பதிவை ஆரம்பிப்பதற்கு முன் ,
செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி , இந்தியாவை பெருமையடையச் செய்த ISRO விஞ்ஞானிகளுக்கு என் சல்யூட்!
விஷயத்திற்கு வருகிறேன்.
மாலை நடை பயிற்சிக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்வது வழக்கம்.
இன்று மாலையும் சென்றேன். ஓரளவு சுத்தமாகவே இருக்கும் பூங்காவில் இன்று என்னவோ ஒரே குப்பை . அங்கங்கே குப்பைகளை போடுவதற்கு பெரிய பெரிய பெங்குயின்கள் நின்று கொண்டிருந்தாலும் , தரையெங்கும் ஒரே பிளாஸ்டிக் கவர்களும், அங்கங்கே பேப்பர்களும், பழத் தோல்களும் காண சகிக்கவில்லை. டூரிஸ்ட் பஸ்ஸில் வருபவர்கள் பார்க்கை தற்காலிக தங்குமிடமாக, சாப்பிடும் இடமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. உண்ட பின் ,குப்பைகளைப் போட்டு விட்டு அவர்கள் சென்றிருக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமபட்டிருந்தால் போதுமே, வாயைத் திறந்து கொண்டு நிற்கும் பெங்குயின்கள் வாயில் போட்டிருக்கலாம். பார்க்கவும் சுத்தமாயிருக்கும். 'பார்க்'கும் சுத்தமாக இருந்திருக்கும் . "சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாமே ! " என்று சொல்வது என்பது பூனைக்கு மணி கட்டுகிற வேலை தான்.
அப்பொழுது தான் தோன்றியது வெளியே குப்பையை தாறு மாறாகப் போடுபவர்கள் தங்கள் வீட்டை எப்படி வைத்துக் கொளவார்கள் . என்று சிந்தித்தேன். அதைப் பற்றி என்னவரிடம் ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தேன்.
" இப்பொழுதெல்லாம் பெரும்பாலான அதுவும் 90சதவிகிதம் வீடுகள் மிக சுத்தமாக இருக்கின்றன. யோசித்துப் பார் "என்று ஒரு சில எங்களுக்குத் தெரிந்த வீடுகளைப் பற்றி அவர் சொன்னது யோசிக்க வைத்தது.
அவர் சொல்வதும் சரி தான் .பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டை என்னவோ கண்ணாடி போல் தான் வைத்திருக்கிறார்கள். தெருவில் குப்பை கொட்டிக் கொண்டே, ' யாருமே பெருக்குவதில்லை. எப்படி இருக்கிறது தெரு? ' என்று அங்கலாய்க்கிறார்கள்.
அதனால் தான் மற்ற நாட்டவர்களின் கண்களுக்கு , நம் பாரத தேசம் அழுக்காகவும், குப்பையாகவும் காட்சியளிக்கிறது. நாடு என்பதும் ஒரு வகையில் பார்த்தால் பெரிய வீடு தானே! அதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பக்குவம் எப்பொழுது வருமோ தெரியவில்லை.
உலகமே அன்னாந்து பார்க்கும் உயர்ந்த கலாச்சாரம்.
குதித்து உயர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம்.
விண்ணை ஆக்கிரமிக்கும் நம் செயற்கைக் கோள்கள் .....
இப்படி நம் தேசத்தைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . ...
சாதனைகளைஅனாயாசமாகப் புரிந்து கொண்டே வரும் நமக்கு நாட்டைத் தூய்மையாய் வைத்துக் கொள்வது பெரிய வேலையா என்ன?
சற்றே சிரத்தை எடுத்துக் கொண்டால் போதுமே .
இதைத்தான் நம் பாரதப் பிரதமரும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பிக்கப் போகும் " Swachh Bharat " இயக்கத்திற்கு , நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மக்களிடம் என்ன எதிர் பார்க்கிறார் என்பதை பார்ப்போமா?அவர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே கொடுக்கிறேன்.
அன்பு நண்பர்களே,
' தெய்வீகத்தன்மைக்கு அடுத்து வருவது தூய்மைத்தன்மை ' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீர்கள் . ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை.
வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று 'ஸ்வச்ச பாரத்' - 'தூய்மையான பாரதம்' - எனும் இயக்கத்தைத் துவக்க உள்ளோம். இது தூய்மையான இந்தியாவை உருவாக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாகும். தூய்மைத் தன்மை என்பது மகாத்மா காந்தி மனதில் கொண்டிருந்த ஆழ்ந்த ஒரு கருத்தாகும் . வரும் 2019 -ல் பாபுவின் 150-வது பிறந்த ஆண்டுக் கொண்டாட இருக்கும் தருணத்தில் 'தூய்மையான இந்தியா 'என்பது நாம் அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.
இந்தியா சுயராஜ்யம் அடைவதற்காக மகாத்மா காந்தி தனது வாழ்வையே அர்பணித்தார் . நமது தாய்த்திருநாடு தூய்மை அடைய நாம் அனைவரும் நம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டிய நேரமிது .
நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டொன்றிற்கு 200 மணி நேரம் - அதாவது ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் - தூய்மைப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா தூய்மையற்றதாக இருக்க நாம் இனிமேலும் அனுமதிக்க இயலாது. வரும் அக்டோபர் 2ம் தேதியன்று, கையில் வாருகோலுடன் நானே இந்தப் புனிதப் பணியில் களமிறங்க உள்ளேன்.
உங்களது இல்லங்கள், பணியிடங்கள், கிராமங்கள், நகரங்கள், சுற்றுப் பகுதிகளை முழு மனதுடன் முறைமையாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என இன்று நான் உங்கள் அனைவரையும். குறிப்பாக அரசியல்-மதத் தலைவர்கள், நகர மேயர்கள், கிராமத் தலைவர்கள், தொழிலதிபர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தூய்மையான பாரத்தத்தை உருவாக்கும் நமது இந்த ஒட்டு மொத்த முயற்சியில் உங்களது உதவியையும் துடிப்பான பங்காற்றலையும் நான் கோருகிறேன்.
உங்களது,
நரேந்திர மோடி .
வாருங்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்போம்.
தூய்மையான பாரதத்தை உருவாக்குவதில் நம் பங்கும் இருக்கட்டும்.
நன்றி: www.narendramodi.in
PM's Message on Swachh Bharat
image courtesy--google.

நோக்கத்தில் பழுதில்லை. விடுமுறை நாளன்று அலுவலகம் வரச் சொன்னதை அரசு அலுவலர்கள் ரசிக்க மாட்டார்கள். :)))))
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இந்த நோக்கம் பல முக சுளிப்புகளைத் தவிர்க்க உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
Deleteவிழிப்புணர்வுக் கட்டுரை. எல்லோரும் முயற்சித்தால் நடக்காமலா போய்விடும். தூய்மை நம் கையில்தான் உள்ளது.
ReplyDeleteஎன்னுடைய டேஷ்போர்டில் உங்களின் "Dr. அப்துல் கலாம் அவர்களின் கடிதம்"னு ஒரு பதிவு வருது. ஆனால் 'க்ளிக்'கினால் வருவதில்லை.
ஆமாம் அப்படி ஒரு பதிவு எழுத ஆரம்பித்தேன். தவறுதலாக பப்ளிஷ் பட்டனாய்த் தட்டி விட்டு விட்டேனோ ? தெரியவில்லையே.....
Deleteஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.
நம் பாரதப் பிரதமர் திட்டம் அருமையான திட்டம். நிறைவேற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு தெரிந்த நண்பரும் அவர் மனைவியும் பணி ஓய்வு பெற்ற பின் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக்க போவதாய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் இல்லாது அவர்கள் இருக்கும் ஏரியா முழுவதும் தூய்மையாக வைத்து இருக்க உதவினால் நல்லது. குப்பை வண்டி வரும் போது மட்டும் குப்பை கொட்டினாலே சுற்றுபுறம் தூய்மையாகும் எல்லா நேரத்திலும் தன் வீட்டை சுத்தபடுத்த குப்பையை வெளியில் கொட்டினால் எப்படி இருக்கும் தூயமை?
தூயமை காக்க நம் பங்கும் இருக்கும்.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
நம் பாரதப் பிரதமரின் திட்டம் நிறைவேறுவது நம் கையில் தானே இருக்கிறது. நிறைவேற்றி விடுவோம் என்கிற நம்பிக்கையுடன் இருப்போம். உங்கள் நண்பரும் அவர். மனைவியும் செய்யப்போகும் செயல் பாராட்டப்பட வேண்டியது. என் வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்.
Deleteஉங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி கோமதி.
தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி சார்.
Deleteதம 2
ReplyDeleteநன்றி!
Deleteஇஸ்ரோ சாதனைக்கு எனது பாராட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரதமர் மோதியின் கைகளை நிச்சயம் நாம் எல்லோரும் சேர்ந்து பலப்படுத்த வேண்டும். இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் நாம் எல்லோரும் ஒன்றுபடுகிறோம். ஆனால் செயல் என்று வந்தால் பின்வாங்குகிறோம். அரசு எல்லாம் பார்த்துக்கொள்ளும் அல்லது அரசின் கடமை என்று நினைப்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்கு காரணம்.
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல நாட்டையும் நம் வீடாக நினைத்து சுத்தமாக வைத்துக் கொள்வோம்.
ஓர் சிறிய வேண்டுகோள்: பிரதமர் மோதி என்று எழுதுங்கள், ப்ளீஸ். தமிழில் மட்டுமே அவரை மோடி (பத்திரிக்கைகளிலும் கூட இப்படித்தான்!) என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற மொழிகளில் அவர் மோதி தான். ஒரு பத்திரிக்கைக்கு நான் மோதி என்று எழுதியதை மெனக்கெட்டு மாற்றி மோடி என்றே குறிப்பிட்டிருந்தனர்!
