Thursday, 26 June 2014

அப்படியா .......ராசி.











ராசி அவள் சித்தி வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து  ஒரே யோசனையிலேயே இருந்தாள்.  விஷ்ணு கேட்ட  கேள்விகளுக்கு  ஒற்றை வார்த்தையில் பதில்கள் விழுந்த வண்ணம் இருந்தன.  விஷ்ணு  இப்படி ராசியைப் பார்த்ததே இல்லை.ராசியை  ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.  படபடவென்று எப்பொழுதும் பொரித்துக் கொண்டிருக்கும் ராசி அமைதியின்  வடிவமாயிருந்தாள் .

சாப்பாடு எல்லாம் முடிந்த பின் விஷ்ணு பேப்பருடன்  சேரில் அமர , ராசி டேபிளை கிளீன் செய்து விட்டு  நேராக  வந்து  சோபாவில்  அமைதியாயிருந்த  லேப்டாப்பை  ,  திறக்கப் போனாள் . ஒரு இன்ச்  தூசியை மேக்கப்  போட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை துடைத்துக் கொண்டே  விஷ்ணுவிடம்," புது லேப்டாப் வாங்கிய ஜோரில் இதை மறந்து விட்டீர்களே " என்று சொல்லிக் கொண்டே சார்ஜரைத்  தேடிக் கண்டுப் பிடித்து பிளக்கை சொருகினாள் .

விஷ்ணுவிற்கு பகீர் என்றது  ." இது என்னடா? புதுத் தொல்லை ஆரம்பாமாவது போல் தெரிகிறதே. இவளுக்கு  இன்டர்நெட்  ரொம்பவும் தெரியாதே. ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை  தன மெயில்களை   செக் செய்யும் ரகமாயிற்றே . இன்று அவள் லேப்டாப்பை திறக்கும் விதமே வித்தியசமாயிருக்கிறதே. என்று நினைத்துக்  கொண்டார்.

" ராசி  உன் சித்தி   வீட்டில் எல்லோரும்  சுகம் தானே ? "

"ம்.....ம்....."

" ராஜேஷ்  , உன் சித்தி பையன்  இப்பொழுது எங்கே வேலை பார்க்கிறான்."

" தெரியாது."

"என்ன செய்து கொண்டிருக்கிறாய் ராசி?

"ஒன்றுமில்லை ராஜேஷ்  எனக்கு facebook account  ஆரம்பித்துக் கொடுத்தான். இவ்வளவு நாள் நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா? நண்பர்கள், உறவினர்கள் போட்டோக்கள் கூட பார்க்கலாமாமே " ராசி சொல்ல  விஷ்ணு அதிர்ந்தார்.

ராஜேஷிற்கு  வேறு பிழைப்பே இல்லையா? இவனை யார் இப்ப ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து   மெனக்கெட்டு இந்த வேலை செய்ய சொன்னது என்று மனதிற்குள்  மறுகினார்.

இதில் அதிர்ச்சிக்கு என்ன விஷயம் இருக்கிறது  என்று நீங்கள் நினைக்கலாம்.

அவர் நினைத்தது என்னவோ  இவள் ஆன்லைனில் எதையாவது வாங்கி அவர் க்ரெடிட் கார்டிற்கு உலை வைக்கப் போகிறாள் என்று தான். நீங்களும் அதையே தான் நினைத்திருப்பீர்கள். அது தான் இல்லை.  தொடர்ந்து வாருங்கள்......சொல்கிறேன்.

மறு நாளிலிருந்து  ராசி, தன சமையல் வேலையெல்லாம் முடித்து  விட்டு லேப்டாப்பும் கையுமாகவே இருந்தாள் . எப்பொழுதும்  FB  பக்கம் தான். ஒரே வாரத்தில்  அவள் நண்பர்கள் வட்டம்  பெரிதானது.   Friends Request அனுப்பிக் கொண்டேயிருந்தாள் .  அவளுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால்  உடனே ராஜேஷிற்குப் போன் பறக்கும். பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு," ராஜேஷ்  உனக்கு என்ன பாவம்  செய்தேன் ? ஏண்டா  இப்படி பழி வாங்குகிறாய்? " என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

