Showing posts with label internet.. Show all posts
Showing posts with label internet.. Show all posts

Thursday, 23 May 2013

ஸ்மார்ட் ராசி





வெள்ளிகிமை அன்று  கோவிலுக்கு  போய்   கொண்டிருந்தேன். அமைதியாய்  என் கைப்பிடிக்குள்   இருந்த  மொபைல்  " உயிரே .....
உயிரே.......என்று பாடத் தொடங்கியது.

அவசரமாய் எடுத்து பார்த்தால் " Rasi  Calling ".

" சொல்லுடி ".

" நான் பேசுவது கேட்கிறதா ? "

" கேக்குதே " என்றேன் .

" நல்லா   கேக்குதா "

" இது  என்னடா தொல்லை? ம்.. ரொம்ப நல்லா கேக்குது " என்று நான்  சலித்துக் கொள்ள
அவளோ ." என் பையன்  அன்னையர்  தினத்திற்கு எனக்கு புது போன்  வாங்கிக் கொடுத்திருக்கிறான் "
நான் நாளைக்கு வீட்டிற்கு வந்து  காட்டுகிறேன். " என்று முடித்தாள்  ராசி.

மறு நாள் மாலை வந்தாள்   samsung போனுடன்.

" ஓ ....ஸ்மார்ட்  டச்  போனா? "  கேட்டேன்.

"ஆமாமடி  , என்னைப் போலவே என் போனும் ஸ்மார்ட் "  பெருமையடித்துக் கொண்டாள்.

"எனக்குத் தெரியாதா  நீ எவ்வளவு ஸ்மார்ட் ?"
(மனதிற்குள்   சரித்திரம் படைத்த ராசி   பதிவு  வரி , வரியாக ஓடியது.)

சட்டென்று  அவள்  போன்  "கிணிங் கினிங்  "என்று இனிமையாய்  இசைக்க
ராசியோ அதையே  முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

" ஏய் போனை  எடுத்துப் பேசு, யார் போனில்? "என்றது நான்.

ஒரு பதிலும் இல்லை.

எட்டிப் பார்த்தேன்." Husband calling , Husband calling " என்று அலறுவது  போல்  ப்ளாஷ்  அடித்தது.

" என்ன ஆயிற்று? ஏன்  போனை எடுக்கவில்லை?  " என்றேன்.

" அதுவா....... எப்படி எடுப்பது என்பது மறந்து விட்டது "என்றாளே  பார்க்கலாம் .

"என்ன மறந்து விட்டதா?......."

" சரி , இப்ப என்ன செய்வதாக உத்தேசம் ? விஷ்ணுவிற்கு  அவசரமாக ஏதாவது
சொல்ல வேண்டுமென்றால்............"முடிக்கவில்லை நான் .

சட்டென்று கைப்பைக்குள் இருந்த பழைய   போனை எடுத்து கணவருடன் பேச ஆரம்பித்து விட்டாள் . " பக் " என்று சிரித்து விட்டேன்.சிரிப்பை அடக்க முடியவில்லை.
( இதில் இவளும்  இவளுடைய போனும் " ஸ்மார்ட்டாம்  ஸ்மார்ட்.")

"சரி . contact list எல்லாம் யார்  லோட்  செய்தது "என்று கேட்டதற்கு  எல்லாம்  தன்  மகன் செய்து  தந்து விட்டான் என்றாள் கர்வமாக .
(" இதிலொன்றும் குறைச்சலில்லை   " நினைத்துக் கொண்டேன்.)

" சரி அவனிடமே கேளேன்  எப்படி போனை எடுப்பது "   என்றேன்.

" இரு என்னை தொந்திரவு செய்யாதே "என்று எரிச்சல்  பட்டுக் கொண்டு சிறிது நேரம் யோசித்து பின் ,
"ஞாபகம்....  வந்திருச்சு....... " என்று கமலஹாசன்  மாதிரி  ராகம் பாடினாள் .

"என்ன?" என்றேன்
" கால் வந்தால் swipe செய்ய வேண்டும் ," என்று சொல்லிக் கொண்டே  ,

அப்பொழுது பார்த்து வந்த போனிற்கு  பதிலுரைத்தாள்.
யார் என்றதற்கு  "ஒரு பொண்ணு  கிரெடிட்  கார்ட் வாங்கிக்கிறையா"  என்று கேட்டார்  என்றாள் .

"இதை  சரியாக எடு. கணவர்  கூப்பிட்டால்  கோட்டை விடு "நினைத்துக் கொண்டேன்.