தமிழ்மணம் வாக்கு போட்டுவிட்டேன் 1
இஸ்ரோ சாதனை ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்தது. அவர்களை கவுரப்படுத்தும் விதமாக இருக்குமே என்று தான் முதல் வரியில் அவர்களுக்கு என் சல்யுட்டை வைத்தேன். எத்தனை செயர்கரியாய் செயல். எத்தனை நாள் வீடு, தூக்கம், சாப்பாடு என்று மறந்திருந்தர்களோ!
DeleteThankyou Scientists for making us Proud !
நம் பிரதமரின் பெயர் அவருடைய வலைத்தளத்தில் தமிழில் எழுதும் போது
திரு. நரேந்திர மோடி என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் அவ்வாறே நானும் குறிப்பிட்டேன். அவருடையக் கடிதம் கூட திரு. நரேந்திர மோடி என்றே கையோப்பமாயிருக்கிறது என்பதை நீங்கள் காணலாம். அதனால் தான் அப்படியே எழுத வேண்டியிருக்கிறது.
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ரஞ்சனி.
//பார்க்கவும் சுத்தமாயிருக்கும். 'பார்க்'கும் சுத்தமாக இருந்திருக்கும் . //
ReplyDelete:)))))
காலத்துக்கு ஏற்ற, மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.
Deleteடல் சுத்தம் உள்ளம் சுத்தம் வீடு சுத்தம் நாடு சுத்தம் என்று ஒரு மனதாக இயங்கவேண்டும்.எல்லாம்நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லி மேடம்.
Deleteசிறந்த பதிவு அம்மா.
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி சார்.
Deleteநாம் வாழும் பாரதத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் நம் எல்லோருக்கும் பங்குண்டு.. நல்லதொரு பயனுள்ள கட்டுரை. வாழ்க நலம்!..
ReplyDeleteஉங்கள் பாராட்டிற்கு நன்றி துரை சார்.
Deleteதூய்மையான பாரதத்தை உருவாக்குவது நல்ல நோக்கம்தான்... என்ன ஒண்ணு கிடைக்கிற விடுமுறையில் வேலைக்கு வருவது அரசு அலுவலகர்களுக்கு கஷ்டமாக இருக்குமே...
ReplyDeleteமிகவும் நல்ல பகிர்வு அம்மா...
நோக்கம் நல்லதாக இருப்பதால் விடுமுறையில் வேலைக்கு வர வேண்டும் என்பதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள் என்று நினைப்போம்.
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி குமார் சார்.
எனக்கு கிடைத்த VERSATILE BLOGGER AWARD ஐ உங்களுடன் பகீர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....
ReplyDeleteஆனால் இது உங்கள் சமையல் பிளாக்கிக்ர் ...
அங்கே என்னால் போஸ்ட் செய் ய முடியவில்லை
(i can't open the comment box )
http://anu-rainydrop.blogspot.in/2014/09/blog-post.html
நன்றி
திட்டம் நிறைவேறணுமே! அம்பத்தூரில் இருக்கையில் அக்கம்பக்கம் வீடுகளுக்குப் பலமுறை குப்பை கொட்டுவதைக் குறித்து எடுத்துச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம். சொன்னதுக்கு அப்புறமா குப்பைகள் எல்லாம் எங்க வீட்டுப் பக்கம் தான் போடுவாங்க. நாய்க்கு வைக்கும் சோற்றைக் கூட எங்க வீட்டுச் சுற்றுச் சுவர்ப் பக்கம் வந்து வைத்துவிட்டுப் போவாங்க. நான் பெருக்கும்போது கேலி செய்து சிரிப்பாங்க. அலுத்துப் போச்சு! :(
ReplyDeleteசென்னை இப்போவும் குப்பையாய்த் தான் காட்சி அளிக்கிறது. யாருக்கும் அது குறித்துக் கவலை இருப்பதாய்த் தெரியவில்லை. எனக்குத் தான் அங்கே வந்தாலே மூச்சு முட்டும். :(
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஇது ஒரு நல்ல திட்டம். தனிமனித ஒழுக்கம் தேவை. தனது வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் போது நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கவும், செய்யவும் வேண்டும். நேற்றைய நிகழ்ச்சியின் போது வந்திருந்த வி.ஐ.பி.க்கள் சபதம் பொறிக்கப்பட்ட காகிதங்களையும், தண்ணீர் குப்பிகளையும் ஆங்காங்கே வீசி சென்றிருப்பதைப் பார்க்க முடிந்தது. :(
உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைக்கிறேன் விவரங்களுக்கு என் பதிவு “ உறவுகள்” உங்கள் மின் அஞ்சல் முகவரி கிடைக்காததால் இதன் மூலமும் google+ மூலமும் தெரிவிக்கிறேன் நன்றி.
ReplyDelete