Tuesday, 18 February 2014

உங்களுக்குத் தெரியுமா?




1. நீங்கள் வெளியில்  அழகாக உடையுடுத்தி செல்லும் போது , மக்கள் உங்களை  கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்குத்  தெரியும். அவர்கள் அவர்களையுமறியாமல் உங்கள் காலணிகளைத் தான் முதலில்  பார்க்கிறார்கள் என்று தெரியுமா? 
( இது " Bata "கடை விளம்பரம் இல்லை. உளவியல் உண்மை . நம்புங்கள்)

2.  நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து  பணி  புரிபவரா? ஒரு நாளைக்குப்  பதினோரு மணி நேரம் இப்படியே  உட்கார்ந்திருந்தால்  கண்டிப்பாக இன்னும்  மூன்று வருடங்களில்  உங்களுக்கு  ஏதாவது  வியாதி வந்தே தீரும் .
(நான் சொல்லவில்லை. ஆய்வறிக்கை சொல்கிறது. )

3.உங்களைப் போல் அச்சு அசலாக  இன்னும் ஆறு பேர் உலகில் உள்ளனர். 
( போதும் நீ விடும் ரீல்  என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.) ஆனால் நீங்கள்  ஆறுபேரில் ஒருவரையாவது  உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக  சந்திக்கப் போகிறீர்கள். சந்தித்தால்  என்னிடம் சொல்லுங்கள். இது சாத்தியம் தானா என்று அறிய எனக்கும் ஆவல்.

4." முதுகெலும்பில்லாத கோழையா? "  என்று யாரும் உங்களைப் பார்த்து கேட்கக் கூடாதென்றால் , தூங்கும் போது தலையனை  வைத்துக் கொள்ளாதீர்கள்.  முதுகுவலியும் வராது, முதுகெலும்பும் உறுதி படுமாம்.

5. ஒருவரின் உயரத்திற்கு  அவர் தந்தையும், அவருடைய  எடைக்குத் தாயும் காரணம்.
( சான்றோனாக்கி உயர்த்துதல்   தந்தையும், ருசியான உணவளிப்பதும் தாய் தானே)

6.அலுவலக மீட்டிங்கில்  இருக்கும் போதே கண்ணை செருகிக்கொண்டு  தூக்கம் வருகிறதா? கவலை வேண்டாம். தலையை  இடமும் வலமுமாக ஆட்டுங்கள் . தூக்கம் கலைந்து விடும். 
(ஆனால்  தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தால் , உங்கள் பாஸ் , கண்டு பிடித்து விடுவார். ஜாக்கிரதை)

7. நம் மூளை நம்மை ஏமாற்றாது . நல்ல உணவு, கவர்ச்சியான, அழகான மனிதர்கள்,  ஆபத்து நெருங்குதல்.  இவை  மூன்றையும் உங்களுக்கு கண்டுபிடித்துக்  காட்டிக் கொடுத்து  விடும்.

8.நீங்கள் டீ  பேக்ஸ்  உபயோகித்து டீ  குடிப்பவரா?? அப்படியென்றால் உங்கள்  ஷூ வில்  துர்வாசனை  வராது. (டீக்கும்  ஷூக்கும் என்ன சமபந்தம்  என்று யோசிக்க வேண்டாம். டீ  குடித்த பின்பு, அந்த டீ பேகை ஷூவிற்குள்  போட்டு வைத்தால், துர்நாற்றத்தை அது உறிஞ்சிக் கொள்ளும்.

9.  தேனீக்களை  நம்பி தான் மனித இனமே இருக்கிறது. தேனீக்கள்  உலகை விட்டு  அழிந்து விடுமானால் நான்கு வருடங்களுக்குள்  மனித இனம் பூண்டோடு  அழிந்து போகும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்   நம்மை எச்சரித்து விட்டு சென்றிருக்கிறார்.  ஆனால் நாம் கேட்பதாயில்லை. தேனீக்கள் அழிந்து வரும் உயிரின வகையில்  சேர்ப்பதில் படு தீவிரமாக இருக்கிறோமே!

10. உலகில் எத்தனை வகை ஆப்பிள்கள் இருக்கின்றன  என்று தெரியுமா உங்களுக்கு?  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  வகையான ஆப்பிளை  சாப்பிட்டுக் கொண்டே வந்தால்  எல்லா வகையான ஆப்பிள்களையும் சாப்பிட சுமார் இருபது வருடம் ஆகும்.

