Thursday, 7 March 2013

" அக்னி புத்ரி "


19th  April  2012  Agni -V  Launched  successfully- இது  செய்தி.


"  ஒவ்வொரு    ஆணின்  பின்பும்    ஒரு   பெண்     இருக்கிறாள் . "    என்பது   ஆங்கிலப்     பழமொழி  .  நம்  நாட்டில்     ஒரு    ஏவுகணையின்  பின்பும்   ஒரு  பெண்   இருக்கிறார்.

" அக்னி புத்ரி  "    என்றும்   " Missile  Woman "   என்றும்    அன்புடன்  அழைக்கப்படும்
திருமதி.  Tessy Thomas    என்ற     பெண்மணி     தான்  ,    Agni V  ஏவுகணையின்    Project  Director .

நம்முடைய   ராணுவத்திற்கு   அது   ஒரு  மிகப்பெரிய   அணிகலனாக   அமையும்   என்பதில்    அணுவளவும்   சந்தேகமில்லை.  தேசத்தின்  பாதுகாப்புக்கு   இன்னுமோர்    அரணாக     இந்த    ஏவுகணை   இருக்கப்  போகிறது  என்பது  மகிழ்ச்சியான   செய்தி.


  Big 5  நாடுகள்  மட்டுமே  வைத்திருந்த    இந்த  ஏவுகணை   நம்   நாட்டிற்கும்    சாத்தியமானது        இந்தப்   பெண்மணியால்  தான்.
உலக  அரங்கில்   இந்தியா  Big 5  நாடுகளுக்கு  இணையாக   உள்ளது   பெருமைக்குரிய  விஷயம்  தானே !  

திருமதி  Tessy Thomas  கேரளாவில்  ஆலப்புழாவில்,   ஒரு  சாதாரண  குடும்பத்தில்   பிறந்து  வளர்ந்தவர். இன்ஜினியரிங்கில்  M.Tech   முடித்த கையோடு   DRDO வில்   பணியில்  அமர்ந்தார்.
இவர்   வளர்ந்தது  ஒரு  ராக்கெட்  ஏவும்  தளம்  அருகில்   தான் . அதனால் தான் இவருக்கு  ஏவுகணை  மீது   காதல்  இருந்திருக்கிறது.  

இவருடைய    கணவர்  சரோஜ் குமார்.  இந்திய   கடற்படை  அதிகாரி.  ஒரே  மகன்   பெயர்  Tejas  .  மகன்  பெயரும்  ஏவுகணையின்   பெயரைத்  தான்    நமக்கு  நினவு  படுத்துகிறது.
ஆனால்   அப்படிஎல்லாம்   இல்லை   என்கிறார்  நம்  அக்னி புத்ரி

 கணவரோ  காடாறு  மாதம்   , நாடாறு  மாதம்  என்கிற  ரீதியில்    தான்  இருப்பார்  என்று  புரிகிறது.   தனியொரு    மனுஷியாய் 
" இரண்டு  குதிரை  மேல்   ஒரே சமயத்தில்  சவாரி  செய்திருக்கிறார். "  அது  அப்படி    ஒன்றும்   ' கேக்  வாக் '  இல்லை  என்பது   நம்  எல்லோருக்கும்  தெரியும்.

இதை  எல்லாம்  ஒரு  சவாலாக ஏற்றுக்  கொண்டு     வந்திருக்கிறார்.
மகனும்   இன்ஜினியரிங்   படிக்கிறார்.

இவரை    இவருடைய    வீட்டில்   சந்தித்த   போது    ஒரு  சாதாரண   குடும்பப்
பெண்ணாகத்    தான்   இருக்கிறார் . Agni project Director   என்கிற  பந்தா   எதுவும்
 இல்லாமல்.  என்கிறார்  India  Today  நிருபர்.

இவ ருடைய  வீட்டு   ஷோ கேசில்   இவர்  படித்த  காலத்தில்    வாங்கிய    Badminton    மெடல்கள்   அலங்கரிக்கின்றவாம்.
எந்தத்   துறையும்    விட்டு   வைக்கவில்லை  போலிருக்கிறது  நம்  சகோதரி.

" எடுத்த  காரியம்  யாவினும்   வெற்றி  "  என்று  தான்  இருந்திருக்கிறார் .

  இவருடன் பணிபுரியும்   விஞ்ஞானிகளும்   , ஒரு  பெண் மணியாக    வீட்டையும் ,    ஏவுகணையும்   நிர்வகிக்கும்  திறன்  கண்டு   அதிசயக்கிறார்கள்  .

