அன்று மாலை ஐந்து மணியிருக்கும். டாக்டரைப் பார்க்க உட்கார்ந்திருந்தேன். கூட்டமான கூட்டம் . டாக்டரின் காரியதரிசி கொஞ்சம் சிடுசிடு என்று இருப்பது போல் தெரிந்தது. இல்லை எனக்குத் தான் அப்படித் தோன்றியதோ! அவ்வப்பொழுது தன் குதிரைவால் கொண்டையை சரி செய்து கொண்டே போனில் அலுத்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்.
எங்கள் முறை வருவதற்கு இன்னும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று புரிந்தது. நான் எதற்கு டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்லவில்லையே! என் நெருங்கிய உறவினருக்கு உடம்பு சுகமில்லாததால் எங்கள் குடும்ப டாக்டரை பார்க்க வந்திருந்தேன். இன்று இரண்டாம் முறையாக வந்திருக்கிறேன். நேற்று வந்திருந்தேன்.
உறவினருக்கு ஜுரம். அவ்வளவு தானே . அதற்கா இந்த அலட்டல் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அவருக்கு ஒரு வாரமாகவே ஜுரம். முதலில் " க்ரோசின் " முழுங்கியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு . அதற்கு அடங்கவில்லை. பிறகு ஒரு நாள் வேறு பெயரில் இருக்கும் ஜூர மாத்திரை முழுங்கியிருக்கிறார். அதற்கும் " பெப்பே " காட்டி விட்டது ஜுரம்.அதற்குப் பிறகு என்னிடம் போன் செய்து கேட்க, நான் அவரை எங்கள் டாக்டரிடம் நேற்று அழைத்து வந்திருந்தேன்.
"எவ்வளவு நாட்களாக ஜுரம்?" டாக்டர் கேட்க
" நான்கு நாட்களாக" தயங்கியபடியே உறவினருக்குப் பதிலாக நான் சொன்னேன்.
"மாத்திரை எதுவும் சாப்ப்பிட்டீர்களா?" டாக்டர் கேட்டார்.
சாப்பிட்ட மாத்திரைகளை சொல்லவும் டாக்டருக்கு சரியான கோபம் வந்தது.
"நான்கைந்து நாட்களாக இருக்கும் ஜுரத்திற்கு நீங்களாகவே மாத்திரை சாப்பிட்டு வந்திருக்கிறீர்கள். திரும்பவும் இன்னொரு பெயரில் உலா வரும் ஜூர மாத்திரை ஏதாவது முழுங்கி வைக்க வேண்டியது தானே!" என்று டாக்டர் கோபப்பட..,
உறவினருக்கோ ஜூர வேகத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் "திரு திரு "என்று முழிக்க ,
இத்தனை நாட்களாக ஜுரம் இருந்து வருவதால் முதலில் ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து விடுவோம் என்று டாக்டர் எழுதிக் கொடுக்க அது முடித்து ரிபோர்ட்டுடன் இன்று வந்திருந்தோம்.(ஜுரம் குறைவதற்கும் மாத்திரை கொடுத்திருந்தார்)
என் உறவினரைப் பார்த்தேன். திரும்பவும் நல்ல ஜுரம் போலிருக்கிறது. தலையை அப்படியே சேரில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
"இந்த ஜுரம் விட்டே தொலையாதோ ?" உறவினர் ஈனஸ்வரத்தில் புலம்பினார்.தொட்டுப்பார்த்தால் கொதிக்கிறது உடம்பு. ஒரு டம்ளர் தண்ணீர் அவர் கையில் கொடுத்தால் கொதிக்க ஆரம்பித்து விடும் போலிருந்தது உடம்பு சூடு .
நர்ஸ் தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்ததில் 103 இல் நின்றது மெர்க்குரி.அதற்குள் டாக்டரின் பெல் அடிக்க நாங்களும் உள்ளே நுழைந்தோம்.
டாக்டர் "எப்படியிருக்கு இப்ப ?"என்று கேட்டுக்கொண்டே பரிசோதனை ரிபோர்ட்டை பார்த்துக் கொண்டேயிருந்தார். நான் அவர் முக பாவனைகளை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
உறவினரோ டாக்டரிடம் மெதுவாக கெஞ்சவே ஆரம்பித்தார். எப்படியாவது இந்த ஜுரத்திற்கு ஏதாவது இன்ஜெக்ஷன் போட்டுக் குறையுங்களேன். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே ,. இப்படி என்னை படுக்க வைத்து விட்டதே இந்த பாழாய் போன ஜுரம் என்று புலம்பவே ஆரம்பித்து விட்டார்.