11. உண்ணா விரதம்  இருக்கப் போகிறீர்களா? பயம் வேண்டாம்.  உண்ணாமல்  பல வாரங்கள்  வரை நாம் உயிர் வாழலாம். சாப்பிட்டா விட்டாலும் பரவாயில்லை. தூங்காமல் இருக்க வேண்டாம்.   உறங்காமல் பதினோரு  நாட்களுக்கு மேல்  ஒருவரால்  உயிர்  வாழ முடியாது.

12. அதிகமாக சிரிப்பவர்கள்  அதிக நாட்கள்  உயிர்  வாழலாம் . அதனால் சிரித்துக் கொண்டேயிருங்கள்.  ( உங்களை " ஒரு மாதிரி " என்று  யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல)

13. நம் மூளையின் சக்தி எவ்வளவு  என்று தெரியுமா? விக்கிபிடீயாவைப் போல் ஐந்து மடங்கு  விஷயங்களை  சேகரித்து வைத்துக் கொள்ளும் ,என்கிற செய்தி  ஆச்சர்யமளிக்கிறது  இல்லையா!

14.நம்  மூளைக்கும்  மின்சாரம் தேவைப்படுவது  தெரியுமா?  பத்து வாட் பல்ப்  எரிவதற்குத் தேவையான  மின்சாரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறது. நம் மூளை . ரகசியமாக இருக்கட்டும் இந்த செய்தி. இல்லையென்றால் மின்சார வாரியம்  அந்த மின்சாரத்திற்கும்  கட்டணம்  கேட்கும் . .

15. மன உளைச்சலுக்கு ஒரு மாமருந்து இருக்கிறது. என்ன என்கிறீர்களா?
புன்னகை.  முடிந்தவரை  புன்னகைத்துக் கொண்டே இருங்கள்.  மன உளைச்சல் உங்களை விட்டு ஓடியே  போய்  விடும்.

எங்கேயிருந்து இத்தனை விஷயங்களை  எடுத்துப் போட்டு இம்சிக்கிறாய் என்று  கோபப்படாதீர்கள். முக நூலில்  வலம் வந்து கொண்டிருப்பவை தான்.
அதே முக நூலில் நாங்களும் இருக்கிறோமே என்று  கோபம் வேண்டாமே!
                 
                           SMILE ! It is the ultimate antidepressant.

image courtesy-----google.

42 comments:

  1. இந்த எழுபத்தி மூன்று ஆண்டுகளில் நான் குடித்த
    காபி எத்தனை என்று ஒரு நாள் கணக்கு போட்டேன்.

    1200 கிலோ .

    இது என் இன்றைய எடை போல 20 மடங்கு.

    அப்பாடி !!

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சுவாரஸ்யமான கருத்தை வெளியிட்டதற்கு நன்றி சுப்பு ஐயா!

      Delete
  2. மொத்தமாகப் படிக்கும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  3. //நம் மூளை . ரகசியமாக இருக்கட்டும் இந்த செய்தி. இல்லையென்றால் மின்சார வாரியம் அந்த மின்சாரத்திற்கும் கட்டணம் கேட்கும் . .//

    அது சரி, மூளை பயன்படுத்தும் மின்சாரத்துக்கும் மின்வெட்டு உண்டா? இங்கே மின்வெட்டு இருக்கே! அது மாதிரி மூளைக்கும்???????

    ReplyDelete
    Replies
    1. மின் வெட்டா? கேட்கவே பயமாக இருக்கிறது. கோடைக் காலம் நம் முன்னால் நிற்கிறதே! மூளைக்கு மின்வெட்டு வரவேண்டாம் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வோம் கீதா மேடம்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  4. போச்சா, இல்லையானு தெரியலையே!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)))

    ReplyDelete
    Replies
    1. வந்து சேர்ந்து விட்டது உங்கள் கருத்து கீதா மேடம்.

      Delete
  5. படத்தில் தகவல் பயங்கரமா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் உண்மை தான் ராஜி. நன்றி.

      Delete
  6. வியப்பு, பயம், கவலை என பல்சுவை தகவல் தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பல்சுவை தகவல் தொகுப்பு என்று என் பதிவைப் பாராட்டியதற்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  7. //1. நீங்கள் வெளியில் அழகாக உடையுடுத்தி செல்லும் போது , மக்கள் உங்களை கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அவர்களையுமறியாமல் உங்கள் காலணிகளைத் தான் முதலில் பார்க்கிறார்கள் என்று தெரியுமா? //

    நான் யாரை புதிதாய் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தால் என் பார்வை முகத்துக்குப்பிறகு நேராக அவர்கள் கால்களுக்கு தான் செல்லும் என்று சொன்னால் நம்புவீர்களாப்பா? ஆமாம் கால்நகம் கைவிரல் நகம் சுத்தமாக வைத்திருப்போர் உடலையும் சுத்தமாக வைத்திருப்பார் என்று அர்த்தம்... :) நானும் அப்டி தான்பா..

