Friday, 5 September 2014

டாக்டரும், ஆசிரியரும்.
















 யார் இந்த டாக்டர் ?
ஆசிரியர் தினத்தன்று டாக்டர் பற்றி எழுதுகிறேனே ! இந்த டாக்டரின்  கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.......இல்லையில்லை .....மனத்தைத் தொடும்  கதை. நீங்கள் நெகிழ்ந்து போகப் போவது உறுதி.
அதுவுமில்லாமல் உங்கள் ஆசிரியர்களை நினைவிற்குக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

இதோ கதைக்கு வந்து விடுகிறேன். டாக்டர் தியோடர் பற்றியக் கதை இது. டெடி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் சிறு வயதில்  எதிர் கொண்ட சவால்களுக்கு எப்படி அவர் ஆசிரியர்  உறுதுணையாக இருந்தார் என்பதை  நான் சொல்வதை விட  காணொளியைப பாருங்கள் உங்களுக்கேப் புரியும். நான் சொன்னால்  அதன்  சாரம் நீர்த்துப் போகும் அபாயம் உள்ளது.





 சிலருக்கு இந்தக்  காணொளி பார்த்ததுப் போல் தோன்றும். நானே சென்ற வருடம் இதைப் பதிவு செய்திருந்தேன். நிறைய நண்பர்கள் இதைப் படித்து  அவரவர் ஆசிரியர்களை  நன்றியுடன் நினைவு கூர்ந்திருந்தார்கள் .

ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக , யார் யாரெல்லாம் அவரவர் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்கள்  என்று பார்க்கலாமா?( அவர்களுடைய பின்னூட்டத்தை அப்படியே காபி பேஸ்ட்
 செய்திருக்கிறேன்.)
திரு. ஸ்ரீ ராம்
ஆர் ஜே எர்னஸ்ட் - எனக்கு உடனே நினைவுக்கு வந்த என்னுடைய ஆசிரியர் பெயர். கண்ணில் நீரை வரவழைப்பது வெங்காயம் மட்டுமில்லை சில பழைய நினைவுகளும்தான்!! :))))

திரு.வை .கோபாலகிருஷ்ணன்.

ஒன்றாம் வகுப்பு: பட்டம்மா டீச்சர் [மடிசார் புடவையுடன்]
இரண்டாம் வகுப்பு: லெக்ஷ்மண வாத்யார்
மூன்றாம் வகுப்பு: கந்த சுப்ரமணிய வாத்யார்
நான்காம் வகுப்பு: ஐயங்கார் வாத்யார்
ஐந்தாம் வகுப்பு: நாடார் வாத்யார்
ஆறாம் வகுப்பு: N. சுந்தரம் வாத்யார்
ஏழாம் வகுப்பு: பட்டாபிராமன் சார்
எட்டாம் வகுப்பு: S.M. பசுபதி ஐயர்
ஒன்பதாம் வகுப்பு: V. துரைராஜ் வாத்யார்
பத்து + பதினொன்றாம் வகுப்புகள்: R. ஸ்ரீனிவாஸன் என்பவர் [ஆர்.ஸ்ரீ]


 திரு. Ramani
அருமையான காணொளி
எனக்கும்
மும்தாஜ்
சுப்ரமணியம்
ஆசிரியர்கள் நினைவுக்கு வந்து போகிறார்கள்
அவர்கள் குறித்த நினைவுகளில் சில நேரம்
மூழ்கிப் போகும்படியான காணொளிப்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
 திருமதி RanjaniNarayanan
எனக்கு எங்கள் தலமைஆசிரியர் திருமதி ஷாந்தா நினைவுக்கு வந்தார். அவர் பின்னால் மற்ற எல்லா ஆசிரியர்களும்!

அருமையான காணொளி வெங்காயம் உரிக்காமல் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.
முதல் வகுப்பில் இருந்து திறந்தவெளி பல்கலைகழகத்தில் படித்தவரை எனக்கு பிடித்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் வை,கோ சார்ப்பொல்.
ஜானகி டீச்சர், உமா டீச்சர், பிரேமா டீச்சர். ஞானஒளி டீச்சர் மிக மிக முக்கியமான அன்பான டீச்சர்கள்.
திரு. பால கணேஷ்
என் பள்ளிக்கால ஆசிரியர்கள் நினைவை வரவழைச்சுட்டீங்க டீச்சர் உங்கள் எழுத்தின் மூலம்! அருமை!

