பதிவுகள் எழுதத் தொடங்கி சுமார் ஒன்றரை வருடம் ஆகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி நூறாவதுப் பதிவை எட்டி விட்டேன். பெரிய மலை ஏறிய மாதிரி உணர்ந்ததில் சற்றே ஆசுவாசப் படுத்திக் கொள்ள அமர்ந்தேன். "என்ன பெரிதாக எழுதிக்கிழித்தாய் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாய் ?" கேட்ட மனசாட்சியை ". உன் வேலையைப் பார். எல்லாம் எனக்குத் தெரியும். " என்று அடக்கி விட்டு என் , .நூறாவது பதிவை எப்படி ஸ்பெஷலாக்குவது.?...........சிந்தனையை செலவு செய்ய ஆரம்பித்த நேரத்தில் முதல் பரிசு செய்தி வந்தது. பரிசே நூறாக இருக்கட்டும் என்று முடிவுடன் பரிசுச் செய்தியைப் படித்துக் கொண்டே வந்ததில் அதில் நடுவரின் பாராட்டு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது .
ஆக பாராட்டே நூறாகிவிட்டது.
திரு. வை .கோபாலகிருஷ்ணன் அவர்களின்" தேடி வந்த தேவதை "என்னும் கதையின் விமரிசனப் போட்டியில் நான் எழுதிய விமரிசனம் முதல் பரிசினைப் பெற்றுத் தந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது.இந்தப் பரிசினை நான் திருமதி கீதா மதிவாணன் அவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் உவகை அடைகிறேன்.
மகிழ்ச்சிக்கு கிரீடம் வைத்தாற்போல் இருந்தது நடுவரின் பாராட்டுரைகள். அந்தப் பாராட்டு என்னை மகிழ்ச்சிக் கடலிலேயே தள்ளியது என்று சொல்லலாம்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
'நடுவரின் பாராட்டு'
முதல் பரிசு பெற்ற இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
எல்லா விமரிசனங்களும்
இவை மாதிரி தேர்ந்த விமரிசனங்களாக அமைந்து விட்டால், பரிசுக்குரிய
விமரிசனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வகைப்படுத்துவதற்குள் என் பாடு
திணறிப் போய் விடும் என்பதும் உண்மை.
அதை விட பெரிய உண்மை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது தான்.
உண்மையிலேயே இது தான் அவர்கள் பெற்ற வெற்றியின் முத்திரை பதியலும் ஆகும்..
-- நடுவர்
இந்தப் பாராட்டுக்கு உரிய என் விமரிசனத்தை இங்கே கொடுக்கிறேன்.
கதாபாத்திரங்கள் என்ன நினைக்கிறது என்பதின் மூலமாக என் விமரிசனத்தை முன் வைக்கிறேன்.
இதோ முதலில் மரகதம் சொல்வதைக் கேட்போமா
," என்னைக் கதாசிரியர் ஏன் இவ்வளவு கொடுமையானவளாகக் காட்டி விட்டார் என்று எனக்குப் புரியவில்லை. என் மேல் அவருக்கென்ன கோபம். நான் வரதட்சினை எதிர்பார்ப்பவளாக, மகனைத் திருமணத்தின் விலை பொருளாக நினைக்கும் ஒரு சராசரிக்கும் கீழான மாமியாராக சித்தரித்து விட்டார். அது தான் போகட்டும். என் மகனுக்கு உயிர் கொல்லி நோய் என்று தெரிந்த பின்னால் ஒரு சராசரி தாயாக மனம் பதைக்க, புலம்புவளாக , கவலையின் உருவமாகக் காட்டியிருக்கலாமே. அதைபற்றிய சிந்தனையையே இல்லாத கல் மனம் கொண்ட தாயாக அல்லவா சித்தரிக்கப் பட்டிருக்கிறேன். அந்த விதத்தில் உங்கள் மேல் எனக்கு மிகவும் வருத்தம் கோபு சார். என் பையன் உயிருக்கு என்னவானாலும் பரவாயில்லை, மருமகள் கொண்டு வரும் சீர் செனத்தி தான் முக்கியம் என்று நினைப்பவளா நான். என்மேல் கொஞ்சம் கருணை காட்டியிருக்கக் கூடாதா?
