Saturday, 22 February 2014

மழையில் நனைகிறேன்.(பரிசு-2)



மழையா? இப்பொழுது எங்கே மழை பெய்கிறது என்கிற சந்தேகம்  வருகிறதா?
இது வெறும் மழை இல்லை . பரிசு மழையில் நனைகிறேன் .

திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்கள் நடத்தும் கதை விமரிசனப் போட்டி அனைவரும் அறிந்ததே.  ஓரிரு வாரங்களுக்கு முன்பு  என் விமரிசனத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. 

இதோ  என்னுடைய  மற்றொரு விமரிசனம் (காதல் வங்கி என்கிற சிறு கதைக்கு எழுதியது )   இரண்டாம் பரிசை  தட்டிச் சென்றுள்ளது. இரண்டாம் பரிசை  திருமதி கீதா மதிவாணன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

' காதல் வங்கி ' என்கிற சிறு கதை  இந்த இணைப்பில்(http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04.html) . அதற்கு  நான் எழுதிய இரண்டாம் பரிசுப்  பெற்ற விமரிசனம்  கீழே ........

                                      -----------------------------------------------------

காதல்  என்பதே ஒரு மேஜிக் தானே!   மனிதர்களுக்குள்  எத்தனை, எத்தனை ஜாலங்கள் செய்யக் கூடியது இந்த  உணர்வு. அதைக் கருவாய் எடுத்துக் கொண்டு  அற்புதமாய் கதை சொல்லியிருக்கிறார் கோபு சார். இளம் வயதினர்  அனைவரும் படிக்க வேண்டிய காதல் கதை தான் இது. 

கண்டதும் காதல் என்று சொல்லிக் கொண்டு, புறத் தோற்றத்தையும்,  நுனி நாக்கு ஆங்கிலத்தையும், வங்கி கணக்கையும்  பார்த்து வருவதல்ல காதல் என்பதையே 'வங்கிக் காதல் ' விளக்குகிறது... அது எங்கு எப்பொழுது வரும் என்றே தெரியாது என்பது ஜானகி, ரகுராமன் காதல்  சொல்கிறது.  முதலில், இது என்ன பொருந்தாக் காதல் போல் தெரிகிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது. படிக்க படிக்க 
ரகுராமனின் உயர்ந்த குணங்கள் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த குணங்கள் உடைய  ஜானகியே அவருக்கு உற்ற துணையாக வர வேண்டும் என்று தோன்ற  ஆரம்பித்து விடுகிறது. 


ஜானகியின் நடை, உடை, பாவனைகளை ஆசிரியர் விவரிக்கும் போதே  , ஜானகியுடன், நம் வீட்டுப் பெண்களை  ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மனித இயல்பு தானே. அத்தனை உயர்ந்த, அழகுள்ள, கை நிறைய சம்பாதிக்கும்,  கலக்கலவெனப் பழகும்   ஜானகியை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். ரகுராமன்  ஜானகியிடம் தன உள்ளத்தைப் பறி கொடுத்ததில் ஆச்சர்யமென்ன! 

ரகுராமனும், ஜானகியின் குணநலன்களுக்கு, சற்றும் குறைந்தவரில்லை.  ஆனாலும் அவர்  படிப்பு  சற்றே  நம்மை யோசிக்க வைக்கிறது. 
ஜானகிக்கு   வேண்டுமானால் அவர் மேல் காதல் என்று சொல்லலாம். அவள் தாய் , தன மகள்  படிப்பிற்கு ஏற்ற  , நல்ல படித்த  கை நிறைய சம்பாதிக்கும்  மாப்பிள்ளை வேண்டும் என்று நினைத்திருந்தால்  அது சகஜமே.  

இதையெல்லாம் தாண்டி ஜானகியின் தாய், கலாசாரத்திற்கும், ஆன்மீகத்திற்கும், கொடுக்கும் மரியாதை, தாய், மகள் உரையாடலில் நன்கு விளங்குகிறது. இப்படிப்பட்ட  ஒரு நல்ல தோழியே தாயாய் அமைந்த விதத்தில், ஜானகி  கொடுத்து வைத்தவள் தான். 

கண்டதும் காதல்,  உடனே ரெஜிஸ்தர்  திருமணம் என்று பதை பதைக்காமல், நன்கு யோசித்து, தங்கள் பொருளாதார நிலைமை சீராக்கிக் கொண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிகள், பல காதலர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்  என்று சொன்னால்  மிகையாகாது என்றே நினைக்கிறேன். 

