Saturday, 16 November 2013

கிரிக்கெட் கடவுள்



200வது  கிரிக்கெட் மாட்ச்  திரு. சச்சின் டெண்டுல்கர்  விளையாடிக் கொந்டிருந்ததை  டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார் என் கணவர். நானும் அவ்வப்போ கிச்சனிலிருந்து தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்று, சச்சின்  விளையாடிய 200வ து  டெஸ்ட் மாட்சில் இந்தியா  வெற்றியடைந்தது. சாதரண வெற்றி இல்லை. Innings Defeat ஆகியிருந்தது  மேற்கிந்திய  தீவுகள் அணி. ஆனாலும் இந்தியா வெற்றி என்றதும்  வழக்கமாக  மனதிற்குள் இருக்கும் சந்தோஷம்  இன்று  இல்லை. டிவியில் பார்க்கும் பொது  மும்பை மைதானத்திலிருக்கும்  ரசிகர்கள் முகத்திலும் எப்பொழுதும்  இருக்கும்  உற்சாகம்  இல்லை. 
சச்சின் டெண்டுல்கர்  இரண்டாவது இனிங்ஸ்  விளையாட முடியாதே!
மேலும் சச்சின் டெண்டுல்கர் இந்த டெஸ்ட்டுடன்  ஓய்வு  பெறுகிறாரே .
வருத்தத்திற்கு இதெல்லாம்  ஒரு காரணம் தானே.

அதற்குப் பிறகு பரிசளிப்பு விழா . பரிசளிப்பின் பொது  சச்சின் டெண்டுல்கர்  பேச்சு. மைதானத்தையே கட்டிப் போட்டு வைத்திருந்தது. அந்தப் பேச்சின் தமிழாக்கத்தை நான் எழுதப் போவதில்லை. நீங்கள் எல்லோருமே அதை கவனித்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

அவர் பேச்சைக் கேட்டதில் எனக்கு  மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
அவர் பேச்சை ஆரம்பிக்கும் போது  இருபத்தியிரண்டு அடியில்  தான்என் வாழ்க்கை இருபத்தி நான்கு வருடங்களாக  இருந்திருக்கிறது என்று  பெருமையுடன் சொன்னார்.  அவர் அதற்குப் பிறகு கிரிக்கெட்டைப் பற்றி தன்  பேச்சில் எங்குமே குறிப்பிடவேயில்லை. அவர் பேசியதெல்லாமே தன்னை வளர்த்தவர்கள், தனக்கு கோச்  செய்தவர்கள் தன மேனேஜர்   என்றே சுற்றி வந்தது.

தந்தையின் வழிகாட்டலின்  பேரில் தான் இத்தனை வருடங்களாக  விளையாடியதாக சொன்னதை இக்கால இளைஞர்கள் எடுத்துக் கொண்டால்  நல்லது. அவர் தந்தை சொன்னபடியே  தன கனவுகளை நனவாகக் எந்த குறுக்கு வழியும் எடுக்காமல் , வந்த தடைக் கற்களையெல்லாம் படிக்கற்களாக  மாற்றிக் கொண்டே இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். தன தந்தையின் மேல் அபார மரியாதை வைத்திருக்கிறார்.
தன தாயைப் பற்றி சொல்லும் போது குரல் உடைகிறது. அவருடைய தாய்ப் பாசம் நெகிழ் வைக்கிறது.மைதானத்தில் நிறைய பேர் கண்கள் குளமான.
உலகளாவிய  புகழ் பெற்ற மனிதர்  தன முதல் மரியாதையை தன பெற்றோருக்கு கொடுப்பது  அவரை இன்னும் உயரத்தில் வைக்கிறது.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாருக்காவது நன்றி சொல்லாமல் விட்டு விடுவோமோ என்கிற பதைப்பு இருந்தது அவரிடம் . அவர் கையில் வைத்திருக்கும் பெயர்கள் அடங்கிய லிஸ்டைப பார்த்து பார்த்து பேசுவதில்  அவருக்கு தன்னை சுற்றியிருந்தவர்கள் மீதிருந்த மரியாதையைக் காட்டியது..

அவரைப்பற்றி பேசும் வெளிநாட்டு கிரிகெட் வீரர்கள்  அவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்  என்பதைத் தாண்டி ஒரு மிக நல்ல மனிதர் என்றே புகழ்கிறார்கள். அதுவல்லவோ அவருடைய  பெருமைக்கு அழகு சேர்க்கும் ஒன்று.