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லிய தகவலில் முதல் தகவல் உண்மை என்று நிருபித்தற்கு ஆனந்ரி மஞ்சு மேடம்.

      Delete
  8. //3.உங்களைப் போல் அச்சு அசலாக இன்னும் ஆறு பேர் உலகில் உள்ளனர்.
    ( போதும் நீ விடும் ரீல் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.) ஆனால் நீங்கள் ஆறுபேரில் ஒருவரையாவது உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக சந்திக்கப் போகிறீர்கள். சந்தித்தால் என்னிடம் சொல்லுங்கள். இது சாத்தியம் தானா என்று அறிய எனக்கும் ஆவல்.// மீதி ஆறு மஞ்சுவை பார்க்க எனக்கே ஆசையா இருக்குப்பா.. ஒரு மஞ்சுவோட அக்கப்போரே தாங்கமுடியலையே அப்டின்னு நீங்க அங்க கத்தறது எனக்கு கேட்கறது நல்லா.. சுவாரஸ்யமான தகவல்பா..

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. முக நூலில் தேடிப் பார்ப்போம் மஞ்சு மேடம். நீங்கள் தான் அதகளம் செய்கிரீர்களே முக நூலில். கண்டிப்பாக மீதி ஆறு மஞ்சு கிடைக்க நிறைய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே நினைக்கிறேன்.
      நன்றி உங்கள் த.ம. வாக்கிற்கும், மீள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  9. அருமையான தகவல்கள் ஆங்காங்கே தங்களுக்கே உரித்தான சின்னஞ்சிறு நகைச்சுவை உணர்வுகளுடன் ;)

    படித்து முடித்ததும் புன்னகைத்தேன். மன உளைச்சல் ஓடியே போய் விட்டது. ;))

    பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வைகோ சார்.

      Delete
  10. வியக்கவைக்கும் தகவல்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  11. அறிந்து கொள்ளவேண்டிய தகவல்களை ரசனையுடன் தொகுத்து
    தங்களது பாணியில் வழங்கியமைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை சார் , உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்.

      Delete
  12. அருமையான அறிய வேண்டிய தகவல்கள்
    பின் சேர்க்கையாக சுவாரஸ்ய கமெண்டுகள்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  13. http://ootynews.wordpress.com/

    ReplyDelete
  14. எல்லாத்தகவல்களும் சுவாரஸ்யமானவை. என்னைபோலவே இங்கு ஒரு டாக்டர் இருப்பதாக என் டாக்டர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை.

    நீங்கள் போட்டிருக்கும் தலைப்பு செய்தி பயமுறுத்துகிறதே!

    அதிகம் சிரித்தால் அதிக நாட்கள் வாழலாமா? கடவுளே! நான் இனி சிரிப்பதைக் குறைத்துக் கொள்ளுகிறேன். புன்னகைத்துக் கொண்டே நம் டென்ஷனை அதிகப் படுத்துகிரவர்களை என்ன செய்ய?

    நிறைய தெரிந்துகொண்டேன், ராஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போலவே ஒரு டாக்டரா? மஞ்சு மேடம் முதல் தகவலை நிருபித்தால், நீங்கள் இன்னொரு தகவலுக்கு சாட்சியாகி விட்டீர்களே!

      நிறைய சிரித்துக் கொண்டேயிருங்கள் ரஞ்சனி. சிரித்து நம் டென்ஷனை அதிகப் படுத்துவர்களை நாமும் பதிலுக்கு சிரித்து வைத்து அவர்களையும் டெண்ஷனாக்குவோம்.
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.ரஞ்சனி.

      Delete
  15. சுவாரசியமான தகவல்கள் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளீர்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி எழில் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  16. அருமையான மருத்துவக் குறிப்புகள் தூக்கமின்மையும் ,கவலையும்
    இருந்த இடத்து வேலையும் கொடுக்கும் உடல் உபாதைகள் பற்றி
    அறியவேண்டிய தேவைகள் மென்மேலும் அதிகரித்துக்கொண்டே தான்
    செல்கிறது அம்மா .இக் காலத்துக்கு ஏற்ற மிகச் சிறப்பான பகிர்வுக்கும்
    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள் அம்மா .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், வலைசர அறிமுக வாழ்த்துக்களுக்கும் நன்றி

