நான்கைந்து நாட்களாக பெரும்பாலும் கணினி பக்கமே வரமுடியாத சூழ்நிலை. நேற்று தான் கணினியோடு சற்றே அளவளாவ முடிந்தது. முகநூல், மின்னஞ்சல், என்று வரிசையாக பார்த்து முடித்து விட்டு கடைசியாக பதிவுலகம் வந்தேன். பதிவுலகம் பக்கம் முதலில் வந்தால் நேரமாகுமே என்று தான் கடைசியாக பதிவுலக உலாவை வைத்துக் கொண்டேன்.
பதிவுலகம் வந்து என் டேஷ் போர்டை செக் செய்து விட்டு , சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கலாம் என்று " Reading List " என்கிற தலைப்பின் கீழே பார்த்தால் ஒரே ஒரு பதிவு மட்டுமே தென்படுகிறது. இது என்ன கலாட்டா? யாருமே பதிவுகள் எழுதவில்லையா? மொத்தப் பதிவுலகமே விடுமுறையில் உள்ளதா? என்று நான் தொடரும் பதிவர்கள் லிஸ்டைப் பார்த்தால் அது சரியாக வருகிறது. ஒவ்வொரு பதிவராக க்ளிக் செய்து பார்த்தால்..... சிலர் இன்று கூட பதிவு எழுதியிருக்கிறார்கள். ஆனால் என் டேஷ்போர்டில் தான் தெரியவில்லை. என்ன தவறு செய்கிறேன் என்று புரியவில்லை. Bloggerற்கு என் மேல் என்ன கோபம் என்று புரியவில்லை.
டேஷ்போர்டில் பார்த்தால் லேட்டஸ்டாக யார் எழுதுகிறார்களோ அவர்கள் பதிவு மட்டும் தெரிகிறது. அவர்களுக்குப் பிறகு வேறு யாராவது பதிவு எழுதினால் அடுத்தவரின் பதிவு தெரியும். இருந்தது மறைந்து விடும்.ஆக ஒன்றே ஒன்று மட்டுமே தெரிகிறது.
நான் தொடரும் எண்ணற்ற பதிவர்களின் updates ஐ நான் பார்ப்பது எவ்வாறு. ஒவ்வொரு பதிவரின் பெயரையும் க்ளிக் செய்து தான் படிக்க வேண்டுமா? முடிகிற காரியமா? எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினையா? இல்லை வேறு யாருக்கும் இது இருக்கிறதா? கூகுளின் உதவியையும் நாடிவிட்டேன்.
மனம் இறங்கவில்லை கூகுளும். செய்வதறியாது திகைக்கிறேன்.
settings பல் சக்கரத்தையும் ஒரு வழி செய்து விட்டேன். எந்தப் பல் சக்கரத்தையும் விடவில்லை . இன்று முழுவதும் blogger உடன் தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றி பெறுவது எப்போது என்று மட்டும் தெரியவில்லை.
மேலே இருக்கும் screen shot பார்த்தால் உங்களுக்கே புரியும். அதில் இருக்கும் view more என்பதையும் க்ளிக் செய்து விட்டேன். பலன் பூஜ்யம் தான்.
யாராவது உதவுவீர்களா...............................................................?

சில சமயங்களில் கிறுக்குப்பிடித்த மாதிரி
ReplyDeleteஎன கம்பூட்டரிலும் அப்படித்தான் ஆகிறது
பின் அதுவாகச் சரியாகிப்போகிறது
உங்களுக்கு வரும் பின்னூட்டத்தை
ஆவலுடன் நானும் எதிர்பார்த்து.....
உங்களுக்கும் இந்தப் பிரச்சினை வருகிறதா? யாராவது தீர்வு சொல்கிறார்களா பார்க்கலாம்.
Deleteதீர்வு நம் கையில்...
Deleteதொழில்நுட்ப பதிவர்கள் உதவலாம்! சில சமயம் எனக்கு ப்ளாக் லிஸ்டே காண்பிப்பது இல்லை! நீங்கள் யாரையும் தொடர்வது இல்லை என்று காட்டும்!
ReplyDeleteஎனக்கும் அந்த மாதிரி ஆவது உண்டு தான். பின் தானாவே சரியாகி விடும். ஆனால் இப்போ கிளம்பியிருக்கும் பிரச்சினையாழ் யார் என்ன பதிவு எழுதுகிறார்கள் என்பதே விட்டுப் போகும் அபாயாமாகவல்லவா இருக்கிறது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் உடனே மேடைக்கு வரவும்! :))))
ReplyDeleteதனபாலன் சார் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.
Deleteஇதோ வந்துட்டேன்...
Deleteநமக்கான திரட்டி எது...?
Deletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html
சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்...
