" உங்கள் மருமகள் காதில் போட்டிருப்பது வைரமா இல்லையா ? " என்று கேட்கும் வம்பிகள் நிறைந்த உலகம் இது.
வைரம் என்றதுமே அதன் ஜொலிஜொலிப்பும் , அதைபோட்டிருப்பதால் கிடைக்கும் அந்தஸ்தும், மரியாதையும் நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை.
வைர ஆபரணத்தைப் பார்க்கும் போது அதன் அழகில் , பளபளப்பில் மயங்குகிறோமே ஒழிய , நம் கைகளில் தவழும் வைரம் எங்கிருந்து , எப்படி , யாரால் , ............ என்று யோசிப்பதேயில்லை யாரும்.
நம் கைகளையோ , காதுகளையோ, விரல்களையோ பளபளக்க வைக்கும் வைர ஆபரணங்களில் இருக்கும் வைரங்கள் யார் கண்டது, " blood diamonds" ஆக இருந்துவிட கூட வாய்ப்புண்டு.
இது என்ன "blood diamonds"?
வைரங்கள் ஆப்ரிகாவிலிருந்து கிடைக்கிறது என்று நாம் நன்றாகவே அறிவோம். காங்கோ ஆற்றுப் படுகைப் பற்றி நாம் வரலாறு பாடத்தில் படித்தது நினைவிற்கு வருகிறது.அங்கே இருந்தும், அங்கோலா, சியெர்ரா லியோன்,போட்ஸ்வனா , நமீபியா, சவுத் ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலிருந்தும் நமக்கு வைரம் கிடைக்கிறது.
ஆனால் அதே ஆப்ரிக்காவை நாம் " இருண்ட கண்டம் "என்றும் படித்ததும் நினைவில் இருக்கிறது. இன்றும் அந்த நிலையிலிருந்து சற்றும் மாறவில்லை. கொஞ்சம் புரியாத அரசியல் தான் இது.
அது எப்படி உலகத்தின் வைரக் கிடங்கு போலிருக்கும் ஆப்பிரிக்காவில் வறுமை ருத்ர தாண்டவமாடுகிறது.? வறுமை என்றால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஏழ்மையில் வாடுகிறார்கள் மக்கள் .
அவர்கள் தான் இந்த வைரங்களை தோண்டும் சுரங்கப் பணியில் ஈடு பட்டிருக்கிறார்கள் .
அங்கு நிலவும் அடிமைத்தனம் , கொலை செய்யவும் தயங்காத முதலாளிகள் , கல்வி இல்லாமை, குழந்தைத் தொழிலாளர், சின்ன சின்ன தீப்பெட்டி போன்ற குடியிருப்புகள் என்று தொடரும் கொடுமை......
நான் இணையத்தில்லிருந்த New York Times பத்திரிக்கையில் படித்த ஒரு விஷயம் மனதை வெகுவாக பாதித்தது.
வைரம் தோண்டும் என்பதைவிட வைரம் தேடும் தொழிலில் இருக்கும் ஒருவர் முழங்காளளவு சேற்றில் நின்று கொண்டு கைகளால் அளைந்து தேட வேண்டும் .
இதுபோல் நிறைய பேர் நின்று கொண்டு தேடிக் கொண்டிருக்க இவர்களுக்கு கிடைக்கும் வைரத்தை இவர்கள் எடுத்து சென்று விடாதபடி கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய வீரர் நின்று கொண்டிருப்பார்கள்.
வைரக்கல் கையில் கிடைத்தவுடன் உடனே அந்த வீரர் அதை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுகிறார்.
இதில் ஏதாவது தகராறு வந்தால் உடனே சுட்டு விடவும் தயங்குவதில்லை . கொலை சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருக்கிறது.
கைகளை வெட்டி விடுவதும் சர்வ சாதாரணம்.
தேடும் வேலையில் சிறிது சுணங்கினாலும் வயது வித்தியாசம் பாராமல்
கசையடியும் கிடைக்கும்.
வெயில் மழை எதுவும் பாராமல் வைரம் தேடும் இந்தத் தொழிலாளிகளுக்கு கிடைக்கும் வருமானம் மிக மிக சொற்பமே!
கைக்கும் வாய்க்கும் எட்டாத ஜீவனம் தான் நடத்துகிறார்கள் பாவப்பட்ட இந்தத் தொழிலாளிகள்.
இதில் மிகவும் பரிதாபமான விஷயம் என்னவென்றால் பல மாதங்கள் கஷ்டப்பட்டு எடுக்கும் ஒரு காரட் வைரத்தின் மதிப்பு கூட இவர்களுக்குத் தெரியாது.விலையுயர்ந்தது என்பது மட்டும் தெரியுமாம்.அவ்வளவு அறியாமையிலேயே இருக்க வைக்கப் படுகிறார்கள் இவர்கள்.
