Saturday, 22 March 2014

அப்பாவி விஷ்ணு --மின்னூல்

விஷ்ணுவின்  அனுதாப மன்றத் தலைவரும், ராசியின்  ரசிகைகளும் ,கேட்டுக் கொண்டதன் பேரில் நான் இந்தத் தம்பதி பற்றி எழுதியதை  ஒரு மின்னூல் வடிவத்தில் இங்கே  சமர்ப்பிக்கிறேன்.

விஷ்ணு  ரசிக, ராசி ரசிகை மன்றங்களா ......... இதெல்லாம்   எங்கிருக்கு என்று நீங்கள்  கேட்பது எனக்குக் கேட்கிறது.  இருக்கு என்று சொன்னால் கேட்டுக் கொள்ளுங்கள்.  ஆராயக் கூடாது ..............

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.இது வரை இவர்களைப் பற்றி சில பதிவுகள் எழுதியிருப்பது நீங்களெல்லாம் அறிவீர்கள். அதை  நூல் வடிவம் ஆக்கினால் என்ன என்கிற விபரீத ஆசை வந்தது. இதைப்பற்றிய விவரங்களுக்காக  www.freetamilebooks.com  என்கிற  தளத்தைத் தொடர்பு கொண்ட போது  திரு. சீனிவாசன் அவர்கள்  மின்னூல்  வடிவத்தில் கொடுக்க  சம்மதித்தார்.

ஒரு நூல் வெளியிட எத்தனை பேர்கள் உழைக்க வேண்டும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நூலை வடிவமைப்பதில் தொடங்கி, அதற்கு அட்டைபடம் போட்டு அதில் அழகாக தலைப்பு எழுதி, உள்ளே  என் போட்டோவையும்  அழகான  முறையில்,   போட்டு  எனக்கு அளித்துள்ளார்கள்.

freetamilebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும்.,மின்னூல் ஆக்கம் செய்த திரு. சீனிவாசன் அவர்களுக்கும், அழகான அட்டைபடத்தை வடிவமைத்துக் கொடுத்த திரு. ப்ரியமுடன் வசந்த்  அவர்களுக்கும் என் நன்றிகள்.


இந்த நூலை  உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். படித்து உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்.

": அப்பாவி விஷ்ணு  " நூலைப் பதிவிறக்கம் செய்து படிக்க இங்கே க்ளிக்  செய்யவும்.
AVhttp://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/

படித்து உங்கள் மேலான் கருத்துக்களை சொல்லத் தவறாதீர்கள்.

27 comments:

  1. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் மேலும் எழுத்துலகில் வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபு சார்.

      Delete
  2. நூலாக்கத்திற்கு இனிய பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ராஜலக்ஷ்மி.

    ReplyDelete
  4. படிக்கும்போது வரிகள் மறைந்து போக்கு காட்டுகின்றன. பதிவை முழுதும் படிக்க விடவில்லை. இருந்தாலும் மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  5. முதலில் நல்வாழ்த்துக்கள்..
    மின்னூலைப் பதிவிறக்கம் செய்து படித்தபின் மேலும்... கருத்துக்கள்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், பதிவிறக்கத்திற்கும் நன்றி துரை சார்.

      Delete
  6. மிகவும் மகிழ்ச்சி... பாராட்டுக்கள்... தரவிறக்கம் இதோ முடிந்து விட்டது...

    திரு. சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும், தரவிரக்கத்திற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  7. மிக்க சந்தோஷம்
    அருமையாக வடிவமைத்துக் கொடுத்துள்ள
    நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. நான் முன்பே உங்களிடம் சென்னேன் உங்கள் கதைகள் திருமதி.பானுமதி ரமாகிருஷ்ணா கதைகள் போல் நகைச்சுவையாக இருக்கிறது. இதை புத்தகமாய் போடுங்கள் என்று.
    இப்போது மின்னூல் ஆகி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    மின்னூல் ஆக்கி தந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது போல் அதை நூல் வடிவிலாக்கி விட்டேன். இது நூலாக வெளியான போது நீங்கள் சொன்னது தான் என் நினைவிற்கு வந்தது.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோமதி

      Delete
  9. உங்களை எட்டிப்பிடிக்கவே முடியாது போலிருக்கிறதே! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உக்னால் ஆழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி செல்லப்பா சார்.

      Delete
  10. தரவிறக்கம் செய்து கொண்டேன். முதல் மின்னூல் வெளியிட்டீற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி வெங்கட்ஜி.

      Delete
  11. உங்களின் எழுத்துக்கள் மின்னூல் வடிவில் வந்ததற்கு வாழ்த்துக்கள். இதில் பலபேரின் பங்களிப்பு இருந்ததை அறிய முடிகிறது. மகள் வரவு, இன்னும் ஒரு வாரம் கழித்துப் படித்துப் பார்க்கிறேன்.

    (பி.கு) நூலின் பெயரில் 'சுட்டி ராசி'யை சேர்க்காமல் போனதில் ராசி ரசிகைக்குக் கொஞ்சம் வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. உக்னால் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறாளா. மகளுடன் நேரம் செலவிடுங்கள்.
      இதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பத்தை அடுத்த மின்னூலில் தீர்த்து விடலாம். நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  12. உங்கள் ஓட்டிற்கு நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  13. அதிக எண்ணிக்கையில் மின்னூல் வெளியிட்ட முதல் பதிவர் என்ற விருதைத் தள்ளிக்கொண்டு போவது என்று முடிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது! செய்யுங்கள். உங்கள் விஷ்ணு புராணத்தை மின்னூலில் வாசித்தது சுவையான அனுபவமே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ராஜி மேடம்! புத்தகம் அருமையாக இருக்கிறது. எத்தனை தடவை படித்தாலும் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் எழுத்து உங்களுடையது! மேலும் மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!நான் உங்கள் ராசியின் ரசிகை.. மென்மேலும் பல அட்டகாசங்கள் நிறைந்து வழியும் பதிவுகளை ஆர்வமுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் :)

    ReplyDelete
  15. அன்புடையீர்..
    தங்களது மின்னூலை மீண்டும் .. மீண்டும் படித்துக் கொண்டிருக்கின்றேன்..
    விஷ்ணு - ராசி இருவரும் கண்ணெதிரே - களம் கட்டியிருப்பது போல இருக்கின்றது.
    சம்பவங்கள் நமக்குப் பக்கத்தில் நடப்பதைப் போலிருக்கின்றது.

    அது உங்களின் வெற்றி.. நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  16. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  17. தங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்