டாக்டர் ஸ்டெத்தை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டே , " ஜுரத்தை இப்படித் திட்டுகிறீர்களே! எய்தவனிருக்க அம்பை நோவது பாவமில்லையா? பாவம் ஜுரம் என்ன செய்தது. ஜுரம் வந்ததினால் தான் உங்களுக்கு இருக்கும் நோய் தெரிய வந்திருக்கிறது . urinary infection இனால் தான் உங்களுக்கு ஜுரம் வந்திருக்கிறது. இந்த ஜுரம் மட்டும் இல்லையென்றால் infection கவனிக்கப்படாமல் உங்கள் சிறு நீரகத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பிருக்கிறது. அந்தப் பெரிய ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிய ஜுரத்தை இப்படித் திட்டுகிறீர்களே ! நீங்கள் மட்டுமில்லை எல்லோருமே இப்படித்தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜுரத்திற்கு மனித குலமே நன்றிக் கடன் பட்டிருக்கிறது " என்று பெரிய லெக்சர் அடித்தார் டாக்டர்.
பிறகு அதற்கான மருந்தையும் எழுதிக் கொடுத்தார். இரண்டு வேளை மருந்து சாப்பிட்டதில் நல்ல முன்னேற்றம் தெரிய, இரண்டு நாளில் நன்றாகவே குணமடைந்து விட்டார். மீண்டும், அவர் விரைவிலேயே சகஜ நிலைக்குத் திரும்பினார். எங்கள் எல்லோருக்கும் பெரிய நிம்மதியானது.
டாக்டர் சொன்ன பிறகு ,ஜுரம் ஒரு நோயல்ல நோய்க்கான அறிகுறியே என்பது நன்கு விளங்கியது.
மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் " அது ஜுரமல்ல ,வரம்! "
image courtesy--google.
//அது ஜுரமல்ல ,வரம்! //
ReplyDeleteதலைப்பும் தலைப்புக்கு ஏற்ற உண்மைக் கதையும், தேர்ந்தெடுத்துள்ள படமும் ஜோர் ஜோர் !
பயனுள்ள விழிப்புணர்வு ஊட்டிடும் பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.
அன்புடன் கோபு
நன்றி கோபு சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteவியாதி உடலை அண்டும்போது நோய் எதிர்ப்பு சக்திகள் அதனுடன் போராடுவதன் அறிகுறியே ஜுரம். வியாதி எதுவாயினும் கை வைத்தியமாக மாத்திரை வாங்கி விழுங்குவது பலன் தராது. பாராசிட்டமால்தான் ஜுரத்துக்கு சாப்பிடணும்னாலும் வயசுக்கேத்த டோஸேஜ் டாக்டருக்குத்தான் தெரியும். இதையெல்லாம் உங்க ரிலேடிவ் இப்ப நல்லா புரிஞ்சுட்டிருப்பார்,. இல்ல.... ஒரு வாரமா 102 டிகிரி வரை அடிச்ச வைரஸ் ஜுரம் இப்பத்தான் எனக்கு தணிஞ்சுட்டிருக்குது. ஸோ.. இந்தக் கட்டுரை ஐ லைக் வெரிமச்.
ReplyDeleteஎன் ஜுரக் கட்டுரைப் படித்து உங்கள் ஜுரம் குறைந்து விட்டுத் போல் தெரிகிறது.ஜுரத்தோடு என் பதிவுக்கு கருத்து எழுதியதற்கு மிக்க நன்றி கணேஷ் சார்.
Deleteஆம், உண்மைதான்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம் சார்.
Deleteதாங்கள் கூறுவது உண்மையே.. ஜூரம் - ஒரு வரம்!..
ReplyDeleteஜுரம் ஒரு நோயல்ல.. நோய்க்கான கிருமிகள் நம் உடலைத் தாக்கும்போது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் அவற்றுடன் போராடுவதன் அறிகுறியே ஜுரம் - என்று பள்ளியில் படிக்கும் போது - ஆசிரியர் விளக்கியதை - தங்களின் பதிவில் கண்டேன்..
வாழ்க நலம்..
உங்கள் வருகைக்கும, பின்னூட்டத்திற்கும் நன்றி துரை சார்.
Deleteஉண்மைதான். ஜுரம் உடலில் ஏதோ சரியாக இயங்கவில்லை என்பதைத் தெரிவிக்கிறது.நல்ல டாக்டர் நல்ல மருந்தைக் கொடுத்து அறிவுரையும் சொல்லி இருக்கிறார். உங்கள் உறவினர் பட்ட துன்பமும் நிவர்த்தியானது. மிக நன்றி பதிவிற்கு.ராஜலக்ஷ்மி.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வல்லி மேடம்.
Delete//அது ஜுரமல்ல ,வரம்//
ReplyDeleteஜுரம் டாக்டருக்கு வருமானத்தை அள்ளித்தரும் வரம்தான்
ஹா....ஹா......
Deleteநன்றி MTG
ஆமாம், ஜுரம் வந்தால் நல்லதுதான்னு ஸ்கூல்லேயே சொல்லிக் கொடுத்துடுவாங்களே. என்றாலும் அடிக்கடி ஜுரம் வருவதும் சரியில்லைனு நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.