இத்தனை மோசமான சூழ்நிலையிலிருந்து எடுக்கப் படும் வைரம் தான்
"blood dimonds/conflict diamonds/war diamonds" என்று கூறப்படுவது.
இப்படியெல்லாம் பல மனிதர்களின் உயிரை விலையாகக் கொடுத்து ,பல பேருடைய கையைக் காவு வாங்கி விற்பனைக்கு வரும் Blood Diamonds யா நாம் லாக்கரில் வைத்து பத்திரப் படுத்துகிறோம்.
பயந்து விட வேண்டாம். எல்லா வைரங்களும் இப்படி ரத்தக் கரை
படிந்த கற்களில்லை.நமீபியா, போட்ஸ்வானா , சவுத் ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலிருந்து இருக்கும் வைரசுரங்கங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவையே !
நம் கைகளில் தவழும் வைரமும் இந்த வகை சார்ந்தவையாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.
இல்லையேல் வைர நகைகளை அறவே புறக்கணித்து மனித நேயத்தை வெளிப்படுத்துவோம்.
image courtesy-- google
நாம் காணும் வைரம் மட்டுமே ஜொலிக்கிறது.
ReplyDeleteஅதன் பின்னனியில் உள்ள இவ்வளவு சோகக்கதைகளும் மனதை வாட்டுகிறது.
இதுவரை அறியாத பல விஷயங்களை இந்தப்பதிவினில் ஜொலிக்கச்செய்துள்ளதற்கு நன்றிகள்.
இந்தத்தொழிலில் ஈடுபட்டுவரும் அந்த படிப்பறிவு இல்லாத ஏழை மக்களின் வாழ்வும் ஜொலிக்கட்டும். அடிமைத்தனத்திலிருந்து அவர்களும் மீண்டு வரட்டும் என பிரார்த்திப்போம்.
வைகோ சார்,
Deleteநன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
ஆமாம் நாம் எல்லோரும் சுரங்கத் தொழிலாளிகள் வாழ்வில் விடிவெள்ளி முளைக்க பிரார்த்திப்போம் .
நன்றி.
இந்தக் கொடுமையை மனதார உணர்ந்தால், வைரத்தை யாரும் வாங்கவும் மாட்டார்கள்... அணியவும் தயங்குவார்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்,
Deleteஉங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்.
வைரத் தொழிலாளர்களின் நிலமை கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் கட்டுரையைப் படித்தபின் வைரம் வாங்க கட்டாயம் யோசிப்பார்கள்.
ஆனால் ஒன்று:
பட்டுப் புடவை கூட பட்டுப் பூச்சியை கொதிக்கும் நீரில் போட்டு கொன்றுதான் பட்டு நூலை எடுக்கிறார்கள். ஆனால் யாராவது பட்டுப்புடவை வாங்காமல் இருக்கிறார்களா? தினம் தினம் ஒரு புது பட்டுப்புடவை கடை திறந்த வண்ணமாக இருக்கிறார்களே!
வைரத்திற்கோ, பட்டுப்புடவைகளுக்கோ மவுசு குறையும் என்று தோன்றவில்லை.
தெரியாத விஷயத்தை எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
வைரத்திற்கும், பட்டுக்கும் ஒரு ஸ்டேடஸ் சிம்பல் இருக்கும்வரை அவற்றை எல்லாம் அவ்வளவு எளிதில் உதறிவிட மாட்டோம்.
Deleteஆமாம், நீங்கள் சொல்வது போல் தினம் ஒரு பட்டுப்புடவைக் கடை மட்டுமல்ல, வைரத்திற்கும் கடைகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நன்றி ரஞ்சனி, உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
ReplyDelete" ஆனால் என் மனசு சொல்லுது, joyalukkaas.!' படித்தபோது இந்த விளம்பர வாசகம் மனதில் ஓடியது. .பரமாச்சாரியரை பலரும் மேற்கோள் காட்டுவதைப் பார்க்கிறோம். அவர் பட்டுப் பூச்சியைக் கொன்று அதிலிருந்து தயாரிக்கப் படும் பட்டை நம் பெண்கள் துறக்க வேண்டும் என்று சொன்னதைக் கடைப் பிடிக்கிறார்களா. ?வைரம் பட்டு எல்லாம் ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது. !
நன்றி GMB சார் உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் .
