அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க....
இந்தப் பதிவைப் படித்து முடிக்கும் போது உங்கள் மனதிலும் மேற்கண்ட கேள்வி எழாமல் போகாது.
நான்கைந்து நாட்களுக்கு முன்பாக முக நூலில் காக்கையைப் பற்றிய ஒரு குட்டி விவாதம் படிக்க நேர்ந்தது.
காகம் ஏமாற்றுமா ?......... இல்லை ஏமாறுமா என்பதைப் பற்றித் தான் அந்த விவாதம் .
சின்ன வயதில் நாம் கேட்ட காக்கா கதையில் பாட்டியை ஏமாற்றி விட்டு வடையைத் திருடிய காக்கை , நரியிடம் ஏமாந்து விடுகிறது. அதன் குணம் என்ன? ஏமாற்றுமா?....இல்லை ...... ஏமாறுமா? இதில் சற்றுக் குழம்பினேன் . இருக்கவே இருக்கிறாரே நம் கூகுள் ...அவரிடம் கேட்போம் என்று பஞ்சாயத்திற்கு அவரிடம் சென்று கேட்டதில் எனக்குப் பதில் கிடைத்தது. ஆனால் அதைவிட ஆச்சர்யங்கள் நிறைந்ததாய் இருந்தது நான் படித்த காகத்தின் உலகம். ஏழெட்டு வருடங்களே வாழும் காகங்கள் எத்தனை புத்திசாலிகள் என்பது வியக்க வைக்கும் விஷயம்.
காகத்தைப் பற்றி நான் அறிந்து அதிசயித்த சில விவரங்கள் இதோ :
எங்களுக்குத் தெரியாததா நீ எழுதி விடப் போகிறாய் என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது. ஆனாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால் பொறுத்தருளுங்கள்.
- நம்முடைய இயற்கை அலாரம் டைம்பீஸ் காக்கை தான் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள் தானே.
- அதே போல் காலை எழுந்தவுடன் அவசியம் ஒரு குளியலும் போட்டு விடும் காக்கை என்பது ஆராய்ச்சியாளரின் கருத்து. காகமே, காக்காய் குளியல் தான் குளிக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
- மூளை, உடல் விகிதாசாரம் பறவையினங்களிலேயே காகத்திற்குத் தான் அதிகமாம். என்ன தான் சொல்ல வருகிறாய்? கொஞ்சம் புரியும்படியாக சொன்னால் தான் என்ன என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. காகத்தின் மூளையின் அளவு மற்ற எல்லாப் பறவையைக் காட்டிலும் சற்றே பெரிது என்று தான் சொல்ல வருகிறேன்.
- பன்றி இறைச்சியை விடவும் காகத்தின் இறைச்சி ஆரோக்கியமான உணவாகும். ( பலருக்கும் விவேக்கின் ஜோக் நினைவிற்கு வரலாம்.)
- காகத்தின் கரைதலுக்கு அர்த்தம் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சில மனிதர்களைப் பார்க்கும் போது நம்மைக் கண்டுக்கொண்டதற்கு அடையாளமாக தனித் தன்மையுடன் கா....கா..... என்று கரைகிறது என்று சொல்வது சற்றே வியப்பளிக்கும் விஷயமாகும் .
- காக்கை மற்ற விலங்குகளின் உடம்பில் இருக்கும் அழுக்கை நீக்கும் என்பதுத் தெரியும். அது பேன் போன்ற ஒட்டுண்ணிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்கிறது தெரியுமா? எறும்புகளைத் தன் காலால் தேய்த்துக் கொன்று, அதைத் தன் உடம்பு முழுதும் சென்ட்டைப் போல் பூசிக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்கின்றன. .
- .ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காகங்கள் மிகவும் அருமையாய் கடைப் படிக்கின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. விதி விலக்குகள் இருக்கலாம் .ஆனால் அது சொற்பமே. ஆக, அங்கே விவாகமும் இல்லை, விவாகரத்தும் இல்லை. குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லை. குழந்தைகள் அனாதைகளாக ஆக்கப்படுவதில்லை. அத்தனை உன்னதமான ஒழுங்குக்குள் அவை வாழ்கின்றன. குடும்ப ஒற்றுமை நம்மிடையே சீர்குலைந்திருக்கும் இத்தருணத்தில் கண்டிப்பாக நாம் காகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று இது.
- அதே போல் கருணைக் கொலைகளும் அவைகளிடையே சர்வ சகஜம் . என்ன ஒன்று.......... அது ஒரு கருணைக் கொலை என்று நமக்குப் புரிவதில்லை. அவ்வளவே. ஒரு காகம் அடிபட்டோ , அல்லது மரணிக்கும் தருவாயில் இருக்கும் போதோ நூற்றுக் கணக்கில் காகங்கள் அங்கே சூழ்ந்துக் கொள்வதைப் பார்த்திருப்போம். முதலில் காப்பாற்றவே முயல்கின்றன. காப்பாற்ற முடியாத சமயத்தில், மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகத்தை மற்றக் காகங்கள் சேர்ந்து அலகாலேயே குத்திக் கொன்று சீக்கிரமே வைகுண்டத்திற்கு அனுப்பி வைக்கின்றன.கருணைக் கொலைக்கு எந்த நீதிமன்றத்திலும் அவைகள் அனுமதி வாங்க வேண்டியதில்லை.
காகம் பானைக்குள் கல்லைப் போட்டு நீர் மேலேழும்பியதும் தன் தாகம் தீர்த்துக் கொண்டக் கதை நமக்குத் தெரியும்.
இதை ஆராய்ச்சி செய்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் காகத்திற்குத் தண்ணீர், புழு , கல் எல்லாம் கொடுத்து என்ன செய்கிறது என்பதை வீடியோ எடுத்திருக்கிறார்கள். என்ன தான் செய்கிறது என்று பாருங்களேன்.