Deleteஅருமையான பதிவு. ஜூரம் மட்டுமல்ல, வலியும் ஒரு வரம்தான். வலி இருப்பதால்தான் பிரச்சனையை அடையாளம் கண்டு தீர்வு காண முடிகிறது. வலியறியும் உணர்வு இல்லையென்றால் கவனிப்புக்கு ஆளாகுமா? சர்க்கரை நோயாளிகளின் நோய் முற்றிய நிலையில் கால்களில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உணர்வற்றுப் போவதால்தான் காயம்படுவதை அறிய இயலாமல் போய் புரையோடி அவர்கள் தங்கள் கால்களை இழக்க நேரிடுகிறது. எனவே ஜூரமோ தலைவலியோ வயிற்றுவலியோ எதையும் அலட்சியப்படுத்தாமலும் நாமாகவே கண்ட மாத்திரைகளையும் தின்று சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலும் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் வலியும் வரமே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.
Deleteஅது ஜுரமல்ல ,வரம்! "
ReplyDeleteஜுவல்லரி போல்
ஜுரம் வந்து அணிந்துள்ள நோயை விளக்கியுள்ளதே..!
நீங்கள் சொல்வது உண்மை தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
Deleteபயந்தால் இன்னும் கூடும்...
ReplyDeleteகருத்துக்கும் நன்று தனபாலன்சார்.
Deleteவரமே தான் அம்மா ! இதன் அறிகுறியை வைத்துக்கொண்டு உடலிற்கு
ReplyDeleteஎன்னவாயிற்று என்று ஒரு முறையேனும் பார்க்காமலா விட்டு விடுவோம் !
மற்றொரு நோயின் அறிகுறியே காச்சல் என்பதை மக்கள் அறிந்து வைத்துக்
கொள்ள வேண்டும் .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள் அம்மா .
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அம்பாளடியாள்.
Deleteஜுரம் எதிர்ப்பு சக்தியைக் காட்டும் அறிகுறி, சரியே. இருந்தாலும் ஜுரம் வரும்போது ஓரிரு நாள் பாராசிடமால்மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தவறில்லை. முதலில் டாக்டரும் அதையே செய்வார். அதற்கு குண மாகாத படசம் சோதனைகள் செய்துகாரணம கண்டு மருந்து தருவார். அப்படி நினைக்காவிட்டால் சாதா ஜுரமும் டாக்டருக்கு வருமானமே.
ReplyDeleteநன்றி பாலு சார்.
Deleteநம் உடம்பில் ஏதும் கோளாறு ஏற்படுமாயின் அதை வெளியேற்ற அல்லது சரிசெய்ய நம் உடல் இயற்கையாகவே சில செய்கைகளை மேற்கொள்ளும். தும்மலும் விக்கலும் கூட இந்த வகையறா தான். அவ்வகையில் இந்த ஜுரமும் வரமே...
ReplyDeleteநன்றி சார்.
Deleteஅருமையான கட்டுரை! நீங்கள் சொல்வது உண்மைதான் ஜுரம் வருவது நமக்கான முன்னெச்சரிக்கை மணி அடிக்க! எனவே கண்டிப்பாக அது வரம்தான்! நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteகாய்ச்சல் என்பது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே போலத்தான் என்பதனை நன்றாகவே சொன்னீர்கள். உறவினருக்கு வந்த ஜுரம் பற்றி உங்களுக்கு வந்தது போலவே பாவித்து எழுதி விட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தமிழ் சார்.
Deleteநிஜம்தான். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவே ஜூரம் வருதுன்னு என் அம்மா சொல்வாங்க. சாதரண சளியும் அப்படித்தான்.
ReplyDeleteகருத்துக்கும் நன்றி ராஜி.
Deleteஇனி சாதாரணமாகவே ஜுரம் வந்தாலும் பின்னால் ஏதோ வந்துவிடுமோ என ஒரு பயம் வரும்போல் தெரிகிறதே. தலைவலியோ ஜுரமோ எதுவாக இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் கொஞ்சம் கவனம் தேவை என்பது பதிவின் மூலம் புரிகிறது.
ReplyDeleteஜுரத்தை அசட்டை செய்ய வேண்டாமே!
Deleteஉங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சித்ரா.
சிறந்த பயன்தரும் பகிர்வு
ReplyDeleteநல்வழிகாட்டல்
visit http://ypvn.0hna.com/
பாராட்டிற்கு நன்றி சார்.
Deleteஜுரம் ஒரு வரம்.... உண்மை தான்.
ReplyDeleteபல சமயங்களில் நமக்கு இருக்கும் பிரச்சனையினை அடையாளம் காட்டிக் கொடுப்பது அது தானே!
உண்மை தான் மேடம். காய்ச்சல் என்பது நோயின் அறிகுறி மட்டுமே. பல பேர் காய்ச்சல் வந்தால், மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு, காய்ச்சலை மட்டும் சரி செய்ய முயற்சிக்கின்றனர். தங்கள் உடம்பில் நோய் இருப்பதை ஏற்கவே பலருக்கும் மனமில்லை. விழிப்புணர்வு பதிவு
ReplyDeleteYes.. rightly said Raji madam. Fever is just a symptom. Still a lot of people get confused. A great post :)
ReplyDeleteThankyou maha
DeleteVery informative. Good one.
ReplyDeleteஉங்களைப் போன்ற எழுத்தாளர் என் பதிவைப் பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி ராகவன் சார்.
Delete