      Delete
  17. நல்ல தகவல்கள் தொகுப்பு ராஜி மேடம் :) ரொம்ப நாள் ஆச்சே ராஜி மேடம் நம்ம ராசி எங்கே போனாங்க :) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! ஆமாம் ராஜி மேடம் என்னை கூட நிறைய பேர் சந்தித்து விட்டு சொல்வதுண்டு உன்னை மாதிரியே நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்! அவங்க சொன்ன கணக்கு என்ன மாதிரி நிறைய பேர் இருக்காங்க போல :)

    ReplyDelete
    Replies
    1. மகா,
      சீக்கிரமே ராசியை தேடிக் கண்டு பிடிக்கிறேன். எங்கே இருக்கிறாளோ தெரியவில்லையே! விரைவில் வந்து விடுவாள்.
      நன்றி மகா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ராசியை பற்றி நினைவுபடுத்தியதற்கும்

      Delete
  18. சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    //உங்களைப் போல் அச்சு அசலாக இன்னும் ஆறு பேர் உலகில் உள்ளனர்//

    இது உண்மையென்று நம்பும்படியான ஒரு சந்தர்ப்பம் அரைமணி நேரத்துக்கு முன்னால்தான் அமைந்தது.

    ReplyDelete
    Replies
    1. அட.......நான் சொல்லியிருக்கும் தகவல் உண்மையென்று நிருபித்து விட்டீர்களே சுந்தரா! உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுந்தரா.

      Delete
  19. தலைப்பு + சமீபத்திய உங்க படம் இரண்டையும் பார்த்து முடிச்சுபோட்டு ஒரு முடிவுக்கு வந்து "வகுப்புக்கு லேட்டா வர்றோமோ!" என நினைத்து ஓடி வந்தேன் !!

    இவ்விஷயங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டிருந்தாலும் அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுத்து யோசிக்க வச்சிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      படத்தில் கண்டிப்பான ஆசிரியை மாதிரியா இருக்கேன்?
      தலைப்பையும், போட்டோவையும் முடிச்சு போட்டு என் ஆசிரியப்பணியை நினைவு படுத்தி விடீர்களே!
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete

  20. உண்மையிலேயே இங்கு உள்ள இவ் விஷயங்கள் எனக்கு தெரியாதவைதான். சுவாரஸ்யமாக இருந்தது. பேஸ் புக்கில் இஷ்டத்திற்கு அடித்தும் விடுவார்கள். பழைய கல்கண்டு வார இதழில் இப்படி அடிக்கடி எழுதுவார்கள். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  21. அருமையான பல விடயங்கள் அறிந்து கொண்டேன். ஆனால் ஒன்றுதான் விளங்கவில்லை. தேனீ அழிந்தால் மனித இனம் ஏன் அழிய வேண்டும். தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் ,

      தேனீ இல்லையென்றால், மலர்களின் மகரந்த சேர்க்கை நடக்காது. மகரந்த சேர்க்கை இல்லாமல் காய் கனி கிடைக்காதே! காயும், கனியும் இல்லாமல் நாம் வாழ முடியாது.
      Natural Resources Defense Council(http://www.nrdc.org/wildlife/animals/bees.asp) சொல்வதை கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.அதனால் தான் ஐன்ஸ்டீன் நம்மை எச்சரித்து விட்டுப் போயிருக்கிறார்.

      If we don’t act now to save the honey bee, it might be too late. And no honey bees will mean no more of your favorite fruits and vegetables.

      Here’s a list of what bees pollinate:

      Read "The Vanishing" in OnEarth magazine
      Fruits and Nuts ,Vegetables, Field Crops
      Almonds
      Apples
      Apricots
      Avocadoes
      Blueberries
      Boysenberries
      Cherries
      Citrus
      Cranberries
      Grapes
      Kiwifruit
      Loganberries
      Macadamia nuts
      Nectarines
      Olives
      Peaches
      Pears
      Plums/Prunes
      Raspberries
      Strawberries
      Asparagus
      Broccoli
      Carrots
      Cauliflower
      Celery
      Cucumbers
      Cantaloupe
      Honeydew
      Onions
      Pumpkins
      Squash
      Watermelons
      Alfalfa Hay
      Alfalfa Seed
      Cotton Lint
      Cotton Seed
      Legume Seed
      Peanuts
      Rapeseed
      Soybeans
      Sugar Beets
      Sunflowers

      உங்கள் வருகைக்கும், உங்கள் ஆத்மார்த்தமான கருத்துக்கும் நன்றி மேடம். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். கொடுத்திருக்கும் லின்க்கில் பாருங்கள். சுவாரசயமாக இருக்கிறது.

      Delete
  22. அருமையான தகவல்கள். அதை விட அருமை அடைப்புக்குறிக்குள் இருக்கும் உங்கள் கமெண்ட்டுகள்......

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்