தலைப்பையும், படத்தையும் பார்த்து, இதென்ன தலைவலிக்கும் காய்ச்சலுக்குமே ஆம்புlலன்சை கூப்பிட்டு , கலாட்டா செய்து விட்டேனோ என்று பதற வேண்டாம். பின் வரும் உரையாடலைக் கவனியுங்களேன் ;
அம்மாவுக்கும், அவளுடைய ஏழு வயது பிள்ளைக்கும் நடந்த உரையாடல்.
" அம்மா, இது என்ன சத்தம் அம்மா? "
"அதற்குப் பெயர் சைரன் . " அம்மாவின் பதில்.
மீண்டும் மகன்," எதற்கு அந்த வேன் சைரனுடன் போகிறது? "
" அது வேன் இல்லைடா கண்ணா ...அதற்குப் பெயர் ஆம்புலன்ஸ் " அம்மா சொல்ல ,மகன்
"அப்படின்னா?" ஆர்வம் தாங்காமல் கேட்க
" யாருக்கோ அவசரமாக மருத்துவ உதவி தேவையிருக்கு என்று அர்த்தம்.அவசரமாக ஆஸ்பிடலுக்குப் போக வேண்டும். அதனால் ரோட்டில் எல்லோரும் ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும். யாரும் ஆம்புலன்ஸை முந்தி செல்லக் கூடாது , என்ற எச்சரிக்கைக்கு தான் அந்த சைரன் . உடனடியாக மருத்துவ உதவி தேவைப் படுவதால், வண்டியில் செல்பவர்கள் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டதும் ஒதுங்கி வழி விட வேண்டும் "என்று சொல்லி முடித்தவுடன் , புரிந்தது என்று தலையை ஆட்டி விட்டு , ஆம்புலன்ஸ் போன வழியையே சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.
சிறுவன் என் .மகன் . நான் தான் அவனுக்கு லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தேன். இதில் என்ன இருக்கு என்கிறீர்களா? எல்லோரும் தானே இதை செய்கிறோம் என்று உங்கள் மனசு சொல்வது எனக்குக் கேட்கிறது. இதைப் போய் பெரிதாக எழுத வந்து விட்டாயே என்று யாரும் கோபிக்க வேண்டாம்.
சில அம்மாக்கள் , இந்த வேலையை சரிவர செய்யவில்லையோ ,என்று தோன்றும் அளவிற்கு இருந்தது ,நேற்று முகனூலில் நான் படித்தது .
நெரிசல் மிகுந்த சென்னைப் போக்குவரத்தில் நடந்த
சம்பவம் பற்றிய செய்தி. ஆம்புலன்ஸ் பெருங்குரலுடன் சத்தமிட்டுக் கொண்டே அந்த நான்கு முனை சந்திப்பை நோக்கிப் பயணிக்கிறது. போக்குவரத்து ஓட்டுனர்கள் , இப்படியும் ,அப்படியுமாக ,நகர்ந்து ஒரு மாதிரி வழிவிட வேகமாக பயனித்து வருகிறது ஆம்புலன்ஸ் .
அதற்குப் பின்னாடியே ,ஒரு டாடா சுமோ வந்து கொண்டேயிருந்தது சட்டென்று ஆம்புலன்சை ஓவர்டேக் செய்தது. சிக்னல் விழுவதற்கு முன் சென்று விட வேண்டும் என்று டாடா சுமோ எடுத்தது முயற்சி . ஆனால் அப்பொழுது பார்த்து சிவப்பு சிக்னல் விழ, அதற்காகவே ரெடியாக காத்துக் கொண்டிருந்த , எதிர் ரோட்டில் நின்றிருந்த வாகனங்கள் பறக்க ஆரம்பிக்க.,
செய்வதறியாது சுமோ ஓட்டுனர் முழிக்க , எல்லோரும் அவரை வசை பாடிக் கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் அலற, அலற சுமோவோ ஆம்புலன்ஸ் முன்பு நந்தியாய்.... நின்றிருந்தது.
சுமோ ஓட்டுனர் எலோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்.தாமதித்த வினாடிகளில், உள்ளே இருந்த நோளியாயின் நிலைமையும்,, அவரை விடவும், நோயாளிக்கருகில் இருந்த உறவினர் நிலைமையையும், எண்ணிப் பார்த்ததில் நடுங்கிப் போனேன். உயிர் காக்கும் வேளையில் ஒவ்வொரு வினாடியும் பொன்னானது ஆயிற்றே!
ஒரு வழியாய் சிக்னலில் பச்சை விழ, சைரனுடன் சென்றது ஆம்புலன்ஸ். முகம் தெரியாத ,அந்த மனிதர் நல்லபடியாய் ,சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.
இப்பொழுது சொல்லுங்கள் சிலர் ஆம்புலன்ஸ் அவசரம் பற்றி சற்றே குறைவாகத் தானே மதிப்பிடுகிறார்கள்.
நீங்கள் வாதிடலாம். ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளி தான் இருந்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி.என்று.
ஆங்கிலத்தில் சொல்வோமே ,' Benefit of doubt 'என்று. அந்த சந்தேகத்தின் பலனை ஆம்புலன்ஸிற்கே கொடுத்து வழி விடுவதால் , ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை என்பது என் எண்ணம். ஆம்புலன்ஸ் அவசரத்தை விடவும் ,வேறு அவசரம் இருக்க முடியுமா?
அந்த முக நூல் செய்திக்கு வந்த விமரிசனத்தைப் பார்த்தேன். அதில் ஒருவர் அசால்டாக எழுதியிருந்தார்.
' தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் '.......என்று.