மறு நாள் ஆபிசிலிருந்து வந்ததும் காபி கொடுத்து விட்டு விஷ்ணுவைக் கூப்பிட்டு தன் FaceBook  பக்கத்தை  காட்ட விஷ்ணு அதிர்ந்து போய் விட்டார்..... ஒரே வாரத்தில்............................................ இத்தனை நண்பர்களா?  யார் அதெல்லாம் என்று பார்த்தால் முக்கால்வாசி பேருக்கு மேல் யாருமே தெரியவில்லை. சுமித், கீத், பிரியா, கல்யாணி, கௌதமி., வசந்த் , ப்ரீதி ......என்று நீண்டு கொண்டே போனது லிஸ்ட் . மிக்சி, கிரைண்டர் பேரில் எல்லாம்  நண்பர்கள். FB தொடர்பினால் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் கதையெல்லாம் இவளுக்குத் தெரியாதே. இவளுக்கு சொன்னாலும்  புரியாதே.. நம் மேலேயே எரிந்து விழுவாளே என்று பதைபதைத்தார் விஷ்ணு.

" ஆமாம் இவர்களெல்லாம் யார்? " விஷ்ணு கேட்க.....

" இவர்களா  ...Friends..."  பட்டென்று ப தில் வந்தது  ராசியிடமிருந்து.

"எல்லோருமா? " விஷ்ணு மீண்டும் கேட்க....

" ஆமாம்..." Friends ", " Friends of friends ", " friends of friends of friends "  என்று அளந்து கொண்டே போனாள்  ராசி.

இதில் எத்தனை fakeஆக இருக்கும் என்று இவளுக்கு சொன்னால் புரிந்தும் தொலையாதே.. பெரிய வம்பு ஒன்றை விலைக்கு வாங்கிக் கொள்கிறாள் என்று மட்டும் உரைத்தது விஷ்ணுவிற்கு.

ஒரு மாதம் எந்த வில்லங்கமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது  . விஷ்ணுவும் இந்த FB பிரச்சினையை மறந்து கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

 ராசிக்குமே Fb  மோகம் ,முன்பு போல் பெரிய அளவில் இல்லை .
அதற்காக  ஒன்றுமே நடக்கவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விஷ்ணு அவ்வப்பொழுது  ராசியின் முகனூல் பக்கம் எட்டிப் பார்த்துக் கொள்ளத் தவறவில்லை. எங்கேயாவது தன்னை வம்பில் மாட்டி விடுவாளோ என்கிற அச்சம் அவர்  உள்  மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது.

என்ன ஒரு தீர்க்ககதரிசி  விஷ்ணு.!

ஒரு வாரத்திற்குப் பிறகு ராசியின் Fb பக்கம் சென்ற விஷ்ணுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. குரு பெயர்ச்சி  அவர் ராசிக்கு சரியில்லை  என்று தெரியும் அதற்காக இவ்வளவு மோசமாகவா இருக்கும்.....

என்ன தான் நடத்திருக்கும் என்கிறீர்களா.

அவள்  friends of friends  சுமீத் அவருடைய  உயரதிகாரியைப் பற்றி படு கேவலமாக எழுதி, கண்ணா பின்னாவென்று திட்டி எழுதியிருந்தார். Tom and Jerryஇல் வரும்  Jerryடம் Tom சரணாகதியடையும் சீன் லிங்கைப் போட்டு, " எனக்கும்  சான்ஸ் கிடைத்தால் என் பாஸையும் இப்படி என் காலடியில் விழ வைக்க வேண்டும்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை " என்று கறுவியிருந்தார்.

அதற்கு  ஏகப்பட்ட  likes. அதில் ஒன்று  நம் ராசியினுடையதும் தான் . இதிலென்ன  பிரச்சினை.? தோன்றலாம் உங்களுக்கு.
 இதனால் ஒரு பிரச்சினையும் விஷ்ணுவிற்கு இல்லை.
அதற்குக் கீழே வரும் கமெண்ட்ஸ் தான்  பிரச்சினையே!

ஏகப்பட்ட கமெண்ட்ஸ் . ராசியும் கமெண்ட் எழுதியிருந்தாள் .
 என்ன எழுதியிருந்தாள்  தெரியுமா?

