Showing posts with label மாடி. Show all posts
Showing posts with label மாடி. Show all posts

Tuesday, 7 May 2013

மாடியில் ........பயணம்.....


 



 " அம்மா  எனக்கு அந்த அங்கிள் தலையில் இருக்கும்  பிஸ்கெட்  வேணும் "    ஒரு சின்னப் பெண் குரல் .
"தலையில் பிஸ்கெட்டா? "
சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.

பார்த்தால் ரயில்வே  பிளாட்பார்மில்  ஒருவர் பிஸ்கெட் விற்றுக் கொண்டிருந்தார்.

நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் பிஸ்கெட் விற்பவர் தலையில் வைத்திருக்கும்  அட்டைபெட்டியில் இருக்கும்  அத்தனை பிஸ்கெட்டும் தெரிந்தது .

உட்கார்ந்திருப்பது மாடி ரயில் அல்லவா? 
அதாங்க  double decker.

முன் சீட் குழ்ந்தை சொன்னது போல்  பிளாட்பார்மில் செல்லும் எல்லோரின் உச்சி மண்டை எல்லாம் தெரிந்தது. 

double decker  ஓட  ஆரம்பித்தாயிற்று என்று டிவியில் பார்த்துடனேயே பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸில் சென்னை  திரும்ப வேண்டும் என்ற என் எண்ணத்தை  உடனடியாக மாற்றிக் கொண்டு MAS Double Decker இல்  டிக்கெட்டை புக் செய்தேன்.

lower deck, middledeck , upper deck என்று மூன்று  தளங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது ரயில் . 
middle  deck  சும்மா பேருக்கு பன்னிரெண்டே  சீட்.

மற்ற இரண்டு தளங்களில் தான்  பெரும்பாலான பயணிகள். 

உயரத்தில் உட்கார்ந்து பயணிப்பது ஒரு புது அனுபவம்  தான்.
நன்றாகவும் இருந்தது. 

" திரிசங்கு சொர்க்கம் " இப்படித்தான் இருந்திருக்குமோ? ஆகாயத்திலும் இல்லை. தரையிலும் இல்லை.

மீண்டும் அந்தக் குழந்தையின் குரல்."அம்மா ஏசி  வேண்டாம் குளிருதே " என்று நச்சரிக்க ஆரம்பித்தாள் .

அவளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் கூடத்தான்.

ஒருமுறை lower deck  போய்  பார்ப்போமே  என்று ஒரு  ரவுண்டு சென்று வந்தேன்.

மாடியில் ஒரே குளிர் என்றால் கீழ் தளத்தில்  புழுக்கம் அதிகம்..

ஆனால் இதெல்லாம்  ஆரம்பகால  சிறு சிறு  சங்கடங்கள். போகப்போக சரிசெய்தி விடுவார்கள்.

ஒரு காலத்தில் toilet  வசதி கூட இல்லாமல் தான் நம் ரயில்  இருந்திருக்கிறது.
உண்மை !நம்புங்கள். !

அதாவது 1909 முன்பு நம்மூர் ரயில்களில்  toilet  வசதி இல்லை.

இதை நான் சொல்லவில்லை. 

டில்லியில் இருக்கும் ரயில்வே மியுசியத்தில்  திரு  Okil  Chandra  Sen  என்பவர் எழுதியிருக்கும் கடிதம் சொல்கிறது. 

அவருடைய கடிதத்திற்கு  அந்த காலத்தில்  மரியாதை  கொடுத்து  கழிவறை  வசதியை பிரிட்டிஷ்  காரர்கள் உடனடியாக செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எப்படி மிரட்டுகிறார் நீங்களே பாருங்கள்.


ஆங்கில இலக்கணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும் அவருக்கு. இல்லை,  ரயில்களில்  ஒரு toilet  வசதி செய்து கொடு  முதலில் . அப்புறம் நான் கற்கிறேன் உன்  ஆங்கிலத்தை, என்று நினைத்துக் கொண்டு எழுதியது போல் தெரிகிறது இல்லையா?

இக்கடித்தத்தின் சாராம்சம் என்னவெனில் 

திரு Ohil   அஹமெட்பூர்  ஸ்டேஷனில் Toilet உபயோகிக்க இறங்கியிருக்கிறார். அவர் திரும்ப ஏறுவதற்குள்   ரயில் கிளம்பி விடுகிறது. 
அவசரமாக ஏற  முயலும் போது  அலங்கோலமாக கீழே  விழுந்து ரயிலை தவற  விடுகிறார். 

வந்த ஆத்திரத்தில் ரயில் நிர்வாகத்திற்கு  எழுதப்பட்ட கடிதம் தான் இது.

இக்கடிதத்திற்கு  உடனடியாக பலனும் கிடைத்து விட்டதே !
அதைச் சொல்லுங்கள். 

நம்முடைய அடிப்படைத் தேவையை ஒரு கடிதத்தின் மூலமாகப் பெற்றுத் தந்த  திரு.Okhil  Chandra  Sen  அவர்களுக்கு  நன்றியைக் கூறிக் கொண்டு நம் ரயில்வேத்  துறை  மேன்மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.

image courtesy ---google


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்