இவரை   இந்த  Agni project  இல்   அமர்த்தியது   நம்மால்     பெரிதும்   மதிக்கப்படும்   திரு.  அப்துல்  கலாம்.
தன்னை    Agni Putri  , missile  woman   என்றும்   அழைப்பது   என்னை  பெருமை  கொள்ள ச்  செய்கிறது   என்கிறார்.

இத்தனைப்   பெரிய  பொறுப்பில்  இருப்பவர்    தன்னை   இலகுவாக்கிக்     கொள்ள   என்ன  செய்கிறாராம்   தெரியுமா?

மெகா  சீரியல்களின்    ரசிகையாம் இவர். இவரை  இந்தியாவே    மூக்கின்  மேல்  விரல்  வைத்து பார்க்கிறது .ஆனால் இவரோ  சீரியல் நடிக நடிகைகளைப் பார்த்து  அவர்கள்  நடை, உடை, எல்லாம்   பார்த்து  அதிசயக்கிராராம்.


நம்   பிரதமர்  மன்மோகன் சிங்க்   இவரைப் பற்றிப்   பெருமையாக"  ஒரு   ஆணாதிக்கத்     துறையில்   ஒரு  பெண்மணியாக
பணியாற்றி  தனக்கும்,  நாட்டிற்கும்   பெருமை  சேர்த்திருக்கிறார்.  "
என்று   கூறுகிறார் .

பாரதியார்  படைத்த  புதுமைப்  பெண்ணாகத்  தான்  திகழ்கிறார்.
இன்னும்  இது   போல்   எத்தனைப்  பெண்கள்  இருக்கிறார்களோ?
இன்னும்    எத்தனை  பேர்    வர   இருக்கிறார்களோ?
அவ்வளவு   பெண்களுக்கும்  என்  வணக்கங்கள்  . 

அனைவருக்கும்    மகளிர் தின   வாழ்த்துக்கள் .


image courtesy----google.


21 comments:

  1. படிக்கும் போதே மிகவும் அருமையாகவும் பெருமையாகவும் உள்ளது. பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    மகளிர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பெருமைப்பட வேண்டிய விஷயம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக மிக நல்ல பகிர்வு நன்றி தோழி

    ReplyDelete

  4. சாதனைப் பெண்மணி பற்றிப் பெருமைப் படுவோம். மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எடுத்த காரியம் யாவினும் வெற்றி "
    எனத்திகழும் வெற்றித்திருமகள் பற்றிய
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  6. திரு அப்துல் கலாம் அவர்களின் தேர்வு என்னும்போதே அக்னி புத்ரியின் பெருமை தெரிகிறதே!

    இந்த மகளிர் தினத்தில் திருமதி டெஸ்ஸி தாமஸ் மேலும் மேலும் சாதனை புரிந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகள்!

    ஒரு சாதனைப் பெண்மணியை அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள், ராஜி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      உங்களுக்கு என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

      Delete
  7. Tessy Thomas____பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அப்துல்கலாம் அவர்களால் அமர்த்தப்பட்டவர் எனும்போதே விளங்கிவிடுகிறது.ஒரு பெண்மணியாக இருந்துகொண்டு இவ்வளவு உயரத்திற்கு வரவேண்டுமானால் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்!பாராட்டுக்கள் அவருக்கும்,அவரைப்பற்றி பதிவாக்கிய உங்களுக்கும்.மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா உங்கள் கருத்துரைக்கு.
      உங்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.

      Delete
  8. மகளிர் தின வாழ்த்துக்கள். !

    ReplyDelete
    Replies
    1. நன்றி உஷா.
      உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

      Delete
  9. பாரதியார் படைத்த புதுமைப் பெண்ணாகத் தான் திகழ்கிறார்.
    இன்னும் இது போல் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்களோ?
    இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ?
    அவ்வளவு பெண்களுக்கும் என் வணக்கங்கள் . //
    நீங்கள் சொல்வது உண்மை. சாதனைபெண்கள், இனிமேல் சாதிக்க போகிறவர்கள் குடத்துக்குள் வைத்த விளக்காய் இருப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    அக்னி புத்ரி திருமதி டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கும், உலகில் உள்ள அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி கோமதி.

      மகளிர் தின வாழ்த்துக்கள்.

      Delete
  10. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  11. மகளிர் தினத்தில் மிகப் பொருத்தமான பதிவு. பாராட்டப் பட வேண்டியவர் நம் அக்னி புத்ரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும்
      பாராட்டுக்கும்

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்