"என் கணவரின் பாஸ் கூட  அவரைப் பாடாய்  படுத்துகிறார். லீவே கொடுப்பதில்லை. வீட்டிற்கு எவ்வளவு நேரம் கழித்து வருகிறார் தெரியுமா?  அவ்வளவு அதிக வேலை தருகிறார்.  " இதோடு ராசி நிறுத்தியிருந்தால் கூட தேவலை.
மேலும் தொடர்ந்திருந்தாள் , "    என் பாஸ் என்ன ஆட்டம் ஆடுகிறான் தெரியமா? பூனை மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு குதிக்கிறான்.  கிழட்டுப் பூனை .! ஒரு நாள் என் காலில் வந்து விழ வைக்கிறேனா  இல்லையா பார்? "  என்று விஷ்ணு சொன்னதாக  கமெண்ட் அடித்திருந்தாள் .

படித்தபின் கோபம் வராதா என்ன விஷ்ணுவிற்கு. கோபம் தலைக்கேறியது .

" நான் எப்ப இப்படியெல்லாம்  கந்தசாமியைப்பற்றி சொன்னேன். (கந்தசாமி அவர் உயரதிகாரி.)எதற்கு  இந்த வேலை செய்திருக்கிறாய். ராஜேஷை  சொல்ல வேண்டும் சும்மா இல்லாமல் FB account  ஆரம்பித்துக் கொடுத்து விட்டு ஆஸ்திரேலியாவிற்குப்  பறந்து விட்டான். "

அவனை  ஆள் வைத்து அடித்தால் கூட பாதகமில்லை என்று நினைத்துக் கொண்டார்.

தலையில் அடித்துக் கொண்டு முகமெல்லாம் ஜிவு ஜிவு என்று  சிவக்க
" நீ கமெண்ட் எழுது , என்னவோ செய்து தொலை.. என் பேரை இதில் எதற்கு இழுக்கிறாய்."
என்று கோபத்தில் கத்த  ராசி நிஜமாகவே பயந்து தான் போனாள் .

" பாருங்கள் இப்படியெல்லாம்  எழுதப்போகத் தானே இவ்வளவு Likes வந்திருக்கு." . மீண்டும்  லேடாப்பை அவர் முன் நீட்ட  வெறுப்புடன் ராசியைப் பார்த்துக் கொண்டே , கண்களை லேப்டாப்பின் மேல் ஓடவிட்டார்.

இப்பொழுது அவருக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது.
ராசியின் கமெண்ட்டிற்குக் கீழே இருந்த கமெண்ட் தான் காரணம்.

அந்தக் கமெண்ட் .." அப்படியா.........." என்கிற ஒற்றை வார்த்தை தான். ஆனால் அதை எழுதியிருந்தது MaliniKandasamy . சந்தேகத்துடன், கைகள் நடுங்க  விஷ்ணு யார் இந்த மாலினி  என்று பார்க்கப் போக ..........சந்தேகமேயில்லை .... 

உங்களுக்கும் புரிந்திருக்குமே  மாலினி யாரென்று.

விஷ்ணு  லேப்டாப்பையே பார்த்தவாறு அசையாமல்  அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

ராசியோ பேயறைந்தாற்போல் இருக்கிறாள்.  அவள் கண் முன்னால்  தான் செய்த தவறுப்  புரிய , உலகமே தட்டாமாலையாக சுற்றியது.



சரி .....வந்தது வந்தீர்கள் விஷ்ணுவிற்கு ஒரு நல்ல யோசனை சொல்லி விட்டுப் போங்களேன்.

image courtesy---google.

31 comments:

  1. பேய்றைந்த எஃபக்டிலிருந்து முதலில் மீளட்டும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .

      Delete
  2. இப்படியும் நடக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. இவ்வளவு உணர்ச்சி வசப்படவேண்டுமா.முகநூல் எனும் கருவி விஷ்ணுவைப் பதம் பார்த்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நடக்கும் என்பது வெறும் கற்பனை மேடம். கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் இது நடக்கவும் வாய்ப்பே . உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  3. Face Book பக்கமெல்லாம் போய் மாட்டினால் இப்படித்தான் ஆகும். " Friends ", " Friends of friends ", " friends of friends of friends " எல்லாம் படுகுழியில் கொண்டுபோய்த் தள்ளிவிடும் என்பதே இதில் உள்ள உண்மை. விஷ்ணு பேசாமல் லாப்டாப்பை ஒரு 15 லிட்டர் பக்கெட் தண்ணீரில் போட்டு ஊறவைத்து விடலாம், ராசிக்குத்தெரியாமல். ;)))))