Delete1) dindiguldhanabalan@yahoo.com or
2) +91 99443 - 45233
இதுபோலவே எனக்கும் அவ்வப்போது பல பிரச்சனைகள் வருகின்றன. என் பதிவுகளே உடனுக்குடன் டேஷ்-போர்டில் காட்சி அளிப்பது இல்லை. இன்று வெளியிட்டால் ஒரு 15 நாட்கள் கழித்துத் தெரிவதும் உண்டு. கடைசிவரை தெரியாமலேயே போவதும் உண்டு.
ReplyDeleteடேஷ்-போர்டில் தெரிந்தால், குறிப்பிட்ட சிலரின் பதிவுகள் பக்கம் நான் போவது உண்டு. இல்லாவிட்டால் பேசாமல் விட்டுவிடுவதும் உண்டு. திடீரென சிலமணி நேரங்களுக்குப் பிறகு எப்போதாவது தெரிய ஆரம்பிப்பதும் உண்டு. மொத்தத்தில் ஒன்றும் சரியில்லை.
என்னவோ பிரச்சினை என்று புரிகிறது. ஆனால் தீர்வு தான் வெளிச்சமில்லை.
Deleteயாராவது இதற்குப் பதில் வைத்திருக்கிறார்களா பார்க்கலாம்.
வெளிச்சம் நம் கையில் உள்ளது...
Deleteசகோதரிக்கு, எனக்கும் எனது வலைப்பதிவில் (BLOG) எனது முகப்புத் தளம் (DASH BOARD) அடிக்கடி சுணங்கிக் கொள்ளும். ஆரம்பத்தில் ரொம்பவும் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. நான் அப்படியே விட்டு விட்டேன். அதுவாகவே சரியாகிவிட்டது. இப்போதெல்லாம் அவ்வாறு சுணங்கும்போது, டேஷ்போர்டின் மேலே இடதுபக்க மூலையில் உள்ள BLOGGER என்ற ஐகானை (ICON) கிளிக் செய்ய எல்லா பதிவுகளும் வந்து விடுகிறது. மீண்டும் அந்த ஐகானை கிளிக் செய்ய எல்லா பதிவுகளும் மறைந்து விடும்.
ReplyDeleteத.ம.1
நீங்கள் சொன்ன மாதிரியும் செய்து பார்த்து விட்டேன் தமிழ் சார். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
Deleteஎந்தளவு என் பதிவை [http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html] புரிந்து கொண்டுள்ளார் என்று என்பது தெரிகிறது....
Deleteஎனது ப்ளாக்கிலும் டேஷ்போர்டு அவ்வப்போது இப்படித்தான்.
ReplyDeleteரொம்பவும் - நல்ல பிள்ளை மாதிரி - நீங்கள் யாரையும் பின் தொடர்வது இல்லை. சொந்த வேலை இருந்தால் - அதைப் பார்க்கவும் (!?..) என்று காட்டும்!
ஆரம்பத்தில் மிகவும் கவலையாகத் தான் இருந்தது. பெரிதாக தொழில் நுட்பம் ஏதும் தெரியாதால் - நானும் அப்படியே விட்டு விட்டேன். சில மணி நேரத்தில் அதுவாகவே சரியாகிவிட்டது.
மேலும், இங்கே - குவைத்தில் Blog - தொழில் நுட்பம் தெரிந்தவர்களாக யாரும் எனக்கு அருகில் இல்லை. என் இனிய நண்பன் இவன் ஒருவனே!.. எனவே இவன் போக்குக்கு விட்டுப் பிடிக்கின்றேன்!..
இப்போதெல்லாம் - இது மாதிரி ஏதாவது கலாட்டா ஏற்பட்டால் - கடையை இழுத்து மூடி விட்டு - கொஞ்ச நேரம் கழித்து திறக்கின்றேன்..
அன்பின் திண்டுக்கல் தனபாலன் என்ன தீர்வு கூறுகின்றார் - என்று காத்திருக்கின்றேன்..
நிறைய பேர் இந்த பிரச்சினையில் அவதிப்படுகிறோம் என்பது மட்டும் புரிகிறது.
Deleteஎன்ன செய்வது என்பது மட்டும் விளங்கவில்லை.
மிக மிக சின்ன பிரச்சனை... மேலே சொன்ன எனது கருத்துரைகள் உங்களுக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்...
Deleteநன்றி...
DD
தனபாலன் சார்,
Deleteநீங்கள் Feedly பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நம் டேஷ்போர்டிலேயே வந்தால் சற்று சுலபமாக இருக்கும் என்பது என் கணிப்பு.
உங்களை இமெயிலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி சார். வந்து விளக்கியதற்கு.
அவ்வப்போது இப்படித்தான் நீங்கள் யாரையும் தொடர்வது இல்லை என்று வரும். refresh பண்ணினால் இரண்டு, மூன்று முறைக்குப் பின் வரும்.