ஒவ்வொரு ஆண்  மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் துணையிருக்கிறாள். தன்  மனைவியைப் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை அவர். டாக்டராக இருக்கும் திருமதி அஞ்சலி டெண்டுல்கர்  தன கணவருக்காக  அவர் தன்  தொழிலைக்  கொஞ்சம் புறந்தள்ளி, குடும்ப நிர்வாகத்தில் நேரம் செலவழித்திருக்கிறார்.
அதுவும் உண்மை தானே. குடும்பம் என்னும் பொழுது எத்தனை எத்தனை கடமைகள். அத்தனையும்  திருமதி அஞ்சலி  தன் கணவருக்காக  தன் தொழில்
ஆர்வத்தை குறைத்து தியாகம் செய்திருக்கிறார் பாருங்கள். இக்கால பெண்கள்
சிலர்  குடும்பத்தை  பின்னால் தள்ளி முன்னேறத் துடிக்கும்
சுயநலவாதிகளாயிருக்கிரார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
உடனே  எங்கள் கணவர்கள்  டெண்டுல்கர் மாதிரி புகழடைந்தால் நாங்களும் எங்கள் தொழில்  ஆர்வத்தைக் குறைத்துக் கொள்கிறோம் என்று விதண்டாவாதம் செய்ய வேண்டாம். காதல் கணவன் கைபிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுப்பதால்  ஒன்றும் அவர்கள் தாழ்ந்து போவதில்லை என்பதற்கு அஞ்சலி ஒரு நல்ல உதாரணம் என்றே எனக்குப் படுகிறது.

அவருடைய பேச்சிலிருந்து  தெரிய வருவது அவர் பெற்றோரின் மேல் கொண்டிருக்கும் பக்தி, சகோதரப் பாசம், அன்புக் கணவராய்,  அருமைத் தந்தையாய், இருந்து மட்டுமல்லாமல் அவர்  மேற்கொண்ட கிரிக்கெட் தவத்தில் எத்தனை சவால்கள்  வந்தாலும் அதை எதிர் கொண்டு   அவர் மேலே எழுந்து வந்தது  எப்படி  என்பது தான்.

இந்த மகத்தான் மனிதருக்கு பாரத ரத்னா விருது வழங்கி    கௌரவித்திருக்கிறது நமது அரசு.
எந்த விருதோ, பரிசோ, புகழ்ச்சியோ  இந்த மனிதரை  ஒன்றுமே செய்யாது போலிருக்கிறது.அத்தனை எளிமை அவர் பேச்சில் மிளிர்கிறது.

அவர்   புகழ்  உச்சிக்குக்  காரணம் வெறும் கிரிகெட் மட்டுமல்ல அவருடைய எளிமை, அவர் குடும்பம்,  எடுத்துக்  கொண்ட நேர்மையான வழி இவையெல்லாம் தான் .
இவைகள் தான் உண்மையான காரணங்கள்.

முத்தாய்ப்பாய் அவர் தான் விளையாடிய கிரிக்கெட் பிட்சை  கையால் தொட்டு கும்பிடும் பொது  அங்கிருக்கும் ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நிறைய பேர் தங்கள் கண்களை  கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.நானும் தான்.

இவரைக் கிரிக்கெட்டின்  கடவுள் என்று  சொல்வது  சரி தானே!

image courtesy---google.

24 comments:

  1. மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அதைவிடச் சிறந்த மனிதர். அவர் பேச்சு எல்லாரையும் கட்டிப் போட்டது. கண் கலங்க வைத்தது. ஆனாலும் ரிடயர்மென்ட்டுக்கு இந்த ஆர்ப்பாட்டமும், உடனடி பாரத ரத்னா அவார்டும் கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆங்கில செய்திச் சேனல்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்தச் செய்தியை வைத்துக் கொண்டே ஒப்பேற்றி விடும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  2. தங்களின் இந்தப்பதிவு மிக அழகாக எழுதப்பட்டுள்ளது. படித்ததும் எனக்கும் என் கண்களில் கண்ணீர் வந்தது.

    //அவர் புகழ் உச்சிக்குக் காரணம் வெறும் கிரிகெட் மட்டுமல்ல அவருடைய எளிமை, அவர் குடும்பம், எடுத்துக் கொண்ட நேர்மையான வழி இவையெல்லாம் தான். இவைகள் தான் உண்மையான காரணங்கள்.//

    //இவரைக் கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வது சரி தானே!//

    மிகச்சரியே !

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete
  3. மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்.ஆமாம்.