    ReplyDelete
    Replies
    1. தண்ணீரில் லேப்டாப்பை அமுக்குவதா? இப்படி ஒரு ஆலோசனையா? விஷ்ணு பாடாய் படுவது உங்களுக்குக் காமெடியாகத் தெரிகிறது . என்ன செய்ய.....
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  4. ஆமாம் இந்த இக்கட்டிலிலிருந்து
    எப்படி மீள்வது ?
    நானும் பின்னூட்டங்களை எதிர்பார்த்து
    இருக்கிறேன்
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முகநூல் செட்டிங்க்ஸ் சென்று அங்கு உங்களுக்கு யார் யார் உங்களுடைய பதிவிலே, படத்திலே கருத்துக்கள் இட முடியும்
      என்பதை குறித்து விடுங்கள்.

      தொல்லை இராது. சாரி, அதிகமாக இராது.

      பப்ளிக் என்று இருந்தால் இந்த தொல்லை தான்.

      முதல் ப பர்சேஸ் purchase
      இரண்டாவது ப் ப்ராப்ளம்ஸ்.problems
      மூன்றாவது ளி லிடிகேஷன்ஸ் litigations
      நான்காவது க் க்ராஸ் பயர். cross fire

      யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
      அதனின் அதனின் இலன்.

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      Delete
    2. //என் பாஸ் என்ன ஆட்டம் ஆடுகிறான் தெரியமா? பூனை மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு குதிக்கிறான். கிழட்டுப் பூனை .! ஒரு நாள் என் காலில் வந்து விழ வைக்கிறேனா இல்லையா பார்? " //

      எங்கள் காலத்தில் பேஸ் புக் கிடையாது. அதற்கும் ஒரு படி மேலே
      க்ரேப் வைன் கம்முனிகேஷன் grape wine communication என்று சொல்வார்கள். ஒரு விதமான காஸிப் gossip.

      பெரும்பாலான உயர் அதிகாரிகள் தனக்கு இந்த ரூட்டில் வரும்
      தகவல்களைத் தான் உண்மையான பீட் பாக் feed back என்று
      நம்பினார்கள்.

      இதனால், நடு நிலையில் இருக்கும் ஒரு அதிகாரி, தமக்குக்
      கீழே வேலை பார்க்கும் ஒருவர்,தன மேலதிகாரியை எது காரணம் ஆக சந்திருத்திப்பானோ, தன்னைப் பற்றி எதுவும் வத்தி வைத்திருப்பானோ என்றே பயத்தில் நடுங்கிக்கொண்டு இருப்பான்.

      இப்போதெல்லாம், முக நூலில் இது ஒரு மெகா சைசில் நடக்கிறது.

      நீங்களும் நானும் ஏன் எல்லோருமே இன்றைய கால கட்டத்தில் தன்னைப் பற்றி புகழ்ந்து யாரேனும் பேசவேண்டும் என நினைக்கிறோம். நம்மையும் அறியாமல் சில சமயம் வம்பில் மாட்டிக்கொல்கிரோம்.

      வீட்டிலே அகத்துக்காரர் சமைச்சுப்போடரதை சாப்பிட்டோமா சூப்பர் சிங்கர் பாத்தோமா என்று மட்டும் இருந்தால் இந்த தொந்தரவு வருமா ?

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      Delete
    3. ஐயா ,

      உங்கள் ஆலோசனை ராசியின் காதில் ஏறுமா என்பது சந்தேகமே! சரி அது என்ன grape wine communication. விவரமாக தெரிந்து கொள்ள ஆசை. நன்றி சுப்பு ஐயா விரிவான கருத்துக்கும், மீள் வருகைக்கும்.

      Delete
  5. ஹாஹா, கொஞ்சம் சீரியஸான காமெடி. :)))) ஆனாலும் ராசி இவ்வளவு அப்பாவியா இருக்க வேண்டாம். :)

    ReplyDelete
    Replies
    1. ராசி கொஞ்சம் உணர்ச்சி மிகுதியால் இந்தக் கோட்டம் அடித்து விட்டாள் . பாவம் மன்னித்து விடுவோம்.