ஆனால் இறுதியில் என்னை மனம் மாறியவளாகவும். என் மகனுக்கு உயிர்கொல்லி நோய் எதுவும் இல்லை என்று சொல்லி பெற்ற வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் கோபு சார். அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் பல. சுமதியை அவள் மாமியார் போலில்லாமல் அவளை என் மகளாகத் தான் நினைக்கப் போகிறேன்.
ஒரு சின்ன விண்ணப்பம், வேறு கதைகளில் மரகதம் என்கிற கதாபாத்திரம் தாயாக சித்தரிக்கப் பட்டால் தயவு செய்து மகனின் நலம் ஒன்று தான் குறிக்கோள் அவளுக்கு என்று சித்தரித்தால் நான் நன்றியுடையவளாக இருப்பேன்."
சுந்தர் என்ன சொல்கிறான் பார்ப்போமா?
" எல்லோரும் அவ்வப்பொழுது சின்ன சின்ன பொய் சொல்பவர்கள் தாம் . என் தாயின் குணத்தை மாற்றுவதற்காக நானே எனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சொல்ல வைத்து விட்டீர்களே! பயந்தே போய் விட்டேன். நல்ல வேளை இறுதியில் அது எல்லாம் ஒரு நாடகமே என்று சொல்லி என் உயிரை எனக்குத் திருப்பி தந்து விட்டீர்கள். அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் கோபு சார். ஆனால் நான் சொன்னது இமாலயப் பொய்யல்லவா? இனி வாழ்வில் சுமதி என்னை நம்ப வேண்டுமே என்கிற அச்சம் என் மனதுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி சுமதிக்கும் எனக்கும் பிணக்கு வந்தால் நான் உங்களைத் தான் மத்தியஸ்தம் செய்யக் கூ'ப்பிடப் போகிறேன்.
என் மூலமாக மாமியார்களின் அகங்காரத்தினால், பெற்ற பிள்ளைகள் படும் மனவேதனையை அழகாக சொல்லி விட்டீர்கள். எப்படியாவது என் அம்மாவின் மனநிலையை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பதை உணர்ந்து தான் எய்ட்ஸ் என் வாழ்க்கையில் விளையாடுமாறு செய்திருக்கிறீர்கள்.என்பது புரிகிறது. எப்படியோ எனக்கும், என் மனதைக் கவர்ந்த சுமதிக்கும் திருமணம் முடித்து வைத்த புண்ணியம் உங்களயே சேரும்.
பாராட்டுக்கள் கோபு சார்!
டாக்டரின் எண்ணத்தைத் தெரிந்துக் கொள்ளலாமா ?
நோய் இருப்பவர்களிடம் ," உங்களுக்கு ஒன்றுமில்லை . நீங்கள் நன்றாயிருக்கிறீர்கள் " என்று ஒரு நாளைக்கு பல முறை சொல்லிப் பழக்கப்பட்ட நான் இன்று ஒரு நல்ல விஷயத்திற்காக சுந்தருடன் சேர்ந்து ஒரு பொய் சொல்லியிருக்கிறேன். Mrs, மரகதமும் அவள் கணவரும் என்னை எப்படியெல்லாம் திட்டப் போகிறார்கள் என்பதை நினைத்தால் கொஞ்சம் வெலவெலத்து தான் போகிறது. ஆனாலும், இது ஒரு நன்மைக்காகத் தான் என்று நினைக்கும் போது, வரப்போவதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் உண்டாகிறது. ஒரு எளிய குடுமப்த்துப் பெண்ணிற்கு திருமணம் நடக்க என்னையும் ஒரு கதா பாத்திரமாகப் படைத்த கோபு சாருக்கு என் நன்றிகள் பல.