 .திருமதி.Tamizhmukil Prakasam
கண்களில் நீர் திரள்கிறது தோழி. எனது மாணவப் பருவமும், எனது ஆசிரியப் பணிக் காலமும் கண்களின் முன் நிழலாடின. எனக்கு கணிதப் பாடம் கற்பித்த என் தாய் தொடங்கி, எனது ஆங்கில ஆசிரியர் திரு.வரதன் அவர்கள், எனது தமிழ் ஆசிரியர் திருமதி.சரோஜா அவர்கள், எனது இயற்பியல் ஆசிரியர் திரு.ரகுநாதன் அவர்கள், எனது வேதியல் ஆசிரியர் திரு. சங்கரன் அவர்கள், எனது உயிரியல் ஆசிரியர் திருமதி.மனோரமா அவர்கள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மேலே நண்பர்கள் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களுக்கும்,  என் ஆசிரியர்களுக்கும்  ஆசிரியர் தினமான இன்று   நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எனக்கு ஆசிரியராயிருந்த திருமதி சீதா , திருமதி நளினி, திருமதி Betty,
திருமதி Fellow, திருமதி சுந்தரி, திருமதி இந்திரா, திருமதி லலிதா, திருமதி விஜயலட்சுமி , திருமதி கமலா..... ஆகிய  அனைத்து ஆசிரியைகளுக்கும்  நான் சொல்வது 
                                          
                                   " Thankyou Teachers."

 உங்கள் ஆசிரியர்களுக்கு...... நீங்கள் நன்றி சொல்லி விட்டீர்களா? இதோ இங்கே பின்னூட்டம்  வழியாக அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு  உங்கள் நன்றியை சொல்லலாமே!

image courtesy--google.
video courtesy---You tube.


29 comments:

  1. " Thankyou Teachers."

    ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..

    " Thank you Teachers."

    வலைச்சர ஆசிரியர்கள் 100 பேர்களின் பெயர்களின் சேகரித்துள்ளேன். அவற்றை 15 பதிவுகளாகத் தர முடிவெடுத்துள்ளேன். அவர்கள் எல்லோரும் என்னிடம் அன்பு செலுத்தி என்னைப்பற்றி பாராட்டிப் புகழ்ந்து வலைச்சரத்தில் அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார்களே ! அவர்களை என்னால் மறந்துவிட முடியுமா?

    ஏற்கனவே 100வது அறிமுகத்திற்காக ஒரேயொரு பதிவு மட்டும் கொடுத்துள்ளேன்
    அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/08/100.html அந்த வலைச்சரச் டீச்சர் பெயர் ‘ஜெ’ > ’ஜெயா’ > ‘ஜெயந்தி’ > ஜெயந்தி ரமணி !

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்களாக்கும்! :))))))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  3. நான் மேற்படிப்பு படிக்கும்போது எனக்கு ஒரு "ஆசிரியர்" இருந்தார். என்னை என் போக்கில் சிந்திக்கவே விடமாட்டார். அவர் மூளையில் தோன்றும் அவர் சிந்தனைகளை செயல்படுத்த என் கரங்கள் அவருக்குத் தேவை. என் மூளையைப் பற்றியோ, சிந்தனைகள் பற்றியோ அவருக்குக் கவலை இல்லை! அத்தனை பெரிய மனது அவருக்கு! அவருடைய சிந்தனைகள், என் கரங்களினால் "வொர்க் அவ்ட்" ஆகலைனா என் கரங்களில்தான் குறை என்பார். அப்போது நான் கற்றுக்குட்டி. அவருக்கிருக்கிற அனுபவம் எனக்குக் கெடையாது, மேலும் ஆசிரியர் அவர், நான் மாணவன் என்பதால், அவரை எதிர்த்து எதுவும் பேசமுடியாது. சுமார் 18 மாதங்கள் அவருக்கு என் கரங்களை மட்டும் பயன்படுத்தி தோல்விமேல் தோல்வி. என் தோல்விக்குக் காரணம் எப்போதுமே என் கரங்கள்தான். அவர் மூளை இல்லை, அவருடைய சிந்தனைகளில் எதுவும் குறை இல்லை என்பது அவருடைய தீர்ப்பு.I was the one who was blamed for every failure!

    ஒரு முறை அவர் ஒரு இரண்டு வாரம் லீவ் போட்டுவிட்டு அவர் ஊருக்கு வெக்கேஷன் போனார். நல்லவேளை அவர் மூளையும் அவரோட போய்விட்டது. அந்தத் தருணத்தில் என் மூளை சொன்னபடி என் கரங்கள் செயல்பட்டு 18 மாதங்கள் கெடைக்காத "ரிசல்ட்" 10 நாட்களில் என் முயற்சியால் எனக்கு கிடைத்தது. அது ஏகப்பட்ட தன்னம்பிக்கையையும் கொடுத்தது.

    வெக்கேஷன் போயிட்டுத் திரும்பி வந்த அவர், அவரில்லாமல் நான் சாதித்த என் "திறமையை" பாராட்டாமல், உம்மென்று கோபமாக என் ரிசல்ட்டைப் பார்த்தார். குறை எதுவும் சொல்ல முடியவில்லை. அன்று இரவு அவர் தூங்கி இருக்க மாட்டார். வாத்தியார் தூக்கத்தைக் கெடுத்த மகாப் பாவி நான்! :) "அவர்போல் ஒரு வாத்தியார் என் போல் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருக்கணும்"னு ஆசிரியர் தினத்தன்று எனக்குத் தோணுது.