உண்மை தானே !மற்றவர் தலைவலியையும், காய்ச்சலையும் உணர்ந்து,,உதவ வேண்டாம். உபத்திரவமாகவாவது இருக்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
உயிர் காக்கும் ஆம்புலன்ஸிற்கு வழி விடுவோம்.!
image courtesy---google.
ஒவ்வொரு தடவை ஆம்புலன்ஸ் வரும்போதும் அதற்கு வழிவிடாமல் போகும் மனிதர்களை நினைத்து வேதனைப் படுவேன். உள்ளே யாரோ ஆபத்தில் இருக்கிறார்கள், இல்லை நீங்கள் சொல்வது போல benefit of doubt என்று வழிவிடலாமே. ஒரு வண்டிக்கு வழிவிடுவதால் நமக்கு ஒன்றும் குடி மூழ்கிவிடப் போவதில்லை.
ReplyDeleteஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்கள் என்று சொல்லும் நிலையில் நம் மனித நேயம் இருப்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது.
மிகாவும் வேதனைப் பட வைக்கும் விஷயம் , ஆம்புலன்சிற்கு வழி விடாமல் போவது தான். அந்த வேதனையைத் தான் பகிர்ந்தேன்.
Deleteநன்றி ர்னஜனி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
// உயிர் காக்கும் ஆம்புலன்ஸிற்கு வழி விடுவோம்.! //
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteஉயிர் காக்கும் வேளையில் ஒவ்வொரு வினாடியும் பொன்னானது என்பதை ஒவ்வொரும் உணர வேண்டும்...
ReplyDeleteஅந்த நேரம் பொன்னானது என்பது அவரவர்க்கு வரம் பொது தான் புரிகிறது. அதுவரை எனக்கென்ன என்கிற மனோபாவம் தான்.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிடாமல் அலறும் சைரனுடன் அந்த வண்டி ஓரிடத்திலேயே இருப்பதையும் காண்கிறேன்.இது ஒரு விழிப்புணர்வு பதிவு. பாராட்டுகள். என் தளத்தில் இன்று புதிய பதிவு “தேவன் மகா தேவன் “ அழைக்கிறேன். டாஷ் போர்டில் வரவில்லை.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி பாலு சார். உங்கள் பதிவைப் படிக்க செல்கிறேன்.
Deleteஆம்புலன்ஸில் நோயாளி இருக்கிறாரா
ReplyDeleteஇல்லையா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லை
சப்தமிட்டுக்கொண்டே வந்தால் நோயாளி
இருக்கிறார் எனத்தான் அர்த்தம்
உங்கள் பதில் மிகச் சரி
பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteமற்றவர் தலைவலியையும், காய்ச்சலையும் உணர்ந்து,,உதவ வேண்டாம். உபத்திரவமாகவாவது இருக்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteஉதவி செய்வதற்கு மனம் இல்லை என்றாலும்
ReplyDeleteஉபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்!..
நல்ல விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு!..
நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteநல்ல கருத்து மேடம். எத்தனையோ அரசியல்வாதிகளுக்காக சாலையில் காத்திருக்கும் நாம் சந்தேகத்தின் பலனை ஒருவருக்கு கொடுத்து விட்டு காத்திருப்பதில் தவறில்லை மேடம்!
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும், நன்றி சார். மீண்டும் வருக!
Deleteதடங்கல் ஏற்படுத்துகிறவர்களுக்கு ஃபைன் போட்டால் சரியாகுமா? இல்லை அதையும் கட்டிவிட்டு மீண்டும் தொடரலாம். 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்....' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நல்ல பதிவு.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் மனிதர்கள் தாங்களாகவே நினைத்து மாறினால் தான் உண்டு. சற்றே மாறினால் கூட நலம் தான். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.
Deleteஇவ்வளவு சுயநலத்துடன் மாறிவிட்டோமே என நினைத்தால் வெட்கமாயும், கவலையாயும் இருக்கு. :(
ReplyDeleteநன்றி கீதா மேடம் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்.
Deleteநன்றாக சொன்னீர்கள் ராஜி மேடம் :)
ReplyDeleteநன்றி மகா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteஉண்மைதான்.
ReplyDeleteஇந்த அழைப்புமைய வாகனங்களின் ஓட்டுநர்கள் இப்படித்தான் செய்கின்றனர்.
பலமுறை ஓட்டுநர்கள் சக ஓட்டுநர்களைப் பார்த்து திட்டுவதுண்டு. "நீயெல்லாம் ஒரு டிரைவரா" என்று. அந்த ஓட்டுநர் அத்தகைய ஒரு மதி கெட்டவராக இருப்பாரென்று நினைக்கிறேன்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteஆம்புலன்சிற்கு கட்டாயம் வழிவிட வேண்டும்! நல்ல கருத்து! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteநன்றி டாக்டர்.
ReplyDeleteஉண்மை. அடுத்தவர்களுக்குத்தானே துன்பம் என்று யாரும் கவலைப் படுவதில்லை. ஒருமுறை என் அனுபவத்தில் நானே என் உறவினரை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றபோது அனுபவப்பட்டேன்.
ReplyDeleteஅப்புறம் ஒரு விஷயம். 108 ஆம்புலன்ஸை நான் ஒருமுறை அவசரத்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் கண் செக் அப் செய்யச் செல்வதற்கெல்லாம் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்! :)))
உயிர் காக்கும் ஆம்புலன்ஸிற்கு வழி விடுவோம்.! //
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு பகிர்வு.
சிறப்பான விழிப்புணர்வு பகிர்வு. பலர் ஆம்புலன்ஸிற்கு வழிவிடுவதை ஏதோ அகௌரவமாகத் தான் நினைக்கிறார்கள்.
ReplyDelete