Saturday, 13 September 2014

விருது* கிடைத்தது !


நான் வலைப்பதிவு  எழுதுவது, இப்பொழுது  சற்றுக்  குறைந்து  விட்டது என்று சொல்லியது ,என்னுடைய டேஷ் போர்ட். பல காரணங்கள்.
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்....... என்று தான் சொல்ல வேண்டும்.

ஆமாம்..........  ஏதோ நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில்,  திருமதி  ரஞ்சனி நாராயணன்  அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம்  வந்திருந்தது. எனக்கு விருது கொடுக்கப்பட்டிருப்பதாக சொன்ன அந்த பின்னூட்டத்தை  சரியாக படிக்கக் கூட  இல்லை. அவர் சொல்லியிருந்த லிங்கிற்கு  ஓடி  விட்டேன்.  எனக்கு  நாட்டின் மிகப்பெரிய விருது வாங்கியதைப் போல் ஒரே மகிழ்ச்சி.

விருதை வாங்க அவர் தளத்திற்குப் போனேன் . விருதிற்கு  பெருமை சேர்க்கும் வலையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் எனக்கும் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது .

எல்லாம் சரி . தலைப்பில் விருதிற்கு மேல் நட்சத்திரக் குறி இருக்கிறதே என்று நீங்கள் யோசிக்கலாம்.

இந்த விருது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது (*Conditions Apply)

விருதின் நிபந்தனைகளை திருமதி ரஞ்சனி குறிப்பிட்டிருந்தார்.

என்ன என்று படித்துப் பார்த்தேன்.....
உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்.

முதலில்,
விருதைப் பகிர்ந்து கொண்டவருக்கு நன்றி சொல்லி , அவர் தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். மிக்க நன்றி ரஞ்சனி.
அவர் தளத்திற்கு இணைப்பு  இங்கே  ranjaninarayanan.wordpress.com கொடுத்து விட்டேன்.

அடுத்து,
விருதினை  தளத்தில் போட்டுக் கொண்டேயாக  வேண்டுமாம்.
கரும்புத் தின்னக் கூலியா ? போட்டுக் கொண்டு விட்டேன்.

அப்புறம்,
என்னைப் பற்றி 7 விஷயங்களை  சொல்ல வேண்டும்.
இதோ அதையும்  சொல்லி விடுகிறேன்,.
  • ஓய்வு  பெற்ற ஆசிரியை.
  • எழுத வேண்டும்  என்று ஆசை. முயற்சி செய்கிறேன்.
  • அதுவும் பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்கிற  பேரவா உண்டு..  முயற்சிக்கிறேன்.இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை. 
  • எழுதாத நேரங்களில் படித்துக் கொண்டிருப்பேன்.
  • இசையின் மேல் காதலே  உண்டு. ஆனால் அது  கேட்க மட்டுமே .
  • இனிய மனைவி, பொறுப்பான தாய். அது  மட்டுமல்ல  செல்லமான பாட்டியும் கூட .
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...........

பிறகு,
விருதினை  ஐந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதோ என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனக்குத் தான் இது முதல் விருது. இவர்களுக்கு  இது மேலும் ஒன்று.

(உங்கள் பின்னூட்டங்களின் மூலமாக என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றியைச்  சொல்லும் விதமாக  இந்த விருதினை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சார்.. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் எண்ணற்ற விருதுகளுடன் இதையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.)



  • எங்கு சென்று  வந்தாலும் , அதைப் பற்றிய முழு விவரங்களை , நம்மோடு பகிர்ந்து கொள்ளும் திருமதி கோமதி அரசு.


  • தீதும் நன்றும் பிறர் தர வாரா, என்று சொல்லும் திரு. ரமணி .


அப்பாடி ........எல்லா நிபந்தனைகளும்   நிறைவேற்றியாச்சு.

இனிமேல் நானும் ஒரு Versatile Blogger .

இந்த விருதினை நான் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் , உங்கள் தளத்தில்  உங்களுக்குப்  பிடித்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா நிபந்தனைகளும் நினைவில் இருக்கட்டும். அதிலும் முக்கியமாக அரட்டைக்கு வரச்  சொல்ல மறக்க வேண்டாம்.

திருமதி ரஞ்சனி  நாராயணனுக்கு மீண்டும் என் நன்றிகள் பல.


image courtesy--google.


  

48 comments:

  1. பாராட்டுக்கள். மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். தாங்கள் பெற்றுள்ள இந்த விருதால் விருதுக்கே ஒரு பெருமை கிடைத்துள்ளது. - அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி கோபு சார்.

