வெளி நாட்டுக்கு செல்பவர்களுக்கு அந்தந்த விமான நிலையங்களில் இருக்கும் " duty free shops" பற்றித் தெரிந்திருக்கும்.
இரண்டும் ,அதற்கு மேலும் ஃ ப்ளைட் மாறுபவர்களை , இந்தக் கடைகள் சுண்டியிழுக்கும். .நேரத்தை செலவிட நுழைவார்கள். முதலில் எதையும் வாங்கத் தயங்கும் நாம், நம் சக பயணி ,அதுவும் இந்தியர் ஒருவர் வாங்கிவிட்டால் நம்மையறியாமலே ,நம் கை, நம் பர்சைத் தேடும்.
எதையாவது வாங்கிக் கொண்டு, ஊருக்குப் போய் பெருமையடிக்க.
எதையாவது வாங்கிக் கொண்டு, ஊருக்குப் போய் பெருமையடிக்க.
எனக்கு ,இன்று வந்த மெயில் duty free shops இல் பொருட்கள் வாங்கும் போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சிரிக்கையைப் பற்றிக் கூறியது.
விஷயத்தைப் படித்த எனக்கு பகீரென்றது.சிலருக்குத் தெரிந்திருக்கலாம்..
விஷயத்தைப் படித்த எனக்கு பகீரென்றது.சிலருக்குத் தெரிந்திருக்கலாம்..
தெரியாதவர்களுக்காக...............
" உண்மைச் செய்தி " என்கிறது மெயிலில் வந்த விவரம்.
இந்தியர் ஒருவர் Bangkok விமான நிலையத்திலுள்ள duty free shopற்கு சென்று சாக்லேட்டுகளும், ஒரு பாக்கெட் சிகரெட்டும் வாங்கியிருக்கிறார். கடை ச்சிப்பந்தி ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் இன்னொரு பாக்கெட் சிகரெட்டும்
போட்டிருக்கிறார்(வேண்டுமென்றே). நம் நண்பரோ ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால், இன்னொரு பாக்கெட் சிகரெட் இலவசம் போலிருக்கிறது என்றெண்ணிக் கொண்டு சந்தோஷத்துடன் கடையை விட்டு வெளியே வருகிறார்.
அங்கே ,ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு . போலீஸ்காரர் ஒருவர் அவருடைய கையில் இருந்த பொருட்கள் நிறைந்த பையையும் , அவர் கையில் வைத்திருந்த ரசீதையும் செக் செய்து விட்டு, பில்லாகாத ஒரு சிகரெட் பாக்கெட்டைத் திருடி விட்டார் என்று சொல்லி " shop lifting "குற்றத்துக்காக அவரைக் கைது செய்து விடுகின்றார்..அவர் பாங்காக் சிறையில் ,கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் இருக்க நேரிடுகிறது. நிறைய பணம்(அந்த ஊர் பணம்) ,செலவழித்தபின் தான் விடுதலை ஆகிறார்..
பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் புகார் கொடுத்திருக்கலாமே என்று தான் தோன்றும். நம் தூதரகத்தை ,நண்பரின் உறவினர் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு கிடைத்த பதில்,"இதைப் போல் நிறைய இந்தியர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். பொருட்கள் வாங்கும் போது நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கை விரித்து விட்டது .
" Duty Free Shopsஐ விட்டு வெளியே வரும் போது நாம் வாங்கியிருக்கும் அத்தனை பொருட்களுக்கும் ,பில்லில் பணம் கட்டியதற்கான அத்தாட்சி இருக்கிறதா என்பதையும் , இதைத் தவிர வேறு பொருட்கள் எதுவும் நம்மிடம் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் " என்று அறிவுறுத்துகிறது இந்தியத் தூதரகம்.
உண்மை தானே!
இதைப் போலவே இன்னொருவர் துபாய் விமான நிலையத்திலும் ,மாட்டிக் கொண்டு விட்டு, இரண்டு நாட்கள் போல் விமான நிலையத்திலிருக்கும் சிறையில் கழித்து விட்டு , டாலரில்............கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுத்து விட்டு பின் வீடு திரும்பியிருக்கிறார்.
இவர்கள் சிறையில் இருக்கும் பொழுது அவர்கள் குடும்பத்தினரின் மனநிலையை நினைத்துப் பாருங்கள்........உங்களுக்கு பதட்டமாக இல்லை!
சிறிய எச்சரிக்கை உணர்வுடனும் , இலவசங்களுக்கு ஆசைப் படாமலும் இருந்தாலே போதும். பிரயாணம் சுகமாகும்.
நாட்டிற்கு நாடு சட்டங்களும் வேறுபடும். நாம் வேறு நாட்டில் இருக்கும் பொழுது, அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாகிறோம் என்ற நினைவுடன் நாம் நடந்து கொண்டாலே, இது போன்ற உபத்திரவங்களிளிருந்து தப்பித்து விடலாம்.
இப்பொழுதெல்லாம், வெளிநாட்டுப் பயணம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது .நம் உறவினர், நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களும் எச்சரிக்கையடைய வழி செய்வோம்.
நானும் இந்த செய்தியை என் முக நூலில் பகிரப் போகிறேன்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது போல் இருக்கிறது இந்த இரண்டு நிகழ்வுகளும்.
நண்பர்களே .....எச்சரிக்கையுடன் பயணம் செய்வோம்.பயணத்தை இனிதாக்குவோம்.
SHUBH YATRA!!!!
செய்தி உதவி : திரு.லக்ஷ்மிநாராயணன்.
image courtesy----google.