" உன்  நம்பரிலிருந்து கால் செய்யேன் எனக்கு  ". என்று சொன்னேன் 
(எனக்கும் இந்த ஸ்மார்ட்  போனை உபயோகித்துப் பார்க்க ஆசை வந்தது)

என் நம்பரை தன்  விரல்களால்  தொட்டாள் .

நானும் என் மொபைலையே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

ம்ஹூஉம்.........

என்ன ஆச்சு என்று எட்டிப் பார்த்தால், " you dont have an internet connection  to connect to vonage "
என்றிருந்தது.

"இது  என்ன? "

என் பையன் தான்  சொன்னான் ." நீ    பைசா செலவில்லாமல்  இன்டர்நெட் மூலமாக  பேசலாம் "

" ஆனால் என்னுடன் நேற்றெல்லாம் பேசினாயே internet இல்லாமலே   "

" அது தான் எனக்கும்  புரியவில்லை "குழம்பினாள்   ராசி.

நானும் போனை வாங்கி  எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு கால்  கூ ட செய்ய முடியவில்லை.என் விரல் பற்றி எரிந்தது தான் மிச்சம். நான் என் தோல்வியை  ஒப்புக் கொண்டு அவளிடமே அவள் ஸ்மார்ட் போனை  கொடுத்தேன்.

என்ன செய்வது ? சரி வா  சூடாக தோசையாவது  சாப்பிடலாம் வா என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனேன்.

" டிங் டாங் "  

காலிங் பெல் ஒலித்தது.

கதவைத் திறந்தால் ,

கீழ வீட்டு மகேஷ்., சாப்ட்வேர் இஞ்சினியர் . "ஆண்டி, அம்மா சாவி கொடுத்தார்களா? என்றான்.

இல்லையே  !

" சரி, அம்மா வரும் வரை உட்காரு "  என்று சொல்லி விட்டு உள்ளே போனேன்.

அவன் உட்கார்ந்து  டிவி பார்த்துக் கொண்டிருக்க , ராசியோ  புது போனைப் பற்றிப் புலம்பி தீர்த்தாள் .

பாவமாய் இருந்தது அவளைப் பார்க்க .

மகேஷிடம் கேட்டுப் பார்க்க  முடிவு செய்து அவனிடம் இந்தப் போனைக் கொடுத்தோம்.

அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டு  "எனக்குத்  தெரியவில்லை . samsung service centre ற்கு  கொண்டு போனால்  சரியாவதற்கு  சான்ஸ் இருக்கு " என்றான், டாக்டர்   "பேஷண்டை  அட்மிட் செய்யுங்கள் சரியாகி விடும் "  என்பது போல்.

அதற்குள் அவன் அம்மா  வர ,அவன் சென்றான்.

இதுவும் தோல்வியா?

அதற்குள் ராசி,"  இந்த சின்னப் போனை சரி செய்ய முடியல இவனெல்லாம் என்ன  ஸாப்ட் வேர்    இன்ஜினியர் ? " என்று அர்ச்சித்து விட்டு  சுடசுட காபியைக் குடித்தாள் .

போய்விட்டு வருகிறேன் என்று விடை பெறும் சமயத்தில்  மீண்டும்

"டிங் டாங்"

மீண்டும் மகேஷ்.
" ஆண்டி , இப்பொழுது தான் என் நண்பனிடம்  உங்கள் போனைப் பற்றிய தகவலை சொன்னேன்.அவன் எப்படி சரி செய்வது என்று சொன்னான்". 

"நான்  மீண்டும்  முயற்சி செய்யட்டுமா ? "என்று பவ்யமாய் கேட்க , எனக்கு ராசியின் அர்ச்சனை நினவு வந்தது.

"உங்கள் போனை கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி  ஒரு ஐந்து நிமிடம் இங்கேயும் அங்கேயுமாக  கைகளால்  ஸ்வைப்  செய்து,    சரி செய்தான் .

ஒரு கால்  வேறு செய்து  சரியாகி விட்டது என்றன்.

" ரொம்ப  தாங்க்ஸ் " என்று பல தடவை மகேஷிற்கு நன்றி சொல்லத் தவறவில்லை  ராசி .

பிறகு   தன்  கணவரை  போனில் கூப்பிட்டு சொன்னாளே  பார்க்கலாம் , .
" அப்பாடி ஒரு வழியாக  சரி செய்து விட்டேன். நான் ஸ்மார்ட் தானே  " என்றாளே  பார்க்கலாம் .

என்ன......நீ சரி செய்தாயா ........அசந்து போனேன்.

 நிஜமாகவே நீ ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)......



image courtesy--google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்