ஒரு டாக்டராக நான் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கிறது. சுமதியின் வாயிலாக எய்ட்ஸ் பற்றி ஒரு சின்ன பிரசங்கமே செய்து விட்டாரே ஆசிரியர். அவருடைய சமுதாய விழிப்புணர்வு சிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன். ஒழுக்கம் தவறுவது குற்றமே!. அது பெரிய தவறில்லை என்று பொருள்படுவது போல் சுமதி பேசுவதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் எய்ட்ஸ் நோயாளிகள் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற சிந்தனை வரவேற்கப்பட வேண்டியதே.
சுமதி சொல்வதைக் கேட்போமா?
தியாகத்தின் உருவமாகத் தான் நான் வாசகர்களுக்கு அறிமுகமாகிறேன்.. ஆனால் நான் செய்வது தியாகமா, அசட்டுத்தனமா என்பதை என் மனம் பட்டி மன்றமே நடத்திப் பார்த்து விட்டது. ஒரு ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்த பெண் தான் நான் . இந்தத் திருமண பந்தத்தினால் பெரிதாக என் குடும்பத்தின் பொருளாதாரம் ஒன்றும் உயர்ந்து விடப் போவதில்லை. "ஒரு வேளைகுடும்பத்தினருக்கு நல்லது நடக்கலாமோ" என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே என் மனதில் இருப்பதை யூகிக்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுந்தருக்கு எய்ட்ஸ் என்று தெரிந்திருந்தும் மணக்க சம்மதிப்பது அவ்வளவு உசிதமாகப் படவில்லைதான் .ஆனாலும் அதை செய்கிறேன்.
பிறகு சுந்தர் எய்ட்ஸ் என்று பொய் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்ததும் திருமணம் வேண்டாமா என்கிற நல்ல முடிவை எடுத்து விட்டேன் என்று நிம்மதி பெருமூச்சுடன் இருந்தால், அவன் அம்மா மரகதம் மூலமாக கதாசிரியர் என் திருமணத்தை முடித்து விட்டார். அதற்காகப் பெரிதாக வருந்தவில்லை நான். பணக்கார வீட்டிற்குப் போகிறேன் என்கிற ஒரு சின்ன பயம் என் மனதுள் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.
என் குடும்பத்திற்கு என்னாலான ஒரு சின்ன உதவி என்னுடைய திருமணம் .என் திருமணத்தை முடித்து உதவியதற்காக என் நன்றிகள் கோபு சாருக்கு. நர்ஸ் என்கிற புனிதத் தொழிலில் இருக்கும் நான் எய்ட்ஸ் நோயாளியை திருமணம் செய்ய சம்மதித்து, சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகி விட்டேன் என்பதில் எனக்குப் பெருமை தான் . என்னை அப்படி சித்தரித்த கதாசிரியருக்கு என் பாராட்டுக்கள்.
சுந்தர் இனிமேலாவது பொய் எதுவும் என்னிடம் சொல்லாமல் என் மகிழ்ச்சிக்கு பங்கம் எதுவும் வராமலிருக்கவும் ஆனடவனை வேண்டிக்கொள்கிறேன்.
-
சுமதியும் சுந்தரும் எல்லா வகை செல்வமும் பெற்று நீடுழி வாழ என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.