திருமணம்  முடிந்ததும், இருவரும் தங்கள், தங்கள் தொழிலை,  ஆரவமாய் கவனிப்பது அவர்களுடைய  முதிர்ச்சியைக் காட்டுகிறது.

 வில்லன் யாரும் வங்கிக் காதலுக்கு குறுக்கே வந்து நம்  இதயத்தை  படபடக்க வைத்து, பிபியை எகிற வைத்து ,  விடுவார்களோ என்ற பயம்  பாதிவரை இருந்தது.ஜானகியின் தாயின் உணர்வுகளை  ஆசிரியர் வில்லனாக்கி விடுவாரோ என்ற அச்சமிருந்தது உண்மை தான்,ஆனால்  அந்தத் தடையும் சட சட வென்று  முறித்த காதாசிரியருக்கு நன்றி.  பின் பாதியில், இந்தத்  தம்பதிகள்  திருமணம்  தடையில்லாமல் நடக்க வேண்டுமே என்ற வேண்டுதல்  மட்டுமே மிச்சம்  இருந்தது என்று சொல்ல, வேண்டும். 

திருமணத்தை  நடத்தி வைத்த கோபு சாருக்கு பாராட்டுக்கள்.  ஜானகி-ரகுராமன் தம்பதிக்கு வாழ்த்துக்களும், ஆசிகளும்.
 ஒரு காதல் கதையை, எங்கும் முகம் சுளிக்கும்படியாக இல்லாமல், மிகவும் நாசுக்காக, அதே சமயத்தில், காதலின் சாரம்  முழுவதும்  இருக்கும்படியான கதையை சொல்லியிருப்பதற்கு,  நன்றிகள்  ஆசிரியருக்கு.

பாராட்டுக்கள் கோபு சார்.

                                     -----------------------------------------------------------

பரிசளித்த நடுவருக்கும், வாய்ப்பளித்த திரு. வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



45 comments:

  1. தங்களின் மிகச்சிறப்பான எழுத்துத்திறமைக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓர் சிறு அங்கீகாரம் மட்டுமே இது.

    தாங்கள் மேலும் மேலும் தொடர்ச்சியாக இதே போட்டிகளில் ஆர்வத்துடன் வாராவாரம் கலந்து கொண்டு மேலும் பல பரிசுகள் பெற்றிட வேண்டும் என்பதே என் ஆவல். அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    நடுவர் அவர்களின் சார்பிலும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  2. டீச்சர்களே நன்றாக எழுதி பரிசு வாங்கிக்கொண்டே இருந்தால், மாணவிகளின் கதி என்னாவது? (சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். டீச்சர் கோபிக்கவேண்டாம்! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! விமர்சனம் எழுதும் திறமை, எல்லாருக்கும் வந்துவிடாது. ஆழ்ந்து படிக்கவும், படித்ததை சிநதிக்கவும் முடிந்தால் மட்டுமே நம்பிக்கையோடு விமர்சிக்க முடியும். உங்களால் அப்படி முடிகிறது! )

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்லப்பா சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு.

      Delete
  3. பெற்றுக்கொண்ட வெற்றிக்கு வாழ்த்துக்களும் சிறப்பான
    விமர்சனத்துக்கு பாராட்டுக்களும் அம்மா .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி அம்பாளடியாள்.

      Delete
  4. "இளம் வயதினர் அனைவரும் படிக்க வேண்டிய காதல் கதை தான் இது" _________ சொல்லிட்டீங்கல்ல, அப்படின்னா இதோ உடனே போய் படிக்கிறேங்க‌ !

    நீங்க (பரிசு)மழையில் நனைவதை எங்களிடமும் பகிர்ந்துகொண்டதற்கு மகிழ்ச்சிங்க. சிறுகதை விமர்சனமும் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. மேலும்மேலும் பல பரிசுகளை அள்ளிச்செல்லவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இளம் வயதில் நிற்கும் சித்ராசுந்தருக்கு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என்று திருமணம் நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சித்ரா.

      Delete
    2. "இளம் வயதில் நிற்கும் சித்ராசுந்தருக்கு" __________ எங்கங்க, பஞ்சுபோன்ற தலை காட்டிக் கொடுத்துவிடுகிறதே !

      வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.

      Delete
    3. இன்னொன்னு சொல்ல மறந்திட்டேனே. பின்னால் உள்ள டிவி, கரும்பலகை மாதிரி இருக்கவும் நீங்க வேலையில் இருந்த‌போது எடுத்த புகைப் படத்தைதான் போட்டிருக்கீங்கன்னு நெனச்சேன். பிறகு ஐபேடில் பெரிதாக்கிப் பார்த்தபிறகுதான் வீடு என்பது தெரியவந்தது. டக்குன்னு பார்க்கும்போது வகுப்பறை மாதிரியே இருக்குங்க‌.

