
Deleteஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மட்டுமல்ல. உங்களின் அருமையான திட்டத்திற்கும் தான்.
சாக்லேட்டை .இனிப்பை உண்ண முடிபவன் உடலாலும் மனதாலும் கோடீஸ்வரன் தான்
ReplyDeleteநன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏன் delete செய்து விட்டீர்கள்.?
Deleteநண்பரின் கணினியிலிருந்து வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் .நன்றி தனபாலன் சார்.
நான் அந்த நிகழ்ச்சியை பார்க்கலை. எங்க வீட்டிலயும் இடமிருக்கு. எங்களுக்கு வயலும் இருக்கு, நானும் கோடீஸ்வரி ஆகனும், அதனால, கோகோ எப்படி பயிர் செய்வதுன்னு சொல்லுங்க ப்ளீஸ்
ReplyDelete//எங்க வீட்டிலயும் இடமிருக்கு. எங்களுக்கு வயலும் இருக்கு, //
Deleteஅப்புறமென்ன இன்னும் ஆறே வருடங்களில் ராஜி உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறு விடுவீர்கள். சீக்கிரம் ஆரம்பியுங்கள் சாகுபடியை.
நன்றி.
ஆஹா
ReplyDeleteஇந்தத் திட்டம் நல்ல திட்டமாக இருக்கிறதே
வித்தியாசமாக யோசித்து சுவாரஸ்யமான
பதிவு கொடுத்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteஅருமையான தகவல்களுடன் - இன்றைய பதிவு சாக்லேட்டை விடவும் சுவையாக இருந்தது. நல்லதொரு பதிவினை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
ReplyDeleteபதிவை சாலேட் மாதிரி சுவைத்துப் படித்ததற்கு மிக்க நன்றி துரை சார்.
Delete'நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்தில்'_________ ஒரு மண்தொட்டி காலியா இருக்கு.வளர்த்து, சீக்கிரமே பதிவாக்கிட்டீங்கன்னா எனக்கும் நல்லது. கோடீஸ்வரர்களின் லிஸ்டில் இடம்பிடிக்க இப்போதே துண்டுபோட்டு வைக்கலாம் என்ற நப்பாசைதான். சாக்லேட்டைவிடவும் இனிப்பா இருக்கு உங்க பதிவு.
ReplyDeleteபதிவைப் படித்தபோது பல வருடங்களுக்கு முன் A World Without Chocolate? னு ஒரு 'டாக்குமெண்டரி'யா அல்லது நியூஸான்னு தெரியல, ஒன்றைப் பார்த்துவிட்டு, 'சாக்லேட் கம்பெனிகாரங்க சும்மாவா விட்டுடுவாங்க'ன்னு பேசிக்கிட்டது ஞாபகம் வருகிறது.
சீக்கிரம் சித்ரா
Deleteவெந்தயக்கீரை எல்லாம் எதற்கு? முதலில் கோகோ.....
துண்டு போட்டால் எடுத்து விடுவார்கள். சீக்கிராம் கோகோ அறுவடையை முடித்து விட்டு சொல்லியனுப்புங்கள் Hershey கம்பெனிகாரர்களுக்கு. . உங்கள் ஊர் தானே அவர்கள்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சித்ரா.
திட்டம் சுவாரஸ்யமாகவும் நன்றாகவும் உள்ளதே,
ReplyDeleteஅப்புறம் என்ன ? சாகுபடியை ஆரம்பிக்க வேண்டயது தானே!
Deleteநன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
ஆஹா நல்ல திட்டமாக இருக்கே.....
ReplyDeleteதமிழ் நாட்டுல இருக்கற சில பேரு இதை வைச்சே நிறைய கொள்ளை அடிக்க ஐடியா கிடைச்சுடும் போல இருக்கே!
ஒரு கோகோ செடி - 10000 ரூபாய் முதலீடு செய்யுங்கள் - ஆறு வருடத்தில் ஆறு லட்சம் பெறுங்கள்! :) நல்ல ஐடியா.....
//ஒரு கோகோ செடி - 10000 ரூபாய் முதலீடு செய்யுங்கள் - ஆறு வருடத்தில் ஆறு லட்சம் பெறுங்கள்! :) //
ReplyDeleteஉங்கள்வ்ருகைக்கும், அருமையான திட்டம் ஒன்றிற்கு ஐடியா கொடுத்ததற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி.
thanks for ur information
ReplyDelete