image courtesy---google
தங்களின் வெற்றிகரமான நூறாவது பதிவுக்கு என் முதற்கண் வாழ்த்துகள். பாராட்டுக்கள். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
Deleteதங்களது இந்த வெற்றிகரமான 100வது பதிவு, என்னுடைய சிறுகதை விமர்சனப்போட்டியில் தாங்கள் மீண்டும் வெற்றிபெற்று, மீண்டும் முதல் பரிசினைப்பெற்றுள்ளதைக் குறிப்பதாக அமைந்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
ReplyDelete’தேடி வந்த தேவதை’க்கதைக்கான தங்களின் மிகச்சிறந்த விமர்சனத்திற்கு
ஓடி வந்த பரிசாக இது தங்களை
நாடி வந்து
ஆடி மாதத்தில் அமைந்துள்ளது மிகப்பொருத்தமாகவே உள்ளது. ;)
>>>>>
நான் வாங்கிய பரிசுகளைப் பற்றி இங்கு குறிப்பிடுவது என்னைப் பெருமைபடுத்துவதாக அமைந்திருக்கிறது. நன்றி
Deleteஇதுவரை நடந்துள்ள 25 போட்டிகளில் 17 போட்டிகளில் மட்டும் தாங்கள் கலந்து கொண்டுள்ளீர்கள். அதில் தங்களின் விமர்சனங்கள் 8 முறை வெற்றிபெற்று பரிசுக்குத் தேர்வாகியுள்ளன. அதில் நான்கு முறை முதல் பரிசினையே வென்றுள்ளீர்கள். இவையெல்லாம் மிகப்பெரிய சாதனையே. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
Deleteதாங்கள் மட்டும் தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தீர்களானால் நிச்சயமாக தங்களுக்கும் பல ஹாட்-ட்ரிக் பரிசுகள் கிடைத்திருக்கும். அதனால் பரவாயில்லை. மீதியுள்ள 1+14 = 15 வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக்கொண்டு, மேலும் பல பரிசுகள் தங்களுக்குக் கிடைக்க சூழ்நிலைகள் சாதகமாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
உயர்திரு நடுவர் அவர்களின் மனம் திறந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது மேலும் சிறப்பாக அமைந்து விட்டது. இந்தப்பாராட்டு, தங்களின் மெருகேறி ஜொலிக்கும் வைரம் போன்ற எழுத்துக்களுக்கு மேலும் பட்டை தீட்டியது போல அமைந்துள்ளதில் எனக்கு மேலும் மிகுந்த மகிழ்ச்சியே. என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
உங்கள் அபரிமிதமான பாராட்டுக்கு நான் தகுதிய்டையவலா என்பது சந்தேகமே.
Deleteஉங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.
தங்களின் இந்த வெற்றியினை தனிப்பதிவாக இங்கு வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteமேலும் மேலும் இதே போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு மேலும் பல சாதனைகள் படைக்கவும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக அமையட்டும்.
>>>>>
என்னுடைய ’தேடி வந்த தேவதை’ சிறுகதைக்கான இணைப்பு:
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html
தாங்கள் மேற்படி கதைக்கு விமர்சனம் எழுதி. முதல் பரிசினை வென்று, உயர்திரு நடுவர் அவர்களின் பாராட்டினையும் பெற்றுள்ளதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html
இது இங்கு வருகை தருவோருக்கான தகவலுக்காகக் கொடுத்துள்ளேன்.
நான் உங்களின் கதைக்கு லிங்க் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் மறந்து விட்டேன். அதை நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள்.உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி கோபு சார்.
Deleteஇன்று என் வலைத்தளத்தில் புதுமையாக ஓர் போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமர்சனம் ஏதும் எழுதி சிரமப்படாமலேயே மிகச்சுலபமாக அனைவரும் பரிசினைத்தட்டிச் செல்லலாம். அவசியமாகக் கலந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஇணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/07/blog-post.html
வழக்கம் போல் இந்த வார சிறுகதைப்போட்டிக்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html அதிலும் கலந்து கொள்ளவும்.
அன்புடன் கோபு [VGK]
பார்த்தேன் கோபு சார்.
Delete100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி குமார்.
Deleteநூறாவது பதிவுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்னும் பலநூறு பதிவுகள் வழங்குதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகின்றேன்.. வாழ்க நலம்..
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
Delete100வது பதிவிற்கும்
ReplyDeleteவிமரிசனப் பரிசிற்கும்
இனிய பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
(நானும் ஆயிரமாவது பதிவாக
நாட்டியப் பேரொளி பத்மினி பற்றி எழுதியிருந்தேன்.)
உங்களின் 1000மாவது பதிவுப் படித்து கருத்திட்டிருந்தேனே. உங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி கவி.
Deleteஅன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவன் - சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்து கோண்டு முதல் பரிசு பெற்று - அதன் கூடவே நடுவரின் சிறப்பான பாராட்டுகளையும் பெற்றது நன்று - இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வினைத் தங்களின் நூறாவது பதிவாக தங்கள் தளத்தினில் வெளியிட்ட்மையும் நன்று - அனைத்துமே மகிழ்ச்சியின் வெளிப்பாடே ! பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி சீனா ஐயா.