      Delete
    4. தளி பஞ்சானால் என்ன ? உங்கள் எழுத்துக்கலில் இளமை கொஞ்சி விளையாடி, மனம் எவ்வவளவு இளமையாயிருக்கிரதைக் காட்டிக் கொடுக்கிறதே.. அது போதும். அது தான் உண்மையான இளமை.
      அது கரும்பலகையும் இல்லை, டிவியும் இல்லை. மூடியிருக்கும் ஜன்னல் .
      என்னவர் அவ்வப்பொழுது நினைவு படுத்துவதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். "ராஜி, இது உன் வகுப்பு இல்லை. வீடு. எல்லோரையும் பேணக் மேல் நிற்க வைத்து விடுவாய் போலிருக்கிறதே" என்று. உங்கள் கருத்தை அவர் படித்தால் நிச்சயம் ஆமோதிக்கத் தான் செய்வார். நன்றி சித்ரா மீண்டும் வந்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு.

      Delete
  5. வணக்கம்
    அம்மா.
    தங்களின் பேனா முனையின் -நாளத்தில்
    இருந்து வடிந்த உதிரத்தில்
    மனதில் கசிந்த வார்த்தைகள்
    கதையின் கருவுக்கு விமர்சனம் எழுதி
    பரிசு கிடைத்தமை
    என் மனதுக்கு மகிழ்ச்சி
    தொடர் பரிசு மழையில் நனைய எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவித்துவமான வாழ்த்துக்கு மிக்க நன்றி ரூபன்.

      Delete
  6. திரு. செல்லப்பா அவர்கள் குறிப்பிட்டதைப் போல -
    விமர்சனம் எழுதும் திறமை, எல்லாருக்கும் வந்து விடாது.
    சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி துரை சார்.

      Delete
  7. மிகவும் அருமையான விமர்சனம்... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  8. Eniya vaalththu.
    Vetha.Elangathi¨lakam.

    ReplyDelete
  9. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி வேதா மேடம்

      Delete
  10. வாழ்த்துகளும், பாராட்டுகளும். செல்லப்பா ஸாரின் பின்னூட்டம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  11. சிறப்பான விமர்சம். பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி டாக்டர் சார்.

      Delete
  12. அருமையான விமர்சனம். பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்முகில்.

      Delete
  13. பரிசு மழையில் மேலும் மேலும் நனைய வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்

      Delete
  14. இன்னொரு பரிசா!
    பேஷ், பேஷ்! மேலும் மேலும் பரிசு மழையில் நனைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  15. சிறப்பான விமர்சனம்.

    பரிசு மழை தொடர்ந்து பெய்யட்டும்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி சுந்தரா.

      Delete
  16. பரிசு பெற்றதற்கும் மேலும் பல பரிசுகள் பெறவும் வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துககளுக்கு நன்றி சார்.

      Delete
  17. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இன்னும் பல பல பட்டங்களும் பரிசுகளும் கிடைக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஸாதிகா .

      Delete
  18. இன்னொரு பரிசு பெற ஒரு அரிய வாய்ப்பு. பார்க்க என் பதிவு “காதல் போயின்..........”பங்கு பெறுங்கள் பரிசு பெறுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். முயற்சிக்கிறேன்.

      Delete
  19. hearty congratulations Rajalakshmi.

    ReplyDelete
  20. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    தொடர்ந்து பரிசு மழையில் நனைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் ராமலஷ்மி

    ReplyDelete
    Replies
    1. Jaleela Kamal 28 February 2014 12:58

      //வாழ்த்துக்கள் ராமலஷ்மி//

      அன்புள்ள திருமதி ஜலீலா கமால் மேடம். வணக்கம்.

      அவசரத்தில் இவர்களின் பெயரையே இப்படி மாற்றி விட்டீர்களே !

      இவர்கள் பெயர் திருமதி ’ராஜலக்ஷ்மி பரமசிவம்’ என்பதாகும்.

      திருமதி ’ராமலக்ஷ்மி’ அவர்கள் வேறு ஒரு பதிவர். அவரும் நிறைய இதர போட்டிகளில் பரிசுகள் வாங்கிக் குவித்துக்கொண்டே வருபவர்கள் தான்.

      இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் கோபு

      Delete
  22. சிறப்பான விமர்சனம்.

    மீண்டும் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள். மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்