Deleteமின்னும் வைரத்தின் உள்ளே அந்த தொழிலாளர்களின் வாழ்வு இருட்டாக இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. அந்தஸ்த்திற்கு அடையாளமாக தங்க, வைர நகைகள் இருக்கும் வரை அதை வாங்குவோர் குறையப்போவதில்லை.எனக்கு இயல்பாக இருக்கத்தான் பிடிக்கும். அதனால் //இல்லையேல் வைர நகைகளை அறவே புறக்கணித்து மனித நேயத்தை வெளிப்படுத்துவோம்.// - இந்த வரிகளை செயல்படுத்துகிறேன்.
ReplyDeleteநன்றி உஷா,
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
மக்களுக்கு படிப்பு போய்ச் சேரும்வரை(சேர விட்டால்தானே)இப்படியான சோகங்கள் தொடர்கதைதான்.மனம் வலிக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் கல்விஅறிவு தான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
இல்லையேல் வைர நகைகளை அறவே புறக்கணித்து மனித நேயத்தை வெளிப்படுத்துவோம்.//
ReplyDeleteநல்ல யோசனை எல்லோரும் கடைபிடித்தால் நல்லது தான்.
வைரைத்தோடு போடவில்லை என்று அந்தக்காலத்தில் நின்ற திருமணங்களைப் பற்றி அம்மா கதை கதையாய் சொல்வார்கள்.
இன்னும் சில பிரிவில் வைரநெக்லஸ், வரை வளையல், எல்லாம் போடவேண்டும் அதனால் பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாய் ஆகும் அவலம் நடக்கிறது.
நீங்கள் சொல்வது போல் மனிதநேயம் கடைப்பிடித்தால் இந்த பெண்களின் நிலை மாறும்.
பட்டுப் புடவை கூட பட்டுப் பூச்சியை கொதிக்கும் நீரில் போட்டு கொன்றுதான் பட்டு நூலை எடுக்கிறார்கள். ஆனால் யாராவது பட்டுப்புடவை வாங்காமல் இருக்கிறார்களா//
அன்பு ரஞ்சனி, நான் பட்டு கட்டுவதில்லை.(பலவருடங்களாய்) முழுக்க முழுக்க கைத்தறி கட்டிக் கொண்டு இருந்தேன், இப்போது உறவினர்களின் வேண்டுகோள்படி திருமணவிழாக்களில் செயற்கைப்பட்டு கட்டுகிறேன்.(பட்டு மாதிரி)
ஆமாம் . வைரத்தோடு போட முடியாத காரணத்தால் முதிர் கண்ணிகள் இருப்பது மனம் வலிக்கத்தான் செய்கிறது
Deleteநாம் தனியாளாய் புலம்பி என்னப் பயன் கோமதி?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் கதை தான் இது.
உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி.
மின்னும் வைரம். அதன் பின்னே இருக்கும் கடின உழைப்பு. அடிமைகளின் வாழ்க்கை என எல்லா விஷயங்களையும் சொல்லிச் செல்லும் கட்டுரை.
ReplyDeleteமனதிற்கு வருத்தம்.
நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteநம் கைகளில் தவழும் வைரமும் இந்த வகை சார்ந்தவையாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.
ReplyDeleteநன்றி இராஜராஜெஸ்வரி,
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
ஆம் என்ன ஒரு முரன்பாடான உலகமிது விலை மதிக்க முடியாத வைரம் கிடைக்கும் இடம் வறுமையில்அறியாமையில் வைரத்தின் வரலாறு சொல்லியதற்கு நன்றி
ReplyDeleteநன்றி மலர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Deleteதெரியாத விஷயங்கள். வைரம் வாங்கியவுடன் சிலருக்கு ராசியில்லாமல் போகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
ReplyDeleteநன்றி சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteஎதனையும் ஆழ்ந்து நோக்கினால் அனைத்திலும் இவ்வாறு பல வேதனைகள் இருப்பதைக் காணலாம் . உலகில் எதுவும் இலகுவாகக் கிடைப்பதில்லை. வைரத் தொழிலாளிகளின் வாழ்க்கையை நினைக்கும் போது வேதனையாகவே இருக்கிறது . அதை வைத்து வேதனம் பண்ணுபவர்கள் அது பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை
ReplyDeleteவாருங்கள் சந்திர கௌரி ,
Deleteஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது.
நீங்கள் சொல்வது போல் வைரம் நம் ஸ்டேடஸ் சிம்பலாக இருக்கும் வரை யாரும் அது வந்த வழியை நினைத்துக் கூட பார்க்கப் போவதில்லை .என்ன செய்வது?வைரத் தொழிலாளிகளின் வாழ்க்கை வளம் பெற ஆண்டவனை பிரார்த்திப்போம்.அது மட்டுமே நம்மால் முடியும் .
உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து வாருங்கள்...