      Delete
  6. ஹா... ஹா... ஹா... என்னய்யா இது விஷ்ணுவுக்கு வந்த சோதனை...! கஞ்சாமியிடம் (கந்தசாமியின் சுருக்) ராசியின் பேரால யாரோ பேக் ஐடி உருவாக்கிட்டாங்கன்னு பொய் சொல்லிப் பாக்கச் சொல்லுங்க விஷ்ணுவை...!

    ReplyDelete
    Replies
    1. அட... இது நல்லாருக்கே. நன்றி கணேஷ் சார்.

      Delete
  7. ஐயோ... தானாக தான் மீள வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. மீள்வதற்கு ஒரு ஐடியா கொடுங்கள் தனபாலன் சார். நன்றி.

      Delete
  8. எனக்குத் தெரியாமலே என் அக்கவுன்டிலிருந்து யாரோ ஸ்டேடஸ் எல்லாம் போடுகிறார்கள். என்ன செய்வது நண்பர்களே என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டு விட வேண்டியதுதான்!!

    ReplyDelete
    Replies
    1. அட... இது சூப்பர் ஐடியா ஸ்ரீராம் சார். நன்றி சார்.

      Delete
  9. வணக்கம்
    அம்மா
    ஆரம்பம் முதல் முடிவு வரை கதை நகர்த்தல் நன்றாக உள்ளது இறுதியில் சொன்ன கேள்விக்காண பதிலை மற்ற நண்பர்களிடம் எதிர்பார்க்கிறேன்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்

      Delete
  10. // கிழட்டுப் பூனையை ஒரு நாள் என் காலில் வந்து விழ வைக்கிறேனா இல்லையா பார்? " //
    என்று விஷ்ணு சொன்னதாக - ராசி கமெண்ட் அடித்திருந்தாள் அல்லவா!?... ஆபத்துக்குப் பாவமில்லை..
    கிழட்டு பூனையே கதி என்று காலில் விழுந்து, வீட்டு அழைத்து விருந்து வைத்துவிட வேண்டியது தான்!..

    அப்பாவி ராசியை இந்த கதிக்கு ஆளாக்கிய ராஜேஷை - ஆள் வைத்து அடித்தால் கூட பாதகமில்லை என்று விஷ்ணு நினைத்துக் கொண்டது சரியே!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஐடியா எடுபடுமா தெரியவில்லையே. எனினும் உங்கள் ஐடியாவிற்கு நன்றி சார்.

      Delete
  11. கதை நகர்வு நன்றாக இருக்கிறது.
    கதாசிரியர் முடிவைச் சொல்வது ஒரு வகை.
    கதாசிரியர் முடிவை வாசகரிடம் விடுவது இன்னொரு வகை.
    இங்கு கதாசிரியர் முடிவை வாசகரிடம் விட்டிருக்கிறார்.
    சிறந்த பதிவு.

    ReplyDelete
  12. Actually, Mrs. Rajalakshmi, imho, Vishnu's concern is genuine. I believe he should be worried. The reason is that recently people have lost their job and belongings because of their partners' comments in social media such as facebook and Twitter!

    LA Clippers owner, Donald Sterling, lost his right to own Clippers because of his "girl friend's" comment about his personal opinion about some races.National Basketball Association punished him pretty badly for his partner's comments in Social media. So if I were Vishnu, I would be concerned and worried too! :)

    ReplyDelete
  13. 'ஃபேக் ஐடி'யிலிருந்து என்று சொல்வதுதான் என்னோட சாய்ஸும்.

    ஆனாலும் ராசி'யின் பேயறைந்த முகத்தை நினைத்தால் பாவமாத்தான் இருக்கு.

    ReplyDelete
  14. ராசியின் fb account ஹாக் செய்து விட்டார்கள் என்றோ, இது fake id என்றோ சொல்லி சமாளிப்பது தான் நல்லது.

    பாவம் விஷ்ணு. சமீபத்தில் கூட் fb status message மற்றும் அவற்றை like செய்த சிலருக்கு பிரச்சனைகள் வந்தது - ஒரு சிலர் அரசாங்கத்தால் கைதும் செய்யப்பட்டார்கள்.

    ReplyDelete
  15. அருமையான சிந்திக்க வேண்டிய பதிவு.
    சிரிப்பாக எழுதி இருந்தாலும் கவனிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்