      Delete
  2. வாழ்த்துகளும், நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  3. என்னையும் மிகச் சிறந்த பதிவர்கள்
    வரிசையில் இணைத்துச் சொன்னது
    மிக்க மகிழ்வளிக்கிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி ரமணி சார்.

      Delete
  4. விருது வரும் நேரம் ஆகிவிட்டதா மறுடியும் ?
    நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் .ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    ஊர்களுக்கு எல்லாம் போய் வந்து மிகவும் களைப்பும் சோர்வும் பெருவிரலில் அடிப்பட்டு எக்ஸ்ரே, ஆர்த்தோ, ஆரியவைத்தியசாலை, வைத்தியநாதன்பிராத்தனை என்று இருக்கும் என்னை உங்கள் விருதால் மகிழ்ச்சி படுத்தி விட்டீர்கள்.
    மிகவும் நன்றி சோர்ந்து போன எனக்கு சுறு சுறுப்பை தந்து விட்டது உங்கள் விருது.
    உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.

    பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்கிற உங்கள் பேரவா நிறைவேற வாழ்த்துக்கள் ராஜி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பூரண நலம் பெற வைத்தியநாதனை நானும் வேண்டிக் கொள்கிறேன் கோமதி. உங்கள் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது ,தெரிவித்த உங்கள் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி கோமதி.
      உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
      நன்றி.

      Delete
  5. வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி கில்லர்ஜி.

      Delete
  6. பாராட்டுக்கள்.. நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி மேடம்.

      Delete
  7. நானும் நன்றி சொல்லிக் கொண்டு. விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு நன்றி கௌதமன் சார்.

      Delete
  8. // வலையுலகில் எல்லோராலும் கோபு சார் என்று அன்பாக அழைக்கப்படும் மரியாதைக்குரிய திரு.வை. கோபாலக் கிருஷ்ணன் .

    (உங்கள் பின்னூட்டங்களின் மூலமாக என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றியைச் சொல்லும் விதமாக இந்த விருதினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சார்.. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் எண்ணற்ற விருதுகளுடன் இதையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.)//

    மேலும் மேலும் விருதுகளை என் இல்லத்தில் வைக்க இந்த ஏழை எளிய அந்தணனால் இயலாமல் இருப்பதால், என் மிகப்பெரிய விசாலமான வசந்த மாளிகையான இனிமையான குழந்தை போன்ற மனதில் இந்தத்தங்களின் விருதினை ஏற்று(றி)க்கொண்டு பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துவிட்டேன். மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. விருதினை பத்திரமாக பொக்கிஷமாக பாதுகாப்பதற்கு நன்றி கோபு சார்.

      Delete
  9. தங்களின் இந்தப்பதிவினில் தாங்கள் எழுதியுள்ள அனைத்தையும் நான் வெகுவாக ரஸித்தேன். தங்களின் விருப்பங்கள் யாவும் விரைவில் ஈடேற என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். மீண்டும் என் நன்றிகள்.

    என்றும் அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கும், மீள் வருகைக்கும் நன்றி சார்/

      Delete
  10. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராஜி. கோமதிக்கு அடிபட்டதே இங்க வந்துதான் தெரியும். விருது எழுத ஊக்குவிக்கும். உங்களுக்கும் நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்..மிக மகிழ்ச்சியாக இருக்கிறதுமா. சோர்வு வருவது யதார்த்தமாக இருப்பதுதான். மீண்டு வரும் நேரமும் வரும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete
  11. எனக்கும் ஒரு விருது!..
    முதல் விருது!.. அதுவும் தங்கள் கையால்!..

    அன்பின் வழி நின்று நல்லனவற்றைப் போதித்த நல்லாசிரியையின் கையால்!..
    நான் என்றும் போற்றி வணங்கும் அன்னை பராசக்தியே இதற்கு உரிமையானவள்!..

    நெஞ்சம் இதனை நினைத்துக் கூட பார்க்கவில்லை!..
    எனவே நெகிழ்கின்றது.. கண்கள் கசிகின்றன..

    நானறிந்த தமிழ் என்னையும் நல்லோர் மத்தியில் இருத்தியது!..

    கண்ணியது அவள் புகழ்.. கற்பது அவள் நாமம்..
    கசிந்து பத்தி பண்ணுவது அவள் திருபாதாம் புயத்தில்!..