இந்த வீடியோவைப் பார்த்ததும் என் மனதில் தோன்றிய கேள்வி,
" அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க? "
image &video courtesy--google
காகம் குறித்து நல்ல தகவல்கள்... அருமையான வீடியோ...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அம்மா....
காணொளி கண்டேன் அருமை
ReplyDeleteதமிழ் மணம் 1
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி
Deleteகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகா
ReplyDeleteவியப்பூட்டும் வீடியோ. தகவல்களும் அருமை. குறிப்பாக அதன் குடும்ப அமைப்புப் பற்றிய தகவல்கள். காக்கைகள் மாறி விட்டன. இப்போதெல்லாம் அவை சற்றே சுயநலமாகி விட்டன!
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம் சார். காகத்தைப் பற்றிப் படிக்க படிக்க மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். நான் சொன்னது மிக மிக சொற்பமே . பல வியக்க வைக்கும் விஷ்யங்களை நான் படிக்க நேர்ந்தது.
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.
காக்கையின் வாழ்க்கை பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteத.ம.3
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.
Deleteகாக்கையின் சில தகவல்கள் வியக்க வைக்கிறது...!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.
Deleteஅதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க!?..
ReplyDeleteகாணொளியைப் பார்த்ததும் அனைவருடைய மனதிலும் ஒரே கேள்விதான்!..
இனியதொரு பதிவு!..
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.
Deleteமிக அபூர்வமான சேதிகள் ராஜி சிவம். அதுவும்
ReplyDeleteகாக்கா வீடியோ சூப்பர். என்னமா ஆராய்ச்சி செய்திருக்காங்க்கப்பா.
இதை எடுத்து எழுதணும்னு
உங்களுக்குத் தோன்றியதே ஆச்சரியம் தான். மிக மிக நன்றி.மா.
காகத்தைப் பற்றிப் படிக்க படிக்க மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். நான் சொன்னது மிக மிக சொற்பமே . பல வியக்க வைக்கும் விஷ்யங்களை நான் படிக்க நேர்ந்தது.
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.
கற்றுக் கொடுத்த இறைவன் மகா பெரியவர் தான்.
ReplyDeleteஅழகான் கட்டுரை. காணொளி மிக அருமை.
கருணை கொலை மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது படிக்கும் போது.
காணொளி என்னையும் வியப்பில் ஆழ்த்தியது உண்மை.. கருணைக் கொலை நம் மனதை சங்கடப் படுத்தினாலும் , காகங்களின் வாழ்க்கை முறையில் கருணைக்கொலை பின்னிப்பினைந்த ஒன்றாகத் தான் தெரிகிறது.
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி.
காக்கை இத்தனை சிந்திக்க கூடிய பறவையா என்று வியப்பாக இருந்தது காணொளியைப் பார்த்தவுடன். நீங்கள் கொடுத்திருக்கும் மற்ற தகவல்களும் கூட வியப்பாகவே இருக்கின்றன. குறிப்பாக எறும்பை கொன்று தன் உடலில் பூசிக் கொள்ளும் என்ற தகவல்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
காக்கையின் அறிவுக் கூர்மைக்கு சான்றாக ஏகப்பட்ட காணொளிகள் இணையத்தில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்க நேர்ந்தால் நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விடுவோம். காகத்தின் அறிவுக் கூர்மையை நாம் அறிந்து கொள்ளத் தவறி விட்டோம் என்பதே உண்மை.
Deleteஉங்கள் வருகைக்கும், ஊக்குவிக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனி.
காக்கை காணொளி கண்டு வியந்தேன் சகோதரியாரே
ReplyDeleteகாக்தைப் பற்றிய பல செய்திகளும் வியக்கத்தான் வைக்கின்றன
நன்றி சகோதரியாரே
தம +1
உங்களைப் போலவே நானும் வியந்தேன் . அதனால் தான் அதைப் பற்றிய ஒரு பதிவு எழுதும் எண்ணம் எனக்கு வந்தது.
Deleteஉங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.
காக்கை பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை. என்றாலும் இப்போதெல்லாம் அவை தந்திரமும் தெரிந்து வைத்திருக்கின்றன. சகுனத்துக்குக் கூடக் காக்கையைப் பார்ப்பது உண்டு.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும், நன்றி கீதா மேடம்
Deleteகாணொளி மிக அருமை. மிகப்பொருத்தமான தலைப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete" அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க? " :)
காணொளி பார்த்ததும் " அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க?" என்கிறக் கேள்வி தான் என் மனதிலும் ரீங்காரமிட்டது.
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.
தெரிந்தோ தெரியாமலோ சின்ன வயதில் படித்த கதைச் சரியே, நம் முன்னோர்கள் சொன்னவைகளும் சரிதான் போலும், முடநம்பிக்கை என ஒதுக்க முடியல,
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம். தொடர்ந்து வருகை புரிந்தால் மகிழ்வேன். நன்றி
Deleteஅருமையான பதிவு. வீடியோ அருமை. காக்கா பாட்டி கதை கேட்டதோட நிறுத்திடுவோம். ஆனா உங்களுக்கு அதை ஆராயும் எண்ணம் எப்படி வந்தது?
ReplyDeleteஇந்த araayசசியை நான் செய்யவில்லை. என் மருமகள் பேரனுக்கு காகத்தைப் பற்றி பல நல்ல விஷ்யங்களி சொல்லி விட்டு ,என்னிடம் ஒரு பதிவு எழுதும்படி சொன்னாள். அதற்காக கூகுள் கதவுகளைத் தட்டியதில் கிடைத்தது தான் இவை.
Deleteஎன் பதிவை சுவாரஸ்யமாய் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி