Wednesday 27 March 2013

வர்ணத் திருவிழா




இன்று   ஹோலி  ! வண்ணங்களின்  திருவிழா,
நம் எண்ணங்களுக்கும்   திருவிழா  !

ஹோலி என்று சொல்லும்போதே   எத்தனை  வண்ணங்கள் நம் மனதில் தோன்றுகின்றன.இப்பொழுது போல்  அப்பொழுதெல்லாம் ஹோலி நம் தென்னிந்தியாவில்  பிரபலமாகவில்லை  என்றே நினைக்கிறேன்.

எனக்கு முதன் முதலில் 70களில்  தான் ஹோலி என்ற பண்டிகை பரிச்சியமானது. திருமணத்திற்குப்   பிறகு வடஇந்தியாவில்   சில காலம் வசிக்க நேர்ந்தபோது  தான்  இந்த வண்ணத் திருவிழாவை ரசிக்க நேர்ந்தது..

வண்ணச் சிதறலால்  உருவானது  ஒரு  நட்பு வட்டம் . அது,  சாதி,மதம்,மொழி, இனம், தாண்டி அறிமுகமான  நட்பு   வட்டம், இன்று  வரை தொடர்கிறது.

வண்ணங்கள்  என்று சொன்னவுடன்     அழகாய்  வண்ண ஓவியங்களுடன்    படபடக்கும்  பட்டாம்பூச்சிகள்   , வானவில் இவையிரண்டும்  என்  நினைவில் வந்து மோதும்.

வானத்தில் நடக்கும்"  ஹோலி "த்திருவிழா வா இது? என்று நினைக்கத் தோன்றும்   வானவில்லை  பார்க்கும்போது 


 "யாரது  இவ்வளவு அழகாக Asian Paints அடித்திருக்கிறார்கள்.  
அதுவும் ஈர வானில்.......  என்றும்  யோசித்திருக்கிறேன்.

வானவில்லை    சிறுவர் முதல்  பெரியவர் வரை   வயது வித்தியாசம் இல்லாமல்  கண்டு    திளைக்கிறோம்.  இங்கே  .... தெரிகிறதா, அங்கே.......என்று  ஒடி, ஓடிப்  பார்க்கும் ஆவல்   உண்டு.

 மழைத்  துளிகள்  முத்து முத்தாய்  காற்றில் ஊஞ்சலாடும்.
"நானும்  இந்த  சாரல்  மழையில் சற்றே  நனைகிறேனே " என்பது போல் சமயங்களில் எட்டிப் பார்ப்பான்  கதிரவன்.

இந்த மழைத் துளிகளை  ஊடுருவும்  சூரிய ஒளி  வெளியே வரும் போது
ஏழு   வர்ணங்களாக  வெளிவரும்  மாயாஜாலம்  நிகழ்கிறது.இது  அறிவியல்.

அறிவியல்  சொல்லும் இன்னொரு  உண்மை.....
நாம் காண்பது   வெறும்  ஏழு  வர்ணங்களே.  ஆனால்  நம்   கண்களுக்குத் தெரியாத வர்ணங்கள் இன்னும் இருக்கின்றன .(infra red, ultra violet  etc...)

அறிவியல்   இதையும்  சொல்கிறது.....
நாம்  ஒவ்வொருவர்  பார்ப்பதும்  தனித்தனி   வானவில்லாம்.
ஒரே வானவில் இல்லையாம்.
விந்தையாய் இல்லை.

அறிவியலை கொஞ்சம்   நகர்த்தி விட்டு , சில விஷயங்களைப்   பார்ப்பது  நம்மில் பலருக்கு  மிகவும்   பிடிக்கும்.  

மழையும் வெயிலும்  சேர்ந்திருக்கும் போது  "இன்று  காக்காய்க்கும்  நரிக்கும் கல்யாணம்  " என்று சிறு   வயதில்   சொல்லியிருக்கிறோம்.  எதற்கு? தெரியவில்லை.  ஆனால் இன்றும் கூட  அதை  சொல்கிறேன்  என் பேரனிடம் ........
என்னவோ தெரியவில்லை  ! பிடித்திருக்கிறது அப்படிச் சொல்ல ...

இதையும் நாம் கேள்விப் பட்டிருப்போம்.
வானவில் வானிற்கும் பூமிகும்  நடுவில்  இருக்கும் வர்ணப் பாலம்.
சில நிமிடங்கள் வரை  வானவில்லை விட்டு கண்ணை நகர்த்தாமல் இருந்திருக்கிறேன்.தேவர்களும், கடவுளும்  இறங்கி வரப் போவதைப்  பார்ப்பதை நழுவ விடலாமா ? என்று தான். 

ஆனால் இன்று வரை யாரும் இறங்கி வரக் காணோம்.


வானவில்  முடியும் இடத்தில்  ஒரு பானை நிறையத்  தங்கம் இருக்கும் என்பது   ஒரு நம்பிக்கை தான். அப்படியிருந்தால் தங்கம் விற்கும்  விலையில்......நாம் எல்லோரும் ஒரு பெரிய  ஏணியில்  ஏறிக்  கொண்டு இருப்போம். பானையில்  இருக்கும்  தங்கத்தை  எடுக்கத்தான்.

ஆனால் உண்மை என்னவென்றால்  வானவில்  நாம் பார்ப்பது போல் வண்ணப்  பாலமாயில்லை.  அது ஒரு முழுவட்டமோ ?
விமானத்தில்   பயணிக்கும் போது  பார்த்தால் அப்படித் தான் தெரியும்
நம் வாழ்க்கை போல் தான் போலிருக்கிறது. 


இன்றும்  இந்த வயதிலும்   வானவில்  தெரிந்தால்  ஓடுகிறேன்.........
தேவர்களின்    ஹோலியைப்  பார்க்கத்தான்.

image courtesy--google

23 comments:

  1. வண்ணத் திருவிழா
    எண்ணம் நிறைந்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி,
      உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.

      Delete
  2. வானவில் போன்ற அழகான வண்ண வண்ணத்திருவிழா பற்றிய அலசல் பதிவு. அருமை. பாராட்டுக்கள். அன்பான ஹோலி வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும், ஹோலி வாழ்த்துக்களுக்கும் நன்றி வைகோ சார்.

      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்.

      Delete
  3. வானவில் தேவர்களின் ஹோலி - நல்ல கற்பனை. பதிவு முழுவதும் உங்கள் கற்பனை வண்ண வண்ணமாக அழகான கோலங்களாய் தெரிகிறது.
    நமக்குத் தெரியும் வர்ணங்களைத் தவிர வேறு பல வண்ணங்களும் இருக்கின்றன ந ல்ல தகவல்.
    வானவில் முழு வட்டம் என்றே சொல்கிறார்கள். 'கருத்தம்மா'படத்தில் வரும் (தென்மேற்கு பருவக்காற்று)பாட்டில் முழு வட்டமாக வானவில்லைக் காட்டுவார்கள்.

    வண்ணத் திருவிழா வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரஞ்சனி,
      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி .
      உங்களுக்கும் எனது ஹோலி வாழ்த்துக்கள்.

      Delete
  4. மகிழ்ச்சியான வண்ணத் திருவிழா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு

      Delete
  5. ரசித்து, அனுபவித்து எழுதியிருக்கீங்க ராஜி மேடம்! :) வானவில் பார்க்கையில் மனதில் ஒரு உற்சாகக்குமிழி உடைவது எனக்கும் உண்டு. காக்காய்க்கும், குள்ளநரிக்கும் கல்யாணம், பானை நிறைய தங்கம், ஏணியில் ஏறி தங்கம் எடுக்கப் போவது என்று என் மனமும் கற்பனைகளில் லயிக்க ஆரம்பித்துவிட்டது! :)

    பதிவிற்கும், ஹோலிப் பண்டிகைக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மஹி,
      என்ன கற்பனையில் ஏணி ஏறியாச்சா?பானையிலிருந்து எவ்வளவு தங்கம் எடுத்தீர்கள்.எனக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?

      உங்கள் ஹோலி வாழ்த்திற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  6. மனதின் எண்ணங்களை வானவில்லின் வண்ணங்களாய் மிக அழகாய் அலசியிருக்கிறீர்கள்!! அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  7. அழகிய வண்ணங்களின் அழகை
    தங்கள் படைப்பிலும் காண முடிந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான்கு வரி கவிதைப் பாராட்டு அருமை.

      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  8. வானவில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் கண்டு திளைக்கிறோம். இங்கே .... தெரிகிறதா, அங்கே.......என்று ஒடி, ஓடிப் பார்க்கும் ஆவல் உண்டு.

    மழைத் துளிகள் முத்து முத்தாய் காற்றில் ஊஞ்சலாடும்.
    "நானும் இந்த சாரல் மழையில் சற்றே நனைகிறேனே " என்பது போல் சமயங்களில் எட்டிப் பார்ப்பான் கதிரவன்.//

    அருமையாக சொன்னீர்கள் ராஜி.
    இதை படித்தவுடன் இளமைக்கால நினைவுகள் வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வானவில் என்றவுடன் என்னைப் போல் உங்களுக்கும் இளமைக்கால நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது.

      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும். கோமதி.

      Delete
  9. முதலில் கண் கவரும் படம் சூப்பர் பின்பு ஆக்கம் வானவில்லே தேவதை என்று நினைகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி (தேவதை) என்று கற்பனை அழகாக இருக்கிறதே!
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மலர்.

      Delete
  10. ஒரு கீற்று வானவில்லே இவ்வளவு அழகா இருக்கே,முழுவதுமாக பார்க்கும்போது எப்படியிருக்கும்!பெரியவர்களை வயதில் சிறியவர்களாக மாற்றக்கூடியவற்றில் வானவில்லும் ஒன்றுதானே.

    வெயில்&மழையின்போது நரிக்கும்,காக்கைக்கும் கல்யாணம் என்று சொல்வது எங்க ஊர் பக்கமும் உண்டு.

    இங்கு ஸ் மூலமாக தண்ணீர் பாய்ச்சும்போது அதில் சூரிய ஒளிபட்டு வானவில் மாதிரியான வண்ணங்கள் வருவதைப் பார்க்க மிகமிக அழகாக இருக்கும்.

    தேவர்களின் ஹோலியைப் பார்க்க நாங்களும் உங்கள் பின்னால் ஓடிவந்துகொண்டேதான் இருக்கிறோம்.மகிழ்ச்சியான பதிவு,நன்றிங்க.

    ReplyDelete
  11. "இங்கு sprinkler மூலமாக தண்ணீர் பாய்ச்சும்போது"_ என வந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வானவில் ஒரு அழகான அறிவியல் விந்தைதான்.
      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரியும் இந்த வானவில் .
      சின்ன வயதாயிருந்தால் நாம் இருவரும் கையைப் பிடித்துக் கொண்டே ஒடி போய் வானவில் பார்க்கலாம்.
      இப்ப .......நினைத்து மகிழ வேண்டியது தான்.

      நன்றி சித்ரா உங்கள் அழகான கருத்துரைக்கு.

      Delete
  12. நியுஜெர்சியில் மாவா என்ற் இடத்தில் ஹிந்துக்கோவிலில் மார்ச் 24 அன்று ஹோலி விழா நடைபெற்றது. போயிருந்தோம். எங்கு புலம்பெயர்ந்தாலும் வண்ணத் திருவிழா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இனிய விழாவே. தில்லியைப் போலவே இங்கும் குளிர்காலம் முடிந்து வசந்தம் பூக்கத் தொடங்கியுள்ளது.உங்கள் கட்டுரையைப் படித்தபோது மீண்டும் தில்லிக்குப் போய் வந்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      உங்களை நியூஜெர்சியிலிருந்து டில்லிக்கு வரவழைத்து விட்டதா என் பதிவு.? Air Fare மிச்சப் படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்தியாவை மிகவும் மிஸ் செய்றீங்க என்று புரிகிறது.

      உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா! தொடர்ந்து வாருங்கள். என்னுடைய அடுத்தப் பதிவான " பொதிகை மலைஉச்சியிலே " வைப் படித்தீர்கள் என்றால் சென்னை வந்து விட்டுப் போவீர்கள். நேரம் கிடைக்கும் போது படித்து கருத்திடுங்களேன்.
      நன்றி உங்கள் கருத்துக்கு,

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்