Deleteஉங்களைத் தேடிவந்த தேவதை திரு V.G.K அவர்களின் பாராட்டுப் பத்திரத்தோடு பரிசையும் கொண்டு வந்து இருக்கிறது. இந்த நூறாவது பதிவிற்கு பொருத்தமான விஷயம்தான். உங்களது இந்த விமர்சனமும் ஒரு வித்தியாசமானதாக புதுமையாகவே இருக்கிறது. V.G.K அவர்களின் பின்னூட்டங்களே இதற்கு சாட்சி!
ReplyDeleteவலையுலகில் நூறாவது பதிவினை எழுதி சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்! வலையுலகில் ஏற்கனவே மின்னூல் படைத்தவர்கள் என்ற சாதனை வரிசையில் உங்கள் பெயர் உள்ளது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
உங்களின் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி தமிழ் சார்.
Deleteத.ம.1
ReplyDeleteநூறாவது பதிவிற்கும்
ReplyDeleteபரிசில் பெற்றமைக்கும்
எனது வாழ்த்துகள்!
நன்றி சார்.
Deleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவிமர்சனம் புதிய வகையில் செய்திருக்கிறீர்கள். நடுவரை அது கவர்ந்ததில் வியப்பே இல்லை. எங்களையும் கவர்ந்து விட்டது. பாராட்டுகள்.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteஅருமையான விமரிசனம். முதல் பரிசு பெற்றமைக்கும், நூறாவது பதிவுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி கீதா மேடம்.
Deleteபாராட்டுக்கள்.
ReplyDeleteசுப்பு தாத்தா.
நன்றி சார்.
Deleteநூறாவதை கடந்து... ஆயிரமாவதை தொட இப்பொழுதே எனது வாழ்த்துக்கள் அம்மா.
ReplyDeleteநன்றி சார்.
Deleteஎழுத்தாளரிடம் பலியாவது அவர்கள் உருவாக்கும் கேரக்டர்கள்தான். அவர்கள் உயிர்பெற்றவுடன் எழுத்தாளரை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால்.. எழுத்தாளர் நிலை அதோகதிதான். மனிதரை மனிதர் திருப்திபடுத்தவே சிரத்தை எடுக்கும் இந்தக் காலத்தில் அந்த கேரக்டர்களுக்காக நீங்கள் விவாதிப்பது பாராட்டுக்குரியது.
ReplyDeleteஉலகில் Not many would place themselves as those characters and see how it feels. You are one of those special people. :)
உங்களின் பாராட்டிற்கும், விமரிசனத்தைப் படித்து ரசித்தற்கும் மிக்க நன்றி வருண்.
Deleteமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி தனபாலன் சார்.
Deleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், அத்துடன் விரமர்சன முதல் பரிசுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஜலீலா.
Deleteவணக்கம்
ReplyDeleteமேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...இன்னும் பல பதிவுகள் மலரட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Delete100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! சிறந்த விமர்சனம்! பரிசுபெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.
Deleteநூறாவது பதிவிற்கும், விமரிசனத்திற்குப் பரிசு பெற்றதற்கும் வாழ்த்துக்கள், ராஜி.
ReplyDeleteஎழுத்துலகில் மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
இந்த கருத்துரையாவது வருமா?
தமிழ்மணம் 4வது வாக்கு போட்டிருக்கிறேன். எல்லாம் வரவேண்டுமே!
விடாமல் முயற்சி செய்து , வந்து கருத்துரை இட்டதற்கு மிக்க நன்றி ரஞ்சனி. உங்கள் த.ம. வாக்கிற்கும் மிக்க நன்றி.மீண்டும் உங்களை பதிவுலகில் காண ஆசை. நன்றி ரஞ்சனி.
Delete100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் விமர்சனம் படித்து அங்கும் பாராட்டினேன். இங்கும் பாராட்டுகிறேன்,
கதாபாத்திரம் பேசுவது போல் அமைந்த விமர்சனம் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது பதிவுகளைக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
100- வது பதிவுக்கு வாழ்த்துகள். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்
ReplyDelete