    பெண்ணின் நல்லாளொடு இருக்கும் பெருந்தகை
    அனைவருக்கும் பேரருள் பொழிய வேண்டுகின்றேன்!..

    ReplyDelete
    Replies
    1. அட.....நான் என் விருதினை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், எனக்கு நல்லாசிரியை விருது கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள்.
      நல்லன செய்தால் நல்லனவே விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்.
      அன்னையின் பேரருள் நம் எல்லோருக்கும் கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன்.
      நன்றி துரை சார். உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  12. விருதினைப் பெற்றுக்கொண்டு கண்டிஷன்களையும் அழகாக நிறைவேற்றிவிட்டீர்கள், ராஜி! விருது பெற்றவர்களுக்கும் கொடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    தொடர்ந்து எழுதுங்கள். பத்திரிக்கைகளிலும் உங்கள் எழுத்துக்கள் பவனி வரும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

    என்னைப்போலவே திருமதி கோமதி அரசுவும் இந்த விருதினால் புத்துணர்வு பெற்றது மகிழ்ச்சியான செய்தி.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும், விருதிற்கும் நன்றி ரஞ்சனி. சற்றே சோர்ந்து போகும் மனதிற்கு, மேலே தெறிக்கும் மழைத்துளி போல் எனக்கும் புத்துனர்ச்சி கொடுத்தது உங்கள் விருது. அந்தப் புத்துணர்ச்சியைத் தான் நானும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  13. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மேடம்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  14. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    ஆன்மீகம் வளர்க்கும் தஞ்சையம்பதிக்குத் தாங்கள் வழங்கிய விருது என்னையும் வந்தடைந்திருக்கிறது
    தங்களுக்கு முதல் நன்றி

    ReplyDelete
    Replies
    1. விருது உங்களை வந்தடைந்தது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. நீங்களும் அதைப் பகிர்ந்து கொண்டு விட்டீர்களா? \
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  15. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா ! இது போன்ற உயரிய
    விருதுகளையும் மென்மேலும் தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று
    வாழ்த்துகின்றேன் ! இன்று விருது பெற்றுக்கொண்ட ஏனைய சொந்தங்களுக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .எனக்கும் ஒரு விருது கிடைத்து
    உள்ளது :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அம்பாளடியாள்.

      Delete
  16. தங்கள் விஷ்ணு - ராசி பதிவுகள் தங்கள் படைப்பார்வத்திற்கு எடுத்துக்காட்டு. ஆரட்டையாய் ஆயிரம் பதிவு எழுதலாம். ஆனால் சுவையுடன் ரெண்டு பாரா எழுதுவது கூட இயலாது. உங்கள் பதிவுகளில் அனாயாசமாக இதைக் கையாள்கிறீர்கள். உங்களுக்கு விருது கொடுப்பதில் ரஞ்சனி அம்மா முந்திக்கொண்டார். இல்லையென்றால் விநாயகர் ஊர்வலம் போன்று டிராக்டர் டிராலியில் சிரியல் லைட்டுகள் மினுங்க டிரம் செட்டுகள் ஒலிக்க வாசகர்கள் நாங்கள் கொடுத்திருப்போம். இந்த விருது மேலும் எங்களுக்கு உங்களிடமிருந்து சுவையான பதிவுகளை எங்களுக்குத் தரட்டும் என்கிற சுயநல நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பாராட்டிற்கு நான் தகுதியானவளா என்று தெரியவில்லை பாண்டியன்.
      இனிமேல் அப்படி இருக்க கண்டிப்பாக முயற்சிக்கிறேன் . என் ராசி- விஷ்ணு பதிவுகளை ரசித்துப் படிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி பாண்டியன்.

      Delete
  17. ஆஹா, எனக்கும் ஒரு விருது கிடைச்சாச்சு, நன்றிங்கோ! விருது பெற்ற அனைவருக்கும், விருதை வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பத்திரிக்கை கனவு நிறைவேறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா. உங்கள் விருதை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள் . அறிய ஆவல்.

      Delete
  18. விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்ஜி

      Delete
  19. வணக்கம் அம்மா... தங்களுக்கு இவ்விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி... தங்களின் தமிழ்ச்சேவை இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி விக்னேஷ்.

      Delete
  20. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் பெறவும் உங்கள் எல்லா அபிலாக்ஷைகளும் நிறைவேற வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி பாலு சார்.

      Delete
  21. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற ஆசிரியை அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.! பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் சார்.

      Delete
  22. வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  23. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

      Delete
  24. வாழ்த்துகள்
    இனிதே தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்