பதிவை ஆரம்பிப்பதற்கு முன் ,
செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி , இந்தியாவை பெருமையடையச் செய்த ISRO விஞ்ஞானிகளுக்கு என் சல்யூட்!
விஷயத்திற்கு வருகிறேன்.
மாலை நடை பயிற்சிக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்வது வழக்கம்.
இன்று மாலையும் சென்றேன். ஓரளவு சுத்தமாகவே இருக்கும் பூங்காவில் இன்று என்னவோ ஒரே குப்பை . அங்கங்கே குப்பைகளை போடுவதற்கு பெரிய பெரிய பெங்குயின்கள் நின்று கொண்டிருந்தாலும் , தரையெங்கும் ஒரே பிளாஸ்டிக் கவர்களும், அங்கங்கே பேப்பர்களும், பழத் தோல்களும் காண சகிக்கவில்லை. டூரிஸ்ட் பஸ்ஸில் வருபவர்கள் பார்க்கை தற்காலிக தங்குமிடமாக, சாப்பிடும் இடமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. உண்ட பின் ,குப்பைகளைப் போட்டு விட்டு அவர்கள் சென்றிருக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமபட்டிருந்தால் போதுமே, வாயைத் திறந்து கொண்டு நிற்கும் பெங்குயின்கள் வாயில் போட்டிருக்கலாம். பார்க்கவும் சுத்தமாயிருக்கும். 'பார்க்'கும் சுத்தமாக இருந்திருக்கும் . "சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாமே ! " என்று சொல்வது என்பது பூனைக்கு மணி கட்டுகிற வேலை தான்.
அப்பொழுது தான் தோன்றியது வெளியே குப்பையை தாறு மாறாகப் போடுபவர்கள் தங்கள் வீட்டை எப்படி வைத்துக் கொளவார்கள் . என்று சிந்தித்தேன். அதைப் பற்றி என்னவரிடம் ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தேன்.
" இப்பொழுதெல்லாம் பெரும்பாலான அதுவும் 90சதவிகிதம் வீடுகள் மிக சுத்தமாக இருக்கின்றன. யோசித்துப் பார் "என்று ஒரு சில எங்களுக்குத் தெரிந்த வீடுகளைப் பற்றி அவர் சொன்னது யோசிக்க வைத்தது.
அவர் சொல்வதும் சரி தான் .பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டை என்னவோ கண்ணாடி போல் தான் வைத்திருக்கிறார்கள். தெருவில் குப்பை கொட்டிக் கொண்டே, ' யாருமே பெருக்குவதில்லை. எப்படி இருக்கிறது தெரு? ' என்று அங்கலாய்க்கிறார்கள்.
அதனால் தான் மற்ற நாட்டவர்களின் கண்களுக்கு , நம் பாரத தேசம் அழுக்காகவும், குப்பையாகவும் காட்சியளிக்கிறது. நாடு என்பதும் ஒரு வகையில் பார்த்தால் பெரிய வீடு தானே! அதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பக்குவம் எப்பொழுது வருமோ தெரியவில்லை.
உலகமே அன்னாந்து பார்க்கும் உயர்ந்த கலாச்சாரம்.
குதித்து உயர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம்.
விண்ணை ஆக்கிரமிக்கும் நம் செயற்கைக் கோள்கள் .....
இப்படி நம் தேசத்தைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . ...
சாதனைகளைஅனாயாசமாகப் புரிந்து கொண்டே வரும் நமக்கு நாட்டைத் தூய்மையாய் வைத்துக் கொள்வது பெரிய வேலையா என்ன?
சற்றே சிரத்தை எடுத்துக் கொண்டால் போதுமே .
இதைத்தான் நம் பாரதப் பிரதமரும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பிக்கப் போகும் " Swachh Bharat " இயக்கத்திற்கு , நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மக்களிடம் என்ன எதிர் பார்க்கிறார் என்பதை பார்ப்போமா?அவர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே கொடுக்கிறேன்.
அன்பு நண்பர்களே,
' தெய்வீகத்தன்மைக்கு அடுத்து வருவது தூய்மைத்தன்மை ' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீர்கள் . ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை.
வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று 'ஸ்வச்ச பாரத்' - 'தூய்மையான பாரதம்' - எனும் இயக்கத்தைத் துவக்க உள்ளோம். இது தூய்மையான இந்தியாவை உருவாக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாகும். தூய்மைத் தன்மை என்பது மகாத்மா காந்தி மனதில் கொண்டிருந்த ஆழ்ந்த ஒரு கருத்தாகும் . வரும் 2019 -ல் பாபுவின் 150-வது பிறந்த ஆண்டுக் கொண்டாட இருக்கும் தருணத்தில் 'தூய்மையான இந்தியா 'என்பது நாம் அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.
இந்தியா சுயராஜ்யம் அடைவதற்காக மகாத்மா காந்தி தனது வாழ்வையே அர்பணித்தார் . நமது தாய்த்திருநாடு தூய்மை அடைய நாம் அனைவரும் நம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டிய நேரமிது .
நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டொன்றிற்கு 200 மணி நேரம் - அதாவது ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் - தூய்மைப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா தூய்மையற்றதாக இருக்க நாம் இனிமேலும் அனுமதிக்க இயலாது. வரும் அக்டோபர் 2ம் தேதியன்று, கையில் வாருகோலுடன் நானே இந்தப் புனிதப் பணியில் களமிறங்க உள்ளேன்.
உங்களது இல்லங்கள், பணியிடங்கள், கிராமங்கள், நகரங்கள், சுற்றுப் பகுதிகளை முழு மனதுடன் முறைமையாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என இன்று நான் உங்கள் அனைவரையும். குறிப்பாக அரசியல்-மதத் தலைவர்கள், நகர மேயர்கள், கிராமத் தலைவர்கள், தொழிலதிபர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தூய்மையான பாரத்தத்தை உருவாக்கும் நமது இந்த ஒட்டு மொத்த முயற்சியில் உங்களது உதவியையும் துடிப்பான பங்காற்றலையும் நான் கோருகிறேன்.
உங்களது,
நரேந்திர மோடி .
வாருங்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்போம்.
தூய்மையான பாரதத்தை உருவாக்குவதில் நம் பங்கும் இருக்கட்டும்.
நன்றி: www.narendramodi.in
PM's Message on Swachh Bharat
image courtesy--google.