    அதைவிடச் சிறந்த மனிதர்.
    ஆமாம்.
    அவர் பேச்சு எல்லாரையும் கட்டிப் போட்டது.
    ஆமாம்.
    கண் கலங்க வைத்தது.
    ஆமாம்.
    ஆனாலும் ரிடயர்மெஆமாம்.ன்ட்டுக்கு இந்த ஆர்ப்பாட்டமும், உடனடி பாரத ரத்னா அவார்டும் கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது.
    ஆமாம்.ஆமாம்.
    ஆங்கில செய்திச் சேனல்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கஆமாம்.ளுக்கு இந்தச் செய்தியை வைத்துக் கொண்டே ஒப்பேற்றி விடும்.
    ஆமாம்.
    இவரைக் கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வது சரி தானே!
    no aamaam.
    i am an atheist., so far as cricket is concerned.
    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பு ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete
  4. நானும் நிகழ்வை பார்த்தேன். உங்கள் விவரனைக்குப் பின் கூடுதல் தகவலாக உணர்கிறேன். மகிழ்ச்சி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாசகரே . உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
      மீண்டும் வருக!

      Delete
  5. சிறப்பிற்கு சிறப்பு....! வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  6. முத்தாய்ப்பாய் அவர் தான் விளையாடிய கிரிக்கெட் பிட்சை கையால் தொட்டு கும்பிடும் பொது அங்கிருக்கும் ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நிறைய பேர் தங்கள் கண்களை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.நானும் தான்.//

    அருமையாகச் சொன்னீர்கள்
    உணர்வுபூர்வமான அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  7. மனம் நெகிழ்த்திய பதிவு.
    மிக்க நன்றி
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவைக்கவி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்

      Delete
  8. அவர் புகழ் உச்சிக்குக் காரணம் வெறும் கிரிகெட் மட்டுமல்ல அவருடைய எளிமை, அவர் குடும்பம், எடுத்துக் கொண்ட நேர்மையான வழி இவையெல்லாம் தான் .
    இவைகள் தான் உண்மையான காரணங்கள்.

    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும். பாராட்டிற்கும்.

      Delete
  9. கிரிக்கெட் கடவுள் என்று சொன்னால் தப்பில்லைதான்! ஒருமுறை ஆஸ்திரேலிய அணி வீரர் ஒருவர் ‘‘நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை, சச்சினிடம்தான் தோற்றோம்’ என்று பேட்டியளித்ததும், இரவில் உறக்கத்திலும் தன் ஸ்பின் பௌலிங்கை சச்சின் விளாசியது வந்து பயமுறுத்தியது என்று ஷேன் வார்ன் சொன்னதும் வேறு எந்த வீரருக்கும் கிடைத்திராத உச்சபட்ச கௌரவம். அவரின் உரை பார்த்தவர் அனைவர் மனதையும் தொட்டிருக்கும். அதை அழகாகச் சொல்லியிருக்கீங்க. என்ன... ‘பாரதரத்னா’ விருதை இன்ஸ்டன்ட்டா அறிவிச்சிருக்காம, இன்னும் சில மாதங்கள் தள்ளி அறிவிச்சிருந்தா நல்லா இருக்கும்னுதான் எனக்குத் தோணிச்சு!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்னமோ அரசு அவருக்கு பாரதரத்னா விருதை ஏற்கனவே
      தீர்மானித்ததோ என்னவோ? அவருடைய ஓய்வையொட்டி செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
      நன்றி கணேஷ் சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  10. பதிவு நெகிழ்ச்சிமாய் உள்ளது. நிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோலவே இருக்கிறது. புகழின் உச்சிக்கு செல்ல காரணங்களாக இருந்த காரணிகள் நன்று.

    எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் எல்லாம் இல்லீங்க. அப்படியா(!)ன்னு நீங்க அதிசயமா பாக்குறது தெரியுது. விடாமல் பார்த்த காலங்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்

      Delete
  11. கிரிக்கெட்டுன்னா என்ன? கெட்டு போனவங்களை பற்றிய செய்தியா? யார் இந்த சச்சின்? இந்தியாவை காப்பாற்ற வந்த புதிய கடவுளா?

    ReplyDelete
    Replies
    1. கிரிக்கெட் விளையாட்டு மிகப் பிரபலம் இந்தியாவில் . கிரிக்கெட்டின் கடவுளாக சச்சின் சொல்லப்படுகிறார்.

      Delete
  12. சச்சின்.... கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகவே பத்திரிகைகளுக்கும், தொலைகாட்சிகளுக்கும் நல்ல செய்திகள்!

    ஓய்வு பெற்ற சச்சின் இன்னும் சில வருடங்கள் முன்னரே சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது பலரின் எண்ணமும் விருப்பமும். பாரத ரத்னா - அரசியல் முடிவு! :(

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்