ReplyDeleteஉங்கள் வலையில் என் பதிவு தெரிகிறதே. பின்னூட்டத்தில் உங்களைக் காண வில்லையே. ...! எனக்கு உங்கள் பதிவைப் படிக்கும் போது வரிகள் ரோல் ஆகி படிக்க முடியாமல் போகிறது. இந்த மாதிரி டெம்ப்லேட் வைத்திருப்பவர்கள் சிலரது பதிவும் அப்படியாகிறது. முன்பே ஒரு முறை கூறி இருப்பதாக நினைவு. எல்லாம் சரியாகிவிடும் என்று கூகிளை நம்புங்கள். தனபாலன் சொல்லி இருப்பதை எல்லாம் புரிந்து கொண்டு செய்து பார்த்தீர்களா. . எனக்கு உங்கள் பதிவு டேஷ் போர்டிலும் மெயிலிலும் வரும்.
ReplyDeleteஇந்த மாதிரி பிரச்சனைகள் வரும் போது பிள்ளையாருக்கு 10 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும்
ReplyDeleteஇது தங்களுக்கு உதவுமா என பார்க்கவும்
ReplyDeletehttp://blogging.nitecruzr.net/2009/07/missing-followers.html
இத்தொழில்நுட்ப கோளாறு குறித்து எனக்கு எந்தவித ஐடியாவும் இல்லை மேடம்..
ReplyDeleteடிடி அண்ணா இன்நேரம் தங்களுக்கு ஏற்பட்ட இப்பிரச்சனையை சரி செய்திருப்பார் என நம்புகிறேன்..
நன்றி..
@ஆதிவெங்கட், @ பாலு சார்,@ அவர்கள் உண்மைகள் @ விக்னேஷ்,
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி. என் டேஷ் போர்ட் சரியாகிவிட்டது.
நகைச்சுவைப் பதிவாக இருக்குமென்றுதான் வந்தேன். பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களை ஏமாற்றி விட்டேனோ? அடுத்தப் பதிவை நகைச்சுவையாக மாற்றி விடுகிறேன்.
Deleteடேஷ்போர்ட் பிரச்சனை சரியானதில் மகிழ்ச்சி மேடம். எனக்கும் அவ்வப்போது வருவதுதான். ஆனால் இதற்கென தனியாக வலைப்பூ வைத்திருப்பதால் பிரச்சனை இல்லை.
ReplyDeleteதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html
கேள்வி கேட்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விஷயம். என்னை பதில் எழுத சொல்லி விட்டீர்களே! சரி முயற்சிக்கிறேன். நன்றி கீதா.
Deleteசில சமயங்களில் இப்படி ஆவதுண்டு.... பிளாக்கர் அப்பப்ப கொஞ்சம் மக்கர் பண்ணும்!
ReplyDeleteபிளாகர் மக்கர் செய்து என்னை அலைகழித்து விட்டது. இப்பொழுது எல்லாமே சுபம்.
Deleteஎனக்கும் இதே நிலை
ReplyDeleteஇன்று தான் வந்தது...
தீர்வுக்கு முயற்சி செய்கிறேன்...
எனக்கும் நேற்றிலிருந்து தங்களது நிலை தான். எப்போ சரியாகுமோ தெரியவில்லை....:)
ReplyDeleteஎனக்கும் கடந்த 2 நாட்களாக தாங்கள் சொல்லும் அதே பிரச்சனை வந்து விட்டது. எப்போது சரியாகுமோ ? என் டேஷ்-போர்டில் கடைசியாக வெளியிடப்பட்ட ஒரே ஒருவரின் பதிவு மட்டுமே காட்சியளிக்கிறது. மற்றவைகள் காட்சியளிக்கவே இல்லை.
ReplyDeleteயார் யார் என்னென்ன பயனுள்ள பதிவுகள் கொடுத்திருக்கிறார்களோ ! அவர்கள் பக்கமெல்லாம் என்னாலும் 2 நாட்களாகச் செல்ல முடியாமல் எல்லாமே ஸ்தம்பித்துப்போய் உள்ளன.
ஒருவிதத்தில் நிம்மதியே ;))))))
@ Jeevalingam சார் , @ ஆதி , @ கோபு சார் ,
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் வலையுலகமே பெறுகிறதே
வணக்கம் ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.எனக்கும் இந்த பிரச்சனை இன்றிலிருந்து ஆரம்பித்து இருக்கிறது .நான் பதிவு போட்டுவிட்டு காத்து இருக்கிறேன், வழக்கமாய் வந்து படிப்பவர்கள் வரவில்லை.எனக்கும் மட்டும் இல்லை சிலருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது என்று தெரிகிறது.
ReplyDeleteவாங்க கோமதி. நெடு நாட்களாக உங்களை காண முடியவில்லையே. உங்களுக்கும் இந்தப் பிரச்சினை வந்து விட்டதா? google மனம் வைத்து தீர்த்தால் தான் உண்டு போலிருக்கிறது.
Deleteஊருக்கு போய் விட்டதாலும், குழந்தைகள் வரவாலும் இணையம் பக்கம் வர முடியவில்லை. உங்கள் விடுபட்ட பதிவுகளை இப்போது தான் படித்து வருகிறேன்.
ReplyDeleteஉங்கள் விசாரிப்புக்கு நன்றி.