    ஆசிரிரியர்களில் பல வகை இருக்காங்க. ஒரு சில ஆசிரியர்கள், "அவர்களைப் போல் நாம் ஆகிவிடக்கூடாது" என்கிற பாடம்தான் ஒரு சிலருக்கு கத்துக்கொடுத்துவிட்டு போகிறார்கள். :)

    Sorry for a negative response in your "positive post", madam! Take it easy!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நேர்ந்தது ஒரு கசப்பான அனுபவம் தான்.
      .
      நீங்கள் உயரக் காரணமாயிருந்த ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளுங்கள்.

      Delete
  4. உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள், ராஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரஞ்சனி. உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

      Delete
  5. இனியதொரு பதிவு..
    இன்றைய நாளில் அன்பின் ஆசிரியர்களை நினைவு கூர்தல் ஆனந்தமே..
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  6. ஆசிரியை பணியில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்று விட்டாலும் இன்றும் என்றும் நீங்கள் ஒரு ஆசிரியரே! எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.

      Delete
  7. நல்லாசிரியர் அமைவது இறைவன் கொடுக்கும்வரம் என்றே தோன்றுகிறது. வலை உலகில் இருக்கும் அத்தனை ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி பாலு சார்.

      Delete
  8. எனது ஆசிரியர் திரு.குருந்தன் அநர்களை நினைவு கூர்கிறேன்.
    அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் கிலலர்ஜி

      Delete
  9. உங்களுக்கும், ஆசிரியர் தின வாழ்த்துகள் ராஜலக்ஷ்மி.

    ReplyDelete
  10. Sorry that I shared a bitter experience in my earlier response! It just came out!

    Here is a positive comment, Mrs Raji!

    There are many teachers in the blog world including you, Madhu, Mythily, Thulasi teacher, Murali, Madurai Saravanan, karanthai Jeyakumar to mention a few!

    Here are few quotes for the teachers!

    If you can read this, THANK a teacher!
    -American proverb

    It is OK to weep, it shows you care-
    And people who care make the best teachers!
    -don't know who said that

    Happy teachers day, Mrs. Raji!

    ReplyDelete
    Replies
    1. Mr.Varun,

      From your previous comment ,I understand that you had some bitter experiences.Sometimes it becomes unavoidable.....

      Now, coming back and posting your wishes to all the teachers in the bloggers world and posting sayings in praise of teachers exhibits your respect for teachers.I appreciate that.

      On behalf of all teacher-bloggers let me thankyou Mr.Varun.
      Thankyou.

      Delete
  11. எனக்கு முதல்முதலில் ஆனா ஆவன்னா கற்பித்த ஆசிரியருக்கல்லவா முதலில் வணக்கம் சொல்லவேண்டும்? அம்மா, உனக்கு நன்றி. நீ மறைந்து 21 வருடங்கள் ஆகிவிட்டாலும் ஒவ்வொரு நாளும் என் நினைவிலேயே இருக்கிறாய் அம்மா!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  12. இந்த நேரத்தில் என்னுடைய ஆசிரியப் பெருமக்களுக்கும் என் நன்றி.

    உங்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான காணொளி. இந்நேரத்தில் எனத் முதலாம் வகுப்பு ஆசிரியை திருமதி நாமகிரி அவர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துகிறேன். மற்ற ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  14. அன்புள்ள ராஜி,
    உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:

    http://wp.me/p244Wx-HR

    நன்றி,
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. இதோ ஓடி வந்து கொண்டிருக்கிறேன் விருதினை வாங்க. இப்படி ஒரு விருதினைக் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள் பலப்பல.

      Delete
  15. அன்பு ராஜி, வாழ்க்கையில் ஒரு ஆசிரியரா. அம்மாவிலிருந்து,இதோ இந்த சகோதரர் வரை எத்தனையோ ஆத்மாக்கள் நம் நலம் விரும்பி நல்வழிப் படுத்துகிறார்கள். திறந்த மனம் எல்லா அறிவுரைகளையும் வாங்கிக் கொள்கிறது. பயன் படுத்துகிறது. மிக நன்றி மா. ஆசிரியர் என்ற வகையில் உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தாமதமாக.
    பழைய பின்னூட்டத்தை போட்டு அழகாய் பதிவிட்டு விட்டீர்கள்.
    வல்லி அக்கா சொன்னது போல் அம்மாவிலிருந்து நிறைய ஆசிரியர்கள் நம்மை வழி நடத்தி செல்கிறார்கள். இப்போது குழந்தைகளும் புது விஷ்யங்களை சொல்லி தருகிறார்கள் ஆசானக.
    அவர்களுக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்